Total Pageviews

Wednesday, 25 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் 03

பொதுமனம்(எதிர்வுகூறல் - ESP)
---------------------------------------------------------------------------------------
முன்னைய "மூளையும் அதிசய சக்திகளும் 02 " பதிவில் "மூளை" என்பதற்கு பதிலாக "மூலை" என தவறுதலாக இடம்பெற்று விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.
---------------------------------------------------------------------------------------

சரி வாங்க வியக்கலாம்...

1972 ரிஜன்சி அச்சகம் ஒரு நாவலை வெளியிட்டது. நாவலின் பெயர் "கருப்பு கடத்தல்காரன்". எழுதியவர் ஹரிசன் ஜேம்ஸ்.(புனைப்பெயர் ஜேம்ஸ் ராஷ்க்.)


அந்த கதையில் கடத்தல்கார குழு ஒன்றினால், இடதுசாரி சிந்தனையுள்ள ஒரு பணக்காரரின் மகள் கடத்தப்படுகிறாள். அவ‌ள் ஒரு கல்லூரி மாணவி. பெயர் "பாட்ரிஷியா". கடத்தப்படுகையில் அவளின் கதலன் அடித்து நொறுக்கப்படுகிறான். முதலில், பொலிசார் அவளது காதலனை ச‌ந்தேகிக்கின்ற‌னர்.
கடத்தியவர்களை முதலில் எதிர்த்த பட்ரிஷியா பின்னர் அவ‌ர்களின் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டு அக் கும்பலுக்கு அடிமையாகிறால். இது மிகப்பெரிய கடத்தலாக இனங்காண‌ப்படுகிறது. இறுதியில் பொலிஸாரால் கண்ணீர் புகை அடித்து மடக்கி கொல்ல‌ப்படுகின்றனர். இது தான் அக்கதையின் சாராம்சம்.


நாவல் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஒரு பணக்கார பத்திரிகை முதலாளியின் மகள் "பாட்ரிஷ்யா ஹர்ஸ்ட்" கல்லூரி வளாகத்தில் வைத்து கடத்தப்ப‌டுகிறாள். கதையில் வருவது போன்றே அவளும் அவர்க‌ளின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, அவர்களை நேசித்து செய்திகளை அனுப்பத்தொடங்கினாள்.

1974 ஃப்.பி.ஐ அதிகாரிகள் ஜேம்ஸை சந்தேகம் கொண்டு விசாரித்தபோது, அவர் "எனக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை. அவ் நாவல் முற்று முழுதாக எனது கற்பனையில் உதித்தது." என கூறினார். (அவருக்கும் அச்சம்பவத்திற்கும் தொடர்பிலை என்பது ஃப்.பி.ஐ யால் நிரூபிக்கப்பட்டது.)

பாட்ஷியா எனும் பெயர்,அவளது மனமாற்றம், பணக்கார தந்தை எல்லாம் கச்சிதமாக பொருந்துகிறதே இதை இதை தற்செயல் என்பதா? அல்லது கடத்தல்காரர்க‌ள் நாவலை ப‌டித்துவிட்டு அவ்வாறே நடந்து கொண்டனரா? இறுதிவரை கடத்தல்காரர்களிடம் கூட கேட்டுத்தெரிந்து கொள்ள முடியவில்லை... ஏன் எனின்... இறுதியில் அவர்கள் பொலிஸாரால் சூழப்பட்டு கொல்ல‌ப்பட்டு விட்டனர்!!!!!
(இப்போது ஜேம்ஸ் நாடிஜோசிய கதைகளை விட்டுவிட்டு அம்புலிமாமா வகையான தைகளை எழுதுகிறாராம்!)

இங்கிலாந்தின் கணித இயற்பியல் பேராசிரியர் "வாஸ்ஸர்மன்" ஒரு சித்தார்ந்தம் சொல்கிறார்...

"உலகில் நடக்கிற, நடக்கப்போற சம்பவங்கள் அனைத்தும் காலமற்ற மனப்பிம்பங்களாக வடிவுகொண்டிருகின்றன. அதாவது அனைத்து சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பு ,ஒரு சங்கிலித்தொடர் இருக்கின்றது. இத்தொடர்பு மன‌ங்கள் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.
மூளையில் ஏற்படும் விம்பத்திற்கும், சலனத்திற்கும், எதிர்கால சம்பவத்திற்கும் ஒர் இனைப்பு மனதிலேயே இருக்கிறது. சிலருக்கு இவ் இணைப்பு விஸ்தாரமாகவே இருந்து எதிர்காலத்தை கூற முடிகிறது" என்கிறார்..( "நொஸ்டர் டாமஸ்" இதில் பிரபலம்.பின்னர் பார்க்கலாம்...)

பதிவின் நீளம் கருதி இன்றைய பதிவு ஒரு சம்பவத்துடன் நிறுத்தப்படுகிறது.
மூளையில் இன்னமும்; "ஏன் இருக்கிறது" என அறியப்படாத ஒரு பகுதி இருக்கிறது. அது என்ன...? அதன் முக்கியத்துவம் என்ன...? அது சம்பந்தமாக விஞ்ஞானிகளாள் செய்யப்பட்ட ஆராச்சி முடிவுகளுடன் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------
முயற்சித்து பாருங்கள்... முடியாது...முடிந்தால் சொல்லுங்கள்.ஒரு இடத்தில் நிமிர்ந்து நின்டவாறு வலது கையால் "6" என எழுதுவது போன்று செய்துகொண்டு. வலது காளை மனிக்கூட்டு சுழர்ச்சிப்பக்கம் சுழற்றிப்பாருங்கள்.....

---------------------------------------------------------------------------------------

தொடரும்...
---இனி---
சில சம்பவங்கள்.
எமக்கு இருக்கும் சக்தியை எவ்வாறு அறிவது.


4 comments:

 1. நன்றி!
  பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு.
  திருத்தி விட்டேன்!.
  தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பாக்கிறேன்.

  ReplyDelete
 2. நல்ல பதிவு கீழ்வரும்....எழுத்துப் பிழைகளைத் திருத்திவிடால்....திருத்தி விடுங்களேன்!

  மூலையில்
  இனைப்பு
  கொள்ளப்பட்டு
  நொருக்கப்படுகிறான்

  ReplyDelete
 3. திருத்தி விட்டேன்!.
  தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பாக்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails