இத சொல்ல மட்டுமா பதிவு எழுதினேன் என்றால் அது தான் இல்லை... உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கத்தான்...
5 புதிர்களை இங்கு கேட்கிறேன், பதில் தெரிந்தவர்கள் அளியுங்கள். தெரியாதவர்கள் தேடுங்கள். (பதில்கள் தமிழ்ஜீனியஸ் தளத்தில் இருக்கும். எனினும் அதுகூட பார்வை இடுவது கடினம் :P)
--------------------------------------------------------------------------------------------------------------
புதிர் 01 : மின்குழிழிற்கு சுவிட்ச் எங்கே...
இரண்டு மாடிகளைக்கொண்ட ஒரு கட்டிடத்தொகுதியில் இரண்டாம் மாடியில் ஒரு மின்குமிழ் இருக்கிறது.
அவ் மின் குமிழிற்குரிய "switch ( நிலை மாற்றி)" உட்பட 3 switch கள் கட்டிடத்தின் கீழ் மாடியில் இருக்கிறது.
கீழ் மாடிக்கு செல்வதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வழங்கப்படும்.
எவ்வாறு மின்குமிழிற்குரிய switch ஐ சரியாக கண்டுபிடிப்பீர்கள்?
***********
புதிர் 02 : பாலத்தைக் கடப்பது எப்படி?
ஜித், சுஜீ, பகி, ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின் மீது கடக்கவேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப்பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைய முதல் அவர்கள் கடக்கவேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை கடக்க முடியாது.
ஆனால், அவர்கள் பாலத்தைக்கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆளுக்காள் வேறுபட்டது!
பாலத்தைக்கடக்க ஜித் 1 நிமிடத்தையும், சுஜீ 2 நிமிடத்தையும், பகி 5 நிமிடத்தையும் ராம் 10 நிமிடத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.
பாலத்தின் மீது ஒரு தடவையில் இருவர் மட்டுமே கடக்க முடியும். அல்லது பாலம் உடைந்துவிடும்.
வேகமாக கடக்கக்கூடியவர் எவராயினும் அவருடன் கடக்கும் நபர் மெதுவாக கடப்பவராக இருந்தால் மெதுவான நபருடனேயே கடந்து செல்லவேண்டும்.
எவ்வாறு அவர்கள் ஆற்றை பாலத்தினூடாக கடப்பார்கள்?
***********
புதிர் 03 : அதிக எடையுள்ள பந்து எது?ஒரு கூடையில் ஒரே அளவானதும் ஒரே மாதிரியானதுமான 8 பந்துகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு பந்து மட்டும் நிறை அதிகமானது.
உங்களுக்கு (படத்தில் காட்டப்பட்டது போன்ற) ஒரு தராசு தரப்படுகிறது. இரு முறை மட்டுமே தராசை பயன்படுத்த முடியும்.
எவ்வாறு பாரமான பந்தை கண்டுபிடிப்பீர்கள்?
*************
புதிர் 04 : பால் கான்களும் 4 லீட்டரும்!
ரணேயிடம் 3 லீட்டர் மற்றும் 5 லீட்டர் அளவையுடைய குவளைகள் ( கான்கள்) உள்ளன. ஆனால், ரணே 4 லீட்டர் அளவுடைய பாலை அளந்தெடுக்கவேண்டியுள்ளது.
இவ் இரு கான்களையும் வைத்து எவ்வாறு அளந்தெடுக்க முடியும்?
**************
புதிர் 05 : அரச தீர்ப்பும் திருடனும்!
அரசனின் நகையை திருடிய ஒரு திருடன் காவலர்களால் கைது செய்யப்பட்டு அரசவையில் நிறுத்தப்பட்டான். அரசன் அவனிற்கு மரண தண்டனை அளிக்க முடிவு செய்தார். தனது வறுமையின் காரணமாகத்தான் தான் திருடினேன் என்று அவன் சொன்ன போதும் அரசன் இரங்கவில்லை. ஆனால், திருடனிற்கு ஒரு வினோத சந்தர்ப்பத்தை அளித்தான்.
அதாவது, " நீ உண்மையை சொன்னால், சிங்கத்தினால் கொல்லப்படுவாய், பொய் சொன்னால் எருமை மாட்டால் இடித்துக்கொல்லப்படுவாய்..." என்று கூறினான்.
அதற்கு, அந்த திருடன் ஒரு பதில் அளித்தான். அவனிற்கு தண்டனை கொடுக்கமுடியாத அரசன் அவனை விடுவித்தான்.
கேள்வி : அப்படி என்ன பதிலை அந்த திருடன் சொல்லி இருப்பான்?
--------------------------------------------------------------------------------------------------------------
பதிலை பார்த்து அறிய நினைப்பவர்களுக்கு இதுவும் ஒரு விளம்பரப்பதிவுதான்... ஆனால், இங்க கொஞ்சம் எழுதிவிட்டு மேலும் படிக்க இங்கே வாருங்கள் என்று வழமைபோல் கடுப்பேத்தவில்லை என்று நம்புகிறேன்.
நன்றி, வணக்கம் :)
உங்களுக்கு (படத்தில் காட்டப்பட்டது போன்ற) ஒரு தராசு தரப்படுகிறது.
ReplyDeleteநீங்க "வாசன் ஐ கேர்" ஏஜண்டா
என் கண்ணுக்கு ஒரு தராசு படமும் தெரியல
அவமானப்பட்டான் "வளாகம்" :P
Deleteபட், மற்ற 4 கேள்விக்கும் பதில் சொல்லதெரியலயே சேக் இக்கு... so sad :P
1num 2um kadakavendum, 2 thirumba varavendum , 10um 5um kadakavendum ,ange irrukum 1ru varavendum ,inga irrukum 2um 1um irruthiyil kadakka vendum
ReplyDeleteMudhalil 3ru lt kuvaligalil alakka vendrum, ipozhudhu nammidam 3ru lt irrukiradhu,pinbu 3ru lt kuvaligalil alandhu 5tr kuvalaiyil utravun , marubadium 3ru lt kuvaligalil alandhu 5tr kuvalaiyil utravun ipozhudhu 3lt kuvaliyil 1lt meedham irrukum 3+1=4
ReplyDeleteபுதிர் 05 : அரச தீர்ப்பும் திருடனும்! Nan than thirudunen endru ungalidam poi sonnan'nu solli iruppan.
ReplyDeleteபுதிர் 01. Ans....keela poi 1st switch'ah 5min on pannanum.apparam 1st switch'ah off pannittu 2nd switch'ah on pannittu maadi'la poi paarunga..light earuncha 2nd switch than ans.eariyalai'na bulb'ah thottu paarunga.hot'ah iruntha 1st switch than ans.appadi hot'ah illai'na 3rd switch than ans...
ReplyDelete