அப்பிளின் எதிர்கால ஐடியாக்கள்....
----------------------------------------------------------------------------------------I-Ring
இது முக்கியமாக ஐபொட்டை புளூருத் மூலம் கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இது உணர்திரையைக்கொண்டதாக அமைய இருப்பதனால்... இலகுவாக பாடல்களை இயக்கவும், நிப்பாட்டவும் முடிவதுடன்... ஒலியையும் கூட்டி குறைக்க கூடியதாக வடிவமைக்கப்படவுள்ளது. ( தற்போது அப்பிளின் அனைத்து புரொடெக்ட்களையும் கட்டுப்படுத்தும் விதமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.)
I Cal Watch
இது அப்பிளின் வித்தியாசமான முயற்சி... பதியப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நிரலை ஒலிவடிவின் மூலம் நினைவு படுத்த தக்க வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ( திரையை இணைக்கும் எண்ணக்கருவுமுண்டு.)
I Pod Shuffle
இது ஐபொட்டின் மாறுபட்ட வடிவம்...
கையில் அணியக்கூடிய வளையம் போன்று அமையப்பெறவுள்ளது. இயஃபோன் வயர்லெஸ் ஆக இருக்கும். நெகிழும் தன்மை கொண்டதாகவிருக்கும்.
IPhone Nano
இது ஐபோனை ஒத்ததாக அமையவிருப்பினும். கைக்கடக்கமானதாகவும், கவர்ச்சி மிக்கதாகவும் தயாராகி வருகிறது. (4 ஜி தொழில் நுட்பத்துடன் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.)
IPhone 4G
இது ஐபோன் தான் ஆனால் 4 ஜீ...
3 ஜி ஐ விட மேலதிக தொழில் நுட்பங்கள் வருமென எதிர்பார்க்கலாம்.
உருவிலும் ஸ்லிமாக வர இருக்கிறது.
Mac Tablet
இது ஒரு லப்டொப் வகையானது...
ஆனால், வெறும் திரையை மட்டுக் கொண்டுள்ளது. கீ போட் தேவையான போது வெளியே எடுத்து பயன் படுத்த கூடிய விதத்தில் தயாராகிறது.
Mac Tab
இதுவும் ஒரு லப்டொப் வகையானது தான்...
இது படங்கள் வைக்கும் ஃப்ரேமை ஒத்ததாக அமையும்.
கீ போட் மிக மெல்லியதாகவும் தனியாகவும் இருப்பதுடன் லப்டொப்பின் பின் புறத்தில் வைத்து செல்லத்தக்கதாக இருக்கும். முக்கியமாக பயணங்களின் போது பயன்படுத்தும் விதமாக அமையவுள்ளது. மின் பாவணையும் குறைவாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------------
இன்னும் இருக்கு... அடுத்த பதிவில் பார்ப்போம்...
superrrrrrrrrrrrrrrrrrrr !!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete