-----------------------------------------------------------------------------------------
ஏன் இந்தக்கனவுகள் தோன்றுகின்றன? எனும் கேள்விக்கு விடை தேடும் முகமாக ஆராச்சியாளர்கள் ஒரு திட்டத்தை நடாத்த தீர்மானித்தார்கள். அதன்படி சில பேரை(ஆராச்சிக்கு உட்படுபவர்களை) தூங்கவைத்துவிட்டு "ரெம்" எனும் நிலை வரும்போது எழுப்பிவிட்டார்கள். இந்த "ரெம்" நிலையில் தான் நாம் கனவு காண்கின்றோம். எனவே தவறாது இந்னிலையில் எழுப்பப்பட்டவர்கள் மிக விரைவாக மனபாதிப்பிற்கு உட்பட்டு பகலிலேயே உருவெளித்தோற்றங்களை காணாஅரம்பித்து விட்டார்களாம். இவ் முடிவிலிருந்து கனவுகள் எமது வாழ்க்கைக்கு நிச்சயம் தேவை என்பது மட்டும் தெளிவாகிறது.
சில ஆராச்சியாளர்கள் கனவு என்பது மூளையில் உள்ள வேண்டாத விடயங்களை துடைப்பதற்கான ஓர் கருவி என்றும் சொல்கிறார்கள்.
இது ஒரு வித்தியாசமான கனவு...
"பாட்ரிக் காம்பெல்" ஒரு நல்ல நடிகை. ஒரு முறை அவர் சுகவீனமுற்று படுத்தபடுக்கையாக இருக்கும்போது "ஷோரா அல்குட்" எனும் நடிகை கூடவிருந்து பார்த்துக்கொண்டாள். காம்பெல் சுகமடைந்ததும் ஆல்குட்டுக்கு ஒரு வர்ணசித்திரத்தை பரிசாக கொடுத்தால். பின்னர் காம்பெல் தனது சொந்த நாடான பிரான்ஷ் க்கு சென்றுவிட்டாள். ஆல்குட்டும் தனது நாட்டுக்கு பொய் விட்டாள்.
வருடம் 1940...
ஆல்குட் ஒரு புதிய வீட்டுக்கு குடிபெயர்ன்து போனால், அங்கே அவளின் முதல் நாள் கனவில் காம்பெல் வந்து "நான் கல்லறையில் இருந்து தந்த சித்திரத்தை பார்த்தாயா? அதன் மறுபுரம் பார்த்தாயா?" என கேக்கும்போது ஆல்குட் விழித்தெழுந்து குலப்பமான மனனிலையுடன் காம்பெல் பிரான்ஷில் இருப்பதை ஜோசித்தவாரே பரிசாக கிடைத்த சித்திரத்தை புரட்டிப்பார்த்த போது... அங்கே பின்புறத்தில் இன்னோர் கோட்டுச்சித்திரமும் காணப்பட்டது. அது ஒரு பிரபல சித்திரகாரரால் வரையப்பட்டது, அந்த நேரமே 2000 டொலர் பெறுமதிவாய்ந்தது.
உடனே காம்பெல்லை தொடர்புகொண்டபோது அவர் இறந்துவிட்டார் என்ற தகவலையே கேக்கமுடிந்தது.
எப்போது என்று கேட்டபோது, என்னவொரு ஆச்சரியம்! காம்பெல் இறந்த நேரமும் ஆல்குட் கனவுகண்ட நேரமும் கச்சிதமாக பொருந்தி இருந்தது!!!!
( இச் சம்பவம் டெலிபதி எனும் ஆழ்மனதொடர்பு முறையுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. அவற்றைப்பற்றி தொடரின் பிற்பகுதியில் ஆராயலாம்!)
"ப்ராய்ட்டு"(ஆராச்சியாளர்) வின் கருத்துப்படி " யாரேனும் ஒரு நெருங்கிய உறவு இறப்பது போன்ற கனவு உரிய வருத்தத்துடன் வருமாயின், கனவு காண்பவரின் ஆழ்மனம் தற்போது அவ் உறவு இறப்பதை விரும்புகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், என்றோ ஒருனால் ஒருகணம் அதை அவர் விரும்பினார் என்பது உண்மை. பலர் இதை ஒப்புக்கொள்ள மறுப்பினும்; அவர்கள் நினைத்து மறந்த அக் கணத்தை இவ்வாறான கனவுகள் மீட்பிக்கின்றன என்பதே உண்மை"
உதாரணமாக, சகோதரர்களிடயேயோ நண்பர்களிடையேயோ தகராறு ஏற்படும் போது "நீ தொலைந்து போ"," நீ செத்து ஒழியேன்" போன்ற வார்த்தைகள் பேசப்படுவதுன்டு. அக் குறிப்பிட்ட கணத்தில் அவர் அதை விரும்புகிரார் என்பது சரியே.
ஆகவே, நெருங்கியவர்கள் இறப்பது போன்ற கனவுகள் வரும் பொது பதறத்தேவையில்லை.
கனவுகளை வைத்து எதிர்வு கூறுபவர்களும் இருக்குறார்கள். அந்த வகையில் "ஜோசப் லூடில்" ஒரு முக்கிய பிரபலம்.
16 ஜனவரி 1969 அன்று ஜோஷப் ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றார்...
தொடரும்...
----இனி----
யார் இந்த ஜோஷப்!,அவர் ஏன் பிரபலமானார்!
கனவுகளும் விசித்திர எதிர்வு கூறல்களும்
0 comments:
Post a Comment