Total Pageviews

Saturday 30 January 2010

முறை தவறிய காதல்!!!

காதல்
-----------------------------------------------------------------------------------------
இத பார்த்தாவது மனுசங்க திருந்தனும். ஜோக்கா பாக்காம சீரியசா பாருங்க.
-----------------------------------------------------------------------------------------
































































































































































































































Friday 29 January 2010

அவதார் தமிழ் ரீமேக்!!! (லைவ்)

புதிய அவதார்
----------------------------------------------------------------------------------------
2012 ல் தமிழில் எடுக்கப்பட்ட "புதிய அவதார்" ரீமேக் தொடர்பான ஒரு லைவ் கொமன்ட்...
----------------------------------------------------------------------------------------
இது ஒரு சன் பிக்சர் வெளியீடு.
இயக்குனர் : பேர‌ரசு

வானத்துல பிளேன் எல்லாம் பறந்து வருது. அதுல சில ராணுவ வீரர்கள் குந்திகிட்டிருக்காங்க. கமெரா எல்லோரையும் வடிவா படம் பிடிக்குது, ஆனா, ஒருத்தருன்ட மட்டும் முதுக காட்டுது, காத காட்டுது, கைல இருக்குற நரம்ப காட்டுது...  மூஞ்சிய மட்டும் காட்டுறானுக இல்ல.

ஆ..

இப்ப பிளேன்ட முன் பக்கத்த காட்டுறாங்க. பிளேன் தரையிறங்கிடுது. ஒவ்வொரு இராணவ வீரர்களா வெளியேறுறாங்க. கடைசியா வீல் செயாரில் ஒருவர் வாரார்... இப்ப கூட முதுகை தான் காட்டுறாங்க...
வீல் சியாரின் சில்லு தரைல படுது... என்ன ஆச்சரியம்....

 திடீருனு மின்னுது... காத்து பலமா வீசுது...  கமெரா சுத்துது...

ஐ...

ஹீரோட மூஞ்சிய காட்டுது!!! அவரும் சம்பந்தமில்லாம கமெராவ பார்த்து சிரிக்கிறார்!!! (சிரிக்கிறாராமாம்???)

ஆங்...

ஒரு கூட்டமே நின்டு இவரை பார்த்து அர்த்தமே இல்லாம பாட்டு பாடுது!!!
இப்ப கமெரா சொத்தியா வானத்த பாக்குது...

ஒப்பினிங் சீன் முடிஞ்சுது.

இப்ப ஹீரோ லப் இக்கு போறாரு... ( வீல்சியாரில் இருந்துகிட்டு தலைய திருப்பி தரைல ஊதுராரு, அந்த வேகத்துல வீல்சியார் முன்னாடி நகருது!!!). அங்க விஜயகாந்த் ரேஞ்சுக்கு இங்கிலீஸ்ல பீத்துராரு... வெபென்ஸ், மெசின் பற்றி யெல்லாம் பீத்துராரு.(இங்க அர்யுனின் சாயலும் வெளிப்படுது.)

"என்னன்டுப்பா இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க...." துணை நடிகர் கேக்குறாரு.
"......" ஹீரோ புன்சிரிப்பு செய்யுறாராமாம்.

சரி இப்ப ஒரு வழியாக ஹீரோ தன்ட கூட்டத்தோட அவங்கட உலகத்துக்கு போறாரு...

தரையிறங்கியதும், ஹீரோ தனியா நடக்குறாரு. (இப்ப கமெரா கீழ இருந்து படம் பிடிக்குது...) பெரிய பெரிய பூக்கள் எல்லாம் இருக்கு. யூத் ஹீரோ சரத் குமார் மாதிரி பூக்களை ஒரு வித்தியாசமான முக பாவனையோடு தொடுராரு. பூக்கள் எல்லாம் மறைந்துடுது!!!

ஆ....

அங்கால, பெரிய காண்டாமிருகம் போல சில மிருகங்கள்... ஹீரோட நண்பர்கள் இவரை ஓடி வந்துடும் படி கேக்குறாங்க. ஆனா ஹீரோ சுல்லான் தனுஸ் ரேஞ்சுக்கு மிருகத்த நோக்கி ஓடுராரு. என்ன ஆச்சரியம் அந்த மிருகம் பின்வாங்கிடுது. ஹீரோ சிம்பு மாதிரி சிரிக்குறாரு.இப்ப பின்னுக்கு திரும்புறாரு...

அங்கே!!!

டி.ஆர்...

 ( அந்த மிருகத்தை பயப்புடுத்துற அளவுக்கு ஸ்ரோங்கான ஒரு அனிமேஷனை செய்ய பல கோடி செலவாகும் என்பதால், இயக்குனர் குறைந்த செலவில் போட்ட ஐடியா!!!)

ஹீரோ அப்பிடியே ஷொக் ஆகிடுறாரு. பிறகு, ஹீரோ ஓடுராரு... டி.ஆர் வீராச்சாமி ரேஞ்சுல இன்னும் யூத் ஃபுல்லா துரத்துராரு. ஹீரோ அருவில குதிச்சுடுரார்!!!

நல்ல காலத்துக்கு அருவில ஒரு ரப்பர் படகு மிதக்குது. அதுல விழுந்து தப்பிடுறாரு!!! ( இது வேட்டைக்காரன்ல விஜய்க்கு தொப்பி வந்த அதே டெக்னிக் தான்.)

இப்ப காட்டுல ஹீரோ தனியா ஆபத்துல சிக்க.....  ஹீரோயின் அறிமுகமாகுறாங்க ஹீரோவ காப்பாத்துராங்க.

ஹீரோ விஜயகாந்த் + டிஆர் ரேஞ்சுக்கு லுக்கு விடுரார். ( இந்த நடிப்பே போதும் தமிழுக்கு ஒஸ்கார் நிச்சயம்)

ஹீரொயின் தனது கூட்டத்துக்கு கூட்டிடு போறாங்க... கூட்டத்தார் முதல்ல மறுத்தாலும்... ஹீரோயின் தோரணம் பட விசால் ரேஞ்சுக்கு செடிமென்ட்(?!) ஃபீல் கொடுத்து கிறீன் காட வாங்குறாங்க.

 பிறகு ஹீரோக்கு வலிப்பு வருது...

(அதாங்க விஜய் ஸ்ரைலில் ஒரு பாட்டு...)

கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பொகுது. (பரத்+ராமராயன்+சரத் ரேஞ்.)

ஸ்.... ஸ்... கொர்... கொர்....

ஸொறி பா! ரொமான்ஸ் ஐ பார்த்து அதிர்ச்சில தூங்கிட்டன்.

ஒரு பெரிய மரம் விழுகுது. எல்லோரும் ஓடுறாங்க...

ஹீரோவ ஹீரோயின் முறாய்க்குறாங்க! தமிழ் நடிகைகளுக்கே உரிய அக்டிங்.(?!).

இறுதில ஹிரோ இக்கும் வில்லனுக்கும் பயங்கர சண்டை போகுது. ஹீரோ மாஸ்க் கழர மயங்கிடுறாரு. ஹீரோயின் டி.ஆர் ட முதுகுல ஏறிக்கிட்டு வில்ல நோட பயங்கர சண்டை போடுறாங்க. வில்லன் டி.ஆர குத்திகொள்ளுறான்.

"தங்கச்சி... தங்கச்சி... என்னால இவள‌வு தான் முடிஞ்சுது. தங்கச்சி ட குங்கும பொட்ட காப்பாத்த முடியாத பாவிம்மா நான்... தங்கச்சி... தங்க..... " இது டிஆர் இன் கடைசி வசனம்.

( என்ன திடீரெண்டு கால் நனையுது!!???..... ஓ... ஓடியன்ஸ் ஃபீலாயிட்டாங்க. இது வீராச்சாமிக்கு அடுத்ததா தமிழ் சினிமல வந்த சோகமான சீன்.)

ஹீரோ நிராயுத பாணியா நிக்குறார்.

வில்லன் ஹீரோவ சுடுறான்...

புல்லட் ஹீரோட நெஞ்சுல பட்டு மறுபடியும் வில்லனுட கன்னுக்குள்ளயே போயிடுது.
"இப்படி பட்ட நல்லவனையா நான் சுட்டேன், நானெல்லாம் மனுசனே இல்ல" வில்லன் தன்னை தானே சுட்டு சாகுறாரு.

ஹீரோவும் இறுதில இறந்துகிடக்குறார், பொடியை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்ய ரெடி பண்ணுறாங்க.

"அவன் நல்லவன்டா... அவனுக்கு சாவே கிடையாது... அவன் சாக மாட்டான்... நம்புங்கடா" கலாபவன் ரேஞ்சுக்கு ஒருத்தர் சவுண் கொடுக்குறார். என்ன ஆச்சரியம் தமிழ் மரபை மீறாம ஹீரோ உயிர்த்துடுறார். ( புதிய கீதை விஜய் ட ஸ்ரைலில் ஹீரோ சிரிக்குறார்.)

"ஹீரோ சாவதில்லை!!!"  படம் முடிந்து ஒரு வசனம் திரைல ஓடுது.


சன்டிவி நியூஸ்... 10.30

"புதிய அவ‌தார்" படம் மாபெரும் வெற்றி... (படம் ரிலீஸ் ஆனது 10.35)

பிபிஸி நியூஸ்...

சீனாவில் "புதிய அவதார்" படத்துக்கான ரிக்கெட்டை அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்குகிறது.
இது தொடர்பாக சீன முக்கிய பிரமுகர் தெரிவித்ததாவது..." இதை விட எமது மக்களை முட்டாளாக வைத்திருப்பதற்கு வேற வழி இல்லை. தொடர்ந்து, தமிழ் படங்களை சீனாவில் இலவசமாக திரையிட எண்ணியுள்ளோம்"
----------------------------------------------------------------------------------------
இது யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. சும்மா ஒரு ரைம் பாஸிக்கு தான்!!
----------------------------------------------------------------------------------------
மேல உள்ள கேள்விக்கு வோட் போடுங்கோ....

Thursday 28 January 2010

இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா? (லெமூரியா 05)

லெமூரியா
-----------------------------------------------------------------------------------------
"லெமூரியா" தொடர்பான பதிவினை போன கிழமை போட முடியவில்லை மன்னிக்கவும். கொஞ்சம் அரசியல் பக்கம் (???) சாய்ந்ததால் ஏற்பட்ட நெருக்கடி.
போனபதிவில் லெமூரியாவுக்கும் இராமாயணத்திற்கும் இடையிலான தொடர்பை பார்த்திருந்தோம்.  பல எதிர்ப்பு, வழமை போலவே ஃபெஸ் புக் நண்பர்கள் மூலம் தான் கடும் எதிர்ப்பு. ஒரே வட்டத்துக்குள்ள இருந்துட்டு வெளில வர மாட்டாங்க என்கிறாங்க.
-----------------------------------------------------------------------------------------

சரி நாங்க தொடருக்குள் போவோம்.

போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது...
அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் "திருநெல்வேலி" எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ "தின்ன வேலி" என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.

இவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)


ஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)
நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.

தொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. ...)


எது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.
ஏற்கனவே கூறியிருந்தேன் "லெமூரியா கண்ட‌த்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது" என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.

பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான "ஃபை"(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!

அவர்கள் எவ்வாறு அவ் அறிவை பெற்றனர்? மேலும் வியத்தகு சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...
-----------------------------------------------------------------------------------------
இது ஒரு கலந்துரையாடல்... உங்களது கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன...

மேல உள்ள கேள்விக்கு வோட் போடுங்கோ....

-----------------------------------------------------------------------------------------

Sunday 24 January 2010

சுட்ட எண்ஜோதிடம். 6 (பகுதி 4)

***6***
----------------------------------------------------------------------------------------
கன நாளா ஜோதிடம் போடல... இன்றைக்கு 6 ம் நம்பர்காரங்களுக்கு.
----------------------------------------------------------------------------------------

6ம் திகதி...
மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவர்கள். அடக்கமான சுபாவமும் ஆழ்ந்த கருத்துகளும் இருக்கும்.
கலைகளில் சுலபமாக தேர்ச்சி ஏற்படும். பொருள் சேர்ப்பதில் ஆர்வமிருக்கும். பெண்தன்மை ஓரள‌வு  தோன்றும்.

15ம் திகதி...
வசீகரமான தோற்றமுடையவர்கள். எல்லோரையும் வெகு விரைவில் வசப்படுத்தகூடியவர்கள்.
ஆதாயம் வந்து கொண்டே இருக்கும். பிரமிக்கத்தக்க பேச்சு வல்லமையும் கலையில் தேர்ச்சியும் இருக்கும்.
இயற்கையாகவே வாதிடும் திறனும்ன் நகைச்சுவையான பேச்சுமிருக்கும்.
எவரையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொள்ளத்தக்க கூர்மையான் வ்ழி இருக்கும்.
சதா சந்தோசமாக இருப்பர்.

24ம் திகதி...
அடக்கமான தன்மை நிரம்பிய இவர்கள் சாதிப்பதில் சிறந்தவர்கள்.
சமயோசிதமாக பேசுவார்கள். அதிஸ்டகரமான பதவியும், விவாகமும் தேடிவரும்.
இவர்களுக்கு துணிச்சலும் தீவிரமுமுண்டு. சலியாத உழைப்பினால் அதிஸ்டத்தை முழுமையாக பயன்படுத்துவார்கள்.
மேலதிகாரிகள் மிகவும் விருப்ப படுவார்கள்.

அதிஸ்டகாலம்...
6,15,24 ம் திகதிகள். கூட்டென் 6 வரினும் நன்மை.
9,18,27 பொதுவானவை.

துரதிஸ்டதினங்கள்...
3,12,21,30 மிகத்தீமையானது.
5,14,23 ம் தீமை.

அதிஸ்ர நிறம்...
ஆழ் பச்சை, ஆழ் நீலம், மற்ற நீலம், பச்சை

துரதிஸ்ட நிறம்...
வெள்ளை, மஞ்சள், றோஸ்

அதிஸ்ட கல்...
மரகதம்
---------------------------------------------------------------------


Saturday 23 January 2010

கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும். (18+)

18+
------------------------------------------------------------------------------------------

தேர்தல் நேரங்களில் ஏன் சிறுவர்களை (18>) இந்த குப்பை அரசியலுக்குள் இழுப்பான்.

அது தான் 18+ பதிவு. ( வோட் போடக்கூடியவர்கள் இவர்கள் தானே!!!)




இலங்கையில் முக்கியமான(!?) ஒரு தேர்தல் நடக்க இருக்கிறது. அசைக்க முடியாது என கருதப்பட்ட மகிந்த ராஜ பக்ஷவும். அவரை அசைக்க துடிக்கும் சரத் பொன்ஷேகாவும் மோதிக்கொள்ள போகிறார்கள். ( முன்னால் நண்பர்கள். ஒன்டுக்குள்ள ஒன்டா இருந்தவங்க. இப்ப இப்படி ஆகிட்டாங்க.)  


அது இருக்கட்டும்,  


தேர்தல் நடக்க போறது என்னவோ இலங்கைல, இலங்கை மக்களுக்காக. ஆனால், வெளி நாட்டில் இருக்கும் அமைப்புகள் " நீங்க அவருக்கு போடுங்க, இல்லை இல்லை இவருக்கு போடுங்க" என்று ஓவரா பீத்திக்கொள்ளுதுங்க. அமைப்புக்கள் மட்டுமில்லை வெளி நாட்டு சன‌ங்களும் தான். ஏதோ இவர்கள் சொன்னப்டி செய்து நாடு கிடைச்சா வெளி நாட்ட விட்டுட்டு திரும்பி போவாங்க மாதிரி. ( ஒருத்தனும் அசைய மாட்டான். சில நேரம் 10 வீதம் அசையலாம்...)  


அங்க இருக்குற சனத்துக்கு தான் தெரியும், இப்ப யார் தேவை? யார் தேவையில்லை என்று. ஒரு முறை வோட் போடாமல் அவர்கள் செய்த தவறை மீண்டும் செய்ய மக்கள் முன்வரமாட்டார்கள்.  


அதால, 


அங்கத்தைய மக்களை அவர்களின் விருப்படி (அவர்களும் 6 அறிவு படைத்தவர்கள் தான்.) வோட் போட விடுங்கப்பா!!! அதை விட்டுட்டு சும்மா இருக்குற சனத்த குழப்ப வேண்டாம்!!!


------------------------------------------------------------------------------------------




Thursday 21 January 2010

நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்... (விளங்க முடியாத புதிர்)

நோஸ்ராடாமஸ்
-------------------------------------------------------------------------------------------------

நோஸ்ராடாமஸ் பற்றி பதிவுலகில் யாரும் பெரிதாக எழுதியதை என்னால் பார்க்க முடியவில்லை. பலர் சோதிடங்களை பற்றியும் குறிசொல்பவர்களை பற்றியும் எழுதியிருப்பினும், இவர்களுக்கெல்லாம் தலையான நோஸ்ராடாமஸ் பற்றி பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. அதனால், எனக்கு தெரிந்தவற்றை நான் எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.  

நோஸ்ராடாமஸ்.... 

1503 டிசம்பர் 14, பிரான்ஸின் வடக்கு பகுதியில் யூத தம்பதியினருக்கு பிறந்தார். (பின்னர், தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்.) மருத்துவராக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென பிரான்ஸ்ஸில் கொள்ளை நோய் பரவத்தொடங்கியது. ( என்ன நோய் என மறந்துவிட்டது.) மருத்துவராக இருந்து பலரை காப்பாத்திய நோஸ்ராடாமஸால் அவரது குடும்பத்தை காப்பாத்த முடியவில்லை. தனது மனைவி,பிள்ளைகளை இழந்தார். இவ்விழப்புகளுக்கு பிறகு ஒரு நாடோடியாக மாறினார். நாடோடியாக இருந்தவேளையில் ஒரு பாதிரியாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் சீடராக பணியாற்றிய காலப்பகுதியில் நோஸ்ராடாமஸின் மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. தனியாக இருந்து நீண்ட நேரம் வானத்தை உற்று பாக்க தொடங்கினார். யாரையாவது பார்த்து எதாவது சொல்ல அது கச்சிதமாக நடந்தது.  

நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். கத்தோலிக்க திருச்சபையின் பார்வையில் இவரின் ஆரூடங்கள் சாத்தானின் எச்சரிக்கைகளாக பட்டன. எனவே, நோஸ்ராடாமஸ் மீது திருச்சபையால் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரச்சனைகளால் நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.  

நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களை குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம்.  

(நோஸ்ராடாமஸ் மறுமணம் முடித்ததாகவும் கூறப்படுகிறது.)  

நோஸ்ராடாமஸ் ஆரூடங்களை கணிக்கும் போது, சாதாரண ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு ophiuchus எனும் 13 இராசியையும் சேர்த்தே கணித்துள்ளார். அவரின் இக்கணிப்பிற்கு ஏதுவாக ஒரு பொறி இயந்திரத்தை கையாண்டுள்ளார். அதை பார்த்தவாறே தனது The centuries எனும் புகழ் பெற்ற ஆரூடத்தை எழுதினார். நோஸ்ராடாமஸ் தனது கையால் எழுதப்பட்ட உண்மையான புத்தகத்தில் படங்களையும் வரைந்திருந்தார். (வரைந்தமைக்கான குறிப்புக்கள் உள்ளன.)  

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நோஸ்ராடாமஸின் புத்தகதில் வரையப்பட்டுள்ள படங்கள் இவர் நேரடியாக வரைந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்னோர் சாரார் அது அவரின் 2வது மணைவியின் மூலம் பிறந்த மகனை கொண்டு வரைந்தது என்கின்றனர்.  

எது எப்படி இருந்தாலும் படங்கள் சொல்லவருவது நோஸ்ராடாமஸின் ஆரூடங்களை தான்.  

படங்கள் தரப்பட்டுள்ளன. 
படங்கள் சொல்லவரும் விடையங்களையும் மேலும் பல தகவல்களையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம். பிடித்திருந்தா வோட் போட்டு எழுத ஊக்கப்படுத்துங்க.
---------------------------------------------------------------------------------------------





Wednesday 20 January 2010

சிப் திறந்துடுச்சு!!! (படங்கள்)

இன்று பதிவெழுத முடியவில்லை. அதனால் இது... சனிக்கிழமை "லெமூரியா" வரும்...
--------------------------------------------------------------------------------------




















----------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected