ADOBE FLASH ரியூட்டோரியல்
-----------------------------------------------------------------------------------------"அதென்னது வளாகம் முழுவதும் விஞ்ஞானம்,மர்மம் மட்டும்தான் பேசப்படுகிறது. வேற விசயங்கள் பற்றி பேசமாட்டீர்களா?" எனக்கேட்டு சில வாசகர்கள் இமெயில் அனுப்பி இருந்தார்கள். எதிர் வரும் பதிவுகளில் அக்குறையை போக்க முயற்சி செய்யவுள்ளேன்.
அந்த முதல் முயற்சியாக... பிரஜோஷனமாக...
இப்போது பரவளாக (2டி)அனிமேஷன்களுக்கு பயன்படுத்தப்படும் Adobe Flash எனும் மென்பொருளை எவ்வாறு கையாண்டு அனிமேஷன்களை உருவாக்கலாம் என்பதைப்பற்றி தரவுள்ளேன்.
( நீங்கள் பார்க்கும் வெப் சைட்டுகளில் எல்லாம் எதாச்சும் ஒன்று அங்கும் இங்கும் ஒடும் அல்லது படம் மாறிமாறி வரும் அல்லது ஏதாச்சும் அசையும் இவை எல்லாம் பொதுவாக Flash ல் தான் செய்யப்படுகின்றன. இனி நீங்களும் செய்யலாம்.)
காணும்... வாங்க பழகலாம்...
-----------------------------------------------------------------------------------------
உருவங்களை அசைத்தல்.
முதலாவதாக Flash இல் ஒரு உருவை எவ்வாறு அசைப்பது என்பதை கற்போம்.
நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு அசைப்பது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் அசைக்க முடியும்.
செய்முறை-1
தேவையான அளவில் Movie ஐ உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்.
மூலமாக stage இல் ஒரு வட்டத்தை வரையவும்.
பின்னர் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select செய்து) KeyFrame இனை உருவக்கவும்.
செய்முறை-3
10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வேறு
இடத்தில் வைக்கவும்.
Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காணமுடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காணப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.
இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்
-------------------------------------------------------------------------------------------------------------
இயன்றவரை விளக்கியுள்ளேன். எதாவது சந்தேகங்கள் எழுந்தால் தொடர்புகொள்ளவும்.
(ரியூட்டோரியல் ரைப்பண்ணுவது சிறிது கடினமான வேலையாகவுள்ளது!!! முக்கியமாக படங்களை இனைப்பது!!)
hats off pirabu anna!!!
ReplyDeletethanks!
ReplyDeleteரொம்ப நன்றி தம்பி..
ReplyDeleteபிளாஷ் சாப்ட்வேர் வேண்டுமென்றால் என்ன பண்றது ?
நன்றி ஐயா!
ReplyDeleteஎனக்குத்தெரிந்த முறை இது ஒன்று தான்.
http://www.utorrent.com/
தளத்திற்கு சென்று " uTorrent "மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளுங்கள்.
பின்னர் இந்த லிங்கை முயற்சிக்கவும்.
http://www.monova.org/details/2502399/MACROMEDIA%20FLASH%208%20WITH%20SERIAL%20CODE%09.html
இலகுவான முறை தெரியவந்தால் சொல்லவும்.
இதைப் பற்றி பினாத்தல் சுரேஷ் (பெயரை பார்த்து பயப்படவேண்டாம்) என்ற பதிவர் எளிமையாக அருமையாக வீடியோவில் கொடுத்திருந்தார் முடிந்தால் அவர் பதிவில் பார்க்கவும்.
ReplyDelete