எந்திரன்
-------------------------------------------------------------------------------------------------அப்பாடி... நானும்... எந்திரன் பார்த்தாச்சு... நேற்றே பார்த்தாச்சு... காச்சலோட போய் பார்த்திட்டமாக்கும்...
நோர்மலா... இங்க... இம்புட்டு சனம் டியேட்டர்க்கு முன்னால் நிண்டதை பார்த்ததே இல்லை... ( பாஸ்கரன் ஃபிலிம்கும் 2ம் நாள் போனேன்... வெறும் 19 பேர்தான் இருந்தார்கள்... :) நேற்று... தலைவா... என்ற வாசகத்தோட எல்லாம் வந்திருந்தார்கள்...
சரி... இனி படத்தில் நான் பார்த்ததையும்... எதிர் பார்த்ததையும்... விமர்சனம் என்கிற பேர்ல எழுதிறேன்...
-------------------------------------------------------------------------------------------------
ஆரம்ப காட்சியிலேயே... ரஜனி + சந்தானம்,கருனாஸ்... ரோபோ தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்... அவர்கள் எதிர் பார்த்தது போன்றே... ரோபோ கச்சிதமாக வருகின்றது... அதற்கு... ரஜனியின் முக அமைப்பு போன்றே தோல் போடப்படுகிறது...
( அப்படி போட்டதால்தானே ரஜனி படம்... :) )
ரஜனியின் தாய் மூலமே... அதற்கு... சிட்டி என்ற செல்ல பெயரும் சூட்டப்படுகிறது...
என்ன தான் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும்... சமூக நடை முறைப்பாவை சொற்கள்... மற்றும் சூழலுக்கு பழக்கப்படுவதற்காக... சமூகத்தில் விடப்படுகிறது. கொமான்ட்களால்... உருவாக்கப்பட்டமையால்... அதானால்... ஒரு சொல்லிற்கு ஒரு அர்ததை மட்டுமே எடுக்க முடிகிறது... உதாரணமாக... டி.வி யை போட சொல்ல... போட்டு உடைக்கிறது.
சமூகத்தில்... நடமாடும் போது... ரோபோக்கலால்... ஏற்படக்கூடிய... வினை, தீவினைகளை நகைச்சுவையாக காட்டியுள்ளார்கள்... :)
இந்த ரோபோவிற்கான அங்கீகாரத்தை பெறுவதில்... ரஜனியின் புரொஃபஸரால் பிரச்சனை உருவாக்கப்படுகிறது...
அதை சரி செய்வதற்காக... ரோபோவுக்கு... உணர்ச்சிகள் கற்றுத்தரப்படுகிறது...
ஒரு கட்டத்தில்... ரோபோ சிட்டி... ரஜனியின்... காதலியான ஐஸ்வர்யாவை லவ் பண்ண ஆரம்பிக்கிறது.
அப்போதுதான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இதற்கிடையில்... ரஜனியின் புரொஃபெஸர்... ரோபோ சிட்டியுடன்... தொடர்பு கொள்கிறார்...
இருவரும் பேசிக்கிண்டிருக்கும் போது... ரஜனி இடையில்... யாருடன் பேசிக்கிண்டிருக்கிறாய் சிட்டி... என்கிற போது... அது முதல் முதலாக... தானாகெ பேசுவதாக பொய் சொல்கிறது... ( மனிதனுடன்... இணைந்து பழகியதால் ஏற்பட்ட நோய்... ஆனால், பின் கட்டங்களில்.. சிப் மாற்றப்படும் வரையுல் அது பொய் சொல்ல வில்லை என காட்டப்பட்டு சொதப்ப படுகிறது. :( )
ரஜனியின் விருப்பப்படி... அதை இந்திய இராணுவத்தில் சேர்ப்பத்தற்காக.. முண்ணோட்ட பரீட்சையின் போது... அது... காதல் வரிகளைக்கூறி... சொதப்ப... கோவமாகும் ரஜனி... அதை உடைத்து குப்பையில் போடுகிறார்...
இதற்கிடையில்... வெளி நாட்டு கங்களுடன் தொடர்புடைய புரொஃபொஸர்... உடைக்கப்பட்ட ரோபோவைத்தேடுகிறார்... அது சிக்குகிறது... சிப் மாத்துகிறார்... தானாக இயங்க ஆரம்பிட்த்து.. தனக்கென ஒரு சாம்ராஜ்ஜத்தை உருவாக்குகிறது ரோபோ...
இறுதியில்.. அதை எப்படி ஜெயித்தார்... ரஜனி என்பதை... காட்டியுள்ளார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
உடைக்கப்பட்ட ரோபோ... தானாக தன்னை பொருத்திக்கொண்டு... காருக்குள் ஏறுகிறதாம்... ஆருக்கு பூச்சுத்துறாங்கள்... பின்னாடி ஒரு கட்டத்தில்... கரண்ட் கட்டாகி கொஞ்ச நேரத்திலேயே... ரோபோக்கல்... செயலிழக்கத்தொடங்குகின்றன.
அப்படி என்றால்... குப்பையில் போட்டு ஒரு நாளுக்கு மேலான... ( காட்சிகளை பார்க்கவும்.) இந்த ரோபோவிற்கு எப்படி... சார்ஜ் வந்தது??? முக்கியமான இடத்தில் இந்த பிழை... அட்லீஸ்ட்... மின்னல் ஒன்று பட்டு சார்ஜ் ஆவதாக ஆவது காட்டி இருக்கலாம்.
இறுதி கட்டங்களில்.... தொழில் நுட்பத்தை கோமாளித்தனமாக காட்டியுள்ளார்கள்... அதுவும் கதை 2010 இல் நடப்பது போன்று அமைத்து... நடை முறைக்கு சாத்தியமே இல்லை என்பதை காட்டி விட்டார்கள்... ( இப்போது தான்... நினைப்பதை... எழுத்தாக்கும்... புரொசசரே கண்டு பிடித்துள்ளார்கள். )
ரோபோ... அசுர பலம்...ஓ.கே.... ஆனால், அந்த கார் ஃபைட்டின்போது... மற்ற கார்கலெல்லாம்.. அடிபட்டு நொருங்குகிறது... ரோபோ + ஐஸ் பயணிக்கும் கார் மட்டும் ஸ்ரோங்கா பாய்கிறது... பற்க்கிறது... அப்படியே கார்ட்டூன் மாதிரி...
அவளவு சுடுகிறார்கள்... ரோபோக்கு பாதிப்பில்லை ஓ.கே... ஐஸ்ஸிக்குமா????
பாட்டுகளில்... ஒன்றுதான்.. ரசிக்கும் படியான காட்சி அமைப்பு... மற்றவை... கோமாளித்தனமானது... நண்பன் சுதர்சன் சொன்னது போன்று... 100 பேர் பின்னுக்கு நின்டு ஆடுகிறார்கள்...
பெரிய பட்ஜெட்... சங்கர் படம் என்பதற்காக ஓவரா... செலவு பண்ணி இருக்கார்கள்... கதையை இன்னும் ஸ்ரோங்காகவும்... அதற்கேற்ப தொழில் நுட்பத்தில் செலவையும் கூட்டி இருக்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------
பெண்ணை காப்பாற்றும் காட்சியில்....
ட்ரெஸ் இல்லை... என்று ரஜனி சொல்ல... உயிர் இருக்கு... என்று ரோபோ சொல்வது... சுஜாத்தாவின் நுட்பத்தை காட்டுகிறது. ( இப்படி பல இடங்களில் வசங்கள் இருக்கின்றன.)
ஸெட்கள் எல்லாம்... உயர்தரம்... :)
எல்லாத்திற்கும் மேலாக... ரஜனியின் நடிப்பு சுப்பர்... அதுவும்... பிற் பகுதியில்... சிப் மாற்றப்பட்ட வில்லன் ரோபோ நடிப்பு + ஸ்டைல் சூப்ப்பர்ர்ர்ர்... இனியாவது... அடுத்த சுப்பர் ஸ்டார் என்று... சிலரை நினைக்கிற ரசிகர்கள்... புரிந்து கொள்ள வேண்டும்... அதற்கு அனைவரும் ரசிக்கத்தக்க "நடிப்பும்" தேவை என்பதை... :)
மொத்தத்தில்... இது ஷையன்ஸ் ஃபிக்ஷன் என்று சொல்ல முடியாது... ரஜனி படம்தான்... + சங்கர் படம்....
ஆனால்... தமிழ் சினிமாவுக்கு புதிது. உலக சினிமாவுக்கு... பழசு...
தமிழ் சினிமாவில்... தொழில் நுட்பம் வழர்ந்து விட்டது.... ரசனையும்... சிந்தனை திறனும் வளரவில்லை... :(
ரஜனி ரசிகர்களுக்கு... திருப்தி... கொண்டாட்டம்... சுஜாத்தா ரசிகர்கழுக்கு... ஏமாற்றம்...
-------------------------------------------------------------------------------------------------
அட... டவுன் லோட்டும் போட்டாச்சு... கமெரா கொப்பி போல... நான் பண்ணல... வேர் பண்ணுமோ தெரியல... ட்ரை பண்ண இதை கிளிக் பண்ணவும்... ( டொரன்ட் ஃபைல்)
-------------------------------------------------------------------------------------------------
இந்த உண்மையை சொன்னா நம்மளை பயித்தியக்காரன் என்டுராணுங்கள் ...:P haha :D
ReplyDeleteநான் மட்டும் தான் எதிரா எழுதினானோ எண்டு பயந்துட்டன் ..
தமிழ் சினிமாவில்... தொழில் நுட்பம் வழர்ந்து விட்டது.... ரசனையும்... சிந்தனை திறனும் வளரவில்லை... SUPER
ReplyDeleteமுப்பரிமானக் காதலில் வேறு நாயகனுக்கு பதிலாக ரோபோ. கதையை மாத்துங்கப்பா..
ReplyDeleteதொழில் நுட்பம், நடிகர்கள், இசை என எல்லாம் இருந்தாலும் கதையை யோசிப்பவர்களுக்கு காதல் தவிற எதுவும் தெரியாதா.
கொடுமை. ரஜினி நடிப்பில் சாதனை செய்துவி்ட்டார்,. அவருடைய பங்கு சரியாக இருக்கிறது. சங்கர்தான் கவனம் வைக்க வேண்டும்.
சிப் மாற்றப்படும் வரையுல் அது பொய் சொல்ல வில்லை என காட்டப்பட்டு சொதப்ப படுகிறது. :( )
ReplyDeleteNigal inoru murai mudinthal padem parthu vittu vanthu inda vaseneththai sari parungal........
பிரபு ரோபோ பொய் சொல்லவது சரி அதன் பின்பு ரோபோ பொய் சொல்லுவதற்கான சந்தர்பம் கிடைக்கவில்லை "சிப் மாற்றப்படும் வரையுல் அது பொய் சொல்ல வில்லை என காட்டப்பட்டு சொதப்ப படுகிறது. :( )" இந்த கூற்று பிழையானது படத்தை மறுபடியும் பார்த்து உங்கள் விமர்சனத்தை மாற்றுங்கள் plz
ReplyDeleteபிரபு உங்களுக்கு எந்த மாதிரியான பாடல் காட்சியமைப்பு தேவை என்பதை இந்தியாவுக்கு சென்று முழு திரைப்பட தயாரிப்பளர்களுக்கும் சொல்லுங்கள், தமிழ் சினிமாவில் பாடல் காட்சியமைப்புகள் இப்படித்தான் காலம் காலம் அஹ வருகின்றன, அவற்றுடன் ஒப்பிடுகையில் இதில் கையாளப்பட்டுள்ள தொழில் நுட்பம் மிகவும் எழுதி உள்ளீர் .......சிறந்தது அதை பற்றி ஒண்டுமே உமது விமர்சனத்தில் காண வில்லையே, வேண்டும் என்றே என்திரனை இழிவு படுத்த நீர் விமர்சனம் .:P
ReplyDeleteபாட்டுகளில்... ஒன்றுதான்.. ரசிக்கும் படியான காட்சி அமைப்பு... மற்றவை... கோமாளித்தனமானது... நண்பன் சுதர்சன் சொன்னது போன்று... 100 பேர் பின்னுக்கு நின்டு ஆடுகிறார்கள்...
ReplyDeleteMr. Pirabu...
Niggal Padeththai parke vendam enru parthuirukinga pola..
Athula Ella pathtulaum Aswaryade Dance Top class....Sry I think didn't realize it.
Partyla nadekure DACEla... Rajaniku Pinnale(1000) perum Aswaryaku Pinnale(2000) perum Adurangalalamam......:P
Na sonna pola Padeththa innorukka pathutu vanthu ellam sari parunga ok
பிரபு தமிழ் சினிமாவில் ரசனையும் சிந்தனையும் வளர வில்லை என்று கூற உமக்கு எந்த விதமான தகுதியும் இல்லை, ஒரு படம் எடுக்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் எதனை 1000 தொழிலார்கள் பாடுபடுகிறார்கள் அவற்றை பற்றி உமது விமர்சனத்தில் கூறும், தமிழன பிறந்து விட்டு அவன் செய்தவற்றை இழிவு படுத்த வேண்டாம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteரசனையும்... சிந்தனை திறனும் வளரவில்லை... :(
ReplyDeleteIppadi Solle Umakku enna vagaiyane arivu ullathu..... at least 1 varuda mavethu commentatera irunthira....illai siruvayethil best commentator pattem ethum kidaichchatha..?
INDIA vilaye inda padethuku commentate panne Pala varuda Experience ulla aatkalaiye eduththulargal..... Nir vendumanal Ungaludaiye personal Rasanaiyai mattum kadaippathhe irunthal Umakku rasani yahe irukke villai enru koorum...ok....Athen valerthiyai patti pesathiir....
Regarding the batteries charging, it is dependant on how you perceive. For a battery to self charge (without any external support) it can take from 1 ms to even 7 days depending upon the sunlight condition. I dont think there is any logic error in here. It is possible for a robot to self assemble too. People in science know this better.
ReplyDeletechumma iruntha rendu perum unga naakkka maari maari valigada.................
ReplyDeleteநன்றி...S.Sudharshan
ReplyDeleteஹீ...ஹீ.... இதோ கீழ ஹரி... சப்ராஸ் சொல்லிட்டாங்களே... ஃப்.பி போதாதென்று இங்க வேற... சொல்லி சாட்டராக்கினமாமாம்.
நன்றி...ஜெகதீஸ்வரன்.
உண்மைதான்... ஒரே பாணியிலேயே... இருந்து உருள்கிறார்கள்.
நன்றி...safraz2020 & Hariharan...
நீங்கள் படத்தின் இறுதிக்கட்ட வரிகளைப்பாருங்கள்...
உங்களுக்கு பிடிக்கனும் என்கிறதுக்காக பொய்யான விமர்சனம் எல்லாம் எழுத ஏலாது... ஏன்.. படத்தின் நிறைகளையும் சொல்லி இருக்கனே பாருங்க...
அந்த 1000 தொழிலாலர்களையும்.. இப்படி கேவலமான ஒரே ரகமான ஆட்டத்துக்கு பயன்படுத்த வேண்டாம்... அவர்களையும்... ஹொலிவூட் ரேஞ்சுக்கு பயண்படுத்த சொல்லித்தான் சொல்கிறோம்... ஜோசிங்க ஹரி... சும்மா ஜோக் பண்ணாம.
நன்றி...Aboo Shakir...
அப்படி என்றால்... இரண்டாம் பாதியில் கரண் கட் பண்ணியது.. தேவையற்ற சீனா?
நன்றி...Anonymous ... :)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete@ theepan @ நீங்க வெறி பிடித்த ரஜனி ரசிகர் தானே ? எழுத்திலை தெரியுது ..
ReplyDeletem m சுஜாதா ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் . .
ReplyDeleteநன்றி...S.Sudharshan...
ReplyDelete///theepan said...
poda ******///
இதுகளுக்கு... என்ன சொல்கிறம் என்று ஒன்டுமே தெரியாது... 5அறிவு மனிதர்கள்... கஷ்டம்டா...
நன்றி...Nanpan... :)
இந்த Comment நான் போடும் போது நான் 2.30 pm Show பார்க்க வந்து House-full ஆனதால் 5.30 pm Show பார்ப்பம் என்ற யோசனையுடன் அருகிலுள்ள Internet Cafe ஒன்றிலிருந்து உங்கள் வலைப்பூவை பார்க்கின்றேன்...நானும் "சுஜாதா" ரசிகன் தான்...(அவரின் "ஜீனோ" என்ற நாவல் இன்னும் மனதில் நிற்கின்றது.)எனவே நான் ஏமாற விரும்பவில்லை..விமர்சனத்துக்கு நன்றி நண்பரே...!நான் திரும்பிச்செல்கிறேன்..சீ...ச்...சீ...இந்தப் பழம் புளிக்கும்...!
ReplyDeleteஎந்திரன் ரோபோ - ரஜினிக்கு தேவைப்பட்ட, ஷங்கருக்கு வழக்கப்பட்ட larger than life hero பிம்பம் + அதனுடன் வழக்கமான ஷங்கர் ஸ்டைல் மசாலா கலந்த கூட்டாஞ்சோறு. இதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்றுதான் தெரியவில்லை. உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். நல்ல, உண்மையான review!
ReplyDeletesujatha rasikargal & endiranin kurayai kandu pidiththavargalukku.... oru parisu valanga padukirathaam....poooi petrukukolungal.....
ReplyDeleteநன்றி....D.Gajen...
ReplyDeleteஆனால்... நீங்கள் ஒருதடவை பார்த்திருக்கலாம்... தொழில் நுட்பம் + நடிப்பு வித்தியாசமாக (தமிழுக்கு) இருந்தது.
நன்றி...Denzil...
உண்மைய சொன்னா... சூடாகிறாங்க... நான் என்ன பண்ண. :(
நன்றி...I.J.Creation
நீங்க சொல்லலனுதான் பார்த்திட்டிருந்தன்... போய் வாங்கிறம்... பக்கத்திலயே... எப்படி படம் எடுத்தாலும்... ஆஆஆ... என்டு வாய பிளந்துட்டு வாறவங்களுக்கும் ஒரு பிரைஸ் கொடுக்கிறாங்க... மிஸ் பண்ணாம வாங்க. :)
Kandippaaga Sujatha avargal padathai paarthirundhal Nondhu Poi iruppaar. Rajini rasigargal thaan indha maadhri padathai paarka mudiyum. Padam Sariyaana ARUVAI.
ReplyDeleteபடம் சொதப்பல் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.ந்ன்றி!
ReplyDeleteஜால்ராக்களிடமிருந்து தப்பிக்கப்பாருங்கள்!