Total Pageviews

Sunday 7 February 2010

பல்டி சம்பந்தரும்... மல்டி கருணாநிதியும்...

பல்டி சம்பந்தரும்... மல்டி கருணாநிதியும்...
-------------------------------------------------------------------------------------
நான் அரசியல் சம்பந்தமாக எழுத விரும்பவில்லை... காரணம் எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது...
ஆனால், 6 வது அறிவு இருக்கிற மனுசன் என்கிறவகையில்... சில அரசியல் கருத்துக்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
அதனால்... இப்பதிவை எழுதுகிறேன். தவறுகள் நிச்சையமிருக்கும் என்பது தெரியும்... ஆனாலும்... ஏமாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் / ஏமாந்து கொண்டிருக்கும் ஒரு தமிழன் என்கிறவகையில் இதை எழுதிகிறேன்...
-------------------------------------------------------------------------------------

பல்டி சம்பந்தர்....

சமீபத்தில் ஒரு நியூஸ் பார்க்க கிடைத்தது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து பொது தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். அப்போது செய்தியாலர் ஒருவர்       " நீங்கள் இதனால், சிங்கள மக்களுக்கு சொல்லவருவது என்ன? " என கேட்டபோது....

நாம் எப்போதுமே தனி நாடு கேட்டதில்லை, சிங்கள மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம். தமிழ், முஸ்லீம், சிங்கள சமூகங்கள் இந்நாட்டில் வேறுபட்டு வாழக்கூடாது. பெரும் பான்மை சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமைகள் தமிழ்பேசும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இதை தான் நாம் 60,70 ம் ஆண்டுகளிலும் நாம் கூறியிருந்தோம்.
அதையும் மீறி யாராவது நாட்டை பிரிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் தமிழ் பேசும் மக்களிடம் வந்தால்... அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அதை தான் தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

இப்படி செய்தால் இன்னும் 10 வருசத்துல நாட்டை மாற்றியமைச்சுடுவாராம்.
(சம உரிமை பற்றி கதைத்தது ஓகே)

இவரு தான் கொஞ்சகாலம் முன்னாடி கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் போராடுவோம்... புலிகள் தான் எங்களது ஏக பிரதினிதிகள்... என்றெல்லாம் சொன்னார்.

புலிகளின் இலக்கு என்ன வென்று தெரியாமலா... இவ்வசனங்களை சொல்லியிருப்பார். இல்லாட்டி அவர்களின் இலக்கை அறியாமலா அவர்களுடன் இருந்திருப்பார்.

இந்த லச்சன‌த்துல... தமிழருக்கு முன்னுக்கு போய் நின்று கொண்டு...
நிக்குறவங்களுக்கு வெறி ஏத்துற மாதிரி பேசுவாங்க. ( பன்மை த.தே.கூ இல் சிலர் இப்படி தான்.)
இவங்க தான் வன்னில சனம் செத்து கொண்டிருக்க இந்தியால போய் றெஸ்ட் எடுத்தாங்க. ( கேட்டா அரசியல் பயணமாமாம்)

இந்த ஜனாதி பதி தேர்தலுல புத்திசாலித்தனமா ஒரு தமிழனையோ முஸ்லீமையோ பொது வேட்பாலரா நிறுத்தி சிறு பாண்மையின் ஒற்றுமையை காட்டி இருக்கலாமே... (யாரோ ஒரு முஸ்லிம் வேட்பாலர் இதை ஏற்கனவே கேட்டார்... தான் இல்லாட்டி கூட பறவாயில்ல என்று. கனக்கே எடுக்கல...)

இப்ப திடீரெண்டு ஆளுங்கட்சிக்கு தாம் எதிர் கட்சி இல்லை என்கிறத காட்டதான் இந்த பல்டியோ தெரியல... ( ஜக்கி படத்துல அடிக்குறதெல்லாம்; இதுக்கு முன்னாடி ஜிஜீபி...)
தமிழ் முஸ்லீம் மக்களை ஒன்றாக கதைக்க விட்டாலே எல்லாம் சரியாக வாய்ப்பிருக்கு...
இவருக்கு தன்ட கட்சிக்குள்ள இருக்குற பிணக்கையே தீர்க்க முடியல அதுக்குள்ள... இரண்டு சமூகத்தை ஒன்றினைக்க போறாராமாம்.  சும்மா அரசியல்ல இருக்கோம் என்றுறதுக்காக என்னவும் பேசுவாங்கலாமாம்.
நாங்க ஆமா போடனுமாம்.

இப்பவாவது சேந்து போட்டியிடுறாங்களே.... அது சந்தோஷம். அதுக்காண்டி... இப்படி பல்டி அடிக்குறது சரியில்ல....


மல்டி கருணாநிதி...

செங்கல் பட்டு சிறைல இவரு சொன்ன வாக்குறுதிய நிறை வேற்ற சொல்லி கேட்டதுக்காக...  தானே பொலிஸை செட் பண்ணி அப்பாவி அகதிகளை அடிப்பாராமாம். பிறகு இவருக்கு பெயர் தமிழரின் தலைவனாமாம். இதெல்லாம் ஒருபிழைப்பா...?

அத விடுங்க அவரப்பற்றி சொல்ல வார்த்தையில்ல...
அவரு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் காட்டுவாரு... மல்டி...பவர்...

போய் அடிச்சாங்களே பொலிஸ்... அவங்களுக்கு ஒரு மனித தன்மை இல்லையா?
சரி...
அடிச்சாங்க அதவிடுங்க... ஏன் "அனாதை பசங்க... அகதிங்க...உங்களுக்கு உரிமை வேணுமாடா..... "போன்ற கீழ்த்தரமான சொற்களை பிரஜோகிக்க வேண்டும். இதுக்கு நாங்க எங்கட நாட்டுலையே அடிவாங்கி சாகலாமே...

இலங்கை தமிழனை வச்சு... இந்திய தமிழனை ஏமாத்துறாங்க...

இத நான் இங்க எழுதுறதால ஒன்றும் நடக்க போறதில்ல என்று எனக்கு தெரியும். ஆனா மனதுல வச்சு புழுங்குறதுக்கு இது மேல்.
-------------------------------------------------------------------------------------

5 comments:

  1. Avasaramaa eluthi irukkan. thavaru irunthaa mannikkavum.

    ReplyDelete
  2. நீர் சொல்வது சரியே ஆயினும் சம்பந்தரின் செயல்பாடுகள் யாவையும் தவறென்று சொல்ல வேண்டாம். அவர் இப்போது முயல்வது நமக்கு முடிந்தவரை நல்லது செய்வதே என்று எண்ணுகிறேன். மற்றபடி அங்கு உள்ள அரசியல் கட்சிகளின் உள்முகம் பற்றி அதிகம் தெரியாது. செய்தித்தாள் செய்திகள் தவிர. அவர்களுக்கு மட்டுமல் நமக்கும் இப்போது தேவை இப்போதைய நிலையிலிருந்து சற்றே மீண்டு கொஞ்சம் தெம்பூட்டிக்கொள்வது.சற்றே ஆசுவாசப்படுத்தி அடுத்து போராட்டங்களை முன்னெடுப்பது ஆக இருக்கக் கூடும்.

    இங்கு கருணாநிதியைப் பற்றி எவ்வாறு சொல்வது. என்னுடைய எண்ணம் அங்கு உயிர் நீத்த மக்களின் மீந்த வாழ்நாள் யாவும் இவருக்கே கிடைக்கும் என எந்த சோசியக்காரனாவது சொல்லியிருப்பான் எனத் தோன்றுகிறது. மானம் கேட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அதை தமது தலைமையாக கொண்ட ஆட்டு மந்தை கூட்டமும் இனியும் உமக்காக எதையும் செய்யும் என்று நம்பி ஏமாறாதீர்கள். போனால் போகிறது என்று தனது பழைய துணிமணிகளை வேண்டுமானால் உங்களுக்காய் கனிமொழி கொடுக்கக்கூடும். ஏனெனில் உங்களை நிர்வாணமாய்ப் பார்க்க அவர்களுக்கு சகிக்ககாது என்பதாலேயே. மற்றபடி உங்களின் மீது கொண்ட அக்கறை அல்லது கரிசனம் காரணமாய் அல்ல.


    ------Avasaramaa eluthi irukkan. thavaru irunthaa mannikkavum.-----

    நினைப்பது எல்லாம் எழுதிவிட முடிகிறதா என்ன?


    மற்றபடி உங்கள் வலைப்பூவில் நடத்துகிறீர்களே கணிப்பு எல்லாமே விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. நல்ல மனிதம் கொண்ட ஒருவர் அவர் யாராயினும் காதலிலோ நட்பிலோ உறவிலோ எங்கு கிட்டினும் மிக ஆனந்தமே.

    ReplyDelete
  3. நன்றி அரைப்பித்தன்..
    *//நல்ல மனிதம் கொண்ட ஒருவர் அவர் யாராயினும் காதலிலோ நட்பிலோ உறவிலோ எங்கு கிட்டினும் மிக ஆனந்தமே.//*
    நீங்கள் சொல்வது சரி...
    இனியாவது... அரசியல் தலமைகளை நம்பாமல்... தமிழர் தமிழை காக்க போராட வேண்டும்...

    ReplyDelete
  4. ஹாய்!ஹாய் ஹாய்!!!விருமன் வந்திட்டான்!!!பாதிகிறுக்கனே!வளாகம் சொல்லுவது தான் என் கருத்தும்.கத்தியைவேண்டுமானால் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாம் அதையே நாம் கையோடுவைத்துக்கொண்டிருந்தால்?சமூகத்துக்கு அது வண்முறை அல்லது பயங்கரவாதம்."சோ"இப்ப மாட்டருக்குவருவம் சம்மந்து+கூத்தமைப்பு(கூட்டமைப்பு!)இவர்கள் செய்திருக்கவேண்டியது வளாகம் கூறியதுபோல சிறுபான்மை சமூகம் என்டவர்கள் ஒரே ஒரு பொதுவேட்பாளரை தேர்தலில் நிக்க வைத்திருந்தால் அது ஒரு துருப்பு சீட்டாக இருந்திருக்குமே? தோற்றிருந்தாலும் பரவாயில்லை,எமது கருத்து வெளிப்பட்டுருக்குமே!அரசியல் வாதிகள் சமூகத்துக்கு அரசியல் வியாதிகள் சோ இளம் சமுதாயம் தான் சமுக உலக நியதிக்கு மாற தயாராக இருக்க வேணும்! நீங்கள் மாறுவதுடன் உங்களோடு வாழும் உங்கள் முந்திய தலைமுறைக்கும் உலக மாற்றத்தை புரிய வையுங்கள்!ஒகே! பை!சீ யூ !!!!!!

    ReplyDelete
  5. நன்றி விறுமன்.
    உங்கள் போன்றோருக்காக தான் நான் அரசியலே எழுதியுள்ளேன்.
    இனி நீங்கள் இவ்வாறான பதிவுகளுக்கு உங்களது அரசியலை புகுத்துங்கள்.

    நான் யாரையும் தாழ்த்தி எழுதவில்லை. எனது மனக்குமுறலையே எழுதியுள்ளேன். அவளவுதான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected