Total Pageviews

Monday, 18 January 2010

வளர்ந்து வரும் ஒரு இசைக்குழு கடந்து வந்த பாதைகள்.RHn Crew (கட்டாயம் வாசிக்கவேண்டியது).

RHn Crew
---------------------------------------------------------------------------------------

இன்று வேகமா வளர்ந்து வரும் ஒரு இசைகுழுவையும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் பற்றி ஒரு சுவாரஷ்யமான பயணத்தை ஆரம்பிப்போம்.

இக் குழுவிலிருக்கும் அங்கத்தவர்கள் அனைவரும் எனக்கு நெருக்கமாக தெரிந்த நண்பர்கள் என்றமையால் எவ்வித கட்டுப்பாடிமின்றி அவர்களின் இசைத்துறை பயணத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசலாம்...றொபின்...
இவரை 12 வயசுல இருந்து தெரியும்...
பார்ப்பதற்கு கடா பாட்டி... இவரை சுற்றி இருக்குற கூட்டம் எப்பவுமே சிரிச்சுட்டு தான் இருக்கும். இவற்ற லொள்ளு தாங்க முடியாதது. (இவனுட லொள்ளால நாங்க மாஸ்டருட்ட அடிவாங்கிய சம்பவங்கள் நிறைய. முக்கியமா "பெர்னான்டோ புள்ள" ட்ட. அந்த மாஸ்டர பற்றி சொல்ல இடம் போதாது. பிறகு ஒரு பதிவுல பார்க்கலாம்.)
ஆஹ் இன்னொரு விசையம் "றொபின்" இது இவர் ஸ்டைலுக்காக வைத்த பெயர் இவருட உண்மையான பெயர் கொஞ்சம் சின்னன்...
"வர்ன குல சூரிய சார்லஸ் பொனிப்பஸ் ரொபின்சன் ஃபெர்னான்டோ" இது தான் நிஜப்பேர்.
அந்த வயசிலேயே இரண்டு தடிகளை கொண்டு மேசைமீது அடிப்பது, எக்ஸ் ரே அட்டையில் செய்த ட்றம்ஸ் ஐ கொண்டுவந்து அடிப்பது பிறகு மாஸ்டர் மாருட்ட பேச்சு வாங்குறது என்று தனது இசை ஆர்வத்தை வெளிப்படுத்த தொடங்கினார். (அதுக்கு முதலே அப்படித்தான் என்று பிறகுதான் தெரியவந்தது.)
என்ன இருந்தாலும் அப்போதே, ஒரு உண்மையான இசைமீது வெறி கொண்ட க‌லைஞன் இவருக்குள் தூங்கிகொண்டிருந்தான் என்பதை மறுக்க முடியாது. அது எனக்கு தெரிய வந்ததே 2005 ல தான். ( எனக்கு இசையப்பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அவளவா விருப்பமும் இல்லை. அப்படி இருந்தும் றொபின் போட்ட மெட்டுக்கள் நானே ரசிக்கும்படி இருந்தன.)

காணும் றொபின் புராணம்... அடுத்து

ஹரி...
இவரையும் அதே 12 வயசுல இருது தெரியும்...
முழுப்பெயர் ஹரி பிரஹாஸ் மேனன்.
முதல் முதலாக இவரை பார்க்கும் போது; "ஒரு சொங்கியா இருப்பான் போல" என்று தான் நான் நினைத்தேன். ஒரு சோடாபுட்டி கண்ணாடி, மெலிவு ஆனாலும் தொல தொல எனும் உடமைப்பு, எப்போதும் சிரிப்பு இவையே என்னை அப்படி எண்ணச்செய்தது. ஆனால், பழகிய பின்னரே தெரிந்தது; எதையும் பெரிசாக எடுத்துக்கொள்ளாத மனம், மற்றவர்களின் மனதை நோகசெய்யக்கூடாது எனும் எண்ணம் இவரிடம் மேலோங்கியிருந்தது. இதுவே பிறகு அவரை பிடிக்கவைத்தது.
இப்போது ஜிம்க்கு போய் தன‌து தொல தொல உடலை கட்டாக்கியுள்ளார்.
இவரின் இசையார்வம் பற்றி முதலில் எனக்கு தெரியாது. றொபின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.
ஆனால், இவர் ஒரு நல்ல டான்ஸர் என்பது தெரியும்.

சிவா...
முழு பெயர்: சிவானந்தன்
இவரை தெரியும் ஆனா, பெருசா பழக்கமில்லை. 2007 க்கு பிறகு தான் இவரிடம் நல்ல நட்பு ஏற்பட்டது.
நல்ல டான்ஸ்ஸர். நல்ல கிறிக்கெட் பிளேயர். கொஞ்சம் ஓவர் ரியாக்ஷ்ன் குடுப்பார்!!!

அஜய்...
முழு பெயர் அஜய் பாலகுமாரன் ஆக்கும்.
பாலா என்று கூப்பிட்டால், இவரின் வாயிலிருந்து "...டீட்...டீட்..(தணிக்கை செய்யப்பட்டுள்ளது) பதிலாக வரும்.
பாக்குறதுக்கு ஆள் டீசென்டா இருப்பார், வாயத்திறந்தா... றைமிங்கல‌ விடுவார். இது தான் அவரின் ஸ்பெசலே.
இந்த திறமைதான் இவரை ஒரு பாடலாசிரியர் ஆக்கியிருக்கிறது.
நன்றாக கவிதை எழுதக்கூடியவர். ஆங்கிலம் மேனனை போன்று சரளமாக வரும்.

பிறேம்...
முழு பெயர் பிரேமசிறீதரன்.
இவர் தான் இந்த‌ குறூப்பிற்கு லேட்டஸ்ட்... வில்லுப்பாட்டு மன்னன்... சில நேரங்களில் ஓவர் ரியாக்ஷன் கொடுத்தாலும் ரசிக்கும் படி கொடுப்பது இவரின் பிளஸ். இந்த குறூப்பில் முறைப்படி நடனம் கற்ற ஒரே ஒருவர். (பரத நாட்டியம், மற்றவர்களிலிருந்து இவரை வேறுபடுத்துவது.) கடின உழைப்பாளி. இந்த குறூப்பில் எனக்கு பிடித்த டான்ஸ்ஸர்.
இன்னொரு விஷய‌ம் இவர் நாடகம், கதை எழுதக்கூடியவர். ( மேனனை வைத்து இவர் இயக்க இருந்த நாடகம், பாடசாலையில் பிரபலம்.)


இவர்களை அறிமுகப்படுத்தவே இவளவு இடம் போச்சே....


இனி இசைதொடர்பானதை மட்டும் பார்ப்போம்...

றொபின் சின்ன வயசுல இருந்தே அல்பம் வெளியிடுவது பற்றி பேசுவார். நாங்கள் பல பேர் கூட இருந்தாலும் அவரின் ஆர்வத்தை முதலில் புரிந்துகொள்ளவில்லை. என்னிடமும்,சில நண்பர்களிடமும்  2005 ம் ஆண்டில் "நான் அல்பம் கட்டாயம் வெளியிடுவேண்டா" என்று கிட்டத்தட்ட ஒரு சபதம் போலவே சொல்லி இருந்தார். பின்னர், 2007 ம் ஆண்டு நானும் அவருடன் இருந்த சிலரும் கணித பிரிவினுள்ளும். அவரும் மற்றவர்களும் வர்த்தக பிரிவினுள்ளும் கற்பதற்காக பிரிந்தோம்.( வகுப்பு தான் வேற, ஒரே பாடசாலைதான்.)

நாம் உயர்தர வகுப்பிற்கு வந்ததும் பல நிகழ்ச்சிகளை நடாத்தவேண்டி இருந்தது.
அந்த தருனத்தை நன்கு பயன்படுத்திய றொபின்; மேனன்,சிவான‌ந்தன் போன்றோருடன் இணைந்து தனது நடன நிகழ்ச்சிகளை நடாத்த தொடங்கினார்.  அது வந்திருந்த அதீதிகளை கவர இவர்களை தேடி பல நிகழ்ச்சிகள் வரத்தொடங்கியது.

எல்லாம் அவர்களின் திறமையை வெளிக்காட்டியதே தவிர, அவர்களின் இலக்கான அல்பம் வெளியிடுவதை ஊக்குவிக்கும் வகையில் அமையவில்லை.  (இந்த காலப்பகுதியில் இவர்கள் அனைவரினதும் இலக்கு ஒன்றாக மாறியிருந்தது. அது தான் "அல்பம்".) அல்பம் தொடர்பாக இவர்கள் பேச்செடுக்கும் போதெல்லாம் ஊக்குவித்தவர்களைவிட நையான்டி செய்தவர்கள்தான் அதிகம்.

முடிவாக வேறு ஒருவரினதும் துணையில்லாமல் தாமாகவே இசையல்பம் வெளியிடுவதென முடிவெடுத்தார்கள்.
அதன் படி றொபின் இசையையும், அஜய் பாடல் வரிகளையும், மேனன்,சிவா பாடல் மெட்டுகளையும் கவனித்துக்கொண்டனர். ஒரு வழியாக பலரிடம் கடன் வேண்டி பாடலை தயார் செய்து முடித்தார்கள். ஆனால், ஒரு புரொடியூசர்களும் பாடலை வெளியிட முன்வரவில்லை. பாடலின் தரத்தால் இல்லை.  இலங்கையில் முன்னனி நிறுவங்களினூடு வெளியிட வேண்டும் எனின் கட்டாயம் சிங்கள பாடல்கள் இருக்க வேண்டும். ஒரு அல்பத்தில் குறைந்தது 12 பாடல்கள் இருக்க வேண்டும். இவர்களிடம் அந்த இரண்டும் இல்லை. அதனால், வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, தாமாகவே வெளியிடதீர்மானித்து வெளியிட்டார்கள்.

வெளியீட்டின் போதும் பல சிக்கல்கள். முக்கியமாக சில விளம்பரதாரர்களால். (இது நான் கண்ணூடாக பார்த்தது)
அதைவிட எவ்வளவு பிரச்சனைகள் இருந்திருக்கும் என்பது அவர்களுக்கே தெரிந்த ரகஷியம்.

ஒரு வாறாக அல்பம் வெளியானதும் தான் அவர்களின் திறமை பலருக்கு தெரியவந்தது. நையான்டி பண்ணியவர்கள் தமது வாயாலேயே இவர்களை புகழ்ந்தார்கள். சிலர் இவர்களின் வெற்றிக்கு தாமும் காரணம் என கூறிக்கொண்டதுமுண்டு.

இப்போது தாம் பெற்ற வெற்றியின் மூலம் தமது கடன்களை அடைத்தது மட்டுமின்றி, எஞ்சிய பணத்தை மீண்டும் வீடியோ அல்பம் எடுப்பதற்கு முதலிட்டுள்ளார்கள்.

எங்கே... பிறேமசிறீதரனை காணோம்...

அவர் இன்னும் நேரடியாக திரைக்கு வரவில்லை. மறைமுகமாக மேடை நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
புதிதாக வர இருக்கும் அவர்களின் வீடியோ பாடலில் நிச்சயமாக அவர் தனது மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றுவார் என்பதில் ஐயமில்லை.

"இது புதுசு..." பாடல் ஓடியோவாக இலங்கை மக்கள் மத்தியில் பிரசித்தம் பெற்றது போன்று; அவர்களின் முதல் வீடியோ பாடலான அதே "இது புதுசு..." பாடல் வெற்றிபெறும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.

இருந்தும்...
இன்றுவரை அவர்கள் பெரிய குழுக்களுடன் இணைந்து செயற்படாமல் தனித்தன்மையுடன் இயங்குவது அவர்களின் வெற்றி. அதேவேளை அவர்களுக்கு புரோடியூசர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கு என்னை பொறுத்தவரை இதுவும் ஒருகாரணம்.

திறமை வாய்ந்த இக்கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர்களால் தமிழ் இசைத்துறையில் ஒரு புது பரிமாணத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.
---------------------------------------------------------------------------------------

ஓடியோ அல்பம் வெளியிடும் போது பிறேம் இல்லை. இவர் தான் அவர்.

---------------------------------------------------------------------------------------

இவர்களை தொடர்பு கொள்ள 
இதை கிளிக் பண்ணவும்.
அல்லது இதை.
---------------------------------------------------------------------------------------
அவர்களி ஓடியோ அல்பத்திலிருந்து இரு பாடல்கள்... எங்க ஏரியா இது புதுசு
---------------------------------------------------------------------------------------
இவர்களை வளர்க்க நினைப்போர் வோட் போட்டு இப்பதிவை பலர் ஆறியச் செய்யவும்.

6 comments:

 1. super machan pirabu, ealuthum pothu nakkalayum serthu ealuthuriye athan best

  ReplyDelete
 2. super article!
  Now, i'm fan of RHnCrew

  ReplyDelete
 3. Thanx Prabu.Pala unmaigal vellila Vanthittu pola.innum ondu solla maranthittar prabu. engada Album Release ku prabu Romba help panni irukkar.Nandri Valagam

  ReplyDelete
 4. hey superrrrrrrrrrrrrrrrrr

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails