Total Pageviews

Friday, 29 November 2013

இரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்??

இரண்டாம் உலகம்...

திரையில் படம் பார்க்க முடியவில்லை...
நேற்று இரவு இடைவேளை வரை படம் பார்த்தேன்...
இன்று மீதி...

படம் பார்ப்பதற்கு முன்பும் பின்பும் எந்த விமர்சனத்தையும் வாசிக்கவில்லை. சமூகத்தளங்களில் நண்பர்கள் சிலர் இட்ட ஓர் இருவரி விமர்சனங்கள் இது ஒரு விஞ்ஞான கொள்கைகளைக்கொண்ட ஒரு விஞ்ஞானப்புணைவுக்கதை என்பதை காட்டியது... எனவே, படத்தின் மீதான ஆர்வமும் படத்தின் கதையை எப்படி சொல்லப்போகிறார்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வமும் ஆரம்பத்திலேயே எகிறிவிட்டது. ( மற்றவர்களின் கருத்துக்களால் பாதிக்க கூடாது என்பதற்காகத்தான் விமர்சனங்களே பார்க்கவில்லை.) 
இது விமர்சனமும் அல்ல... எனக்கு இப்போது தோனுவதை அப்படியே எழுதலாம்னு, எழுதாமல் விட்ட வலைப்பூவை தூசு தட்டுகிறேன்...

திரைப்படம் ஆரம்பித்ததுமே...

"இந்தப்பிரபஞ்சம் மிகப்பெரியது, இதில் எமது பூமியைப்போல் பல கோடி பூமிகள் இருக்க வாய்ப்புக்கள் உண்டு...
அதே போல் மனிதன் பூமியில் மட்டும் பிறப்பதில்லை, அவர்கள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் பிறக்கவும் சாத்தியம் உண்டு" - ஐன்ஸ்டைன் ,மிக்சொயோ குக்கு விஞ்ஞானிகளின் கூற்றில் இருந்து ஆரம்பிக்கிறது.
( "டா டீ எனக்கொரு டவுட்டு" என்பது போல... "பூமி" என்றால் என்ன? என்று ஒரு சந்தேகம் தோனிச்சு...
அது நாம் நாம் வாழும் கிரகத்திற்கு இட்ட பெயர் தானே... பேசாமல் "எமது கிரகத்தைப்போல.... பல கோடி கிரகங்கள்" என்று ஆரம்பித்திருக்கலாமே என்று ஒரு குறை.
ஹீ ஹீ... கேவலமான படங்களை எல்லாம் கைதட்டி சிரித்து பார்ப்போம். ஆனால் இப்படி படங்களில் குறை கண்டு பிடிப்போம். இது தான் நாம். என்றாலும் நான் இதை சுட்டிக்காட்டியது... தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படியான அறிவியல் பசியை ஏற்படுத்தும் திரைப்படங்கள் வரும். அதுவும் "பன்முக பிரபஞ்சம்" எனும் மிகப்பெரிய குழப்பமான கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள படம். இப்படியான சிறு சிறு தவறுகளை கண்டுக்கலாமேனுதான்...)

ஆர்யா நீரினுள் முழ்கிக்கொண்டு இருக்கும் போது கதை ஆரம்பிக்கிறது...
எமது பூமியில் நடக்கும் தனது கதையையும், இன்னோர் கிரகத்தில் நடக்கும் தமது கதையையும் குறிப்பிடுவதன் மூலம் திரைக்கதை நகர்கிறது.
அந்த இன்னோர் கிரகத்தில் அரசாட்சி நடைபெறுகிறது... அங்கு கடவுள் ஆக கருதப்படும் ஒரு பெண் இருக்கிறார்... ஆனால் ஆண்களால் ஏனைய பெண்கள் அடிமைகளாக /இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாதனமாக நடாத்தப்படுவதாகவும்... தீயவர் கூட்டத்தால் அழிவுகள் வருவதாகவும்... அதை தடுக்க முதல் காதல் மலர்வதாகவும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்... ( நானும் இங்கு சொல்லிவிட்டேன்... படத்தின் கதை இதுவல்ல... அது எப்படி எனபது தான்...)

நமது பூமியில்... அனுஷ்கா- ஆர்யா காதல் கதை நகர்கிறது. இங்கு குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லை.

மற்றைய கிரகத்தில், ஆர்யா-அனுஷ்காவை "மட்டக்க‌" பின்தொடர்கிறார்... அதே நேரம் தளபதியின் மகனான அவர் "தான் ஒரு வீரன்" எனபதையும் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார்...

இரண்டு கதைகளும் தனித்தனியே தெளிவாக நகர்ந்துகொண்டிருக்கிறது...

இடைவேளைக்கு சற்று முன்னர், திடீர் திருப்பமாக அனுஷ்கா இறந்துவிடுகிறார். அனுஷ்காவின் இறப்பிற்கும்- இடைவேளைக்கும் இடையிலான நிமிடங்கள், 100% அறிவியல் சார்ந்த திரைக்கதையாக இருக்கின்றது. பல கோட்பாடுகளை தெளிவான திரைத்தொகுப்பில் தொகுத்துள்ளார் இயக்குனர்.

நாய், ஆர்யாவை குறித்த இடத்திற்கு கூட்டிச்செல்வது...
நமது தொழில் நுட்ப மாற்றத்தால் தேவையற்றுப்போய் இழந்த சில நுண்-அறிவுத்திறன்கள் இன்னமும் விலங்குகளில் இருப்பதை காட்டும் ஒரு பகுதியாக இதைக்கொள்ளலாம்.
மேலும், அடுத்தகட்டமாக...

ஆர்யாவின், உடல் பாகம் இயங்க முடியாத தந்தை... ஆர்யாவுடன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அறிவியல். (அவற்றை விளக்கத்தேவையில்லை.) பேசி முடிந்து தனது இருசக்கரவண்டியில் செல்லும் போது "கிரபிக்ஸ்" வசதியுடன் அந்த வண்டி வேறு பாதையில்-வேறு உலகத்திற்கு(?) செல்வது போல் காட்டி இருப்பது என்னை பொறுத்தவரை இன்னோர் கோட்பாடு. அதாவது, ஒரே உலகம் "பல சட்டங்கள் - multi frame"...
ஒரு சட்டத்தில் (கதைக்களம் நடக்கும் சட்டத்தில்) உடல் இயங்காது வாழும் அவர்... இன்னோர் சட்டத்தில் அந்த குறை இல்லாமல் வாழ்கிறார் என கொள்ளலாம்.

இதே காட்சியை இன்னோர் விதமாக சொல்லவேண்டும் என்றால்...
பொதுமனம்!
ஆர்யா, தனது அப்பா மீது வைத்திருக்கும் பாசத்தின் அளவை; அனுஷ்காவின் காதலை ஆர்யா ஏன் ஏற்க தயங்கினார், என்பதை சொல்லும்போதே காட்டிவிடுகிறார்கள். "என்னைப்பார்க்க எப்போவாச்சும் தான் யாரும் வருவாங்கம்மா" என்ற சொல்லின் மூலம், ஆர்யாவின் தந்தைக்கு ஆர்யாதான் உலகம் என்பதை காட்டிவிடுகிறார்கள்.
பொதுமனம் என்பது என்ன என்பதை இந்த தொடுப்பை சொடுகி விரிவாக பார்த்துவிடுங்கள்...
இறக்கும் போது ஆர்யாவை நினைத்த படியே இறந்த அவர்...  இறந்த பின் ஆர்யாவின் முன் தோன்றுகிறார். (ஆர்யாவின் எண்ண அலைகளும் அவரது எண்ண அலைகளும் சந்தித்திக்கொள்கின்றது.. ஆர்யாவின் எண்ணம் உருவம் கொடுக்கிறது. ஆர்யாவின் சித்தப்பா சொல்லும் "உன்னைத்தான் பார்க்கனும்னு கடைசியா சொல்லிட்டு இருந்தார்" எனும் வசனங்கள். அந்த தந்தையின் மனதில் "உடல் இயலாமையால் தான் என் மகனை பார்க்க முடியவில்லை" என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். அதன் விளைவு தான் திரையில் நகரும் அக் காட்சிகள்...

இடைவேளை வரை 28.11.2013 இரவு பார்த்தேன்...
இடவேளை வரைக்குமே இவ்வளவு சொல்லிவிட்டார்களே... இனி மற்ற கிரகத்தின் கதை நகரப்போகிறது போல... ஆனால், எப்படி ஒரே ஆர்யா ஆரம்பத்தில் இரண்டையும் சொல்வதாக காட்டினார்கள்...
அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ... என எண்ண அலைகளை பல திசைகளில் சிதறவிட்ட படியே தூங்கி... அடுத்த நாள் வேலைக்குப்போய்... இன்று இரவு முதல் வேலையாக இடைவேளைக்குப் பின்னர் பார்த்தேன்...

மற்றைய கிரகத்தில் அனுஷ்கா கத்தியால் குத்திக்கொள்வது போல் இடைவேளைக்கு முன்னரே காட்டினார்கள்...
இடைவேளையின் பின்னர், ஆர்யா பைத்தியம் போல் நடந்துகொள்ளும் காட்சிகள் சில நிமிடங்கள் நடந்ததும்... சாமிமலை என்ற அந்த மலைக்கு செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது...

அதேவேளை, பூமியில்...
"உண்மையான காதல் இருந்தால், அவளை நீ மீண்டும் பார்பாப்பா" என்று தந்தை சொன்னதை வைத்து ஆர்யாவும் அனுஷ்காவின் நினைவாக வாழ்கிறார்.

நான் கதையைசொல்கிறேன் என நினைக்கிறேன்... அதனால இதில ஒரு நீண்ட "டீட்"

மற்றைய கிரகத்தில் கடவுளாக கருதப்படும் பெண்ணின் துணையுடன் ஆர்யா அந்த கிரகத்தில் அனுமதியாகிறார்...
அனுஷ்காவிற்கும் அந்த கிரக ஆர்யாவுக்கும் இடையில் காதல் மலர்வதற்காக அனுஷ்காவிற்கு காதலை கற்பிக்கிறார்.

காட்சிகள் நகர்கின்றன... சில தவிர்க்க முடியாத தமிழ் சினிமா காட்சிகளுடன்...

எமது பூமி ஆர்யா அடிபட்டு நீரில் விழுந்துவிடுகிறார்....
(அப்படி விழுவார் என்பதை, கார் (மகிழுந்து) குனிறில் இருந்து விழும் காட்சியும்... ஆரம்ப காட்சியும் ஊகிக்க வைத்துவிட்டது..."

விழுந்தவர்... பூமியில் குன்றில் இருந்து விழுந்து இறந்தவரின் உடலாக இருக்கும்... இரண்டு கிரகத்திலும் ஒரு பாத்திரத்தின் முடிவு ஒரே இடத்தில் முடியும் என ஆவழுடன் எதிர்பார்த்தேன்...
ஆனால், அவர் பயணம் அனுஷ்காவைத்தேடி கிரகம் கிரகமாக தொடரவேண்டும் என்பதே இயக்குனரின் விருப்பமாக இருந்துவிட்டது...

இனி... என் போக்கு... என்கேள்விகள்... என் குழப்பங்கள்...
நாம் இன்னோர் இடத்தில் பிறந்து நாமாகவே வாழ்வது சாத்தியம்.
புமியின் இருப்பிடத்தை 100% ஒத்த ஒரு இருப்பிடம் இருப்பது உறுதி. அதில் இருக்கும் நான் கூட "இரண்டாம் உலகம்" பார்த்துவிட்டு வலைப்பூவில் உலறிட்டு இருப்பேன். (ஐன்ஸ்டைனின் ஒளி வழைந்து செல்லும் எனும் கருத்தின்படி இன்னோர் "வளாகம்" இன்னோர் கிரகத்தில் இருக்கும்.)
ஆனால், இன்னோர் கிரகத்தில்... இதே நான் சில நூற்றாண்டு முன்னர் வாழ்வேனா என்பது சற்றுக்கேள்விக்குள்ளாக வேண்டியது... எனினும், அப்படி நான் வாழ்ந்தால் படத்தில் காட்டப்படுவது போன்றே வேறுபட்ட கதாப்பாத்திரமாகவே வாழ்வேன். அந்தவிடையைத்தில் திரைக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

என்றாலும்... இங்கு இருக்கும் நாம் மனிதர்களாக இரண்டு கால் இரண்டு கை என வாழ்வதற்கும், நாய்கள் நான்கு கால் ஒரு வால் என வாழ்வதற்கும்; பரிமாணத்தில் DNA இல் இயற்கையாக ஏற்பட்ட தவறுகள் தான் காரணம்.
ஆனால், திரைப்படத்தில் வேற்றுக்கிரக மனிதர்களும் மனிதர்கள் போலவே இருக்கிறார்கள். ஆனால், சிங்கம் மனித முகத்துடனும் கொடுக்கன் வாலுடனும் வித்தியாசமாக உள்ளது.
"ஒரே இயற்கை இருப்பிடத்தில் இருக்கும் போது தான் ஒரே தவறுகள்... ஒரே மாற்றங்கள் நிகழும்"
உதாரணமாக, சூரியனில் இருந்து 3 ஆவதாகவும் அருகில் நிலவை உப கிரகமாகவும் சுத்திவர அந்த அந்த நட்சத்திரங்களை வைத்திருப்பதும் தான், நாமும் எம்மை சூழந்த உயிரினங்களும் இந்த இந்த உருவத்தில் இருக்க காரணம்.
ஆனால், இன்னோர் கிரகத்தில் மனிதன் மட்டும் மனித உருவிலும் (அதனால் தான் மனிதன்) சிங்கம் என அழைக்கப்படும் உரினம், பறவைகள் வேறு உருவிலும் இருக்குமா? சாத்தியமா? என்பது குழ்பமாக உள்ளது. ஒரே (அமீபா) வில் இருந்து பிரிந்த உயிரினங்கள் சற்று வித்தியாசமான கிரக இருப்பிட அமைப்பு என்றால் முற்றாக உருமாற்றம் உடைய உருவங்களை கொண்டிருப்போமா?
(மனித உருவில் "கிரபிக்ஸ்" மாற்றம் செய்து திரைப்படத்தை எடுக்க... எமது தயாரிப்பாளர் நிதித்தொகை போதாதது ஒரு காரணமோ? இப்போவே ஏன் காதல்படமும் கோமாலிப்படமும் எடுக்காமல் விஞ்ஞானப்படம் எடுத்தே? காசை வீணடித்தே என்று.. இயக்குனரை குட்டத்தொடங்கிவிட்டார்கள்...)

மேலும்... சிங்கம், புலி, ஆடு, எலி, பல்லி... என எதை எடுத்தாலும் அவை எவ்வாறு உருவாகி இருக்கும் என ஊகிக்க முடிகிறது.
ஆனால், கொடுக்கன் வால், சிங்க உடல்(?), மனித முகம், வெளவால்( / பறக்கு டைனோசர் செட்டை) என அனைத்தும் கலந்த கலப்பு சாத்தியமா என தோன்றுகிறது...
(ஒரு வேளை ஆங்கிலப்படங்களின் பாதிப்போ... வெள்ளையா இருக்கிறவன் செய்தா சரியாத்தான்யா செய்வான்... நாமலும் செய்யலாம்...)

சரி... இவளவு உலறியாச்சு... விமர்சனம் என்று ஏதாவது சொல்லனும்னா...

நான் மேலே சொன்ன குறைகள் அல்லது என் கேள்விகள் எல்லாம் "ஒரு மிகச்சிறந்த தமிழ் திரைப்படத்திற்கு" எதிரான கேள்விகளே... மொக்கை படங்களுக்கெதிரா ஒன்றுமே கேட்க தோனுதில்லை... பார்த்தோம் சிரித்தோம் வந்தோம் தான்...
சிந்திக்க வைத்த இப்படத்தைதான் "ஏன் இன்னும் சிந்திக்க கூடாது?" எப்போவாச்சும் வரும் இவ்வாறான படைப்புக்கள் ஏன் இன்னும் நேர்த்தியாக இருக்க கூடாது...என்ற அங்கலாய்ப்பில் எழுதியவை...

தமிழில் 12B திரைப்படத்திற்கு பின்னர் ஒரு கோட்பாட்டை சொல்லும் படமாக நான் இதை கருதுகிறேன். ("தசவதாரம்" கோட்பாட்டை அடிப்படையாக வைத்து கமலின் ஆசையுயும் ரவிக்குமாரின் "மசாலா" சரக்கையும் வைத்து "ஐ நாங்களும் விஞ்ஞானப்படம் எடும்போம்ல" என்று எடுத்தபடமாகத்தான் தோன்றுகிறது. எனிதிரன் வேறுவகையான புணைவு... "வில்லா" இன்னோர்வகையானது...)

இயக்குணர் செல்வராகவன் இப்போது எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார். தன் போக்கில் படம் எடுக்கிறார். ( இரண்டாம் பாதி தயாரிப்பாளர் போக்கில் போய்விட்டதாக தோன்றுகிறது...)
மசாலாப்படம் எடுக்கலை என்பதற்காக இவரைவைத்து தயாரிக்க வராமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. காரணம் படத்தை மொக்கை என்று சொல்லிட்டாங்க பல பேர்..."அன்பேசிவம்" என்ற ஒரு படத்தை அப்போது படு தோல்வி அடைய செய்துவிட்டு இப்போது தூக்கி பேசுவது போல்... இந்தப்படத்தையும் இன்னோர் நாள் பேசத்தான் போகிறார்கள். அப்போது.. செல்வராகவன் "காமெடிதான் தெய்வம்" என மாறாமல் போனால் சரி... ( சுந்தர்.சி இன் அன்பே சிவம் ஒரு ஆங்கில திரைக்கதை தான்... என்றாலும்... அதற்காகவா நாம் அதை தோக்கடித்தோம்...)

திரைப்படத்திற்கான இசை....
ஹரிஸ்ஜெயராஜா அனிருத்தா பின்னனி இசை என தெரியவில்லை...
3, மயக்கம் என்ன படங்களில் கேட்ட அதே இசை போல் தோன்றுகிறது... அவ்வப்போது புல்லரிக்கவும் வைக்கிறது. குறிப்பாக இடைவேளை விடும் போது வரும் சிறப்பு இசை..

நடிப்பு...
ஆர்யா, அனுஷ்கா இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள்... நடிப்பு இயல்பாக தெரிகிறது...
நடிகைகளை இடுப்பை காட்டவும், ஆட்டவும் மட்டும் பயன்படுத்திவரும் நேரத்தில்... இடுப்பை காட்டவும், கதா நாயகனுக்கு நிகரான கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அனுஷ்காவும் இரண்டையும் நன்றாக செய்துள்ளார்.
ஆர்யா, மற்றையகிரகத்தில் மேல்சட்டை இல்லாமல் வருகிறார். கதையுடன் ஒத்துப்போகிறது. அதற்கேற்ப உடலை சிறப்பாக வைத்துள்ளார். (பல நாயகர்கள் கதைக்காக அல்லாமல் தமது "டொப் லெஸ்" உடலை காட்டுவதற்காகவே சட்டையை கழற்றிவிட்டு வாயசைத்து ஆடுகிறார்கள் இப்போதெல்லாம்.)

காட்சியமைப்புக்கள்...
காட்சி தொகுப்புக்கள் சிறப்பாக இருக்கின்றன.
கிரபிக்ஷ்காட்சிகள் அருமை என சொல்ல முடியாது. சிங்கத்துடனான சண்டையில் எல்லாம்... புற்களின் அசைவுக்கும் சிங்கத்தின் அசைவுக்கும் ஒத்துப்போகவில்லை.
மற்றைய கிரகத்தின் பின் புறத்தில் தெரியும் கிரகம்... அடிக்கடி அமைப்பு மாறுகிறது ( இடம் அல்ல).
( இந்த தயாரிப்புதொகைக்கு இவ்வளவு தானா... ஓ.கே.)

மொத்தத்தில் நான் சொல்வது...

அனைத்து தமிழர்களும் பார்த்து பாராட்டவேண்டிய திரைப்படம்.
ஆங்கிலப்படத்திற்கு நிகராக படம் எடுக்க வேண்டும் என்றதும்.... வானத்தில் பறந்து சண்டை போடுவதையும், தேவை இல்லாமல் வெக்கை நாடான இந்தியாவில் கோட் அணிந்து நடித்தால் போதும் என நினைத்து எடுக்கப்படும் படங்களை எல்லாம் பார்த்து கைதட்டி ரசிக்கும் நாம்... அறிவியல் ரீதியாகவும் படம் எடுக்கலாம் என காட்டும் இவ்வாறான படங்களை பார்க்கனும்... கைதட்ட தோனாது... சிந்திக்க தோனும்... அது தான் ஒரு சினிமா மக்களில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு. இப்படம் ஏற்படுத்தும் பார்த்தவர்கள் மத்தியில்...

"மங்காத்தா" திரைப்படத்திற்கு பின்னர்... எந்த விமர்சனமும் எழுதியதில்லை... தோனியதும் இல்லை...
நான் இந்த வலைத்தளத்தில் எழுதிய மிகப்பெரிய பதிவு இது தான்.

இப்போது படம் பார்த்தவர்களில் இரு சாரார் இங்கு வருவார்கள்...

ஒன்று படம் மொக்கை என்போர்... இன்னொன்று "சுப்பர்... இது தான் அறிவியல் படம்.... ஒரு குறையும் இல்லை" என்பவர்கள்...

இரண்டுக்கும் நடுவில் இருக்கும் என்னை காய்ச்சி எடுப்பார்கள்... :P

நன்றி... விமர்சனம் எழுதனும்னு தோனினால் சந்திப்போம்.... :)

2 comments:

 1. Respected Prabhu sir,
  Really Very intresting pls write abt illuminity
  Regds,
  http://tradersguides.blogspot.in/...

  ReplyDelete
 2. இயல்பானதொரு விமர்சன நடை.. எழுதியவிதம் மேலும் என்னை கவர்ந்தது..!

  பகிர்வினிற்கு மிக்க நன்றி.

  இன்று என்னுடைய வலைப்பூவில் புதியதொரு பதிவு:

  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!


  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails