Total Pageviews

Sunday 27 June 2010

சார்லி சாப்ளின்... (ஒரு பக்க வரலாறு )

சார்லி சாப்ளின்!
----------------------------------------------------------------------------------
உலைகயே சிரிக்கவைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே(?) இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்..!

1889... லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான்.
குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, சலூன், கண்ணாடித் தொழிற்சாலை,
மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர், சில காலம் தந்தையுடன்
சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால், தந்தை திடீரென
இறந்துவிடவே, மீண்டும் தொய்வு!

1910... நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை க‌ரக்டரான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பாப்புலரானது. ‘தி கிட்’, படத்தில் தொடங்கிய வரேவற்பு, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது.
1918-ல் நடந்த முதல் திருமணம், இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்குப்பின் நடந்த இரண்டு திருமணங்களும்கூட சாப்ளினுக்குச் சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1942-ல் நான்காவது மனைவியாக ஓனெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன
.
1945-ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு
குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன்பெர்ரியும் சாப்ளின் மீது
குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறுவழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன்
சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.

1972... காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைசிறந்த
நைகச்சுவை நடிகர்’ விருது பெற சாப்ளினை அைழத்தது. பரிசினை
ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும்
சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று, ‘‘வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும்கூட!’’

வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞனின் அந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!
----------------------------------------------------------------------------------
முழு வரலாற்றுக்கு இதை கிளிக் பண்ணவும்...

----------------------------------------------------------------------------------

Thursday 24 June 2010

வியக்கவைக்கும் தமிழ் எண்களும் + 3 பயணுள்ள இலவச மென்பொருட்களும்

ஏறுமுக இலக்கங்களும் இறங்குமுக இலக்கங்களும்
------------------------------------------------------------------------------------

தமிழில எண்களுக்கு இப்படியெல்லாம் பெயர் இருக்கு என்பது இப்போதுதான் எனக்கு தெரியும்...
இதில்... வியப்பு என்னென்றா... இங்லிஸ்ல கூட இவ்வளவு இல்லையாம்...
இவ்வளவு இருந்தும் என்ன பயன்... தமிழ் அழியுதே...


------------------------------------------------------------------------------------

ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்


இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

----------------------------------------------------------------------------------
Microsoft Encarta Premium...

மாணவர்களுக்கும்... பயணுள்ள தகவல்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கும்... இந்த என்கார்டா என்ஸைக்லோபீடியா... உதவியாக இருக்கும்...
இலவசம்தான்...
4 பிரிவுகளாக டவுண்லோட் பண்ண வேண்டும்...
அளவு... 3 GB
டவுண்லோட் பண்ண...

இவற்றை கிளிக் பண்ணவும்...


http://www.megaupload.com/?d=7YX9AKQG
http://www.megaupload.com/?d=3PB939MR
http://www.megaupload.com/?d=5IQQOF9B
http://www.megaupload.com/?d=OS24NEMW
----------------------------------------------------------------------------------
ICONS

அடுத்தது... எமது கொம்பியூட்டரை அழகு படுத்துவதற்கானது...
வின்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இக்கான உயர்தர ஐக்கன்கள்...
அளவு... 62 MB
டவுண்லோட் பண்ண...
இதை
அல்லது...
இதை கிளிக் பண்ணவும்....








----------------------------------------------------------------------------------
Themes for Windows 7

இறுதியாக... விண்டோஸ் 7 இக்கான தீம்கள் (91)...
அளவு... 92 MB
டவுண்லோட் பண்ண...
இதை...
அல்லது...
இதை கிளிக் பண்ணவும்...




----------------------------------------------------------------------------------

Tuesday 22 June 2010

பசி...பட்டினி... (+அருவருக்கத்தக்க படங்கள்...)

:O :( :\
------------------------------------------------------------------------------------
நேற்று ஈ.மெயிலில் சில படங்கள் வந்திருந்தன அதனை பார்த்த பிறகே இந்த பதிவை எழுத தோன்றியது...
------------------------------------------------------------------------------------

உலகத்தின் மொத்த சனத்தொகை 7 பில்லியன்ஸ்... அதில கடைசியா கணக்கிட்டதன் படி... 1.4 பில்லியன்ஸ் பேர் பட்டினியா இருக்காங்கலாம்...

ஒவ்வொரு நாளும் 16 000 சின்ன பிள்ளைகள் சாப்பாடு இல்லாமல் சாகுதாம்... 5 செக்கன்களுக்கு ஒரு பிள்ளை என்கிற வீதத்தில...

சரி புள்ளி விபரங்கள் கானும்... பேந்து விஜயகாந்த ரேஞ்சுக்கு கொமெடியாகிடும்...

உலகத்தின் தலைவராக தன்னைத்தானே பிரகனப்படுத்திக்கொண்டுள்ள அமெரிக்கா நினைச்சா இந்த இறப்புக்களை குறைக்கலாம்... அமெரிக்கா மட்டுமில்லை... பல வல்லரசு நாடுகள் நினைச்சால் செய்ய முடியும்...
காரணம்...
அமெரிக்கா... வருடாந்தம் அதிகமாக உற்பத்தி  செய்யப்படும்... கோதுமையில் ஒரு பகுதியை... பன்றிக்கும்...
இன்னமும் மிஞ்சுவதை கடலிலும் கொட்டுகிறார்களாம்...
ஏன் என்றால்... இலவசமாகவோ... அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்தாலோ... தமது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்பதுதான்...

இதயேதான்... உலக சமாதானம் பேசும்... நோர்வே செய்யுது...
அவர்கள்... கோதுமை... இவர்கள் கடல் மீன்களை....

மறுபுறம்...
மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த/ கரீபியனை சேர்ந்த மக்கள் "மண் ரொட்டி" சாப்பிடுறாங்க.... ( சில குறிப்பிட்ட தீவுகளில்)
அங்கு... கடைகளில் சாமான் இருக்கு....  வேண்டுவதற்கு பணமில்லை...
அதனால்... ஒரு சத்துமில்லாமல்... வயிற்று பசிக்காக சாப்பிடுறாங்க...

எங்கட ஏஸியாமட்டும் என்னவாம்... அங்கும் பல பகுதிகளில் இப்படி இறப்புக்கள் நடந்து கொண்டுதான் இருக்கு...

2050 ல 9.4 பில்லியன்ஸ் சனத்தொகை இருக்கும் என்று கணிப்பிட்டு இருக்கிறார்கள்...
எப்படியும் 2050 க்குள்ள கெட்டித்தனமா இயற்கை வளங்களை வீணாக்கிடுவம்...
பட்டினிச்சாவு என்கிறது சாதாரணமான ஒன்றாக மாறிடும்...

பல பிரபல சர்வதேச‌ உணவு விற்பனை நிலையங்கள்... காலாவதியான உணவுகளை குழிதோன்றி புதைக்கின்றன...
அவை காலாவதியாவதற்கு ஒரு மாதம் முதலாவது... தொண்டு நிறுவனங்கள் அவற்றை கொல்முதல் செய்து...
பட்டினியால் வாடும் மக்களுக்கு கொடுக்கலாம்... :(

நம்மட இந்தியாவிலும் பட்டினிசாவு இருக்காம்...
ஆனால்... உற்பத்தி செய்கிற உணவுப்பண்டங்களில் 30 % ஆனவை களஞ்சிய வசதி இல்லாததால வீணாப்போகுதாம்...
இதெல்லாம்... கொலுத்துபோய் இருக்கிற அரசியல் வாதிகளுக்கு தெரியாது போல....

சரி இதெல்லாம் இருக்கட்டும்...

எங்கள்ல எத்தனை பேர்... சாப்பாட்டை கொட்டாமல் இருக்கோம்... அல்லது வீட்டில அளவுக்கு மிஞ்சி சமைக்காம இருக்கோம்...
நிச்சயமா... அப்படி ஒருத்தரும் இருக்க மாட்டோம்....

ரோட்ல இருக்கிற சின்ன பிள்ளைகளைக்கண்டு விலகின ஆக்கள்தான் கனக்க... கிட்ட சென்று கொடுத்த ஆக்கள் குறைவு...
கேட்டா... பிச்சை போட மாட்டினமாம்... சோம்பேறிகள் உருவாகிடுவினமாம்...

( இரவோட இரவா எழுதுறதால ஒன்றையும் தெளிவா எழுத முடியல... )

------------------------------------------------------------------------------------

சரி.... எனக்கு நேற்று வந்த மெயில் இது தான்...
சிம்பாவேயில் நடந்த/ நடக்கிற சம்பவம்...  என்ன என்று சொல்ல தேவையில்லை... படத்தை பார்த்தாலே விளங்கும்...

------------------------------------------------------------------------------------


























































































------------------------------------------------------------------------------------

Monday 21 June 2010

பெண்ணும் பென்னும்... (படங்கள்)

-------------------------------------------------------------------------
எப்படித்தான் இப்படி எல்லாம் ஜோசிக்கிறாங்களோ... நான் ரசித்தேன்... :)
நீங்க? :O
-------------------------------------------------------------------------















-------------------------------------------------------------------------








-------------------------------------------------------------------------
இன்று பதிவு எழுதி முடியவில்லை... நாளை ஒரு நல்ல(?) பதிவுடன் வாறேன்...
-------------------------------------------------------------------------

Saturday 19 June 2010

வீரய்யா... குருவம்மா... எஸ்.பி (இராவணன் விமர்சனமாமாம்)

 இராவணன்
-----------------------------------------------------------------------------------
நேற்று நைட்தான் ராவணன் படம் பார்த்தேன்...
நீண்டகாலமாக எப்படியும் முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த படம்...
சரி இனி படத்தில நான் என்னத்தை பார்த்தேன் என்பதை... விமர்சனம் என்கிற பேர்ல எழுதுறேன்...
-----------------------------------------------------------------------------------
படத்தின் கதை...
படத்தின் ஆரம்பக்காட்சி...
முதல் காட்சியிலேயே ஐஸ்வர்யாராஜ்ஜை(டி.ஸ்.பி இன் மனைவி/குருவம்மா / ஹீ...ஹீ... சீதை) கிட்னாப் பண்ணுறாங்க விக்ரமும் அவரது கூட்டத்தினரும் (வீரய்யா/ஹீ...ஹீ...இராவ(ண)ன்)...
கிட்னாப்பின் போதே பொலிஸ்ஸாருடனான மோதலை ஆரம்பிக்கின்றனர் விக்ரமின் கூட்டத்தார்...
மனைவிகடத்தப்பட்டதை அறியும் பிருத்திவிராஜ் (பொலிஸ்/ஹீ...ஹீ...ராமன்) விசேட அதிரடி படையுடன் காட்டுக்குள் புகுகின்றார்...  உதவிக்கு வனக்காவல் அதிகாரியான கார்த்திக்கும் ( ஹீ...ஹீ...ஹனுமார்...) போகின்றார்...

ஐஸ்வர்யா ராஜ்ஜை கடத்தி 14 மணித்தியாலங்களில் கொல்லப்போவதாக மிரட்டிய விக்ரம்... கொல்லபோகும் தருனத்தில் ஐஸ்வர்யாவின் அழகு,துணிச்சலில் மயங்கி மனத்தின் வன்மத்தை இழக்கின்றார்... 14 மணினேரம் 14 நாட்களாக நீள்கிறது.

இதற்கிடையில் வீரய்யா ஏன் தன்னை கடத்தி வைத்திருக்கிறார் என்பதை வீரய்யனின்அண்ணன் பிரபு ( கும்பகர்ணன் (?) ) மூலமும் வீரய்யா மூலமும் அறிந்து... தனது மனதில் இருந்த தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றார் குருவம்மா...
இதற்கிடையே வீரய்யா தனது காதல் (?) ஐ குருவம்மாவிடம் சொல்லி தங்களுடன் தங்குமாறு கேட்டு கொள்கின்றான்...

இடையில் பல சுவாரஷ்யமான காட்சிகள் ஓடுகின்றன... அதை சொன்னால்... படம் பார்க்கப்போகும் உங்களுக்கு ஒரு ஆர்வமில்லாமல் போய்விடும்... ( 100 % ரசித்துப்பார்க்க கூடிய படம்... )

இறுதியில் தூதுபோன வீரய்யாவின் தம்பி(ஹீ...ஹீ...விபீஷனன்)யை கொல்வதன் மூலம்... எஸ்.பி நேரடியாகா வீராய்யாவுடண் மோதுகிறார்... தம்பி கொல்லப்பட்டதும் தனது குழுவுடன் இராணுவ முகாமுக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபடுகின்றான் வீரய்யா... ( வழமையான படங்கள் மாதிரி திடீரென ஆயுதங்கள் வரவில்லை... அதற்கு முன்னரே விடை கூறிவிட்டார் இயக்குனர்...)

படத்தின் முடிவாக...
பிருத்திவிராஜ் ஐஸ்வர்யா மீது சந்தேகப்படுகிறார், காரணம் விக்ரம் கூறிய வார்த்தைகள் என கூறுகிறார்...
முடிவாக...
விக்ரம்/வீரய்யா/இராவண் சுபமான முடிவையும்...
பிருத்திவிராஜ்/இராமர் + ஐஸ்வர்யா/ சீதை நெருடலான முடிவையும்... பெறுகின்றனர்...
-----------------------------------------------------------------------------------
சரி... இனி படத்தின் மற்ற விடையங்களை பார்ப்போம்...

விக்ரம்...
தான் ஒரு சிறந்த நடிகர்... எந்த கதாப்பாத்திரமாகவும் மாறக்கூடியவன்... என்பதை பறைசாற்றியுள்ளார்...

முக்கியமாக... தங்கை பிர்யாமணி (சூர்ப்பனகை) தனக்கு நடந்ததை விளக்கும் போது... கதைக்க முடியாத நிலையில் இருப்பதாக காட்டப்படும் விக்ரம்... தனக்கு வசனங்கள் தேவையில்லை.. முக பாவணையே போதும் என்பதை நிரூபித்துள்ளார்...
மற்றும் இறுதி காட்சிகளில் ஐஸ்வர்யாவிடம் அன்பை சொல்லும் போதும், தம்பி இறந்த போதும், தங்கைக்கு நடந்ததை சொல்லும்போதும்... முகபாவணையே அனைத்தையும் கூறிவிடுகிறது...
உடையை மட்டும் மாற்றி கெட்டப் சேஞ் பண்ணும் சில‌ நடிகர்கள் இனியாவது நடிப்பு என்றால் என்ன என புரிந்து கொள்ள வேண்டும்...
நீண்டகால இடை வெளியில் படங்கள் வந்தாலும்... ஒரேயடியாக விட்ட கப்பை பூர்த்தி செய்துவிட்டார்...
விக்ரம் தனது ரசிகர்களைத்தாண்டி ஒரு பொதுவான ரசிகர் கூட்டத்தை இப்படம் மூலம் பெற்றுவிடுவார் என்பது உண்மை...

ஐஸ்வர்யா...
சுப்பராகவும்... சிம்பிலாகவும் அழகு காட்டப்பட்டுள்ளது...
நடிப்பும் தான் ஒரு தேர்ச்சியான நடிகை என்பதை காட்டியுள்ளார்...

பிரித்விராஜ்...
பொலிஸ்ஸிக்கு ஏற்ற உடல்வாகுள்ள ஆளைத்தான் இயக்குனர் தேர்வு செய்துள்ளார்... நடிப்பும் என்னை பொறுத்த வரை இயல்பானது...
சிம்பிளான... அழகான நடிப்பு... ( தூரத்தில் சூரியாவின் பொடிலாங்வேஜ், முகசாயல்...)

பிரபு + கார்த்திக்...
தத்தமது கதாப்பாத்திரங்களில் பின்னியிருக்கிறார்கள்...

பிரியாமணி...
கொஞ்ச நேரம் வந்தாலும் கதைக்கு முக்கியமான கதாப்பாத்திரம்...
நடிப்பை சொல்லதேவையில்லை.. சுப்பர்..

இயக்குனர் மணிரத்தினம்...
ஸ்ஸ்ஸ்ஸ் சுப்பர்ப் .... தெளிவான திரைக்கதை... இராமாயாணக்கதை என்பதை எவ்வளவு சுவாரஷ்யமாக சொல்ல முடியுமோ அவளவு சுவாரஷ்யமாக சொல்லி இருக்கார்... இவரைப்பார்த்தாவது... சமீப காலமாக பிரபல நடிகர் ஒருவரை வைத்து பீளாப் கொடுத்துக்கொண்டிருக்கு இயக்குனரகள் படம் இயக்குவது என்றால் என்ன என்று கத்துக்கனும்...

இசை...
இந்தப்படத்துக்கு இதுதான் இசை என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது.... ( இசை பற்றி எனக்கு தெரியாததால் மேலதிகமாக சொல்ல முடியவில்லை...)

பாடல்கள்...
ஏற்கனவே ஹிட்... அதுக்கேற்ற ஒளிப்பதிவு....

காட்சிகள்... கமரா...
இயற்கையை எவ்வளவு பிரமாதமாக காட்ட முடியுமோ அவளவுக்கு காட்டி இருக்கிறார்கள்... பழையகட்டுடங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன....
கண்னுக்கு குளிர்ச்சியாகவுள்ளது... நாங்கள் இயற்கையை எவளவு மிஸ்பண்ணுறோம் என எண்ணத்தோன்றுகிறது...
-----------------------------------------------------------------------------------
சரி... இனி நாங்கள் ஏதாவது குறை கண்டு பிடிக்கனுமே...
வசனங்களில் அடுக்கு, கவித்துவமாக வசனங்களை குறைத்திருக்கலாம்... சில இடங்களில் வசனங்கள் அலட்டுகிறது...
கார்த்திக் ஹனுமார் கதாப்பாத்திரம் என்பதற்காக மரத்துக்கு மரம் தாவுவதை காட்டாமல் விட்டிருக்கலாம்...
பிரியாமணியின் காதலராக வருபவர் பொருத்த மற்றவர்...  நடிப்பு வருதில்லை...
வீரய்யா ஏன் இப்படியானான் என்பதற்கு காரணம் இல்லை... ( படத்துக்கு அது தேவையுமில்லை... )
கேபிள் காட்சிகளில் கொஞ்சம் செயற்கைத்தனம்... ( காடு என்பதால் கேபிள் பாட்சிகள் சிரமமாக இருந்திருக்கும் சோ... ஓ.கே...)
-----------------------------------------------------------------------------------
ஹொலிவூட் ரேஞ்சிலான ஒரு தமிழ்ப்படம்...
அனைவரும் பார்க்க வேண்டிய படம்...
அன்பு (முறைதவறியதுதான்) ஒருவனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதை காட்டியுள்ளார்கள்...
காதல், பாசம், கோவ்ம், வன்மம், பழியுணர்ச்சி, துரோகம், விசுவாசம்.... என்பதை கதாப்பாத்திரங்கள் ஊடாக தெளிவாக காட்டியுள்ளார்கள்...
-----------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected