Total Pageviews

Thursday, 21 January 2010

நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்... (விளங்க முடியாத புதிர்)

நோஸ்ராடாமஸ்
-------------------------------------------------------------------------------------------------

நோஸ்ராடாமஸ் பற்றி பதிவுலகில் யாரும் பெரிதாக எழுதியதை என்னால் பார்க்க முடியவில்லை. பலர் சோதிடங்களை பற்றியும் குறிசொல்பவர்களை பற்றியும் எழுதியிருப்பினும், இவர்களுக்கெல்லாம் தலையான நோஸ்ராடாமஸ் பற்றி பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. அதனால், எனக்கு தெரிந்தவற்றை நான் எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.  

நோஸ்ராடாமஸ்.... 

1503 டிசம்பர் 14, பிரான்ஸின் வடக்கு பகுதியில் யூத தம்பதியினருக்கு பிறந்தார். (பின்னர், தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்.) மருத்துவராக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென பிரான்ஸ்ஸில் கொள்ளை நோய் பரவத்தொடங்கியது. ( என்ன நோய் என மறந்துவிட்டது.) மருத்துவராக இருந்து பலரை காப்பாத்திய நோஸ்ராடாமஸால் அவரது குடும்பத்தை காப்பாத்த முடியவில்லை. தனது மனைவி,பிள்ளைகளை இழந்தார். இவ்விழப்புகளுக்கு பிறகு ஒரு நாடோடியாக மாறினார். நாடோடியாக இருந்தவேளையில் ஒரு பாதிரியாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் சீடராக பணியாற்றிய காலப்பகுதியில் நோஸ்ராடாமஸின் மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. தனியாக இருந்து நீண்ட நேரம் வானத்தை உற்று பாக்க தொடங்கினார். யாரையாவது பார்த்து எதாவது சொல்ல அது கச்சிதமாக நடந்தது.  

நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். கத்தோலிக்க திருச்சபையின் பார்வையில் இவரின் ஆரூடங்கள் சாத்தானின் எச்சரிக்கைகளாக பட்டன. எனவே, நோஸ்ராடாமஸ் மீது திருச்சபையால் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரச்சனைகளால் நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.  

நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களை குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம்.  

(நோஸ்ராடாமஸ் மறுமணம் முடித்ததாகவும் கூறப்படுகிறது.)  

நோஸ்ராடாமஸ் ஆரூடங்களை கணிக்கும் போது, சாதாரண ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு ophiuchus எனும் 13 இராசியையும் சேர்த்தே கணித்துள்ளார். அவரின் இக்கணிப்பிற்கு ஏதுவாக ஒரு பொறி இயந்திரத்தை கையாண்டுள்ளார். அதை பார்த்தவாறே தனது The centuries எனும் புகழ் பெற்ற ஆரூடத்தை எழுதினார். நோஸ்ராடாமஸ் தனது கையால் எழுதப்பட்ட உண்மையான புத்தகத்தில் படங்களையும் வரைந்திருந்தார். (வரைந்தமைக்கான குறிப்புக்கள் உள்ளன.)  

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நோஸ்ராடாமஸின் புத்தகதில் வரையப்பட்டுள்ள படங்கள் இவர் நேரடியாக வரைந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்னோர் சாரார் அது அவரின் 2வது மணைவியின் மூலம் பிறந்த மகனை கொண்டு வரைந்தது என்கின்றனர்.  

எது எப்படி இருந்தாலும் படங்கள் சொல்லவருவது நோஸ்ராடாமஸின் ஆரூடங்களை தான்.  

படங்கள் தரப்பட்டுள்ளன. 
படங்கள் சொல்லவரும் விடையங்களையும் மேலும் பல தகவல்களையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம். பிடித்திருந்தா வோட் போட்டு எழுத ஊக்கப்படுத்துங்க.
---------------------------------------------------------------------------------------------





29 comments:

  1. to some extend his predictions are corect.and i appreciate. you have choosen the right topic at the right time.pls go ahead

    mrs.rajkumar

    ReplyDelete
  2. UR GOOD.. TRYING DIFFERNET THINGS ALWAYS APPRECIATE BY OTHERS WISH U

    ROVAN

    ReplyDelete
  3. தனபால்23 January 2010 at 04:29

    ///நோஸ்ராடாமஸ் பற்றி பதிவுலகில் யாரும் பெரிதாக எழுதியதை என்னால் பார்க்க முடியவில்லை.///

    வளாகம் சார் ,

    நோஸ்ராடாமஸ் பற்றி பதிவுலகில் யாரும் பெரிதாக எழுதாவிட்டால் என்ன.?நீங்கள் எழுதங்கள் சார் .படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி சேர்!
    என்ன சேர் என்று கூப்பிடாதைங்க. நான் அந்தளவுக்கில்ல.

    ReplyDelete
  5. i visited ur blog for first time...
    its something different.
    nice.
    pls continue.
    hav a happy life.
    wish everybody gets everything..

    Raghu

    ReplyDelete
  6. //மணைவியின்//

    ReplyDelete
  7. Sorrypa ippadithaan nedukalum pilai viddutiruppan.
    மனைவியின்

    ReplyDelete
  8. நண்பரே வணக்கம்
    நஸ்தார்டமஸ் பற்றிய விளக்கம் சரி படங்கள் நல்ல இருக்கு
    அதுக்கு என்ன விளக்கம் அத்தை சொல்லுங்க அய்யா !!இந்திரா காந்தி ராஜீவ் காந்திஇவர்களின் இறப்பு பற்றி இருப்பதாக கேள்விபட்டேன் அது போல நம் மக்கள் (இலங்கை சகோதரர்கள்) துன்பம் நீங்குமா அதற்கு ஏதாவது இருக்கா ???

    ReplyDelete
  9. சொல்லுவமுள அதுக்கு தானே தொடங்கினம்.
    இந்திராகாந்தி பற்றி இருக்கு.(படத்தில இல்லை.)
    இலங்கை பற்றியது இன்னும் அறியப்படல.( புரியப்படல)

    ReplyDelete
  10. கும்மி29 January 2010 at 08:37

    அந்த நோய் பிளேக் (Plague). நாட்டில் பலரையும் காப்பாற்றிய Nostradamus, தனது குடும்பத்தினரை அந்த நோய்க்கே பறிகொடுத்தார்.

    குழப்பமான செய்யுள் வடிவமே, அவரது பெயரை இன்றளவும் பேச வைத்திருக்கின்றது. எந்த செய்யுளின் முதல் இரண்டு வரிகளையும், வேறு எந்த செய்யுளின் கடைசி இரண்டு வரிகளோடு இணைத்துப் படித்தால், அந்த வரிகளும் ஒரு புது விளக்கம் கொடுக்கும். உடனே நமது மகானுபாவர்கள், அதற்கு ஒரு விளக்கம் கொடுத்து, ஏதேனும் சம்பவத்தோடு, தொடர்புபடுத்தி, ஒரு புன்னகை கொடுப்பார்கள். இதையேதான், ஜோசியக்காரர்களும், வேறு வகையில் கூறி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து எழுதுங்கள். அவ்வப்போது நானும், இது குறித்து கும்மி அடிக்கின்றேன்.

    ReplyDelete
  11. நன்றி கும்மி!
    எழுதுவம்....

    ReplyDelete
  12. ஒரு வித்தியாச மனிதரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  13. i have read nostradamus writings in the year 1996 some of them are third war will be between india and china, U.S russia japan will support india, china will play an excellent role but will be defeated japan will be hitted worse but will recover INDIA will be the super power after world war III, Now can u imagine standing in the year 1996 india is a third world country no IT sector no software no bpo but now india started to rule and also you can see in medias that china has started to build military camps around india to attack, now wat do you think, can anyone reply

    ReplyDelete
  14. Good Topic. Please if possible Post "His Prediction about INIDA"

    ReplyDelete
  15. தொடருங்கள், ஆவலாய் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. Please continue...

    ReplyDelete
  17. தொடருங்கள்....ஆர்வமாக உள்ளது..

    ReplyDelete
  18. உங்களின் வளாகத்தை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எனக்கு பள்ளிகளில் கிடைக்காத வரலாற்று அறிவை உங்கள் தளம் மூலமாக அறிந்து வருகிறேன். உங்கள் பணி சிற்க்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. குட் ரொம்ப நல்ல இருக்கு... தொடர்ந்து எழுதுங்க... வோட்டு போட்டுட்டேன்..

    ReplyDelete
  20. continue please

    ReplyDelete
  21. nice ,i want to learn more .i having more interest for that one , don't live that one continue your journey

    ReplyDelete
  22. தொடருங்கள்....ஆர்வமாக உள்ளது nice Topic in this year & Situation...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected