Total Pageviews

Monday, 23 November 2009

மூளையும் அதிசய சக்திகளும் - 02
உள்ளுணர்வும் உருவெளித்தோற்றமும்.
---------------------------------------------------------------------------------------
இதே போன்று இன்னும் பல சம்பவங்களும் சர்ச்சிலுக்கு ஏற்பட்டிருக்கின்றனவாம். அவை பற்றி அவரின் மனைவி அவரிடம் கேட்டபோது "ஏதோ ஒன்று இதை செய், இதை செய்யாதே என்று எனக்கு அடிக்கடி உள்ளுக்குள் சொல்லும் பெரும்பாலும் அது சொல்வது சரியாகத்தான் இருக்கிறது" என்றாராம். இதிலிருந்து
உள்ளுணர்வை மதிக்கும் சர்ச்சில் போன்றவர்களுக்கு அது பெரும் உதவிபுரிகிறது என்பது தெளிவாகிறது. ஆனால் இங்கு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. அதாவது ,ஏன் இந்த உள்ளுணர்வு அனைத்து சந்தர்ப்பங்களிலும் எங்களை எச்சரிப்பதில்லை?... விடைகானமுடியாத கேள்வி!!!
(அவ்வாறு அது எச்சரிக்காத வரைதான் அது விசேட சக்தியாக கருதப்படும் என்பது வேறவிடயம்.)


ஆமெரிக்காவில் ஒரு ரெயில் கொம்பனி ஒரு வித்தியாசமான புள்ளிவிபரம் வைத்திருக்கிறார்கள்.

அதாவது இலியானா மாகாணத்தில் ஒரு முறை ரெயில் விபத்து ஏற்பட்டது.பயணிகள் இறந்தார்கள். விபத்திற்கு முந்தய தினங்களில் ரெயிலில் பயணித்தவர்களின் என்னிக்கை முறையே 68,60,48,62,70. ஆனால்... விபத்தன்று பயணித்தவர்கள் வெறும் 9 பேர்தான்!!! நம்பமுடிகிறதா?!!! (இத்தனைக்கும் அது விடுமுறைதினமுமல்ல.)
பல பேருக்கு உள்ளுணர்வு "போகாதே" என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.
தேர்தல்களில் கூட எதிர்பாராத விதமாக; எதிர்பார்க்கப்பட்டவர் தோற்றுப்போவதும் இதே முறையில்தான். கடைசி நேரத்தில் உள்ளுணர்வு செய்தமாயம்.

இது ஒரு மிகவும் விசித்திரமான சம்பவம்....

1956 செப்டெம்பர் 11, கலிபோர்னியாவில் வசிக்கும் பால்மக்ஹாஹன் தம்பதியின‌ருக்கு ஏற்பட்டது...


இருவரும் கிரான்கன்யன்ட் எனும் சுற்றுலாத்தளத்திற்கு சென்றிருதனர். அங்கே திருமதி பால்மக், தமது கபினுக்கு பக்கத்து கபினில் ஒரு பெண்மணி தன் கணவர் சகிதம் லக்கேச்களை தூக்கிகொண்டு செல்வதை அவதானித்தாள். திருமதி பால்மக் அப்பெண்மணியுடன் 2 வருடங்களுக்கு முன்னதாக ஒரு கோட் கேசில் யூரியாக பணியாற்றி இருந்தார். பால்மக் தன் கணவருக்கு அப் பெண்மணி ப‌ற்றி சொல்லியதுடன், அப் பெண்மணியின் கணவருக்கு ஒரு கை இல்லை என்பதையும் காட்டினாள்.

"எதற்கு இந்த ராத்திரியில் தொந்தரவு செய்வான், நாளை சந்திக்கலாம்" என கூறி விட்டார்.

மறு நாள்...

காலை வராந்தாவில் அப் பெண்மணியையும் அவளது கணவனையும் கண்ட பால்மக்ஹாஹன் தம்ப‌திகள் அவர்களை சந்தித்து இயல்பாகபேசிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் அவர்களை கண்ட விசையத்தையும் சொன்னார்கள். உடனே அப் பெண்மணியும் அவளது கணவனும் ஆச்சரியத்தோடு " நாம் இப்போதுதானே ரூரிஸ்ட் பஸில் வந்திறங்கினோம்!!!" என்றார்கள். ( பால்மக்ஹாஹன் தம்பதிகள் சமூகத்தி நல்ல மதிப்புமிக்கவர்கள். அவர்கள் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை.)
இருவருக்கும் இலேசாகத்தான் பரிச்சயம். இருவர் வாழ்விலும் எந்த விதமான பயமோ, படபடப்போ இல்லை.
இரு குடும்பங்களுக்கிடையேயும் எந்தவித உறவுமில்லை. முதல் நாள் ராத்திரியில் அவர்களைப் பற்றி ஜோசிக்க வேண்டிய அவசியமும் பால்மக்ஹாஹன் தம்பதிகளுக்கில்லை.
அப்படியானால், அவர்கள் பார்த்தது யாரை?... அல்லது எதை?...

திடீரென ஏற்பட்ட உருவெளித்தோற்றம் என்றாலும்; அந்த எண்ணத்தை தோற்றுவிக்க ஏதேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டியது கட்டாயம். இச் சம்ப‌வத்தில் அதுவும் இல்லை!!! "அமெரிக்கன் சொசைட்டி ஃபொ சைக்கிக் ரிசேர்ச்" எனும் நிறுவனம் இது சம்மந்தமான தகவல்களை பதிப்பித்துள்ளது.
(இன்றைய‌ நவீன தொழில் நுட்பத்தில் "வேர்ச்சுவல் ரியாலிடி" என்று ஒன்று இருக்குதாம். அதில் ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு வெட்டவெளியில் நடக்கும் போதே நாம் விரும்பும் இடத்தில் நடப்பது போன்ற உணர்வை பெறமுடியுமாம்.அனாலும் தெளிவு போதாதாம்.)

அப்ப‌டியானால் அது என்ன‌?... எது?...
எதிர்கால‌ விஞ்ஞான‌ம்தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்!

தொடரும்...
---இனி--- 
எழுதியது நடந்து.
மேலும் சில சம்பவங்கள்.
அப்பிடி என்னதான் நடக்கிறது?

5 comments:

 1. தொடருங்கள்...
  நன்றாக உள்ளது.....

  ReplyDelete
 2. உங்கள் தொடர் நன்றாக இருக்கிரது. தொடருங்கள்....

  ReplyDelete
 3. இது குறித்து இன்னூம் அறிய ஆவல்..

  நல்ல பதிவு

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails