Total Pageviews

Friday, 29 January 2010

அவதார் தமிழ் ரீமேக்!!! (லைவ்)

புதிய அவதார்
----------------------------------------------------------------------------------------
2012 ல் தமிழில் எடுக்கப்பட்ட "புதிய அவதார்" ரீமேக் தொடர்பான ஒரு லைவ் கொமன்ட்...
----------------------------------------------------------------------------------------
இது ஒரு சன் பிக்சர் வெளியீடு.
இயக்குனர் : பேர‌ரசு

வானத்துல பிளேன் எல்லாம் பறந்து வருது. அதுல சில ராணுவ வீரர்கள் குந்திகிட்டிருக்காங்க. கமெரா எல்லோரையும் வடிவா படம் பிடிக்குது, ஆனா, ஒருத்தருன்ட மட்டும் முதுக காட்டுது, காத காட்டுது, கைல இருக்குற நரம்ப காட்டுது...  மூஞ்சிய மட்டும் காட்டுறானுக இல்ல.

ஆ..

இப்ப பிளேன்ட முன் பக்கத்த காட்டுறாங்க. பிளேன் தரையிறங்கிடுது. ஒவ்வொரு இராணவ வீரர்களா வெளியேறுறாங்க. கடைசியா வீல் செயாரில் ஒருவர் வாரார்... இப்ப கூட முதுகை தான் காட்டுறாங்க...
வீல் சியாரின் சில்லு தரைல படுது... என்ன ஆச்சரியம்....

 திடீருனு மின்னுது... காத்து பலமா வீசுது...  கமெரா சுத்துது...

ஐ...

ஹீரோட மூஞ்சிய காட்டுது!!! அவரும் சம்பந்தமில்லாம கமெராவ பார்த்து சிரிக்கிறார்!!! (சிரிக்கிறாராமாம்???)

ஆங்...

ஒரு கூட்டமே நின்டு இவரை பார்த்து அர்த்தமே இல்லாம பாட்டு பாடுது!!!
இப்ப கமெரா சொத்தியா வானத்த பாக்குது...

ஒப்பினிங் சீன் முடிஞ்சுது.

இப்ப ஹீரோ லப் இக்கு போறாரு... ( வீல்சியாரில் இருந்துகிட்டு தலைய திருப்பி தரைல ஊதுராரு, அந்த வேகத்துல வீல்சியார் முன்னாடி நகருது!!!). அங்க விஜயகாந்த் ரேஞ்சுக்கு இங்கிலீஸ்ல பீத்துராரு... வெபென்ஸ், மெசின் பற்றி யெல்லாம் பீத்துராரு.(இங்க அர்யுனின் சாயலும் வெளிப்படுது.)

"என்னன்டுப்பா இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க...." துணை நடிகர் கேக்குறாரு.
"......" ஹீரோ புன்சிரிப்பு செய்யுறாராமாம்.

சரி இப்ப ஒரு வழியாக ஹீரோ தன்ட கூட்டத்தோட அவங்கட உலகத்துக்கு போறாரு...

தரையிறங்கியதும், ஹீரோ தனியா நடக்குறாரு. (இப்ப கமெரா கீழ இருந்து படம் பிடிக்குது...) பெரிய பெரிய பூக்கள் எல்லாம் இருக்கு. யூத் ஹீரோ சரத் குமார் மாதிரி பூக்களை ஒரு வித்தியாசமான முக பாவனையோடு தொடுராரு. பூக்கள் எல்லாம் மறைந்துடுது!!!

ஆ....

அங்கால, பெரிய காண்டாமிருகம் போல சில மிருகங்கள்... ஹீரோட நண்பர்கள் இவரை ஓடி வந்துடும் படி கேக்குறாங்க. ஆனா ஹீரோ சுல்லான் தனுஸ் ரேஞ்சுக்கு மிருகத்த நோக்கி ஓடுராரு. என்ன ஆச்சரியம் அந்த மிருகம் பின்வாங்கிடுது. ஹீரோ சிம்பு மாதிரி சிரிக்குறாரு.இப்ப பின்னுக்கு திரும்புறாரு...

அங்கே!!!

டி.ஆர்...

 ( அந்த மிருகத்தை பயப்புடுத்துற அளவுக்கு ஸ்ரோங்கான ஒரு அனிமேஷனை செய்ய பல கோடி செலவாகும் என்பதால், இயக்குனர் குறைந்த செலவில் போட்ட ஐடியா!!!)

ஹீரோ அப்பிடியே ஷொக் ஆகிடுறாரு. பிறகு, ஹீரோ ஓடுராரு... டி.ஆர் வீராச்சாமி ரேஞ்சுல இன்னும் யூத் ஃபுல்லா துரத்துராரு. ஹீரோ அருவில குதிச்சுடுரார்!!!

நல்ல காலத்துக்கு அருவில ஒரு ரப்பர் படகு மிதக்குது. அதுல விழுந்து தப்பிடுறாரு!!! ( இது வேட்டைக்காரன்ல விஜய்க்கு தொப்பி வந்த அதே டெக்னிக் தான்.)

இப்ப காட்டுல ஹீரோ தனியா ஆபத்துல சிக்க.....  ஹீரோயின் அறிமுகமாகுறாங்க ஹீரோவ காப்பாத்துராங்க.

ஹீரோ விஜயகாந்த் + டிஆர் ரேஞ்சுக்கு லுக்கு விடுரார். ( இந்த நடிப்பே போதும் தமிழுக்கு ஒஸ்கார் நிச்சயம்)

ஹீரொயின் தனது கூட்டத்துக்கு கூட்டிடு போறாங்க... கூட்டத்தார் முதல்ல மறுத்தாலும்... ஹீரோயின் தோரணம் பட விசால் ரேஞ்சுக்கு செடிமென்ட்(?!) ஃபீல் கொடுத்து கிறீன் காட வாங்குறாங்க.

 பிறகு ஹீரோக்கு வலிப்பு வருது...

(அதாங்க விஜய் ஸ்ரைலில் ஒரு பாட்டு...)

கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பொகுது. (பரத்+ராமராயன்+சரத் ரேஞ்.)

ஸ்.... ஸ்... கொர்... கொர்....

ஸொறி பா! ரொமான்ஸ் ஐ பார்த்து அதிர்ச்சில தூங்கிட்டன்.

ஒரு பெரிய மரம் விழுகுது. எல்லோரும் ஓடுறாங்க...

ஹீரோவ ஹீரோயின் முறாய்க்குறாங்க! தமிழ் நடிகைகளுக்கே உரிய அக்டிங்.(?!).

இறுதில ஹிரோ இக்கும் வில்லனுக்கும் பயங்கர சண்டை போகுது. ஹீரோ மாஸ்க் கழர மயங்கிடுறாரு. ஹீரோயின் டி.ஆர் ட முதுகுல ஏறிக்கிட்டு வில்ல நோட பயங்கர சண்டை போடுறாங்க. வில்லன் டி.ஆர குத்திகொள்ளுறான்.

"தங்கச்சி... தங்கச்சி... என்னால இவள‌வு தான் முடிஞ்சுது. தங்கச்சி ட குங்கும பொட்ட காப்பாத்த முடியாத பாவிம்மா நான்... தங்கச்சி... தங்க..... " இது டிஆர் இன் கடைசி வசனம்.

( என்ன திடீரெண்டு கால் நனையுது!!???..... ஓ... ஓடியன்ஸ் ஃபீலாயிட்டாங்க. இது வீராச்சாமிக்கு அடுத்ததா தமிழ் சினிமல வந்த சோகமான சீன்.)

ஹீரோ நிராயுத பாணியா நிக்குறார்.

வில்லன் ஹீரோவ சுடுறான்...

புல்லட் ஹீரோட நெஞ்சுல பட்டு மறுபடியும் வில்லனுட கன்னுக்குள்ளயே போயிடுது.
"இப்படி பட்ட நல்லவனையா நான் சுட்டேன், நானெல்லாம் மனுசனே இல்ல" வில்லன் தன்னை தானே சுட்டு சாகுறாரு.

ஹீரோவும் இறுதில இறந்துகிடக்குறார், பொடியை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய ரெடி பண்ணுறாங்க.

"அவன் நல்லவன்டா... அவனுக்கு சாவே கிடையாது... அவன் சாக மாட்டான்... நம்புங்கடா" கலாபவன் ரேஞ்சுக்கு ஒருத்தர் சவுண் கொடுக்குறார். என்ன ஆச்சரியம் தமிழ் மரபை மீறாம ஹீரோ உயிர்த்துடுறார். ( புதிய கீதை விஜய் ட ஸ்ரைலில் ஹீரோ சிரிக்குறார்.)

"ஹீரோ சாவதில்லை!!!"  படம் முடிந்து ஒரு வசனம் திரைல ஓடுது.


சன்டிவி நியூஸ்... 10.30

"புதிய அவ‌தார்" படம் மாபெரும் வெற்றி... (படம் ரிலீஸ் ஆனது 10.35)

பிபிஸி நியூஸ்...

சீனாவில் "புதிய அவதார்" படத்துக்கான ரிக்கெட்டை அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்குகிறது.
இது தொடர்பாக சீன முக்கிய பிரமுகர் தெரிவித்ததாவது..." இதை விட எமது மக்களை முட்டாளாக வைத்திருப்பதற்கு வேற வழி இல்லை. தொடர்ந்து, தமிழ் படங்களை சீனாவில் இலவசமாக திரையிட எண்ணியுள்ளோம்"
----------------------------------------------------------------------------------------
இது யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. சும்மா ஒரு ரைம் பாஸிக்கு தான்!!
----------------------------------------------------------------------------------------
மேல உள்ள கேள்விக்கு வோட் போடுங்கோ....

13 comments:

 1. சன்டிவி நியூஸ்... 10.30

  "புதிய அவ‌தார்" படம் மாபெரும் வெற்றி... (படம் ரிலீஸ் ஆனது 10.35)

  Topi Topi Topi!!!!

  ReplyDelete
 2. ஓட வைக்கிறதுக்கு ஒரு குரூப் இருக்கும் ...
  /சீனாவில் "புதிய அவதார்" படத்துக்கான ரிக்கெட்டை அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்குகிறது.////

  ReplyDelete
 3. *// என்ன திடீரெண்டு கால் நனையுது!!???..... ஓ... ஓடியன்ஸ் ஃபீலாயிட்டாங்க. இது வீராச்சாமிக்கு அடுத்ததா தமிழ் சினிமல வந்த சோகமான சீன்.//*

  பின்னிட்டிங்க.

  ReplyDelete
 4. ஆனால் ஒன்று படம் ஒரு இடத்தில்தானும் தமிழ் மரப மீறவில்லை.

  ReplyDelete
 5. ஹாய் பிரியா!தமிழ் மரபு எண்டால் என்ன? விளக்கவும் ப்லீஸ்!!!!!.

  ReplyDelete
 6. அதோடு ரஜினி படமாயிருந்தால் சீனாக்காரன் அடி முட்டாலாயிருப்பான்! வாழ்க தமிழ்!!!

  ReplyDelete
 7. irunthalu vijay dance valippu endu sonnathu
  so bad*
  dance enda = valippu illa

  ReplyDelete
 8. படம் சூப்பர் ஹிட்.

  ReplyDelete
 9. T. ராஜேந்தரை போல் ஒரு ஒழுக்க சீலனை சினிமா உலகத்தில் பார்க்க முடியாது. நிறைந்த திறமையும், தன்னம்பிக்கையும், உதவும் குணமும் ஒருங்கே பெற்றவர். அவரை கிண்டலடிப்பவர்களும், கரடி என்று சொல்பவர்களும் ஈன பிறவிகள்.

  ReplyDelete
 10. நன்றி... இனியவன் :)
  ஹீ...ஹீ... ஆமாம்...ஆமாம்...

  நன்றி... A.S. Ahamed :)
  அவரவர் அந்தந்த தகுதியை தக்கவச்சுக்கனும்... இல்லாவிடின் இப்படி கிண்டலடிப்பது சகஜம்...
  ஓ.கே... கிண்டலடித்த நான் ஈனப்பிறவி.
  நகைச்சுவையை ரசிக்கத்தெரியாத நீங்கள்... மிருகம். (சிரிக்க தெரிந்தால்தான் மனிதன். )

  http://valaakam.blogspot.com/2010/10/blog-post_11.html

  ReplyDelete
 11. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 370 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதுவரை வெளியான அனைத்து இந்திய படங்களின் சாதனைகளை "புதிய அவ‌தார்' முறியடித்துள்ளது.

  இப்படம் திரையிட்ட இரண்டு நாளில் 751/2 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது. முதல் நாளில் 291/2 கோடியும், இரண்டாம் நாளில் 36 கோடியும் வசூலித்து உள்ளது.

  ReplyDelete
 12. அவதார் தமிழ் ரீமேக்!
  இப்படம் உலகம் முழுவதும் சுமார் 3700 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதுவரை வெளியான அனைத்து இந்திய படங்களின் சாதனைகளை 'அவதார் (தமிழ்) முறியடித்துள்ளது.

  இப்படம் திரையிட்ட இரண்டு நாளில் 62 1/2 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது. முதல் நாளில் 26 1/2 கோடியும், இரண்டாம் நாளில் 36 கோடியும் வசூலித்து உள்ளது.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails