Total Pageviews

Wednesday 13 April 2011

புதுவருடப்பிறப்பாமாம்... ஏப்ரல் ஃபூல்... :P

-------------------------------------------------------------------------------------------
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர்...

இந்து சமுத்திரத்தின் மத்தியில் ஒரு மாபெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும்.... இதுவே... திராவிடரின், தமிழரின் தோன்றலுக்கு உரிய இடமாக கருதப்படுகிறது. மேலும் நாகரீகத்தின் தொட்டிலாக திகழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ( லெமூரிய பதிவை பார்வையிடவும்.)

அங்கு சுமார் ஐந்துவகையான உலக நாட்காட்டிகள் பாவணையில் இருந்துள்ளன. அதனடிப்படையிலேயே...
பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு... என வெவ்வேறு... பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது... இன்றும் நிலவுகிறது.  இதில் இன்றைய நாட்காட்டியுடன் மிகவும் ஒத்துப்போவதாக இருந்தது "சூரிய , சந்திர" நாட்காட்டி முறைகளே. ( * மேலும்...)
-------------------------------------------------------------------------------------------

1500 ம் ஆண்டளவில்...

ஐரோப்பாவிலும்... தமிழர்களின் புதுவருடம் பிறப்பாக (??) இருக்கும் தினத்தையே தமது புதுவருடமாகவும் கொண்டாடி இருக்கிறார்கள். ( ஏப்ரல் 14 // தமிழில் சித்திரை 01 ).
எனினும் அது தமிழ்கலண்டரை அடிப்படையாக கொண்டது என்பதை விட... ரோமனிய கலண்டரின் படிதான் கொண்டாடப்பட்டது. (கி.பி 154 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே இந்த கலண்டர்தான் ஐரோப்பாவில் பாவணையில் இருந்துள்ளது.) இந்த கலண்டரின் அடிப்படையாக எகிப்து திகழ்ந்துள்ளது. எனினும், எகிப்தில் உருவாக்கப்பட்ட கணித முறைகள் அனைத்துமே... வெளியில் இருந்து வந்தவை... அதுவும் அரபிக் கடல்வளியாக எனும்போது... லெமூரியாவில் இருந்து வந்திருப்பதற்கான சான்றுகள் பல உள்ளன. ( *மேலும்...).
இப்போது புரிந்திருக்கும்... ஏன் ரொமானிய கலண்டர் எமது தமிழ்கலண்டரை ஒத்திருந்தது என்பது.
-------------------------------------------------------------------------------------------

1562 ஆம் ஆண்டு...

13ம் போப் கிரெகெரி எனும் கத்தோலிக்க போப்பால்... ஜனவரி 1 தான் வருடத்தின் முதலாவது நாளாகவும்... அதுவே வருடப்பிறப்பாகவும் அறிமுகப்படுத்தப்படது. அந்த கலண்டர்...  "கிரேகோரியன்" நாட்காட்டியாக உருவானது. ( அதற்கு முன்னர்.. யூலியின் நாட்காட்டி பாவணையில் இருந்தது.) அப்படி உருவாக்கையில் இன்னொரு சிக்கல் உருவானது...  அவரால் மீழ் ஒழுங்கு படுத்தப்பட்ட நாட்காட்டியானது... தமிழர்களிடையே ஏற்கனவே புலக்கத்தில் இருந்த "பொங்கள்" நாட்காட்டியை ஒத்ததாக அமைந்திருந்தது.
எனினும்... மதமற்ற தமிழர்களின் நாட்காட்டியை ஒத்திருப்பதை விரும்பாத போப்... 14 நாட்களை அதிகரித்து தனது நாட்காட்டியில் "தை/ஜனவரி 01" ஐ அறிமுகப்படுத்தினார்.
( அதனால்தான்... தமிழின் தை 01 ஆங்கிலத்தில் 14 ஆக வருகின்றது. )

கிரகெரியின் புதிய நடைமுறைப்படி ஜனவரி 01 ஐ வருடப்பிறப்பாக ஏற்றுக்கொள்ளும்படி... ஃப்ரான்ஸ் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும், பலர் முன்னைய முறைப்படி... சித்திரை 01 ஐயே வருடப்பிறப்பாக கொண்டாடினார்கள்.
அவர்களை கேலி செய்யும் நோக்குடன்... அவர்களுக்கு பொய்ப்பரிசுப்பொருட்களை அனுப்பி முட்டாள்கள் ஆக்கும் முறை கத்தோலிக்க சபைகளாலேயே திறைமையாக மேற்கொள்ளப்பட்டது.
ஃப்ரான்ஸில் தொடங்கிய இந்த வினோத முட்டாளாக்கும் செயற்பாடு பின்னர் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் பரவ... மெல்ல மெல்ல புதுவருடப்பிறப்பு முட்டாள்கள் தினமாக்கப்பட்டது.

அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக... அவர்களின் காலனியின் கீழிருந்த நாமும் அதையே பின்பற்றி கொண்டாடப் பழக்கப்பட்டு விட்டோம்.
-------------------------------------------------------------------------------------------

2008(?) இல்...

பல தமிழ் அறிஞர்களின் வேண்டுகோலுக்கு இணங்க... "தமிழக முதல்வர் முத்தமிழ் கலைஞர் மு.கருணாநிதி "(ஹீ ஹீ... கலைஞர் டி.வி பார்த்து கெட்டு போய்டேனோ.. :P ) அவர்களால்... தைத்திருநாள் தமிழரின் புதுவருடப்பிறப்பாக அறிவிக்கப்பட்டது. ( நவீனப்பட்ட நாட்காட்டியும் இது தான். )
எனினும்... இன்னமும் புதுவருடப்பிறப்பாக ஏப்ரல் 14 கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. (ஹீ ஹீ கலைஞரின் டி.வி சனலிலேயே விளம்பரம் போகுது... ஹைய்யோ ஹைய்யோ... :P)
ஆகவே... இன்னொரு சித்திரை முட்டாள்கள் தினம் உருவாக வாய்ப்புள்ளது.
எனவே.. நாளைக்கு... நாமும், கொண்டாடுபவர்களை முட்டாள்கள் ஆக்குவோமேன்... எத்தனை நாளுக்குத்தான் வெள்ளைக்காரன் சொன்னதையே செய்திட்டு இருப்பதாம்....  :P
-------------------------------------------------------------------------------------------

இந்தப்பதிவில் உள்ள குறைகளை மறக்காமல் சுட்டிக்காட்டவும்... :)

-------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. ஏதோ ஒன்று விடுமுறை விட்டால் சரி என்ற நிலையில் தான் நம் மக்கள் இருக்கிறார்கள்..!

    ReplyDelete
  2. "நித்திரையில் இருக்கும் தமிழா!
    சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
    அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
    அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
    தரணி ஆண்ட தமிழனுக்கு
    தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
    -பாரதிதாசன்.
    http://ilavarasanr.blogspot.com/2011/04/blog-post_13.html

    ReplyDelete
  3. நன்றி...மனோவி :)
    ஹீ ஹீ உண்மைதான்... :D

    நன்றி... Anonymous :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected