Total Pageviews

Tuesday, 24 August 2010

அம்மா பகவான் சொன்னா சரியாத்தானிருக்கும்... (நேரடி அனுபவம்)

------------------------------------------------------------------------------------------
ஹக்கர்ஸ் பிரச்சனைகளால் கொஞ்ச நாள் பதிவுகள் இட முடியவில்லை...
தொடர்ந்து அடிக்கடி மெயில் ஐடி ஹக் ஆச்சு... இப்போ சரியா வேலை செய்யுது என்று நம்பிறன்...
------------------------------------------------------------------------------------------
இன்றைக்கு... பிரபலமாக தங்களை தாங்களே கல்கி அவதாரம் என்று சொல்லிகிட்டு இயங்கிக்கொண்டிருக்கும் அம்மா பகவானின் பூசையில் நான் பெற்ற அனுபவங்களையும்... அதன் உண்மைத்தன்மையையும் கொஞ்சம் எழுதபோறேன்...

அட்வான்ஸ் லெவல்... எக்ஸாம் முடிச்சிட்டு சும்மா இருந்த நேரத்தில நடந்ததுதான் இது...

நானும் எனது 3 நண்பர்களும் அன்று நடந்துகொண்டிருந்த மச்சைக்கூட பார்க்காமல் அம்மா பகவானின் பக்தர்களால் (சங்கத்தினரால்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு போனோம்...

ஹோலின் வாசலில்...

ஒரு சிறு கடை போல்... அம்மா பகவானின் முத்திரை பதிக்கப்பட்ட மாலை, படங்கள் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்...  மறு புறம்... தரிசிக்க வருபவர்கள் பால் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி... பால் போத்தில்கள், பக்கற்றுக்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன...

ஹொலுக்குள்ளே....

அதிகமான பாடசாலை மாணவர்கள் ( முக்கியமாக மாணவிகள் ) ஓடியாடி வேலை செய்துகிட்டிருந்தார்கள்...
காரணம், அம்மா பகவானின் பிர்ச்சாரம் முக்கியமா பாடசாலைகளை குறிவைத்தே இலங்கையில் நடக்கிறது. பாடசாலை ஆசிரியர்களும்... அவரின் புகழ்பாட்டிக்கொண்டிருப்பார்கள்...

தாங்கள் தான் நாசமா போறம் என்றால்... சும்மா இருக்கிற பிள்ளைகளுக்கும் இந்த நச்சு விதையை விதைத்து... அவர்களையும் நாசமாக்கிறாங்க... ( நாசமா போறது என்று சொன்னது.... இந்த மாதிரி போலிகளை கடவுள், கடவுளின் அவதாரங்கள் என்று சொல்வதை மட்டும்தான் குறிப்பிட்டுள்ளேன்... )

( உதாரணமாக, எமது பாடசாலையில்... முக்கியமான பொறுப்பிலுள்ளவருக்கு... ஒரு சம்பவம் நிகழ்ந்தது... அது அம்மா பகவானை கும்பிட்டதால் தான் நிகழ்ந்ததாக நினைத்துக்கொண்டு... காலைக்கூட்டங்களின் போதும் அம்மா பகவானின் புகழ்பாடி மாணவர்களையும் அவரை கும்பிடும்படி கூறிவருகின்றார்... சில நேரங்களில் சற்சங்கங்களின் போதான...  கதிரைகள் அடுக்கும் வேலை முதல் கொண்டு... பனரடிக்கும் வேலை வரை மாணவர்களை கட்டாயப்படுத்தவும் செய்கின்றாராம். )
------------------------------------------------------------------------------------------
சரி... நாங்கள் ஹோலுக்குள் போய் அமர்ந்தோம்...  இந்து முறைப்படி தேவாரத்தோடு ஆரம்பமானது கூத்து... ஸொறி... பூசை...

தேவாரம் எல்லாம் முடிய... அம்மா பகவானிற்கு என வடிவமைக்கப்பட்ட புகழ்பாடும் மந்திரம்/ பாடல் பாடப்பட்டது...
எமக்கு முன்னுக்கு... அம்மா பகவானின் உருவத்தை வைத்து... கைகளால் ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்... பக்கத்திலிருப்பவர் பூ போட்டுக்கொண்டிருந்தார்...
இவர்கள்தான் எங்களது ஏரியாவுக்கு பொறுப்பானவர்களாம்... அம்மா பகவானின் நேரடி அருள் பெற்ற ஆத்மாக்களாமாம்....

அடுத்து... அம்மா பகவானை கும்பிட்டு...  அருள் பெற்றவர்கள் எழும்புங்கோ... என்று ஒரு குரல்...
கொஞ்ச பேர் எழும்பினார்கள்...

சம்பவம் 01
காசு கஸ்டத்தில இருந்தப்ப... அம்மா பகவானை கும்பிட்டாவாம் ஒரால்... அடுத்த நாள் காலைல கடைக்கு போனப்ப... றோட்டில... இவா நினைத்ததுக்கும் மேலதிகமாக காசு கிடந்திச்சாம்...
உடனே...  ஹோலில ஒரு அமைதி... பின்ன காசெல்லாம் கொடுக்கிறா என்றா சும்மாவா... ( காசை தொலைத்தவன பற்றி ஏன் நாங்க ஜோசிக்கனு... அவன் அம்மா பகவானிட பக்தன் இல்ல போல... அதுதான் தொலைச்சிருப்பான்... )

சம்பவம் 02
கடுமையான வாத நோயால் பீடிக்கப்பட்டிந்தவா ஒரால்... அம்மா பகவானிட அருளால இப்போ பூரண குணமடைந்திட்டாவாம்... ( இவா பீடிக்கப்பட்டிருந்தது உண்மை... ஆனால்... பிரபல வைத்திய சாலைகளில் கடுமையாக சிக்கிச்சை எடுத்துக்கொண்டவா... ஆனால், காரணம் அம்மா பகவான் மட்டும்தானாம்... டொக்டர்ஸ் இல்லையாம்...)

சம்பவம் 03
மாணவி ஒரால்... ஓர்டினெறி எக்ஸாமில் 5 ஏ கிடைக்கனும் என்று கும்பிட்டாவாம்... கிடைச்சிட்டுதாம்...

இப்படி ஆளாலுக்கு... அம்மா பகவானிட மகிமையை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள்...
------------------------------------------------------------------------------------------
சரி... இவர்கள்... எப்படி கும்பிட்டார்கள்... என்பதையும் அந்த புண்ணிய ஆத்மாக்களே சொல்லினார்கள்...

இவர்களின் இந்த மந்திரத்தை... 108 நாட்களுக்கு... நாளுக்கு 3 முறைப்படி... மச்சம் சாப்பிடாமல் சொல்லி வரனுமாம்... நேரம்... அதிகாலை 5 மணி, பின்னேரம் 6 மணி, இரவு 12 மணி... சொல்லும் போது... நாம் வேண்டிக்கொள்ளப்போவதை... மனதில் நினைத்துக்கொள்ள வேண்டுமாம்... ( 3 நினைக்கலாம் 2 ஆவது நிறைவேறும்... எக்ஸ்ரா அட்வைஸ் இது....)

( இதற்கு இடையில ஒரு சாத்திரி ஓவரா பில்டப் கொடுத்தார்...  நாங்கள் நடுவில இருந்துகொண்டு... எங்களை சுற்றி... 8 திசைகளிலும்... எள் விளக்கேற்றி... கும்பிடனுமாம்... அதற்கு தேவையான தூய்மையான எள்ளு தன்னட்ட இருக்காமாம்...  இந்த கொசுவைப்பற்றி தனிப்பதிவே போடலாம்... செம காமெடி பீஸ் இது... )

இவர்கள் செய்யசொல்லும் இந்த முறையைத்தானே ஏற்கனவே விஞ்ஞான உலகமும் சொல்லிக்கொண்டிருக்கிறது...
அதாவது...

நாம் எண்ணத்தில் நினைப்பதுதான் நடைபெறும்... நாம்... ஆழ்மனதில் ஆழமாக பதிவும் அழவுக்கு ஒரு சம்பவத்தி நினைத்தோமானால்... அது எப்படியாவது நிறைவேறுமாம்... ( ஐன்ஸ்ரைன் கூட சொல்லி இருககார்...)
108 நாளுக்கும் இவர்கள் சொல்வதுப்படி 3 நேரமும் அதை நாம் நினைத்து வந்தால்... எமது ஆழ்மனதில் நேர்மலாகவே சம்பவம் பதிந்துவிடும்... ( அதுவும் 5,6,12 போன்ற நேரங்கள் பொதுவாக சத்தமற்ற மைதியான நேரங்கள்... இலகுவாக பதியும்... (காலைல பாடங்களை படிக்கனும் என்று சொல்லுற அதே டெக்னிக்தான்... ) பிறகென்னத்துக்கு இவர்களின் புகழ்பாடும் மந்திரமும்... இந்த ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களின் படங்களும்... ???
------------------------------------------------------------------------------------------
பிறகு... கொண்டுவந்த பாலை... அங்கு ஒரு செருப்பு வைத்திருந்தார்கள்... அதில... ஊத்தி தொட்டு கும்பிடனுமாம்...
இப்படி கேவலமா பிளைப்பு நடத்திறவங்களிட செருப்புக்கு பால் ஊத்தினதுதான் நாங்கள் மினெக்கெட்டு போனதிட மிச்சம்... இந்த பாலை... கேவில் வாசல்ல பிச்சைகேக்கிற சின்ன பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கலாம்...

அதை விட கேவலமா...
பூசை முடியும் தறுவாயில் கரண்ட் கட்டாகிச்சு... உடனே அந்த புண்ணிய ஆதமா சொல்லிச்சு... அனைவரும் கண்ணை மூடி கும்பிட்டால்... கரண்ட் திரும்பி வந்திடுமாமாம்...
இதுகளும் ( நாங்களும்) கும்பிட்டா... என்ன ஆச்சரியம் சொன்ன மாதிரி கரண் வந்திட்டுது...
பிறகு வெளில வந்து... ஃப்ரென்ட்ஸ் மச்ஃபுள்ளா பார்த்தம்டா என்று சொன்னப்பதான் தெரிஞ்சுது... கறன்ட் நின்றது... அந்த ஹோலில மட்டும்தான் என்று....
இதே போன்றுதான்... கொழும்பு, திருகோனமலை பிரதேசங்களிலும் நடந்திச்சு என்று பிறகுதான் தெரிந்தது...
புளொக்கர்ஸ் கூட இதை எழுதி இருக்காங்க...

பதிவு பெருசாகுது... நிறுத்த முதல் இன்னொன்று...

இப்படி பூசையை முன்னின்று நடத்தும் இந்த புண்ணிய ஜீவன்களில ஒன்று... கொழும்பில்... நகை அடகுவைப்பதற்கு பொறுப்பாக நின்று... முழுவதையும் சுறுட்டிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடிட்டுது...

அம்மா பகவானிட மகன் செய்யிற கூத்தை பற்றி நான் சொல்லிதெரியதேவையில்லை...
------------------------------------------------------------------------------------------
இங்கு நான் எழுதி இருக்கிற எல்லாமே நேரடியாக பார்த்தது...
தேவை என்றால்... ஆக்கள்ட பெயர்... அட்றஸ் எல்லாம் இருக்கு...
------------------------------------------------------------------------------------------
இதே மாதிரித்தான்... தியான வகுப்பு என்கிற பேர்ல... பிரம குமாரிகள் என்ற அமைப்பும் இயங்குது... அதுக்கும் போனமில்ல நாங்க... அங்க என்ன நடந்துது என்று பிறகு சொல்லுறேன்...

அடுத்தது... புளொக்கர்ஸை கேவலமா சொன்ன... சாரு நிவெதிகாட மறுபக்கம்... வெளி நாடுகளில் அவர் என்ன செய்தார் என்பது தொடர்பான தகவல்களும் இருக்கிறது... வரும் பதிவுகளில் எழுதுகிறேன்...

கூடவே... ஏலியஸ்... , லெமூரியா... பதிவுகளுடன் அடிக்கடி வெருவேன் இனி...
------------------------------------------------------------------------------------------

Monday, 16 August 2010

3 இலவச மென்பொருட்கள்... (புளொக்கர்ஸ்கு 1 வது...)

-------------------------------------------------------------------------------------------
ஒரு இடைவெளியின் பின்னர் மீண்டும் பதிவிடுகிறேன்...
இன்று... 3 இலவச மென்பொருட்களைப்பற்றி பார்ப்போம்...

-------------------------------------------------------------------------------------------
Wondershare.Flash.Gallery.Factory.Deluxe.5.1.0.5


நீண்ட நாட்களாக நான் தொழைத்துவிட்டு தேடிய... மென்பொருள் தற்போது கிடைத்திருக்கிறது.
எம்மைப்போன்ற புளொக்கர்ஸ்கு இலகுவாக அனிமேஷன்களை செய்துகொள்ளலாம்... ஃபிலாஸ் போன்று ஸ்கிறிப்ட் அடிக்கவேண்டிய அவசியமில்லாமல்... அதில் செய்யத்தக்க அதே அனிமேஷன்களை செய்ய முடியும்.
வெப்சைட், மைஃஸ்பேஸ்.... இற்கும் சிறந்தது...

அளவு 38 தான்....

டவுண்லோட் பண்ண...
இதை....
அல்லது இதை....
அல்லது இதை....
அல்லது இதை....
கிளிக் பண்ணவும்....

-------------------------------------------------------------------------------------------
Clone2Go.Video.Converter.Pro.1.9.2-GAOTD

இது வீடியோ கென்வேட்டர்.... நான் பாவித்து பார்க்கல... விரும்பினா யூஸ் பண்ணுங்க... நல்லது என்று ஃப்ரென்ட்ஸ் சொன்னது....

சப்போட் பண்ணக்கூடிய ஃபோர்மேட்கள் :


அளவு 16 தான்....

டவுண்லோட் பண்ண...
அல்லது இதை....
கிளிக் பண்ணவும்....
-------------------------------------------------------------------------------------------

அழகான தீம்... விண்டோஸ் 7 இக்கு மட்டும்...

அளவு 6 தான்....

டவுண்லோட் பண்ண...
கிளிக் பண்ணவும்....-------------------------------------------------------------------------------------------

Thursday, 12 August 2010

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்... :) (ஒரு பக்க வரலாறு...)

------------------------------------------------------------------------------------------
1893-ம் வருடம். தென்னாப்பிரிக்காவின் ஆளரவம‌ற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24 வயது இளைஞன். ரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தனக்கே இந்த கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இந்தியர்களுக்கு என்னெவல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விகள்தான் அவனிடம் அப்போது இருந்தது. இரெவல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண் விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும் அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து, ‘மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்’ என்று போராட்டத்தை தொடங்கினான். அதில் வெற்றிபெறவும் தொடங்கினான். ஆம்... பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன்.

21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தின்
வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது. 1869-ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பன்னிரெண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்தியேபாதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்கு
சென்றவர், கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற வழக்குகளைவிட, கோர்ட்டுக்கு
வேளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக ‘அகிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘‘ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் உறுதியுடன் நின்று சாத்வீக‌மாக போராடுவதுதான் உண்மையான வீர‌ம், எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல’’ என்ற காந்திஜியின் அகிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான், சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழுந்தபோது, ‘‘மன உறுதியுடன் போராடினால், வெற்றி நிச்சயம்’’ என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930-ம் வருடம். 61 வயதான காந்தி, உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து ‘தண்டி யாத்திரை’யை தொடங்கினார். 241 மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி, ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

காந்தியின் மன உறுதியையும் அகிம்சையின் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.
1947-ம் வருடம். காந்தியின் இந்த‌விடாத போராட்டத்தால், இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக் கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

‘120 வயதுவரை வாழ்ந்தால் மட்டுமே நான் நினைத்திருக்கும் எல்லா
காரியங்கைளயும் செய்து முடிக்க முடியும்’ என்ற காந்திஜியை 78வது வயதில்
மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்துவைத்தான் நாதுராம் வினாயக
கோட்ஸே. காந்தி மறைந்தாலும் மன உறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ,
அங்ெகல்லாம் ெவற்றி உருவத்தில் அவைர தரிசிக்க முடியும்.

------------------------------------------------------------------------------------------

Tuesday, 10 August 2010

"கை"... என்றால் இது தான் "கை"... (படங்கள் :) )


------------------------------------------------------------------------------

இதை பாராட்டாம வேற எதை பாராட்டுறது.... சுப்பர்...
------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------

Thursday, 5 August 2010

ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (தியரி ஒஃப் ரிலேட்டிவிடி??? )... 08)

தவறை திருத்திட்டேன்... :)
---------------------------------------------------------------------------------------
நீண்ட காலமாக எனக்கு குழப்பமாக இருந்துவந்த... ஒளியின் வேகத்திலான காலப்பயணம் (தியரி ஒஃப் ரிலேட்டிவிடி சார்பானது.) தொடர்பான சில தகவல்களை வாசித்தேன்... கொஞ்சம் தெளிவாகி இருக்கு...
ஏற்கனவே, நான் இந்த வேகம் சம்பந்தமாக எழுதிய போது... எஸ்.எம்.எஸ் என்பவர்... எனதும், சந்துரு என்பவரது கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்து சொல்லி இருந்தார். அவர் சொன்னது சரியானதாக பட்டதால்... பிறகு அவருக்கு பதில் தருவதாக கூறியிருந்தேன்... இன்று அந்த வேகம் தொடர்பாக நான் விளங்கியதை இயன்ற வரை விளக்கமாக எழுத ட்ரை பண்ணுறேன்...
---------------------------------------------------------------------------------------
நான் முதல் கூறியதன் படி...
ஒளியின் வேகத்தை தாண்டும் போது இறந்த காலத்தை அடையலாம் என்று கூறியிருந்தேன். அது உண்மை. ஆனால், ஒளியின் வேகத்தை தாண்டாமல் அண்மிப்பது தொடர்பாக ஒன்றும் தெளிவாக எழுதி இருக்க வில்லை... ( காரணம், அப்போது எனக்கு அது தெரிந்திருக்க வில்லை...)
எஸ்.எம்.எஸ் என்பவரின் கருத்துப்படி... நாம் ஒளியின் வேகத்தில் பயணித்தால் எதிர்காலத்துக்குத்தான் செல்ல முடியும் என கூறியிருந்தார்... அதுவும் சரிதான்...
---------------------------------------------------------------------------------------
தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி...

நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது... அதாவது... 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்...

உதாரணத்துக்கு...
கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்...
எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்... அதாவது... வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ( குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் கணித்துப்போடல )

அப்படி என்றால்... 2010 இல் நாம் பயணிக்கத்தொடங்கினால்... வெளியாட்களின்( பூமியின் கணக்குப்படி/கலண்டர் படி) ஆண்டுபடி 10 ஆண்டுகள் பயணித்தால் அவர்கள் 2020 ம் ஆண்டில் இருப்பார்கள். அப்போது எமக்கு 2012 ஆம் ஆண்டுதான். இப்போது நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கினால், நாம் 2020 இல் இறங்குவோம்... ( ஆனால், எமக்கு இரண்டு வருடங்கள்தான் ஓடி இருக்கும்... 21 வயதில் வெளிக்கிட்டிருந்தால் 23 வயது... வெளியாளுக்கு 31 வயது).
அதாவது... அது நமது எதிர்காலத்தில் நாம் இறங்கி இருப்போம்...
அப்போது நாம் காணும் வெளித்தோற்றம் அனைத்துமே... நமது எதிர்காலத்துக்குரியது...

( இங்கு நாம் அதிக வேகத்தில் பயணிக்கும் போது... எமது உருவம் வெளியாட்களுக்குத்தெரியாமல் போகும். காரணம்... அவர்களின் நிகழ்காலத்தில் நாங்கள் இல்லாமல் இருப்போம். அதாவது, காலம் ஓடிக்கொண்டிருக்கும்... நாங்கள் காலத்துடன் ஓடாது சற்று மெதுவாக ஓடிட்டிருப்போம்....
ஏற்கனவே, நான் சொன்னதில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது... இலத்திரன்,புரோத்திரன் போன்ற இயல்பை பெறுவதால் துணிக்கைத்தன்மையாகி மறைவோம் என்று சொல்லி இருந்தேன்... அதுவும் சரிதானே???? :) )
---------------------------------------------------------------------------------------
 சரி...
அப்ப இறந்த காலத்துக்கு போவது எப்படி...

அதுவும் இதே போன்ற கால இயந்திரத்தில்தான்... ஆனால், அந்த இயந்திரத்தின் வேகம் ஒளியின் வேகத்தை கட்டாயம் மிஞ்சியிருக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் பட்சத்தில் நாங்கள் இறந்தகாலத்துக்கு போகலாம்...
உதாரணமாக...
நாம் 400 000 000 மீற்றர்/செக்கனில் 2010 பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்... ஒரு 10 ஆண்டுகளில்...
பயணிக்கும் நாங்கள் 2008,2009 அப்பிடி நாம் ஆரம்பித்த காலத்தை விட குறைவான காலத்துக்கு சென்றிருப்போம்... வெளியாட்கள் 2020 க்கு போயிருப்பார்கள்.

நாம் வேகத்தை எவ்வ‌ளவு கூட்டினாலும்... எம்மால் இறந்த காலத்துக்கு உடனடியாக பாய்ந்து செல்ல முடியாது... ஒவ்வொரு ஆண்டுகளாக/ நாட்களாக/செக்கன்களாகத்தான் பின்னோக்கி போக முடியும்...
ஒவ்வொரு சம்பவமும் இயந்திரத்தின் யன்னலூடாக ஒரு திரையில் ஓடும் காட்சிபோல் ஓடுமாம்...
இந்த பின்னோக்கி போகும் வேகம்... இயந்திரத்தின் வேகத்தில் சார்ந்திருக்கும்...

( ஒவ்வொரு சம்பவமும் காட்சி போல் மாறும்... என்பது சரியா இருக்கலாம்... ஆனால், எங்களால் உணர முடியும் என்று நினைக்கவில்லை... காரணம்... வேகமாக காட்சிகள் மாறும்... காட்சிகள் என்பது நிறங்களால் காணக்கூடியது... நிறங்கள் வேகமாம மாறும் போது வெள்ளையாகவே தோன்றும்... ஆகவே, நமக்கு வெள்ளையாகத்தான் வெளியே தெரியும்... :) )

இதெல்லாம் சரி...  நாம் இந்த வேகத்தை பயண்படுத்தி பயணித்தோமென்றால்... இறந்தகாலத்துக்கு சென்று பார்க்க முடியும்... நம்ம தாத்தா... கொள்ளுத்தாத்தா... அப்டினு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்...
ஆனால்...
ஜோசித்து பாருங்கள்... இது சாத்தியமானால்... பல குழப்பங்கள் ஏற்படும்...

இன்று பதிவில் முக்கியமான கொள்கையை பார்தததாலும் (?)... பதிவு நீள்வதாலும்... நிறித்திடுறேன்...
---------------------------------------------------------------------------------------
அப்படி வேகத்தை அடைந்தால்... என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்ப்போம்...
இப்போது பலருக்கு விளங்கி இருக்கும்.., ஏற்கனவே போன பதிவி குறிப்பிட்ட சம்பவத்தில்... விமானத்தை ஏன் பிந்தொடர்ந்தார்கள் என்பதும்... அந்த டுவின்ஸ்டவர்ஸின் பின் புலத்தில் ஏன் அந்த பறக்கும்தட்டு (இது உண்மை என்று உறிதியில்லை) இருந்தது என்பதும் விளங்கி இருக்கும்... விளங்காதவர்கள்... அடுத்த பதிவில் விளங்கிகொள்ளலாம்... :)
---------------------------------------------------------------------------------------

Monday, 2 August 2010

தொப்பி வியாபாரியும் முயல் ஆமையும்... 2010 ( நகைக்க... )

---------------------------------------------------------------------------------------
இன்டைக்கு நான் உங்களுக்கு கதை சொல்லப்போறேன்... ஒழுங்கா ஃபுல்லா கேக்கனும் ஓ.கே வா?

ஓ.கே ... :D
---------------------------------------------------------------------------------------
ஒரு தொப்பி வியாபாரி...
ஊரெல்லாம் தொப்பி வித்திட்டு வந்தார்... நீண்ட நேரமா வெயில் இல்லாத நேரத்தில கூவி...கூவி... தொப்பி வித்ததால கழைப்படைந்துவிட்டார்... இளைப்பாறுவதற்காக ஒரு இடம் தேடினார்... வழமை மாதிரியே வயல் வெளியில தூரத்தில ஒரு பெரீரீரீய மரம்... உடனே இளைப்பாறுவதற்காக அந்த மரத்தை நோக்கி சென்றார்... தூரத்திலிருந்து பார்க்கும் போதே... அந்த மரத்தில கனக்க குரங்கு தாவி... தாவி... விளையாடிட்டு இருக்கிறதை கண்டார்...
ஹீ...ஹீ... இவருக்கு தன்ர தாத்தா சொன்னது நினைவுக்கு வந்துட்டுது... அதை நினைத்து சிரிச்சுக்கொண்டே மரத்தடியை அடைந்தார்.
அங்கு எதுக்கும் அலேர்ட்டா இருக்கனும் என்கிறதுக்காக... தான் கொண்டுவந்த தொப்பி மூட்டைகளை அடுக்கி விட்டு அதுக்கு மேலே ஏறிப்படுத்துக்கொண்டார்.

அதுவரைக்கும் கணக்கெடுகாம இருந்த குரங்குகளுக்கு இப்படி இவர் செய்தது செம கடுப்பு...
உடனே ஒரு குரங்கு எங்கேயோ ஓடிப்போச்சு....

இவர் நல்லா தூங்கிட்டு இருந்தார்... அதுக்குள்ள மனைவிகூட கனவுவேற...
இப்போது... " மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க.... மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க...." என்று ஒரு சத்தம்...
"இங்கதான்டி இருக்கன் தங்கம்... நீ எங்கம்மா இருக்க??? " என்றுகிட்டே எழும்பிவயலை நோக்கி போனார்...

எங்க தங்கத்தை காணமே என்று ஜோசிச்சப்பதான்... தான் தொப்பி மூட்டையை விட்டுட்டு வந்தது நினைவுக்கு வந்தது...
திரும்பி பார்க்க கப்ல எல்லா தொப்பிகளையும் குரங்குகள் ஆட்டையை போட்டுட்டுதுகள்...

இவருக்கு அதிர்ச்சி... ஆனால், இது ஏற்கனவே தாத்தாக்கு நடந்த ஸீன்தானே... சோ... தன்ர தொப்பியை கழட்டி குரங்குகளை நோக்கி எறிந்தார்...
உடனே ஒரு குட்டி குரங்கு இறங்கி வந்து... தொப்பியை எடுத்துக்கொண்டு வியாபாரிட தோள்ள பாஞ்சு ஏறி... காதை பிடித்து... "எங்களுக்கும் தாத்தா இருக்கு... :) " என்று சொல்லிட்டு... "பாவமா இருக்கு... இந்த தொப்பியை வச்சுக்கோ..." என்று சொல்லிட்டு...
இறங்கி டீக்கடையை நோக்கி போச்சு... ஏற்கனவே, அங்க ஆட்டையப்போட்ட டெலிஃபோன்னை கொண்டுபோய் வைக்க...
போகும் போது..." மாமோய்... நீங்க எங்க இருக்கிங்க..." என்ற ரிங்டோன் வேற...

---------------------------------------------------------------------------------------

Anonymous  : டேய் இந்த கதை ஏற்கனவே வந்துட்டுது... :@

வளாகம் : இன்னொன்று இருக்குங்க ஐயா... :P
---------------------------------------------------------------------------------------

நாட்டுலதான் இந்த கூத்து என்றால்....

---------------------------------------------------------------------------------------


காட்டுல...
முயலுக்கும் ஆமைக்கும் கேமாகி... முடிவா... ரேஸ்ல ஜெயிக்கிறவன் தான் வெற்றியாளர் என்கிற முடிவுக்கு வந்துதுகள்...

போட்டி ஆரம்பமாச்சு...
போட்டி மத்தியஸ்தர் நெட்டி முறத்தார்...
முயல் பாஞ்சடித்துக்கொண்டு ஓடிச்சு... ஆமையால முடியல மெல்லமா ஊர்ந்து...ஊர்ந்து... போச்சு... மனதுக்குள்ள தன்ர தாத்தா சொன்ன ஃபிலாஸ்பாக்கை நினைத்துக்கொண்டு....
கன நேரமா ஆமையும் நிமிர்ந்து பார்க்கிது... முயல காணவே இல்லை...
நீண்ட நேரத்துக்கு பின்னுக்கு... முயல் மரத்தடில படுத்துக்கிடக்கிற மாதிரி தெரிந்துது ஆமைக்கு...

உடனே... புத்துயிர் வந்த மாதிரி..." இந்த கேன முயல் கூட்டம் இன்னுமா மாறல... " என்று சொல்லிக்கொண்டு மரத்துக்கு கிட்ட வந்திச்சு...
முயலை நைஸா முந்திக்கொண்டு திரும்பி பார்த்தது... முயல், அடக்க முடியாத சிரிப்போட...
"அட கேனயனே... கழுத வயசாகியும்... இதெல்லாம் ஒரு கதைனு மினக்கட்டு வாசிச்சிட்டு இருக்காங்களே... அதை நினைக்கவே எனக்கு சிப்பு சிப்பா வருது.... எப்பிடிடா தூக்கம் வரும்..." :P என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போய் எல்லையைத்தொட்டு வெற்றி பெற்றது.

ஆமை : பார்த்திங்களா... இந்த முயல்கிட்ட நான் உங்களாலதான் தோத்தேன்... எனக்காக ஒரு வோட்டு போட்டுட்டு போங்க... என்ன... :D

---------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails