Total Pageviews

Friday 15 April 2011

இதுதான் இனக்கலப்போ :O - 02 ( படங்கள் )

------------------------------------------------------------------------------------------

ஃபோட்டோ ஹொப்பின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இனக்கலப்புக்களை நான் பார்த்து ரசித்தேன்... :)
உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டும் போடவும். :)

முன்னைய இனக்கலப்பு... :)

------------------------------------------------------------------------------------------














------------------------------------------------------------------------------------------

Wednesday 13 April 2011

புதுவருடப்பிறப்பாமாம்... ஏப்ரல் ஃபூல்... :P

-------------------------------------------------------------------------------------------
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர்...

இந்து சமுத்திரத்தின் மத்தியில் ஒரு மாபெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும்.... இதுவே... திராவிடரின், தமிழரின் தோன்றலுக்கு உரிய இடமாக கருதப்படுகிறது. மேலும் நாகரீகத்தின் தொட்டிலாக திகழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ( லெமூரிய பதிவை பார்வையிடவும்.)

அங்கு சுமார் ஐந்துவகையான உலக நாட்காட்டிகள் பாவணையில் இருந்துள்ளன. அதனடிப்படையிலேயே...
பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு... என வெவ்வேறு... பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது... இன்றும் நிலவுகிறது.  இதில் இன்றைய நாட்காட்டியுடன் மிகவும் ஒத்துப்போவதாக இருந்தது "சூரிய , சந்திர" நாட்காட்டி முறைகளே. ( * மேலும்...)
-------------------------------------------------------------------------------------------

1500 ம் ஆண்டளவில்...

ஐரோப்பாவிலும்... தமிழர்களின் புதுவருடம் பிறப்பாக (??) இருக்கும் தினத்தையே தமது புதுவருடமாகவும் கொண்டாடி இருக்கிறார்கள். ( ஏப்ரல் 14 // தமிழில் சித்திரை 01 ).
எனினும் அது தமிழ்கலண்டரை அடிப்படையாக கொண்டது என்பதை விட... ரோமனிய கலண்டரின் படிதான் கொண்டாடப்பட்டது. (கி.பி 154 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே இந்த கலண்டர்தான் ஐரோப்பாவில் பாவணையில் இருந்துள்ளது.) இந்த கலண்டரின் அடிப்படையாக எகிப்து திகழ்ந்துள்ளது. எனினும், எகிப்தில் உருவாக்கப்பட்ட கணித முறைகள் அனைத்துமே... வெளியில் இருந்து வந்தவை... அதுவும் அரபிக் கடல்வளியாக எனும்போது... லெமூரியாவில் இருந்து வந்திருப்பதற்கான சான்றுகள் பல உள்ளன. ( *மேலும்...).
இப்போது புரிந்திருக்கும்... ஏன் ரொமானிய கலண்டர் எமது தமிழ்கலண்டரை ஒத்திருந்தது என்பது.
-------------------------------------------------------------------------------------------

1562 ஆம் ஆண்டு...

13ம் போப் கிரெகெரி எனும் கத்தோலிக்க போப்பால்... ஜனவரி 1 தான் வருடத்தின் முதலாவது நாளாகவும்... அதுவே வருடப்பிறப்பாகவும் அறிமுகப்படுத்தப்படது. அந்த கலண்டர்...  "கிரேகோரியன்" நாட்காட்டியாக உருவானது. ( அதற்கு முன்னர்.. யூலியின் நாட்காட்டி பாவணையில் இருந்தது.) அப்படி உருவாக்கையில் இன்னொரு சிக்கல் உருவானது...  அவரால் மீழ் ஒழுங்கு படுத்தப்பட்ட நாட்காட்டியானது... தமிழர்களிடையே ஏற்கனவே புலக்கத்தில் இருந்த "பொங்கள்" நாட்காட்டியை ஒத்ததாக அமைந்திருந்தது.
எனினும்... மதமற்ற தமிழர்களின் நாட்காட்டியை ஒத்திருப்பதை விரும்பாத போப்... 14 நாட்களை அதிகரித்து தனது நாட்காட்டியில் "தை/ஜனவரி 01" ஐ அறிமுகப்படுத்தினார்.
( அதனால்தான்... தமிழின் தை 01 ஆங்கிலத்தில் 14 ஆக வருகின்றது. )

கிரகெரியின் புதிய நடைமுறைப்படி ஜனவரி 01 ஐ வருடப்பிறப்பாக ஏற்றுக்கொள்ளும்படி... ஃப்ரான்ஸ் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும், பலர் முன்னைய முறைப்படி... சித்திரை 01 ஐயே வருடப்பிறப்பாக கொண்டாடினார்கள்.
அவர்களை கேலி செய்யும் நோக்குடன்... அவர்களுக்கு பொய்ப்பரிசுப்பொருட்களை அனுப்பி முட்டாள்கள் ஆக்கும் முறை கத்தோலிக்க சபைகளாலேயே திறைமையாக மேற்கொள்ளப்பட்டது.
ஃப்ரான்ஸில் தொடங்கிய இந்த வினோத முட்டாளாக்கும் செயற்பாடு பின்னர் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் பரவ... மெல்ல மெல்ல புதுவருடப்பிறப்பு முட்டாள்கள் தினமாக்கப்பட்டது.

அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக... அவர்களின் காலனியின் கீழிருந்த நாமும் அதையே பின்பற்றி கொண்டாடப் பழக்கப்பட்டு விட்டோம்.
-------------------------------------------------------------------------------------------

2008(?) இல்...

பல தமிழ் அறிஞர்களின் வேண்டுகோலுக்கு இணங்க... "தமிழக முதல்வர் முத்தமிழ் கலைஞர் மு.கருணாநிதி "(ஹீ ஹீ... கலைஞர் டி.வி பார்த்து கெட்டு போய்டேனோ.. :P ) அவர்களால்... தைத்திருநாள் தமிழரின் புதுவருடப்பிறப்பாக அறிவிக்கப்பட்டது. ( நவீனப்பட்ட நாட்காட்டியும் இது தான். )
எனினும்... இன்னமும் புதுவருடப்பிறப்பாக ஏப்ரல் 14 கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. (ஹீ ஹீ கலைஞரின் டி.வி சனலிலேயே விளம்பரம் போகுது... ஹைய்யோ ஹைய்யோ... :P)
ஆகவே... இன்னொரு சித்திரை முட்டாள்கள் தினம் உருவாக வாய்ப்புள்ளது.
எனவே.. நாளைக்கு... நாமும், கொண்டாடுபவர்களை முட்டாள்கள் ஆக்குவோமேன்... எத்தனை நாளுக்குத்தான் வெள்ளைக்காரன் சொன்னதையே செய்திட்டு இருப்பதாம்....  :P
-------------------------------------------------------------------------------------------

இந்தப்பதிவில் உள்ள குறைகளை மறக்காமல் சுட்டிக்காட்டவும்... :)

-------------------------------------------------------------------------------------------

Tuesday 5 April 2011

ஒரு இன அழிப்பும் - பனிமனித உருவாக்கமும்... :) ( *03* ஃபைனல் )

------------------------------------------------------------------------------------------
போன பனிமனிதன் பதிவில்... பனிமனிதன் உண்மையாக இருப்பதற்கான விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை விளக்கத்துடன் பதிவிட்டிருந்தேன்.
இன்று அந்த உயிரினம் எவ்வாறு உருவாகி இருக்கலாம் என்பதை எழுத உள்ளேன்.

முன்னைய...
பதிவு - 01 -
பதிவு - 02 -


------------------------------------------------------------------------------------------

டார்வினின் பரிமாணக்கொள்கையின் படி... ஒரு தனிப்பட்ட உயிரினத்திலிருந்து பல பிரிவுகள் உருவாக சாத்தியமுண்டு.
இதன் அடிப்படையிலேயே... குரங்கை அடியாக கொண்டு மனிதன் உட்பட்ட சில விலங்குகள் தோன்றி இருந்தன.
அவ்வாறு பரிமான வளர்ச்சிப்படியில் மரபணுக்களில் ஏற்படும் சீரான‌ Mutation  மாற்றத்தால் இவ்வாறான புதுவகை உயிரினங்கள் உருவாகி இருக்கக்கூடும்...
உதாரணமாக... தற்போது, சிலவகை நோய்களை தடுப்பதற்காக எதிர் தன்மை உடைய பக்டீரியாக்கள் , வரைஸ்கள் என்பன ஆய்வுகூடங்களிலேயே... மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன.
அவ்வாறு இருக்கையில்... இயற்கையில் பெரிய விலங்குகளில் இயற்கையாகவே அப்படி உருவாவதற்கு சந்தர்பமுள்ளது.

எனினும், பரிமாணக்கொள்கைப்படி...
புதிதாக உயிரினங்கள் உருவாகுகின்றன என்றால்... அது தற்போது உள்ள சூழலுக்கு தகுந்தவாறு இயைபாக்கமடைந்த உரினங்களாகவே இருக்க வேண்டும். ஆனால், இந்த பனிமனிதர்கள் எனப்படும் விலங்குகள் அவ்வாறு தற்சமைய சூழலுக்கு ஏற்ற இயைபாக்கம் அடைந்த உயிரினங்களா எனப்பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அதுவும் மனிதனுடன் ஒத்துப்போகும் உடலமைப்பு உள்ள விலங்கினம் என்ற வகையில் பார்த்தால்...  சூழலுக்கு ஒத்துவராத ஒரு விலங்காகவே உள்ளது.
( எனினும்... அவை பற்றி வரும் தகவல்கள் பனி படர்ந்த குளிரான பகுதிகளில் இருந்தே வருகின்றன... அந்த வகையில் பார்க்கும் போது... அவற்றின் உடலமைப்பு அதற்கு இயைபாக்கம் அடைந்ததாகவே உள்ளது... கடும் குளிரை தாங்க கூடியவாறு உடல் முழுவதும் கேசம் உள்ளது. )

------------------------------------------------------------------------------------------

சுமார் 30 000 (??) வருடங்களுக்கு முன்னர் வரை...
மனிதனுடனேயே வாழந்த இன்னொரு உயிரினம் " நியான்டர்தால் (Neanderthal) " மனிதர்கள்.
உருவளவில் சற்று குள்ளமானவர்களாகவும்...  பெருத்த தலையுடனும்... உடல் வலு குறைந்தவர்களாகவும் இருந்த அவர்களை... வேட்டையாடுவதில் ஏற்பட்ட போட்டிகளினாலும்... மனிதனின் ஆதிக்க போக்கினாலும்... கொலைவெறுத்தனமாக முற்றாக அழிக்க நேர்ந்தது. ( சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் மனிதருடன் இணைந்து வாழ்ந்துள்ளார்கள்... 30 000 ஆண்டுக்கு முன்னர்தான் அந்த உயிரினம் முற்றாக அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. )

மனிதனால் வேட்டையாடப்படும் போது... தப்பும் நோக்கில் மனிதன் இலகுவில் அண்ட முடியாத இடங்களான... மலைகள், குளிர்சார்ந்த பிரதேசங்களில் இவர்கள் தஞ்சம் புகுந்திருக்க வாய்ப்புள்ளது.
அங்கு அந்த குளிருக்கு தகுந்தவாறு ஏற்கனவே வாழத்தகுதி உடைய கொரில்லா போன்ற விலங்குகளுடன் இனக்கலப்படைந்து இந்த புதுவிதமான "பனிமனிதர்" என அழைக்கப்படும் உயிரினங்கள் தோன்றி இருக்கலாம்.
( கடும் குளிர்களுக்கு அப் பிரதேசத்தில் தாக்குப்பிடிக்க முடியாத தனி நியாண்டர்தார் உயிரினம் முற்றாக ஒழிந்திருக்கும். )

சாதாரணமாக‌ மனித உடலமைப்பின் படி... 12 விலா எலும்பு (?) சோடிகள் இருக்கும்... எனினும் 5% ஆனவர்களுக்கு 13 சோடிகள் இருக்கின்றன. இது மனிதனுக்கும் நியான்டர்தால் மனிதர்களுக்கும் இடையே இடம் பெற்ற இனக்கலப்பின் விளைவாகவே கருதப்படுகிறது. ( நியான்டர்தால் மனிதனுக்கு 13 சோடிகள் இருந்தமை எலும்புப் படிவுகளில் கண்டு பிடிக்கப்பட்டது. ) மனிதனுடனேயே இனக்கலப்பு சாத்தியமாகும் போது...  கொரில்லாவுடனும் சாத்தியமாகி இருக்கலாம்.

வெளி உலகிற்கு வருவதற்கு பயந்திருப்பதற்கான காரணம்...
மனிதர்கள் மீது ஏற்பாட்ட பயம் ஜீன்களில் பதியப்பட்டதால் இருக்கலாம்.

------------------------------------------------------------------------------------------

இந்த பனிமனிதன் சம்பந்தமாக மேலதிக பதிவுகள் இடத்தேவையில்லை என நினைக்கிறேன்.

பதிவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டவும்.. :)

------------------------------------------------------------------------------------------

Sunday 3 April 2011

இரண்டு அருமையான கதைகளும் ...+ ஒரு வீடியோவும்... :)

நான் வாசித்த இரண்டு அருமையான கதைகளும்... + ஒரு வீடியோவும்... உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...  :)
------------------------------------------------------------------------------------------
சின்ன பையன் தனியாக றோட்ல போய்க்கொண்டு இருந்தான்... வீதி ஓரத்தில் ஒரு சிறுமியின் புகைப்படம்... அதை எடுத்து தனது புத்தகத்திற்குள் வைத்துக்கொண்டான்... மெல்லமாக அது காதலாக மலர்ந்தது... படத்தை பார்த்தே காதலிக்க ஆரம்பித்தான்...
காலங்கள் கடந்தன...
திருமணம் முடித்துக்கொண்டான்... சில வருடங்களின் பின்னர்... ஒரு முறை வீட்டை துப்பரவு செய்யும் போது...
மனைவியிடம் அந்த படம் சிக்கியது....
" இந்தப்படம் எப்டி வந்தது? " என்று கேட்டாள்...
" நான் சின்ன வயசில இருந்து இதை வைச்சிருக்றேன்... ஏன்?" என்று திரும்பிக்கேட்டான்...
" இல்லை.. இந்த படத்தை எனக்கு 9 வயதாக இருக்கும் போது தொலைத்து விட்டேன் அது தான்" என்றாள்... :)

------------------------------------------------------------------------------------------

ஒருத்தன் டிவிடி கடையில் பணி புரியும் ஒரு பெண்ணை வன் சைட்டாக லவ் பண்ணினான்...
அவளை பார்ப்பதற்காகவே தினமும் கடைக்கு போய் சிடி வாங்குவதை வளக்கமாக கொண்டிருந்தான்... ஆனால், தான் லவ் பண்ணுவதை சொன்னதே இல்லை... 

திடீரென 2 நாட்கள் கடைப்பக்கம் வரவில்லை...
அந்த பெண்... அவனின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது...
இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக அந்த பையனின் தாய் கூறினார்...
தாயின் அனுமதியுடன்... அவனின் றூமுக்குள் சென்று சீடிகளை திறந்து பார்த்த போது...  கடிதங்கள் அப்படியே இருந்தன....
ஆம்... இவளும் காதலித்துள்ளாள்...  இந்த பெண் ஒவ்வொரு முறை அவன் சிடி வாங்கும் போதும் தானது லவ்வை அவனுக்கு சிடியினுள் லெட்டர் வைத்து சொல்லியுள்ளாள்...
ஆனால், இறுதிவரை அவன் ஒன்றைக்கூட திறந்து பார்த்திருக்கவில்லை... அவன் சிடி வாங்கியது இவளை சந்திப்பதற்காக மட்டுமே...
------------------------------------------------------------------------------------------
2 1/2 மணித்தியாலங்களில் நாங்கள் செய்யாததை 8 நிமிடத்தில் அவர்கள் செய்துள்ளார்கள்.. :)


------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected