Total Pageviews

Sunday, 29 November 2009

ADOBE FLASH ரியூட்டோரியல் - 04&05

உருவங்களின் நிறத்தை மாற்றுதல்.(4)
-------------------------------------------------------------------------
இன்று இரண்டு Flash ரியூட்டோரியல்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கவுள்ளோம்... ( நேற்றைய "மூளையும் அதிசய சக்திகளும் 04" பகுதிக்கு வரவேற்பு சற்றுக்குறைவாக இருந்தது.... 27 ம் திகதி எனது பதிவு இடம்பெறவில்லை. ஆனால், பலவாசகர்கள் வந்து பார்த்திருந்தார்கள். அதனால் கடுப்பாகிவிட்டார்களோ அல்லது தொடரில் தொய்வு ஏற்பட்டதோ தெரியவில்லை. உங்கள் கருத்துகளுக்கு ஏற்றவாறு தொடரில் சில மாற்றங்கள் செய்யப்படும்.) 
-------------------------------------------------------------------------------------------------------------சரி இயக்குங்கள் உங்களது Flash மென்பொருளை....  

முதலாவதாக உருவங்களின் நிறத்தை எவ்வாறு மாற்றுவது என்பதை பார்ப்போம். உருவங்களை மறையவைப்பது போன்றே, உருவங்களின் நிறத்தை மாற்றும் செயன்முறையின் படிகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.  
முதல் 3 செய்முறையிலும் மாற்றமில்லைபுதியவர்கள்ADOBE FLASH ரியூட்டோரியல் - 03 ஐ பார்க்கவும்.  

செய்முறை-4
4 வது செய்முறையில், Color எனும் பகுதிக்கு முன்னால் உள்ள‌ None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Tint என்பதை Click செய்யவும்.

இப்போது அதன் அருகில் ஒரு box ல் Color உம் மற்றயதில் ஏதாவது ஒரு இலக்கமும் (0 தொடக்கம் 100) குறிக்கப்பட்டு இருக்கும்.
முதலாவது Box ல் உள்ள நிறத்தை Click செய்து தேவையான நிறத்தை தெரிவு செய்யவும். அதன் அருகில் உள்ள அம்புகுறியினை அழுத்தி எண் பெறுமதியை 100 ஆக்கவும்.

இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும். 
0 இருந்து பெறுமதி கூட கூட தெரிவு செய்த நிறத்தின் உண்மை தன்மை அதிகரிப்பதைகாணமுடியும். அவ் எண் பெறுமதிதான் நிறத்தின் உண்மை தன்மை தீர்மானிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------

வட்டம் சதுரமாக மாறும் விளைவு.(5)


------------------------------------------------------------------------------------------------------------.
உருவங்களை பெரிதாக்கும்/சிறிதாக்கும் செயன்முறை போன்றே, வட்டம் சதுரமாக மாறும் விளைவும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
முதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லைADOBE FLASH ரியூட்டோரியல் - 01 ஐ பார்க்கவும்.


செய்முறை-3
3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு Delete செய்யவும்.
வட்டம் இருந்த இடத்தில் சதுரத்தை Rectangle Tool (R)    மூலமாக வரையவும்.

Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Right Click செய்து இரண்டாவதாக‌ காண‌ப்படுனம் Creat Shape Tween ஐ Click பன்னவும்.இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------
இயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.


Saturday, 28 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் 04

ஆராச்சி முடிவுகளும், ரெலிபதியும்.
----------------------------------------------------------------------------------------
முன்னைய பகுதிக்கு வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மனம் மகிழ்கிறேன்!
சரி பதிவுக்குள் நுழைவோம்...
----------------------------------------------------------------------------------------

1996,97 ம் ஆண்டளவில் மூளையின் வலது பக்கத்திற்கும் இடது பக்கத்திற்கும் நடுவில் ஒரு சுரப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நரம்பியல் நிபுணர்களாளோ, விஞ்ஞானிகளாளோ அது ஏன் இருக்கிறது? அதன் தொழில் என்ன? என இன்றுவரை சரியாக இனங்கான முடியவில்லை. (இவ்வளவு தொழில் நுட்பம் இருந்தும் என்ன பயன்...? )
ஆனால், சில ஆராச்சியாளர்கள் "அது தான் இப்படிப்பட்ட  சாதாரன மனித சக்திக்கு அப்பாற்பட்ட சில விசித்திரமான சக்திகளை (இஸ்பி) தோற்றுவிக்க காரணமாக இருக்கும்" என் சந்தேகம் கொண்டனர்.  அவர்களில் ஒரு ஆராச்சியாளர் அதனை நிரூபிப்பதற்காண வழிமுறை ஒன்றை முன்வைத்து செயற்படுத்தி காட்டினார்.


அவர் தனது ஆராச்சிக்கு தேர்ந்தெடுத்தது, மனிதனை ஒத்த உடல் உட்கட்டமைப்புடைய மிருகமான எலியை. (என்னென்று மனிதனை போன்ற உடல் உட்கட்டமைப்பை எலி பெற்றிருக்கும்...? ஜோசித்துப்பாருங்கள் ... புராணங்களில் விநாயகரின் வாகனமாக எலி வர்க்கத்தை சேர்ந்த மூஞ்சூறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ் மூஞ்சூறு ஒரு மனித உருக்கொண்ட‌ அசுரனான தாரகாசூரனின் மறு உருவம் என இந்துக்களின் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதற்காக அசுரனின் உருவம்தான் எலி! இந்து மதம் கூறிவிட்டது! என நான் கூறவரவில்லை, மாறாக எமது முன்னோர்கள் எதோ ஒரு வகையில் எலிக்கும், மனிதனுக்கும் இடையிலான தொடர்பை அறிந்துள்ளனர்.  ஆனால், ஏன் அவர்கள் அதை நேரடியாக கூறவில்லை? அது... பிறகு...)

அதாவது, அவர் தனது ஆராச்சிக்காக 12 எலிகளை தேர்ந்தெடுத்தார், அவற்றில் 6 எலிகளின் மூளையிலும் குறிப்பிட்ட அவ் சுரப்பியை தூண்டிவிடக்கூடிய வகையில் மின்னதிர்வுகளை ஏற்படுத்தத்தக்க ஒரு கம்பியை அச்சுரப்பியினுள் செலுத்தினார். மற்ற 6 எலிகளும் சாதாரனமாக விடப்பட்டன. பின்னர், அனைத்து எலிகளும் ஒரு கூட்டினுள் விடப்பட்டு சில பகுதிகளினூடு எலிகள் செல்லும் போது அக் கம்பி மின்னதிர்வை பெறத்தக்க வகையில்  ஒழுங்குபடுத்தப்பட்டது.

ஒரு சில நிமிடங்களின் பின்னர் அவ‌தானிக்கும் போது....

கம்பிகள் பொருத்தப்பட்ட எலிகள் மாத்திரம், மீண்டும் மீண்டும் மின்னதிர்வை ஏற்படுத்ததக்க பகுதியினூடாக 24 மணி நேரமும் ஓய்வின்றி சென்று வந்தன‌. மற்றவை சாதாரணமாக அனைத்து பகுதிகளிலும் உலாவின.

இதிலிருந்து, மூளையில் அச் சுரப்பி தூண்டிவிடப்பட்ட எலிகள் ஏதோ ஒரு வகையான விபரிக்கமுடியாத உணர்வை பெற்றிருக்கின்றன. என்பதை ஊகிக்க முடிகிறது.


எனவே, மனித மூளையிலுள்ள அப் பகுதி இன்னமும் பாவிக்கப்பட முடியாத நிலையில் அல்லது இயங்க முடியாத நிலையில் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. சிலருக்கு ஏதொ ஒரு வகையில் அச்சுரப்பி குறிப்பிட்ட சமயங்களில் தனது சக்தியில் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களாலேயே சில விசித்திரமான எதிர்வு கூறல்களை கூறமுடிகிறது, காணமுடிகிறது.

இது ஒரு விபத்தினால் ஏற்பட்ட அதிசயம்...


ஜோன் ரைட் ஒரு ஃப்ரான்ஸ் நாட்டு சைக்கிள் பந்தயவீரர். சில காரணங்களுக்காக அவர் அமெரிக்காவில் ஒரு வருடம் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு, ரைட் ஆங்கிலம் தெரியாததால் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. எனவே, அவர் ஆங்கிலம் கற்று வந்தார்.

ஒரு முறை சைக்கிள் பந்தயமொன்றில் கடுமையான விபத்தொன்று நேர்ந்து ரைட்டின் தலையின் பின் பகுதியில் பலத்த அடி ஏற்பட்டது.

குணமடந்த பின்னர், சுமார் 6 மாத காலப்பகுதிக்கு ரைட்டால் சாராலமாக ஆங்கிலம் பேசமுடிந்தது!!!! பின்னர் மறந்துவிட்டது!!!!

விபத்தின் போது ரைட்டின் மூளையிலுள்ள சுரப்பி தூண்டப்பட்டிருக்கலாம். பின்னர், எவ்வாறு மறைந்தது என்பது புதிராகவேயுள்ளது...
 
இது அவுஸ்ரேலியாவில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம்...


வழமை போன்று ஒரு நாள் ஜோஸி தனது மகள் மேரியை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள். சாதாரண‌மாக அடம்பிடிக்காமல் பாடசாலைக்குச்செல்லும் மேரி வழமைக்கு மாறாக அன்று "போக மாட்டேன்!" என கடுமையாக அடம்பிடித்தாள். தாய் ஜோஸி அவளை சமாதானப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பிவைத்தாள். மேரி வேண்டா வெறுப்பாக‌ பாடசாலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது; திடீரென, அவளின் கண்களின் முன்னே தாய் ஜோஸி சமையலறையில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு விழுந்து துடிப்பது போன்ற காட்சி தோன்றியது. அவள் சுதாகரித்து கொள்ளமுதல் அக்காட்சி நீங்கிவிட்டது. இத்தனையும் 1 நிமிட இடைவெளியினுள் நடந்து முடிந்து விட்டது. உடனே மேரி புத்திசாளித்தன‌மாக தனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு உறவுக்கார  டொக்டரை அழைத்துக்கொண்டு விரைவாக வீட்டுக்கு சென்றாள். என்ன ஆச்சரியம்! தாய் ஜோஸி தரையில் நெஞ்சை பிடித்தவாறு விழுந்திருந்தாள். .... அவள் கண்ட அதே காட்சி......
உடனே டொக்டர் விரைந்து செயற்பட்டு ஜோஸியை "மைனர் ஹார்ட் அற்ராக்" இலிருந்து காப்பாற்றினார்...


திடீரென மேரிக்கு அக் காட்சிகள் தோன்ற காரணம் என்ன...?

சுகமடைந்த தாய் ஜோஸியை கேட்டபோது,  நெஞ்சுவலி ஏற்பட்ட அக்கணத்தில் தன்னருகே" ஜோஸி வரமாட்டாளா?" என மனம் ஏங்கியதாக கூறியுள்ளார். எனவே, இங்கு ஜோஸிக்கும் மேரிக்கும் இருந்த அந்த ஆழ்மனத்தொடர்புதான் அவ‌ளின் முன் அவ்வாறான ஒரு உருவெளித்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என ஊகிக்கலாம். ஆனால், முதலே வ‌ழமைக்கு மாறாக மேரி பாடசாலைக்கு போக அடம்பிடித்ததேன்...?

எதிர்காலம் பற்றி அறிபவர்களாள் அதைமாற்றியமைக்க முடியுமா...?  
----------------------------------------------------------------------------------------
நேற்றைய பதிவு சில காரணங்களால் இடம்பெறாமையால். இப் பதிவு சற்று பெரிதாக இடம்பெற்றுள்ளது.
----------------------------------------------------------------------------------------
தொடரும்...

----இனி--- எமது ESPஐ சோதிக்க வேண்டாமா? சில சம்பவ‌ங்கள்.

Friday, 27 November 2009

Thursday, 26 November 2009

ADOBE FLASH ரியூட்டோரியல் - 03

ADOBE FLASH ரியூட்டோரியல் - 03
---------------------------------------------------------------------------------------------------------
மூளையும் அதிசய சக்திகளும் 03 க்கு வாசகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். (ஆனால், எவருமே அந்த இறுதியாகவுள்ள சவாலை வென்றதாக தெரியவில்லை!)  
இன்று இன்னொரு முக்கியமான Flash ரியூட்டோரியலை பார்க்கவுள்ளோம்.....
---------------------------------------------------------------------------------------------------------
உருவங்களை மறையவைத்தல் (ALPHA)
------------------------------------------------------------------------------------------------------உருவங்களை அசைப்பது போன்றே, உருவங்களை மறையவைக்கும் செயன்முறையின் ஆரம்ப படிகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.

முதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லை. (புதியவர்கள் ADOBE FLASH ரியூட்டோரியல் - 01ஐ பார்க்கவும்.)

செய்முறை-3

3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும். அடுத்து F8 அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Graphic ல் Click செய்து Ok பண்னவும். (F8 -> Graphic -> Ok)
( இச்செய்முறைக்கு வேறு பல வழிமுறைகளும் உள்ளது.)


செய்முறை-4

இப்போது, Properties Menu ல் புதிதாக சில மாற்றங்களை காண‌முடியும். நாம் மாற்றியமைக்கேற்ப Instance Behavior ; Graphic ஆக மாற்றம் அடைந்திருக்கும்.

அதேவேளை Color எனும் பகுதியும் காணப்படும். அதற்கு முன்னால் உள்ள‌ None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Alpha என்பதை Click செய்யவும்.
இப்போது அதன் அருகில் ஒரு box ல் 0 அல்லது 100 என குறிக்கப்பட்டு இருக்கும்.

அதன் அருகில் உள்ள அம்புகுறியினை அழுத்தி எண் பெறுமதியை 0 ஆக்கவும். 

இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter
மூலமாக சோதித்து பார்க்கவும்.
0 இருந்து பெறுமதி கூட கூட மறையும் தன்மை குறைவதை காணமுடியும். அவ் எண் பெறுமதிதான் மறையும் தன்மையை தீர்மானிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------


இயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.
இப்போது...

இவ் 3 ரியூட்டோரியல்களையும் கொண்டு நீங்கள் முக்கியமான சில அனிமேஷன்களை செய்யலாம். முயற்சித்து பாருங்கள்.

Wednesday, 25 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் 03

பொதுமனம்(எதிர்வுகூறல் - ESP)
---------------------------------------------------------------------------------------
முன்னைய "மூளையும் அதிசய சக்திகளும் 02 " பதிவில் "மூளை" என்பதற்கு பதிலாக "மூலை" என தவறுதலாக இடம்பெற்று விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.
---------------------------------------------------------------------------------------

சரி வாங்க வியக்கலாம்...

1972 ரிஜன்சி அச்சகம் ஒரு நாவலை வெளியிட்டது. நாவலின் பெயர் "கருப்பு கடத்தல்காரன்". எழுதியவர் ஹரிசன் ஜேம்ஸ்.(புனைப்பெயர் ஜேம்ஸ் ராஷ்க்.)


அந்த கதையில் கடத்தல்கார குழு ஒன்றினால், இடதுசாரி சிந்தனையுள்ள ஒரு பணக்காரரின் மகள் கடத்தப்படுகிறாள். அவ‌ள் ஒரு கல்லூரி மாணவி. பெயர் "பாட்ரிஷியா". கடத்தப்படுகையில் அவளின் கதலன் அடித்து நொறுக்கப்படுகிறான். முதலில், பொலிசார் அவளது காதலனை ச‌ந்தேகிக்கின்ற‌னர்.
கடத்தியவர்களை முதலில் எதிர்த்த பட்ரிஷியா பின்னர் அவ‌ர்களின் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டு அக் கும்பலுக்கு அடிமையாகிறால். இது மிகப்பெரிய கடத்தலாக இனங்காண‌ப்படுகிறது. இறுதியில் பொலிஸாரால் கண்ணீர் புகை அடித்து மடக்கி கொல்ல‌ப்படுகின்றனர். இது தான் அக்கதையின் சாராம்சம்.


நாவல் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஒரு பணக்கார பத்திரிகை முதலாளியின் மகள் "பாட்ரிஷ்யா ஹர்ஸ்ட்" கல்லூரி வளாகத்தில் வைத்து கடத்தப்ப‌டுகிறாள். கதையில் வருவது போன்றே அவளும் அவர்க‌ளின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, அவர்களை நேசித்து செய்திகளை அனுப்பத்தொடங்கினாள்.

1974 ஃப்.பி.ஐ அதிகாரிகள் ஜேம்ஸை சந்தேகம் கொண்டு விசாரித்தபோது, அவர் "எனக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை. அவ் நாவல் முற்று முழுதாக எனது கற்பனையில் உதித்தது." என கூறினார். (அவருக்கும் அச்சம்பவத்திற்கும் தொடர்பிலை என்பது ஃப்.பி.ஐ யால் நிரூபிக்கப்பட்டது.)

பாட்ஷியா எனும் பெயர்,அவளது மனமாற்றம், பணக்கார தந்தை எல்லாம் கச்சிதமாக பொருந்துகிறதே இதை இதை தற்செயல் என்பதா? அல்லது கடத்தல்காரர்க‌ள் நாவலை ப‌டித்துவிட்டு அவ்வாறே நடந்து கொண்டனரா? இறுதிவரை கடத்தல்காரர்களிடம் கூட கேட்டுத்தெரிந்து கொள்ள முடியவில்லை... ஏன் எனின்... இறுதியில் அவர்கள் பொலிஸாரால் சூழப்பட்டு கொல்ல‌ப்பட்டு விட்டனர்!!!!!
(இப்போது ஜேம்ஸ் நாடிஜோசிய கதைகளை விட்டுவிட்டு அம்புலிமாமா வகையான தைகளை எழுதுகிறாராம்!)

இங்கிலாந்தின் கணித இயற்பியல் பேராசிரியர் "வாஸ்ஸர்மன்" ஒரு சித்தார்ந்தம் சொல்கிறார்...

"உலகில் நடக்கிற, நடக்கப்போற சம்பவங்கள் அனைத்தும் காலமற்ற மனப்பிம்பங்களாக வடிவுகொண்டிருகின்றன. அதாவது அனைத்து சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பு ,ஒரு சங்கிலித்தொடர் இருக்கின்றது. இத்தொடர்பு மன‌ங்கள் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.
மூளையில் ஏற்படும் விம்பத்திற்கும், சலனத்திற்கும், எதிர்கால சம்பவத்திற்கும் ஒர் இனைப்பு மனதிலேயே இருக்கிறது. சிலருக்கு இவ் இணைப்பு விஸ்தாரமாகவே இருந்து எதிர்காலத்தை கூற முடிகிறது" என்கிறார்..( "நொஸ்டர் டாமஸ்" இதில் பிரபலம்.பின்னர் பார்க்கலாம்...)

பதிவின் நீளம் கருதி இன்றைய பதிவு ஒரு சம்பவத்துடன் நிறுத்தப்படுகிறது.
மூளையில் இன்னமும்; "ஏன் இருக்கிறது" என அறியப்படாத ஒரு பகுதி இருக்கிறது. அது என்ன...? அதன் முக்கியத்துவம் என்ன...? அது சம்பந்தமாக விஞ்ஞானிகளாள் செய்யப்பட்ட ஆராச்சி முடிவுகளுடன் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------
முயற்சித்து பாருங்கள்... முடியாது...முடிந்தால் சொல்லுங்கள்.ஒரு இடத்தில் நிமிர்ந்து நின்டவாறு வலது கையால் "6" என எழுதுவது போன்று செய்துகொண்டு. வலது காளை மனிக்கூட்டு சுழர்ச்சிப்பக்கம் சுழற்றிப்பாருங்கள்.....

---------------------------------------------------------------------------------------

தொடரும்...
---இனி---
சில சம்பவங்கள்.
எமக்கு இருக்கும் சக்தியை எவ்வாறு அறிவது.


Tuesday, 24 November 2009

ADOBE FLASH ரியூட்டோரியல் - 02

ADOBE FLASH ரியூட்டோரியல்
----------------------------------------------------------------------------------------
Flash மென்பொருள் கைவசமில்லாத வாசகர்கள்.
Flash ஐ தரவிறக்கம் செய்வதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
http://www.utorrent.com/
தளத்திற்கு சென்று " uTorrent "மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளுங்கள்.
பின்னர் இந்த லிங்கை முயற்சிக்கவும்.
(இலகுவான முறை இருப்பின் தெரிவிக்கவும்)
---------------------------------------------------------------------------------------
வணக்கம்.


இன்று சிறு படிகளை கொண்ட  ADOBE FLASH ரியூட்டோரியளை பார்க்கவுள்ளோம்.
(ஆரம்பபடிகள் 1 வது ரியூட்டோரியலை போன்றமையால் சுருக்கமாக விளக்கியுள்ளேன்.)

உருவங்களை பெரிதாக்குதல்/சிறிதாக்குதல்.
---------------------------------------------------------------------------------------

உருவங்களை அசைப்பது போன்றே, உருவங்களை பெரிதாக்கும்/சிறிதாக்கும் செயன்முறைகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.


முதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லை. (புதியவர்கள் முதலாவது ரியூட்டோரியலை பார்க்கவும்.  ADOBE FLASH ரியூட்டோரியல் - 01)

செய்முறை-3


3 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Free Transform Tool (Q)  மூலமாக பெரிது அல்லது சிறிது ஆக்கவும்.

இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter
மூலமாக சோதித்து பார்க்கவும்.


---------------------------------------------------------------------------------------
இயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.
அடுத்து உருவங்களை மறையவைக்கும் முறை...
-----------------------------------------------------------------------------------------------------------

விரைவில்
எங்கே தொலைந்தது "லெமூரியா"?
"இராமாயணம் மகாபாரதம்" புராணமா...? வாரலாறா...? 
மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றினூடான ஓர் ஆச்சரியமான அதிர்ச்சிமிக்க‌ பயணம்.
எதிர்பாருங்க‌ள்
-----------------------------------------------------------------------------------------------------------

Monday, 23 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் - 02
உள்ளுணர்வும் உருவெளித்தோற்றமும்.
---------------------------------------------------------------------------------------
இதே போன்று இன்னும் பல சம்பவங்களும் சர்ச்சிலுக்கு ஏற்பட்டிருக்கின்றனவாம். அவை பற்றி அவரின் மனைவி அவரிடம் கேட்டபோது "ஏதோ ஒன்று இதை செய், இதை செய்யாதே என்று எனக்கு அடிக்கடி உள்ளுக்குள் சொல்லும் பெரும்பாலும் அது சொல்வது சரியாகத்தான் இருக்கிறது" என்றாராம். இதிலிருந்து
உள்ளுணர்வை மதிக்கும் சர்ச்சில் போன்றவர்களுக்கு அது பெரும் உதவிபுரிகிறது என்பது தெளிவாகிறது. ஆனால் இங்கு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. அதாவது ,ஏன் இந்த உள்ளுணர்வு அனைத்து சந்தர்ப்பங்களிலும் எங்களை எச்சரிப்பதில்லை?... விடைகானமுடியாத கேள்வி!!!
(அவ்வாறு அது எச்சரிக்காத வரைதான் அது விசேட சக்தியாக கருதப்படும் என்பது வேறவிடயம்.)


ஆமெரிக்காவில் ஒரு ரெயில் கொம்பனி ஒரு வித்தியாசமான புள்ளிவிபரம் வைத்திருக்கிறார்கள்.

அதாவது இலியானா மாகாணத்தில் ஒரு முறை ரெயில் விபத்து ஏற்பட்டது.பயணிகள் இறந்தார்கள். விபத்திற்கு முந்தய தினங்களில் ரெயிலில் பயணித்தவர்களின் என்னிக்கை முறையே 68,60,48,62,70. ஆனால்... விபத்தன்று பயணித்தவர்கள் வெறும் 9 பேர்தான்!!! நம்பமுடிகிறதா?!!! (இத்தனைக்கும் அது விடுமுறைதினமுமல்ல.)
பல பேருக்கு உள்ளுணர்வு "போகாதே" என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.
தேர்தல்களில் கூட எதிர்பாராத விதமாக; எதிர்பார்க்கப்பட்டவர் தோற்றுப்போவதும் இதே முறையில்தான். கடைசி நேரத்தில் உள்ளுணர்வு செய்தமாயம்.

இது ஒரு மிகவும் விசித்திரமான சம்பவம்....

1956 செப்டெம்பர் 11, கலிபோர்னியாவில் வசிக்கும் பால்மக்ஹாஹன் தம்பதியின‌ருக்கு ஏற்பட்டது...


இருவரும் கிரான்கன்யன்ட் எனும் சுற்றுலாத்தளத்திற்கு சென்றிருதனர். அங்கே திருமதி பால்மக், தமது கபினுக்கு பக்கத்து கபினில் ஒரு பெண்மணி தன் கணவர் சகிதம் லக்கேச்களை தூக்கிகொண்டு செல்வதை அவதானித்தாள். திருமதி பால்மக் அப்பெண்மணியுடன் 2 வருடங்களுக்கு முன்னதாக ஒரு கோட் கேசில் யூரியாக பணியாற்றி இருந்தார். பால்மக் தன் கணவருக்கு அப் பெண்மணி ப‌ற்றி சொல்லியதுடன், அப் பெண்மணியின் கணவருக்கு ஒரு கை இல்லை என்பதையும் காட்டினாள்.

"எதற்கு இந்த ராத்திரியில் தொந்தரவு செய்வான், நாளை சந்திக்கலாம்" என கூறி விட்டார்.

மறு நாள்...

காலை வராந்தாவில் அப் பெண்மணியையும் அவளது கணவனையும் கண்ட பால்மக்ஹாஹன் தம்ப‌திகள் அவர்களை சந்தித்து இயல்பாகபேசிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் அவர்களை கண்ட விசையத்தையும் சொன்னார்கள். உடனே அப் பெண்மணியும் அவளது கணவனும் ஆச்சரியத்தோடு " நாம் இப்போதுதானே ரூரிஸ்ட் பஸில் வந்திறங்கினோம்!!!" என்றார்கள். ( பால்மக்ஹாஹன் தம்பதிகள் சமூகத்தி நல்ல மதிப்புமிக்கவர்கள். அவர்கள் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை.)
இருவருக்கும் இலேசாகத்தான் பரிச்சயம். இருவர் வாழ்விலும் எந்த விதமான பயமோ, படபடப்போ இல்லை.
இரு குடும்பங்களுக்கிடையேயும் எந்தவித உறவுமில்லை. முதல் நாள் ராத்திரியில் அவர்களைப் பற்றி ஜோசிக்க வேண்டிய அவசியமும் பால்மக்ஹாஹன் தம்பதிகளுக்கில்லை.
அப்படியானால், அவர்கள் பார்த்தது யாரை?... அல்லது எதை?...

திடீரென ஏற்பட்ட உருவெளித்தோற்றம் என்றாலும்; அந்த எண்ணத்தை தோற்றுவிக்க ஏதேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டியது கட்டாயம். இச் சம்ப‌வத்தில் அதுவும் இல்லை!!! "அமெரிக்கன் சொசைட்டி ஃபொ சைக்கிக் ரிசேர்ச்" எனும் நிறுவனம் இது சம்மந்தமான தகவல்களை பதிப்பித்துள்ளது.
(இன்றைய‌ நவீன தொழில் நுட்பத்தில் "வேர்ச்சுவல் ரியாலிடி" என்று ஒன்று இருக்குதாம். அதில் ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு வெட்டவெளியில் நடக்கும் போதே நாம் விரும்பும் இடத்தில் நடப்பது போன்ற உணர்வை பெறமுடியுமாம்.அனாலும் தெளிவு போதாதாம்.)

அப்ப‌டியானால் அது என்ன‌?... எது?...
எதிர்கால‌ விஞ்ஞான‌ம்தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்!

தொடரும்...
---இனி--- 
எழுதியது நடந்து.
மேலும் சில சம்பவங்கள்.
அப்பிடி என்னதான் நடக்கிறது?

Sunday, 22 November 2009

ADOBE FLASH ரியூட்டோரியல் - 01

ADOBE FLASH ரியூட்டோரியல்
-----------------------------------------------------------------------------------------
"அதென்னது வளாகம் முழுவதும் விஞ்ஞானம்,மர்மம் மட்டும்தான் பேசப்படுகிறது. வேற விசயங்கள் பற்றி பேசமாட்டீர்களா?" எனக்கேட்டு சில வாசகர்கள் இமெயில் அனுப்பி இருந்தார்கள். எதிர் வரும் பதிவுகளில் அக்குறையை போக்க முயற்சி செய்யவுள்ளேன்.

அந்த முதல் முயற்சியாக... பிரஜோஷனமாக...
இப்போது பரவளாக (2டி)அனிமேஷன்களுக்கு பயன்படுத்தப்படும் Adobe Flash எனும் மென்பொருளை எவ்வாறு கையாண்டு அனிமேஷன்களை உருவாக்கலாம் என்பதைப்பற்றி தரவுள்ளேன்.
( நீங்கள் பார்க்கும் வெப் சைட்டுகளில் எல்லாம் எதாச்சும் ஒன்று அங்கும் இங்கும் ஒடும் அல்லது படம் மாறிமாறி வரும் அல்லது ஏதாச்சும் அசையும் இவை எல்லாம் பொதுவாக Flash ல் தான் செய்யப்படுகின்றன. இனி நீங்களும் செய்யலாம்.)

காணும்... வாங்க பழ‌கலாம்...
-----------------------------------------------------------------------------------------

உருவங்களை அசைத்தல்.

முதலாவதாக Flash இல் ஒரு உருவை எவ்வாறு அசைப்பது என்பதை கற்போம்.
நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு அசைப்பது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் அசைக்க முடியும்.
செய்முறை-1
தேவையான அளவில் Movie உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்செய்முறை-2 


 Layer 1: Frame 1 இல் Ovel tool (O)
மூலமாக stage இல்  ஒரு வட்டத்தை வரையவும்.

பின்னர் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும்.செய்முறை-3

10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வேறு
இடத்தில் வைக்கவும்.Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காண‌ப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்
-------------------------------------------------------------------------------------------------------------


இயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.
(ரியூட்டோரியல் ரைப்பண்ணுவது சிறிது கடினமான வேலையாகவுள்ளது!!! முக்கியமாக படங்களை இனைப்பது!!)


Saturday, 21 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் -01(உள்ளுண‌ர்வு)

மூளையும் அதிசய சக்திகளும் (உள்ளுண‌ர்வு)
----------------------------------------------------------------------------------------

பேய்களும் மர்மங்களும் எனும் தலைப்பின் கீழ் நான் பதிவு செய்திருந்த‌ ஒருவரி கருத்துக்களுக்கு சிறந்த வகையிலான எதிர்பார்ப்பு வாசகர்களிடம் இருந்தது.
வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட தலைப்பில் எனது மேலதிக ஆய்வுகளை தொடரும் போது மனிதனின் எண்ணங்களைப் பற்றியும் மூளையின் செயல்படுதிறன் பற்றியும் தெளிவாக ஆராயவேண்டி உள்ளது.(பதில் கருத்துக்களை பெற முடிந்தமையிட்டு அகம் மகிழ்கிறேன்.)

இதனால் மனிதனது மூளை பற்றியும் அதனது அதிசய ஆற்றல் பற்றியும் எண்ணங்களின் வல்லமை பற்றியும் தெளிவான விளக்கத்தை அளித்து அதன்மூலம் வாசகர்களுக்கு
பேய்கள் சார்ந்த மர்மங்கள் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.


----------------------------------------------------------------------------------------
எனவே முதலில்,

"மூளையும் அதிசய சக்திகளும்" எனும் தலைப்பில் எம் அனைவரினுள்ளும் புதைந்திருக்கும் ஓர் விசித்திரமான சக்தியை பற்றி எழுத என்னியுள்ளேன். நிச்சயம் இவை உங்களை கவரும் என நம்புகின்றேன்.
-----------------------------------------------

உள்ளுண‌ர்வு...

இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா?
ஜோசித்துப்பாருங்கள்....

வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்)
பஷ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஷ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.)
இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதையாகிவிட்டார்கள்). மற்றது என்னுடைய தொலைபேசியை காப்பாத்தியது.

இதெல்லாம் சின்னவிசையங்கள் நம்மவே முடியாத பல விசையங்கள் நடந்துள்ளன...


இரண்டாம் உலகயுத்தத்தின் உச்சக்கட்ட காலம் அது...
ஜேர்மன் விமானங்கள் லண்டன் நகர்மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன.
வின்சன்ட் சர்ச்சில், இங்கிலாந்தின் பிரதமர். எவளவு யுத்த நெருக்கடியில் இருந்தாலும் உள்ளுணர்வை மதிக்கும் ஒரு நபர்.

ஒர் நாள் தனது வீட்டிற்கு 3 மந்திரிகளை விருந்துக்கு அளைத்திருந்தார். விருந்து ஆரம்பமாகி சில நிமிடங்களிளேயே விமானத்தாக்குதல் ஆரம்பமாகியது. திடீரென கதிரையை விட்டு எழுந்த சர்ச்சில் நேரடியாக சமையல் அறைக்குச்சென்று சிப்பந்திகளிடம் " சாப்பாட்டை டைனிங் ரேபிளில் வைத்து விட்டு.. உடனே பாம் செல்டர் பகுதிக்கு சென்றுவிடுங்கள்..." என கட்டளை இட்டுவிட்டு திரும்பி வந்தார்.
3 நிமிடங்கள் கழிந்தன...
சமையல் அறை மீது குண்டு விழுந்து சமையலறை சுக்குனூறாகியது.
சமையளறை ஊளியர்கள் சர்ச்சிளின் கட்டளையாள் காப்பாத்தப்பட்டனர்.
திடீரென சென்று எச்சரிக்கை கட்டளை இடும்படி சர்ச்சிலை தூண்டியது எது?...
ஜோசித்துப்பாருங்கள்...


தொடரும்...
---இனி---
ரெயில் கொம்பனியின் வினோத புள்ளிவிபரம்
இருந்தார்கள் அனால் இல்லை.
எங்கிருந்து செயற்படுகிறது இந்த உள்ளுணர்வு!
மேலும் பல வியப்பூட்டும் சம்பவங்கள் காத்திருக்கின்றன‌!
...............................................................................
Friday, 20 November 2009

உயர்தர வகுப்பு இரசாயனவியல் கற்கை நெறி


வளாகதிலுள்ள மாணவர்களுக்காக....
(உயர்தர வகுப்பு இரசாயனவியல் கற்கை நெறி)தரவிறக்கம் செய்யமுடியாவிடின்
இதை சொடுகவும்


---------------------------------------------------------------------------------------

கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -03
கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)
-----------------------------------------------------------------------------------------

கனவுகளை வைத்து எதிர்வு கூறுபவர்களும் இருக்குறார்கள். அந்த வகையில் "ஜோசப் லூடில்" ஒரு முக்கிய பிரபலம்.

16 ஜனவரி 1969 அன்று ஜோஷப் ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றார்...
-----------------------------------------------------------------------------------------
அங்கிருந்த‌ வெயிர்ர‌ரிட‌ம் "பேப்ப‌ர் கொடுப்பா... ரெயில் விப‌த்தைப்ப‌ற்றி என்ன‌ போட்டிருக்கான் என்று பார்க்க‌னும்" என்றார். வெயிர்ர‌ருக்கு ஒரே குழ‌ப்ப‌ம்,"அப்பிடி ஒன்றும் பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யே..., என்ன‌ விப‌த்து? எங்கே ந‌ட‌ந்த‌து?" என வினாவினார்.(சுற்றுப்புற‌த்த‌வ‌ரும் ஜோஷ்ப்பை வித்தியாச‌மாக,ஆச்சரியமாக‌ பார்த்தார்க‌ள்)
"இங்கிருந்து தெற்காப்ல‌... ரெண்டு ர‌யில் ப‌னிமூட்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கிச்சு... நிறைய‌ப்பேர் செத்துப்போனாங்க‌ப்பா... பேப்ப‌ரில் வ‌ர‌ல‌யா?..." என்றார் ஜோஷப்.

அனைவ‌ருக்கும் குழ‌ப்ப‌ம். இவ‌ன் என்ன‌ சொல்லுறான் போதையில் புலம்புறான் என்றால் அதுவும் இல்லை, இப்ப‌தான் பாருக்கே வந்திருக்கான். தெளிவாவேற‌ பேசுறான்.என்ற‌வாரே ரெடியோவை போட்டார்க‌ள். அப்போது நேர‌ம் ராத்திரி 11 ம‌ணி... விப‌த்தைப்பற்றி எந்த‌ த‌க‌வ‌லும் இல்லை. இர‌ண்டு மணி நேர‌ம் க‌ழிந்த‌து... "ஒரு ம‌ணிக்கு சிக்காகோவுக்கு தெற்கே இர‌ண்டு ரெயில்க‌ள் மோதிக்கொண்ட‌ன‌ 47 படுகாய‌ம், மூன்றுபேர் ச‌ம்ப‌வ இட‌த்திலேயே இற‌ந்தார்கள்!." ரேடியோ ஒலித்த‌து!!!

யார் இந்த ஜோஷப்...
ஒரு சாதாரன முடிதிருத்தும் கலைஞர், எட்டாவதுக்கு மேல படித்ததில்லை. ரிவியிலும், பத்திரிகையிலும் எதிர்வரப்போவதைப்பற்றி நிறையபேசினார். பல பலித்தன.

ஜோஷ்ப்பின் சில சாகாஷ‌ங்களை பார்க்கலாம்......

1967 நவம்பர் 25ம் திகதி "ஒரு பாலம் இடிந்து விழும்" என்றார். 3 வாரம் கழிந்து டிசம்பர் 16 அன்று ஒஹாயோ நதியின் குறுக்கே உள்ள வெள்ளிப்பாலம் இடிந்து விழுந்தது 36 இறந்தார்கள்.

1968 ஜனவரி 8..." நாட்டில் கலவரம் வரும்" என்றார். ஏப்ரல் 16 ல் சிகாகோவில் பெரிய கலவரம் வெடித்தது. 5000 மையப்படையினர் குவிக்கப்பட்டனர்.


டிசம்பர் 15, 1965 "கென்னடி குடும்பத்திற்கு நீர் மூலம் கண்டம் வரும்" என்றார் "ஓர் பெண் நீரில் மூழ்குவதை பார்த்தேன்" என்றார். ஜீலை 18, 1969 மெரிஜோ என்ற பெண் எட்வர்ட் கென்னடியுடன் பயனிக்கும்போது நீரில் மூழ்கி மரனமானார். இச் சம்பவம் கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தது.

காணும் இந்த ஜோஷ்ப்புராணம்! அவரின் எதிர்வு கூறல்களை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் எப்ப மற்ற விடையங்களை பார்ப்பது.

(ஜோஷப் எவ்வாறு இப்படிப்பட்ட எதிர்வு கூறத்தக்க கனவுகளை கண்டார் என்பது இன்னும் வியப்பாகவே உள்ளது. நீங்களும் இவ்வாறான கனவுகளை கண்டிருப்பின் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம்.)

இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட கனவுகள் காணப்படுவதனால், ஆராச்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆராச்சியாளர்களின் கருத்துப்படி...

1) கனவு என்பது நாம் ஆசைப்படும், ஆனால் பொளதீகரீதியாக எம்மால் நிறைவேற்ற முடியாதவற்றை       நிறை வேற்றுவது போன்ற ஒரு திருப்தியை ஏற்படுத்துவதற்காக மூலையால் ஏற்படுத்தப்படும் ஒரு செயற்பாடு என்கிறார்கள்.

2) நாம் தூங்கும் போது எமது ஆத்மாவானது சுயாதீனமாக எமது உடலை விட்டு வெளியேறும் தன்மை கொண்டது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆத்மா எப்பரிமானத்திற்கும் உட்பட்டு செயலாற்றாது.( நீளம்,அகலம்,உயரம்....,காலம்?!) ஆத்மா அவ்வாறு உலாவும் போது அது சந்திக்கும் உலகம் தான் எமக்கு கனவாக தோன்றுகிறது என்கிறார்கள்.

3) உங்களின் கனவு அனுபவ்ங்கள் மூலமாக அறிய நினைக்கிறேன்......

இங்கு நான் கனவைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பினும் குறிப்பிடப்படும் சம்பவங்கள் சில "டெலிபதி" எனும் ஆழ்மனதொடர்பு முறையுடன் சம்மத்தப்பட்டுள்ளது. எனவே இனிவரும் பதிவுகளை "மூலையின் அமானுஷ்யங்கள்" எனும் தலைப்பில் தர என்னியுள்ளேன். எனது தவறுக்கு மன்னிக்கவும்.
(வாசகர் ஒருவர் "பேய்கள் பற்றி எதாவது வித்தியாசமா இருக்கா?" என கேட்டிருந்தார். நிச்சயமாக அவை சம்பந்தமான தகவல்களை விஞ்ஞான ரீதியாக எதிர் வரும் பகுதிகளில் ஆராயவுள்ளேன்)

------------------------முற்றும்(தற்காலிகமான‌து)----------------------------


---இனி---
பேய்களும் மர்மங்களும் 
முற்று முழுதாக ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்

Thursday, 19 November 2009

கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) -02

கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)
-----------------------------------------------------------------------------------------

ஏன் இந்தக்கன‌வுகள் தோன்றுகின்றன? எனும் கேள்விக்கு விடை தேடும் முகமாக ஆராச்சியாளர்கள் ஒரு திட்டத்தை நடாத்த தீர்மானித்தார்கள். அதன்படி சில பேரை(ஆராச்சிக்கு உட்படுபவர்களை) தூங்கவைத்துவிட்டு "ரெம்" எனும் நிலை வரும்போது எழுப்பிவிட்டார்கள். இந்த "ரெம்" நிலையில் தான் நாம் கனவு காண்கின்றோம். என‌வே தவறாது இந்னிலையில் எழுப்பப்பட்டவர்கள் மிக விரைவாக மனபாதிப்பிற்கு உட்பட்டு பகலிலேயே உருவெளித்தோற்றங்களை காணாஅரம்பித்து விட்டார்களாம். இவ் முடிவிலிருந்து கனவுகள் எமது வாழ்க்கைக்கு நிச்சயம் தேவை என்பது மட்டும் தெளிவாகிறது.
சில‌ ஆராச்சியாள‌ர்க‌ள் கன‌வு என்ப‌து மூளையில் உள்ள‌ வேண்டாத‌ விட‌ய‌ங்க‌ளை துடைப்ப‌த‌ற்கான‌ ஓர் க‌ருவி என்றும் சொல்கிறார்க‌ள்.

இது ஒரு வித்தியாச‌மான‌ க‌ன‌வு...

"பாட்ரிக் காம்பெல்" ஒரு ந‌ல்ல‌ ந‌டிகை. ஒரு முறை அவ‌ர் சுக‌வீன‌முற்று ப‌டுத்த‌ப‌டுக்கையாக‌ இருக்கும்போது "ஷோரா அல்குட்" எனும் ந‌டிகை கூட‌விருந்து பார்த்துக்கொண்டாள். காம்பெல் சுக‌ம‌டைந்த‌தும் ஆல்குட்டுக்கு ஒரு வர்ண‌சித்திர‌த்தை பரிசாக‌ கொடுத்தால். பின்ன‌ர் காம்பெல் த‌ன‌து சொந்த‌ நாடான‌ பிரான்ஷ் க்கு சென்றுவிட்டாள். ஆல்குட்டும் த‌ன‌து நாட்டுக்கு பொய் விட்டாள்.

வ‌ருட‌ம் 1940...
ஆல்குட் ஒரு புதிய‌ வீட்டுக்கு குடிபெய‌ர்ன்து போனால், அங்கே அவளின் முத‌ல் நாள் க‌ன‌வில் காம்பெல் வ‌ந்து "நான் கல்லறையில் இருந்து த‌ந்த‌ சித்திர‌த்தை பார்த்தாயா? அத‌ன் ம‌றுபுர‌ம் பார்த்தாயா?" என‌ கேக்கும்போது ஆல்குட் விழித்தெழுந்து குல‌ப்ப‌மான‌ ம‌ன‌னிலையுடன் காம்பெல் பிரான்ஷில் இருப்பதை ஜோசித்தவாரே பரிசாக கிடைத்த சித்திரத்தை புரட்டிப்பார்த்த போது... அங்கே பின்புறத்தில் இன்னோர் கோட்டுச்சித்திரமும் காணப்பட்டது. அது ஒரு பிரபல சித்திரகாரரால் வரையப்பட்டது, அந்த நேரமே 2000 டொலர் பெறுமதிவாய்ந்தது.

உடனே காம்பெல்லை தொடர்புகொண்டபோது அவர் இறந்துவிட்டார் என்ற தகவலையே கேக்கமுடிந்தது.
எப்போது என்று கேட்டபோது, என்னவொரு ஆச்சரியம்! காம்பெல் இறந்த நேரமும் ஆல்குட் கனவுகண்ட நேரமும் கச்சிதமாக பொருந்தி இருந்தது!!!!
( இச் சம்பவம் டெலிபதி எனும் ஆழ்மனதொடர்பு முறையுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. அவற்றைப்பற்றி தொடரின் பிற்பகுதியில் ஆராயலாம்!)‌

"ப்ராய்ட்டு"(ஆராச்சியாளர்) வின் கருத்துப்படி " யாரேனும் ஒரு நெருங்கிய உறவு இறப்பது போன்ற கனவு உரிய வருத்தத்துடன் வருமாயின், கனவு காண்பவரின் ஆழ்மனம் தற்போது அவ் உறவு இறப்பதை விரும்புகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், என்றோ ஒருனால் ஒருகணம் அதை அவர் விரும்பினார் என்பது உண்மை. பலர் இதை ஒப்புக்கொள்ள மறுப்பினும்; அவர்கள் நினைத்து மறந்த அக் கணத்தை இவ்வாறான கன‌வுகள் மீட்பிக்கின்றன என்பதே உண்மை"


உதார‌ணமாக‌, ச‌கோத‌ர‌ர்க‌ளிட‌யேயோ ந‌ண்ப‌ர்க‌ளிடையேயோ த‌க‌ராறு ஏற்ப‌டும் போது "நீ தொலைந்து போ"," நீ செத்து ஒழியேன்" போன்ற‌ வார்த்தைக‌ள் பேச‌ப்ப‌டுவ‌துன்டு. அக் குறிப்பிட்ட‌ க‌ண‌த்தில் அவர் அதை விரும்புகிரார் என்ப‌து ச‌ரியே.

ஆக‌வே, நெருங்கிய‌வர்க‌ள் இற‌ப்ப‌து போன்ற‌ க‌ன‌வுக‌ள் வ‌ரும் பொது ப‌த‌ற‌த்தேவையில்லை.


கனவுகளை வைத்து எதிர்வு கூறுபவர்களும் இருக்குறார்கள். அந்த வகையில் "ஜோசப் லூடில்" ஒரு முக்கிய பிரபலம்.

16 ஜனவரி 1969 அன்று ஜோஷப் ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றார்...


தொடரும்...


    ----இனி----

யார் இந்த ஜோஷப்!,அவர் ஏன் பிரபலமானார்!
கனவுகளும் விசித்திர எதிர்வு கூறல்களும்

Wednesday, 18 November 2009

கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்) - 01

கனவும் நனவும்(விஞ்ஞானத்தினூடான ஓர் பயணம்)
----------------------------------------------------------------------------------------

நான் ஆரம்பிக்கவிருக்கும் இவ் ஆய்வுக்கட்டுரைத்தொடரானது, என்னால் முழுவதுமாக ஆராயப்பட்டு எழுதப்படுவதல்ல. ஆனால் விஞ்ஞானரீதியாக ஆராயப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்ததன் மூலமாக எழுதப்படுகின்றது. கனவுகள் பற்றி நான் வாசித்த அனைத்து தகவல்களும் எனக்கு நினைவிருப்பதற்கு நான் ஒன்றும் அவளவு ஞாபகசக்தி கொண்டவனல்ல.பலரைப்போன்ற ஓர் சாமானியன். அதனால் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட‌ சம்பவங்களில் சம்பவம் தொடர்பானவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருக்கும்.இவ் வரவிருக்கும் ஆய்வுத்தொடரில் சில சில குறைகள் காணப்படக்கூடும். ஆனால் இவை அனைத்தையும்தான்டி மிகவும் சுவாரக்ஷ்யமாகவும் உண்மைத்தன்மையுடனும் தொடர் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை.
----------------------------------------------------------------------------------------


இவுளகில் கனவுகானாத மனிதர்கள் இருக்கமுடியாது. "இல்லை நாம் கனவேகாண்பதில்லையே!எப்படி இவ்வாறு கூறமுடியும்? நாமெல்லாம் இவ்வுளகில் வசிக்கவில்லையா?" எனக்கேட்பவர்களும் இருப்பார்கள் இவர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவனால், சில நாட்களில் காலையில் ஒரு கனவைக்கண்டு திடீர் என‌ எழும்போது நாம் கனவில் கண்டகாட்சிகள் நினைவுக்குவருவதில்லை. அவ்வாறன ஓர் நிலைப்பாடு வழ்க்கை முழுவதும் தொடரும் போதே "நான் கனவேகாண்பதில்லை" என கூறக்கூடியனிலை ஏற்படுகிறது. (ஞாபக சக்தியை கூட்டிக்கொள்ளத்தக்க பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இவர்களும் கனவுகானலாம்)

எமது பண்டய புராண‌க்கதைகளில்கூட கனவுகளைப்பற்றிய கதைகளை/சம்பவங்களை காணக்கூடியதாக இருக்கும். (கடவுள் கனவில் வந்து சொன்னவுடன் மறுனால் சம்பந்தப்பட்ட நபர் கனவில் சொன்னபடி சில‌ நற்காரியங்களை செய்வார்)

"ப்பிறாய்ட்டு" எனும் விஞ்ஞானி கனவுகள் பற்றி அக்குவேறு ஆனிவேறாக அலசி அராய்ந்த்துள்ளார். அவரின் கருத்துப்படி கனவு என்பது உள்மன/ஆழ்மன இச்சைகள் என்கிறார்... அவை இன்று நேற்று ஏற்பட்ட இச்சைகள் மட்டும் என்றல்ல; எப்போதாவது ஒருனால் ஒருகணம் ஏற்பட்டதாயும் இருக்கலாம்.

அது சரி ஏன் இந்தக்கனவுகள் தோன்றுகின்றன...


தொடரும்...---இனி --- 
விஞ்ஞானரீதியான ஆய்வுகள் என்ன சொல்கினறன?
விசித்திரமான கனவுகள்.

LinkWithin

Related Posts with Thumbnails