Total Pageviews

Friday 8 January 2010

சுட்ட எண் ஜோதிடம். (பகுதி 02)

---*8*---
----------------------------------------------------------------------------------------
இன்றைக்கு 8 ம் நம்பர்காரங்களுக்கு....
----------------------------------------------------------------------------------------


8ம் திகதி
அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். பல காரியங்களை சமாளிக்க முயற்சி செய்வார்கள்.
மதம், பரசாதனங்கள், தெய்வ வழிபாடு, வேதாந்தம் இவர்கள் மனதைப் பிடித்திழுக்கும். உடலோ சுகத்தை விரும்பும். மனதோ தியாகத்தையும், துறவையும் நினைவுறுத்தும். ஏதாவது பரோபகாரமான காரியத்திலோ, தன் சுகத்தை தியாகம் புரிவதிலோ ஈடுபடாவிடில் மன அமைதி ஏற்படாது. மனச்சாட்சி அதிகம் வளர்ந்திருப்பதால் நேர்மையான வாழ்க்கையுண்டு. இவர்கள் பலத்த உழைப்பாளிகள். பல அரிய காரியங்களை சாதிக்க வல்லவர்கள். சமூக நன்மைக்காக போராடுவார்கள்.

17 ம் திகதி
சீமானாக இராவிடினும் அதற்காக முயற்சிப்பார்கள். சரீர சுகங்களை மனம் இடைவிடாது நாடும். சதா பெருந்தொகை பணம் சேர்த்துக்கொள்ள திட்டம் போடுவார்கள். சுகம் முக்கியமானதாக நினைப்பதால் நியாயமான முறைகளை விட்டு மோசடியான முறையில் பணம் சேர்ப்பார்கள். பொதுப்பணத்தை தன்னுடையதாக்குவார்கள்.  பகட்டுக்காக செலவுசெய்தாளும், மனம் விரும்பி செய்யமாட்டார்கள். கஞ்சத்தனம் உடலிலே ஊறிவிடும். கூட்டு எண் 5,9 ஆயின் மனம் போனபடி செலவு செய்வார்கள். ஆத்மீக வாழ்விலோ அல்லது மங்காத புகழுக்காகவோ உழைப்பார்கள்.

26 ம் திகதி
8,17 ஐ விட துரதிஸ்டவாதிகள். பெருப்பாலானோர் இளவயதிலேயே பெற்றோரில் ஒருவரையேனும் இழக்கின்றனர்.
சிறுவயதிலேயே கஷ்டங்களும், முன்னேற்றத்தடைகளும் ஏற்பட்டு விடுகின்றன. முன்னேற்றத்தில் விருப்புடையவர்களாதலால் கஷ்டங்களை சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.
பிறரால் வீண் பழிகள் சுமத்தப்படுவது சகஜமே. எதிரிகள் பலர் இருப்பார்கள். கற்பனா சக்தியும், நகைச்சுவையுனர்வும், கூர்மையான அறிவும் காணப்படும்.

அதிஸ்டகாலம்:
1,10,19 திகதிகள். கூட்டெண் 1 என்றாலும் அதிஸ்டம்.
4,13,22,31 சாதகமானவை.

துரதிஸ்டகாலம்:
8,17,26 வீண் விவகாரங்கள், நோய்கள் ஏற்படும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.

நிறம்:
மஞ்சள் முதல்மையானது.
பச்சை நீலம் நன்மையானது.
கறுப்பு, மண்ணிறம் மற்றும் மங்கலான நிறங்கள் பொருந்தாது.

இரத்தினம்:
நீலக்கல்
----------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected