Total Pageviews

Tuesday, 24 May 2011

ஆண்களே!!! இந்த பெண்ணால் முடிந்தது உங்களால் முடியுமா? - Future News

இன்னும் சிறிது காலத்தில்... இணையத்தளங்களில் நாம் காணக்கூடிய செய்திகளின் தலைப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...
( படங்களுள், தடித்த தலைப்புக்களுக்கும்..  பதிவுக்கும் சம்பந்தமில்லை. )

-------------------------------------------------------------------------------------------
ஆண்களே... இந்த பெண்ணால் முடிந்தது  உங்களால் முடியுமா? (படங்கள் இணைப்பு)

சமீப காலமாக... பல தமிழ் இணையத்தளங்களை பார்க்கும் போது கடுப்புத்தான் எகிறுகிறது.
சுய சிந்தனை இல்லாமல்.. குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தில் இருந்து அப்படியே செய்திகளை சுட்டுப்போடுவதை வழ‌க்கமாக கொண்டிருக்கிறார்கள். அதிலும்.. யார் முதலில் சுட்டுப்போடுவது என்று போட்டி வேறு...


வாசிப்பவர்களுக்கு... உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டிய இந்த இணையத்தளங்கள்... தமக்கு "ஹிட்ஸ்" அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் கருத்திற்கொண்டு... பழைய விளம்பரங்களைக்கூட நியூஸாக போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கோழி முட்டையில் இருந்து குஞ்சுவரும் அதிசயம்... (வீடியோ இணைப்பு)

இதில்... இன்னும் ஒரு படி மேலாக போய்...
கேவல‌மான தலைப்புக்களை வைத்து ஹிட்ஸ்களை பெறுகிறார்கள்...
அதிலும்... மருத்துவ‌ரீதியான கருத்துக்களை போடும் போது... அதன் உண்மைத்தன்மை பற்றிக்கருதாது...  ஏதோ ஒருவர் ஆதாரமில்லாமல் எழுதியதை கொப்பி பண்ணி போடுகிறார்கள். இதனால் ஏற்படும் சமூகத்தாக்கங்களை கருதுவதில்லை


பெரும் திருட்டு அம்பலம்...( கமராவில் சிக்கினார் )


இவர்களின் ஆக்கங்களை பார்த்தால்... ஏதோ தமிழ் இனத்திற்கே சேவை செய்து மாற்றத்தை கொண்டுவரப்போகிற போல இருக்கும். ஆனால், செய்யும் காரியங்கள் எல்லேமே... கீழ்த்தரமானவைதான்...
மக்களிடையே புதிய சமுதாய மாற்றக்கருத்துக்களை கொண்டு செல்வதில்லை... அறிவியல் என்ற பேச்சுக்கே பல தளங்களில் இடமில்லை.

புலி போன்ற ஆனால் உருவில் சிறிய உயிரினம்... (நகரப்பகுதியில் இனங்காண்பு)

தமிழுக்கு சேவை செய்யப்போவதாக சொல்பவர்கள்...
அனைத்து தரவுகளையும் தமிழில் பெற்றுக்கொள்வதற்கான படிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்... அதை செய்ய மாட்டார்கள். காரணம், அறிவியல்.. சமூகவியல் கருத்துக்களுக்கு ஹிட்ஸ் குறைவாக வருவதே... எனினும் வரும் அந்த கொஞ்சப்பேர்தான் மேம்பட்ட தமிழர்கள் என கருதக்கூடியவர்கள் என்பதை உணருவதில்லை.

முத்தமிடும் போது உதடு திறக்குமா மூடுமா? (ஆய்வுத்தகவல் )

புளொக்ஸிலிருந்து அப்படியே கொப்பி பேஸ்ட் செய்கிறார்கள்...
கஸ்டப்பட்டு தேடி எழுதுபவர்களின் லிங் கூட கொடுப்பதில்லை... அப்படி கொடுத்தால்... நேரடியாக சம்பந்தப்பட்ட தகவல்களை அந்த அந்த புளொக்களிலேயே சென்று பார்த்து விடுவார்கள் என்ற பயம் தான்.


மொத்ததில்... தமிழில் இயங்கும் பல இணையத்தளங்கள்...  உயர்வான ஹிட்ஸ்களைக்காட்டி, விளம்பரங்களை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே இயங்குகின்றன... சேவை, உண்மைத்தன்மை, சமுதாய முன்னேற்றம் என்ற எந்த குறிக்கோள்களுமில்லை.

-------------------------------------------------------------------------------------------

Sunday, 22 May 2011

ரோயல் திருமணத்திற்கு வருகை தந்த ஏலியன்ஸ் யார்?

------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு முன்னரே எழுதி இருக்க வேண்டும்.. லேட்தான்... என்றாலும் ஒரு தெளிவிற்காக எழுதுகிறேன்.
பிரித்தானிய றோயல் திருமணத்தின் போது.... வான் பரப்பில் ஏலியன்ஸ் வருகைதந்து நோட்டமிட்டதாக வீடியோத்தகவல்கள் வந்திருந்தன.
அந்த தகவலின் உண்மைத்தன்மை.. மற்றும் சாத்தியக்கூறுகளைப்பார்ப்போம்...
------------------------------------------------------------------------------------------
குறிப்பிட்ட வீடியோப்பதிவை நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் தற்செயலாக  படம் பிடித்ததாக கூறுகிறார்கள்.

வீடியோ பதிவில்.. 3 வட்ட-தட்டையான வெண்ணிற உருவங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நிற்பது போன்று காணப்படுகிறது. இந்த வீடியோ உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவே... "After effect" போன்ற மென் பொருட்கள் மூலம்.. இலகுவாக இவ்வகை வீடியோக்களை நாமே உருவாக்கிவிட முடியும்.

மேலும்... வானில் கால நிலை அவதானிப்புக்களுக்காக விடப்பட்ட பலூன்கள் அல்லது குறிப்பிட்ட கமெராவின் முன் கண்ணாடியில் இருந்திருக்க கூடிய வெண்ணிற துளிகளின் ( ஐஸ்கிறீம் துளி) அசைவாகவும் இருக்கலம்.

எனினும்... இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. எல்லாமே... கிரபிக்ஷ் என்று ஒதுக்கிவிடவும் முடியாது.
காரணம், இதே போன்ற அவதானிப்புக்கள் லிபிய‌ யுத்தம், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்பவற்றை அண்டிய பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.


உண்மையாக இருப்பின்...

வேற்றுகிரகத்தவர்கள்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்...
அவர்களுக்கு எப்படித்தெரிந்திருக்கும், அந்த நாளில் சுனாமி வரப்போகிறது... திருமணம் குறிப்பிட்ட நாளில் நடக்கின்றது என்பதெல்லாம்...
எம்மை தொடர்ந்து அவதானித்துக்கொண்டி இருந்தால்... பூகோல மாற்றத்தைக்கொண்டு சுனாமியை எதிர்வுகூறலாம்... எனினும்... திருமணம் நடக்கும் நாளில் வந்தது எப்படி? என்ற கேள்விக்கு தெளிவான விடை இதுவரை இல்லை.

எதிர்கால நாம்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்... இது சாத்தியமானதுதான்.
இறந்த காலத்தில் நடந்தவற்றை காண்பதற்கு நாம் ஆர்வமாக இருப்பது போல்...  எதிர்காலத்தவரும்.. இறந்த காலத்தை ( நமது நிகழ்காலம்) வந்து பார்வையிட்டிருக்கலாம்.
வில்லியம்ஸின் திருமணம், லிபிய யுத்தம், யப்பானிய சுனாமி என்பன முக்கிய சம்பவக்களாக வரலாற்றில் பதியப்படும். எனவே, அந்த பதிவுகளை நேரடியாக பார்வை இடுவதற்காக வந்திருக்கக்கூடும். இதே போன்ற அவதானிப்புக்கள் பல இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் நிகழந்திருக்கின்றன.
( ஏன் அவர்கள் நம்மை எச்சரிப்பதில்லை... என்ற கேள்விக்கு முன்னைய பதிவுகளில் விடை இருக்கின்றது. )

------------------------------------------------------------------------------------------

இது இருக்கட்டும் போன பதிவில் கேட்ட படி...
அவர்கள் ஏன் நேரடியாக வராமல்..."ரோப்போக்களை" அனுப்ப சந்தர்பம் உள்ளது என்பதை பார்ப்போம்...

பூமியின் தட்ப வெப்ப நிலைக்கும்... ஒட்சிசன் முதலான வாயுக்களின் விகிதாசாரங்களுக்கும் அமைய வாழ வேண்டுமென்றால்... அது பூமியில் தோன்றி இயைபாக்கம் அடைந்த உயிரினமாகவே இருக்க வேண்டும். இல்லையேல்...  பூமியை ஒத்த தட்பவெப்பமுள்ள கிரகத்தில் உருவாகிய உயிரினமாக இருக்கவேண்டும்.

எனவே.. வேற்றுக்கிரகத்தில் இருந்து வருபவர்களாக இருந்தால்... என்னதான் வருகைதரும் விண் ஓடங்களினுள் தமது கிரகத்தின் சூழ்னிலையை ஏற்படுத்தினாலும்.. மனிதர்களை ஆராய்வதற்கு வெளியே நடமாட வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், மனிதர்களை ஓடங்களினுள் கொண்டு செல்லும் போது... மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
எனவே... பூமியில் வாழும் உரினங்களை ஆராய்வதற்காக... ஏற்றவகையில் ரோபோக்களை தயாரித்து விண்ணொடங்களில் அனுப்பி ஆராயக்கூடும்.

இந்த விண்ணோடங்களினுள் கடத்தப்பட்டு... பரிசோதிக்கப்பட்ட ஆண்-பெண்களுக்கு என்ன நடந்தது? என்ன ஆய்வுகளை செய்தார்கள்?... என்பதை அடுத்த பதிவில் சம்பவங்கள் மூலம் பார்ப்போம். :)

------------------------------------------------------------------------------------------

Saturday, 21 May 2011

ஒரு காதல்... ஒரு காமெடி... ஒரு உணர்வு... :)

நான் சமீபத்தில் ரசித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... + வீடியோவும்..
நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயம்... :)

------------------------------------------------------------------------------------------
சுமாரான ஒரு பெண்... கண் தெரியாது, உலகத்தில் எதுவுமே பிடிக்காது... தன்னைத்தானே வெறுத்தால்...
ஆனால், காதலனை மட்டும் நேசித்தால்... அவன் எப்போதும் அவளோடே இருப்பான்.  அவளது எல்லாத்தேவையையும் நிறைவேற்றுவான்.
ஒரு நாள் அவள் சொன்னால்... என்னால் மட்டும் பார்க்க முடியுமாக இருந்தால்... உண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று.

சில மாதங்களின் பின்னர்...
அவளுக்கு கண் ஒப்பிறேஷன் செய்வதற்க்குத்தேவையான இரண்டு கண்கள் கிடைத்தன.
அவளால் உலகத்தைப்பார்க்க முடிந்தது... தனது காதலனையும் பார்த்தால்...
காதலன் கேட்டான்.. " இப்போது உண்ணால் உலகத்தை பார்க்க முடிகிறது.. என்னை திருமணம் செய்து கொள்வாயா ?" என்று...
அவனின் தடுமாற்றத்தின் போதுதான்.. அவள் உணர்ந்து கொண்டாள்... அவனுக்கும் கண் பார்வை இல்லை...
பார்வை இல்லாத உண்ணைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாள்.

அவன் ஒன்றும் பேசாமல் சென்றான்... போக முதல்.. ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான்... அதில்...
"என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்...  உண் நினைவுகளுடன் உண்ணை நான் எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன்."

------------------------------------------------------------------------------------------
ஒரு அஃப்ரிக்கன் தனது 10 ஆவது குழந்தையின் பிறப்பிற்காக மனைவியுடன் ஹொஸ்பிட்டல் சென்றிருந்தார்.
10 குழந்தை பிறந்தது... ஆனால், வெள்ளையாக பிறந்திருந்தது... இதனால, செம கடுப்பான அஃப்ரிக்கன்.. அந்த ஊரைச்சேர்ந்த பாதிரியாரிடம் சென்றார்...

"எனக்கு ஏற்கனவே பிறந்த 9 குழந்தைகளும் கறுப்பாக என்னைப்போல் இருக்கிறார்கள்... இந்த குழந்தை மட்டும் வெள்ளையாக இருக்கிறது... இந்த சுற்று வட்டார கிராமங்களிலேயே இருக்கும் ஒரே ஒரு வெள்ளை இனத்தவர் நீங்கள் தான்... பதில் சொல்லனும் இபோ..." என்றார்...

பாதிரியார்...
"பக்கத்தில் நின்ற ஆட்டு மந்தையில்.. இருக்கும் அனைத்து ஆடுகளும் வெள்ளையாக இருக்கும் போது ஒன்று மட்டும் கறுப்பாக இருப்பதை சுட்டிக்காட்டி... இது தான் இறைவனின் படைப்பு...  இதே போன்றுதான் உங்கள் பிள்ளையும்... இதை சந்தேகக்கணோடு பார்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்... " என்றார்.

உடனே.. பாதிரியாரை அழைத்துக்கொண்டு ஒதுக்கு புறமாக சென்ற அஃப்ரிக்கன் சொன்னார்...
"வெள்ளை குழந்தை விசயத்தை நான் மறந்து விடுகிறேன்... கறுப்பு ஆட்டுக்குட்டி விசயம் வெளியே தெரிய வேண்டாம்." 
------------------------------------------------------------------------------------------


Tuesday, 10 May 2011

இல்லுமினேடி - உலகின் புதிய கட்டளைகள் 01 ( அறிமுகம் )

------------------------------------------------------------------------------------------
எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்... அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்... பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என...
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்...
முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------------

இலுமினேடி (Illuminati)...
பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
"உலகின் புதிய கட்டளை (New world order)" எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல... மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.  20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் "கிங் மேக்கர்"களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்... லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்... ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன... பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்...)

யார் இவர்கள்...
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது... ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது... இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை... காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம்தான் என்ன...

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்...
"ஒரு உலகம்.. ஒரு அரசு" என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்... சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்... அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்...
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்... அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக...
சில வகை "இசை" வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்.... அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்... )

முடிவில்... இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது... அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்... மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு... நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலையிடி...
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்.... இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்... இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

இந்த தலைப்பை எடுத்தால்... பல்வேறு விதமாக எழுத வேண்டி இருக்கும்...
ஆரம்பத்தில் மிக சிம்பிளாக... எமது சினிமாவில் இருந்து ஆரம்பிப்போம்... நாம் எப்படி "கேனயர்கள்" ஆக்கப்படுகிறோம் என்பது விளங்கும். அடுத்த பகுதியில் அதைப்பார்ப்போம்.

நிச்சயம் இந்தப்பதிவிற்கு நான் மட்டும் போதாது... illuminati தொடர்பான எதிர் சுய கருத்துக்கள் உடையவர்கள் தங்கள் கருத்துக்களை கட்டாயம் சொல்ல வேண்டும்... பதிவராக இருந்தால்... தொடர்பதிவு எழுத வேண்டும்... :)

------------------------------------------------------------------------------------------

இந்த பதிவு பலரிடம் சென்றடைய வேண்டும் என கருதினால் வோட் போடவும்... :)
அல்லது ஏதோ, ஒரு களகத்துக்காக மூளைச்சலவை செய்வதற்காக எழுதப்படுகிறது என கருதினால் கொமென்டில் கூறவும்...

------------------------------------------------------------------------------------------

Monday, 9 May 2011

"கோ" - பார்ட் 2 & 200* (நொட் அவுட்) :D

இருந்து ஜோசித்த போது தோன்றியது... ஏன் திரைப்படங்களின் அடுத்த பகுதிகளை நாங்கள் சிந்தித்து எழுதக்கூடாதென்று....  அப்போது எழுதியது தான் இது...
படித்துப்பிடிதால் வோட் போடவும்...
படம் பார்காதவர்களுக்கு புரியாது.... இந்த லிங்கில் டொரன்ட்ஸ் மூலம் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்... :)
------------------------------------------------------------------------------------------
முதல்வரின் மரணத்திற்கு 1 வருடங்களுக்கு பின்னர்...

கட்ச்சியை சேர்ந்த ஒரு நபரால் முதல்வரின் மரணம் மீது சந்தேகம் சுமத்தப்பட்டு கேஸ் ஃபைல் பண்ணப்படுகிறது.
இதற்காக விசேட அதிகாரியாக மிஸ்டர் X  நியமிக்கப்படுகிறார்.
முதல்வர் கொள்ளப்பட்ட பதிவுகளை உண்ணிப்பாக அவதானித்த X  இக்கு... இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
ஏன் முதல்வர் நேரடியாக திடீரென களத்திற்கு விஜயம் செய்தார்... குண்டு வெடிப்பிற்கு முதல் நடந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றது.

அடுத்த நாள் விடிந்ததும்...
முதல் வேலையாக முதல்வர் அலுவலகத்திற்கு செல்கிறார்... அங்கு சென்று முதல்வர் இறுதியாக பயண்படுத்திய தொலை பேசி நம்பரை பெற்றுக்கொண்டதுடன்... அவரை கடைசியாக சந்தித்த நபர்களின் பதிவுகளையும் பெற்றுக்கொள்கிறார்.
தகவலை பெற்றுக்கொண்டு வெளியேற முற்படுகையில்... இறுதியாக பதிவுகளை மேற்கொண்ட நபர் குறுக்கிட்டு...
" திடீரென ஒருவர் முதல்வரின் நெருங்கிய நண்பர் என சொல்லி... அத்து மீறி உள் நுழைந்து முதல்வரை சந்தித்தார்... பிறகு, முதல்வர் வெளியே சென்றுவிட்டார்... " என்று ஒரு துப்பை கொடுத்தார்.
உடனே அன்றைய நாளுக்கு உரிய வீடியோப்பதிவை பெற்றுக்கொண்டு தனது அலுவலகத்திற்கு சென்றார்.

வீடியோப்பதிவில் பார்த்து அஸ்வின் (ஜீவா) தொடர்பான தகவல்களைத்திரட்டிக்கொண்டு... அஸ்வின் மீது சந்தேக கண்ணோடு தனது விசாரனைகளை ஆரம்பித்தார்.

பத்திரிகையில் "சிறகுகள்" அமைப்பிற்காக அஸ்வின் தம்பதிகளால் எழுதப்பட்ட கட்டுரைகளை எல்லாம் அலசிஆராய்ந்ததில்... அஸ்வினுக்கும் முதல்வருக்கும் ஏதும் தொடர்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
மேலதிகமாக தேடிய தகவல்களின் மூலம்... இருவரும் ஒரே கல்லூரியில் கல்வி கற்றார்கள் என்பது மட்டும் தெளிவாகியது.   அஸ்வின் பிரபல பத்திரிகை படப்பிடிப்பாளர் என்பதால்... நேரடியாக அவரின் மீது நடவடிக்கை எடுத்து விசாரனை செய்ய விரும்பவில்லை மிஸ்டர் X.

நக்ஷ்லைட்டுக்கள் இருக்கும் இடம் முதல்வருக்கு எப்படி தெரிந்தது என்ற சந்தேகமும் ஏற்கனவே மனதில் இருந்தது. காரணம், முதல்வர் சொன்ன குறிப்பிட்ட இடத்திலேயே அந்த சுற்றிவளைப்பு நடந்திருந்தது.
சுற்றி வளைப்பின் போது என்ன நடந்தது என்று அறிந்துகொள்வதற்காக நடைபெற்ற சண்டையின் ஒஃபிஸியல் வீடியோவை பார்வையிட்டார்.
அதில்... அஸிவின் ஒரு டொக்டரை குறிப்பிட்ட நக்ஷலைட்டுக்கள் இருந்த இடத்திற்கு அழைத்து செல்வதை அவதானித்து உசாராகினவராக... அந்த டொக்டரின் படத்தை தனியே எடுத்துக்கொண்டார்.

டொக்டரின் படத்தைக்கொண்டு... சுற்றி வளைப்பு நடந்த ஏரியாவிற்கு சென்று சந்தித்தார்.
விசாரித்ததில்...  அஸ்வின் குறிப்பிட்ட அடிபட்ட ஒரு நக்ஷலைட்டுக்கு மருத்துவம் பார்க்க கூறியதுடன்... மூளையை ஜோசித்து இயங்க விடாமல் இருப்பதற்காக மருந்தையும் ஏற்றச்சொன்னதாக கூறினார்.
இந்த சாட்ச்சியத்தை பதிவு செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார் மிஸ்டர் X.

அடுத்த கட்டமாக... பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாடுகளை வேவு பார்க்கத்தொடங்கினார்.
முன்னைய பதிவுகளை ஆராய்ந்ததில் சம்பவம் நடந்த அன்று... அஸ்வினின் லவ்வர் நீண்ட நேரமாக ஒஃபிஸில் கடமையில் இருந்துள்ளது உறுதியாகியது. அவர் அச்சமையம் பாவித்த தொலைபேசி அட்டையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளப்ப‌ட்ட அழைப்புக்கள் சம்பந்தமான தகவல்கள் திரட்டப்பட்டன.
முதல்வர் இறப்பதற்கு முன்னராக... அஸ்வினிடம் இருந்து 3G அழைப்பு வந்துள்ளது. பின்னர் எடிட்டருக்கு கோல் செய்யப்பட்டுள்ளது...  சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் பத்திரைகை நிறுவந்த்திறு ஆஜராகி உள்ளார்.
இதற்கு பின்னரே... முதல்வர் கொள்ளப்பட்டுள்ளார்...

இந்த தகவல்களை கட்சிதமாக பெற்றுக்கொண்டு அஸ்வினிடம்  விசாரணைக்காக சென்றார்.
தன்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தகவல்களையும் காட்டி.... கைத்து செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன... என்ன நடந்தது என்ற உண்மையை  சொல்லுமாறு சற்று காட்ட மாக கூறிக்கொண்டிருக்க‌..
3G கோலில் பதியப்பட்ட வீடியோக்காட்சியை அஸ்வினின் மனைவி கொண்டுவந்து காட்டினார்....
வீடியோவை மிஸ்டர் X  பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே... ஏன் தாங்கள் இதை மறைத்தோம் என்ற உண்மையை கூறினார்கள்.
காட்ச்சியைப்பார்த்த மிஸ்டர் X...
உங்கள் தொடர்பான தகவல்கள் மேலிடத்திற்கு ஏற்கனவே அனுப்பபட்டு விட்டது...
இந்தக்காட்சியை வெளிவிடுவது தான் நல்லது என்றார். அவர்களும் நிலமையை உணர்ந்து சம்மதிக்க அடுத்த நாள் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் இந்த வாக்கு மூல நியூஸ் முதலிடம் பிடித்தது.

எதிர்கட்சிகள் ஒன்றினைந்து ஆட்ச்சியை கவிழ்த்தார்கள்...

மீண்டும் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது...
சிறகுகள் அமைப்பும் கழத்தில் தைரியமாக போட்டி இட்டது.

தேர்தல் நாள் அன்று... இறுதி அறிவிப்பு...

"மீண்டும்...  பெரும்பாண்மையுடன் சிறகுகள் கட்சி ஆட்சியைப்பிடித்துள்ளது.... போன முறையை விட அதிக படியான விழுக்காடுகளுடன் வெற்றி பெற்றது... இவை அனைத்தும் அந்த கட்சி உறுப்பினர்கள் கடந்த ஒரு வடுடத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு கிடைத்த வெற்றியாகும்..."
------------------------------------------------------------------------------------------
மிஸ்டர் x  இக்கு பொருத்தமானவர்... மேலும் அவருக்கு உரிய லவ் ஸீன்களை... நீங்களே போட்டுக்கொள்ளுங்க.. 
( நான் ஆர்யாவை செட் பண்ணி இருக்கேன்... :P )
------------------------------------------------------------------------------------------
இது எனது 200 ஆவது பதிவு... என்னைப்பற்றி இதுவரை ஒன்றும் கூறவில்லை.. கூறவும் ஒன்றுமில்லை... வித்தியாசமாக இப்படி படங்களின் பகுதி 2 ஐ இனி மாதம் ஒரு முறையாவது எழுதலாம் என்று ஒரு ஐடியா...
"எந்திரன் 2" சுப்பரா எழுதிற ஐடியா இருக்கு.. :)
------------------------------------------------------------------------------------------

Thursday, 5 May 2011

Boys vs Girls -வித்தியாசங்கள் (-கலாட்டா அறிவியல்-)

------------------------------------------------------------------------------------------
உலகத்தில் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தாலும்... முக்கியமான வித்தியாசம் ஆண்-பெண் வித்தியாசம்தான்.
( இத தான் கவுண்டர் சொல்லி இருகார்... "உலகத்தில ரெண்டே ரெண்டு ஜாதிதான்.. ஒன்று ஆண்ஜாதி இன்னொன்று பெண்ஜாதி... " என்று.. :P )

உண்மையிலேயே... உடல் அளவிலும், மன உணர்வளவிலும், நடத்தையிலும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன ஆண்கள் பெண்களிடையே.
இது தெரியாமல்... சில வீடுகளில், ஆண் பிள்ளைகளை பெண் பிள்ளைகளின் உணர்வுகளுடன் ஒப்பிட்டு குறை சொல்வதும்... பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளின் செயற்திறன்களுடன் ஒப்பிட்டு குறை சொல்வதும் சகஜமாக இருக்கிறது.

இந்தப்பதிவில்... அந்த வித்தியாசங்கள்பற்றி கொஞ்சம் பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------------


மனித மூளையானது முக்கியமாக வெள்ளைத்திசு (white tissue), சாப்பல் திசு (gray  tissue) என இரு வேறுபட்ட பதார்த்ததால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திசுக்களில் ஆண்கள் கிறே திசுக்களை பயண்படுத்தியே அதிகமாக சிந்திக்கிறார்கள்-கருமமாற்றுகிறார்கள். எனினும் பெண்கள் வெள்ளைத்திசுக்களையே அதிகம் பயண்படுத்துகின்றனர். இது தான் அடிப்படையில் இந்த வேறுபாடுகளுக்கு எல்லாம் காரணமாக திகழ்கிறது.
( கிட்டத்தட்ட 6.5 மடங்கு அதிகபடியான கிறே திசுக்களை ஆண்கள் பயண்படுத்துகின்றனர். அதேவேளை பெண்கள் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான வெள்ளைத்திசுக்களை பயண்படுத்துகின்றனர். )
கிறே திசுக்கள்,  சிந்தித்து செயலாற்றுவதற்கு துணை புரியும் அதேவேளை... வெள்ளைத்திசுக்கள் அவற்றிற்கு இடையிலான தொடர்பாடலுக்கு முக்கியமானதாக திகழ்கிறது.

இந்த வேறுபாடுகளின் அடிப்படையில்...

பெண்கள் சமூகத்தொடர்பாடல்களில் ஆண்களை விட முன்னிலையில் இருப்பார்கள். அவர்களால், இலகுவாக உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிவதுடன்... தாமும் இலகுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பேசக்கூடியவர்கள். ஆண்களால் இது முடியாது. பேச்சுத்திறன் ஒப்பீட்டளவில் பெண்களை விடக்குறைவு.... பொறுமையாக கேட்கும் தன்மையும் குறைவு.
( இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல்...  தம்மை கணக்கெடுப்பதில்லை, அல்லது பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆண்கள் மீது சுமத்தப்படுகிறது :P )

ஒரு பிரச்சனையை எதிர் நோக்கும் போது... ஆண்கள் உடனடியாக தீர்ப்பதில் வல்லவர்களாக இருபார்கள். பெண்கள் நேரம் எடுத்து தீர்க்க நினைபார்கள்.
காரணம், இந்த சந்தர்ப்பத்தில்... ஆண்கள், இடது பக்க மூளையை அதிகம் பயண்படுத்தி உடன் முடிவுக்கு வந்து விடுவார்கள். பெண்கள் இரு பகுதி மூளையையும் சரி சமமாக பயண்படுத்தி ஜோசிப்பதால் முடிவு லேட் ஆகும்... ஆனால், எமோஷனலானதாக இருக்கும்.

கணிதத்திறனில் ஆண்கள் பெண்களை விட திறமையானவர்களாக இருபார்கள்.
காரணம், கணித சிந்தனைகளுக்கு பொறுப்பான "IPL -  inferior-parietal lobule"பகுதி ஆண்களிடம் பெரியது எனவே இடது மூளை பெரியதாக இருக்கும்... இதனால் இலகுவாக கணித ரீதியான தீர்மாணங்களை எடுக்க முடியும்.
இது தான்.. பொறியியல்,கணக்கியல் துறைகளில் பெண்கள் குறைவாக இருக்க காரணம்.
அதே வேளை..
பெண்களின் வலது மூளை பெரியது... அது தான் பெண்களால் உண்னிப்பாக ஒரு விசயத்தை அவதானிக்க (ஆராய ) முடிகிறது. உதாரணமாக, இரவில் பிள்ளை அழுவது பல ஆண்களுக்கு தெரிவதில்லையாம்... பெண்கள் உணர்ந்து கொள்வார்கள்.
( இது தான் சந்தேகம் என்று வந்தால் அலசி ஆராய்வதற்கும் காரணமாக இருக்குமோ... :O :P )

------------------------------------------------------------------------------------------

பதிவு நீண்டு விட்டது...
இன்னும் பல சுவார்ஷ்யமான தகவல்கள் இருக்கின்றன... அடுத்த இறுதிப்பதிவில் முழுமையாக பார்ப்போம்.  :)
------------------------------------------------------------------------------------------

Tuesday, 3 May 2011

பல கிரகங்களில் இருந்து "ஏலியன்ஸ்"ஸா? - வெறும் ரோபோதானா? - (ஏலியன்ஸ்)

பரிமாணங்கள் -14
-------------------------------------------------------------------------------------------
ஏலியன்ஸ் பற்றிய நீண்ட நாட்களின் பின்னரான் பதிவு... பல தகவல்கள் திரட்டியுள்ளேன்.
அதன்படி ஊகிக்க கூடிய இன்னொரு விதமான சிந்தனை பற்றி இன்றைய பதிவில் எழுதுகிறேன்.

-------------------------------------------------------------------------------------------

ஏலியன்ஸை பார்த்ததாக உலகும் முழுவதும் பல பகுதிகளில் இருந்து பல கதைகள் வருகின்றன. அவற்றில் சிலது உண்மையாக இருக்கலாம் என "ஹிப்னாடிஸ" முறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. (முன்னைய பதிவுகளில் உள்ளது.)

எனினும், ஒவ்வொரு பகுதியினதும் ஏலியன்ஸின் உருவ-அமைப்பு ஒவ்வொரு விதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஏஸியாப்பகுதிகளுக்கு வருகைதரும் ஏலியன்ஸ் குள்ளமானவர்களாகவும் வெண்ணிற உடலுடையவர்களாகவும் அவதாணிக்கப்படுகிறார்கள்.
அதேவேளை, அமெரிக்க கண்டங்களில் உயரத்தில் ஏஸியன்ஸ் அவதானித்ததை விட கூடியவர்களாகவும், வெண்ணிற உடல் என்று இல்லாமல்... வெண்ணிற, நீல,சாம்பல் நிற அங்கிகளை அணிந்தவர்களாக அவதானிக்கப்படுகிறார்கள்.
மேலும், சில பகுதிகளில் இரு கொம்புகள் உடையவர்களாகவும், அன்டெனா போன்ற ஒரு உணர்கொம்பு உடையவர்களாகவும் அவதானிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பலரின் ஏலியன்ஸ் விபரிப்பு சம்பவங்கள் கிட்டத்தட்ட ஒரே போல் இருந்தாலும், உடலமைப்பில் பாரிய வேறுபாடுகளைக்காணக்கூடியதாக உள்ளது.
இவற்றை பார்க்கும் போது,
எமது பூமிக்கு... பல கிரகங்களில் இருந்து வெவ்வேறு வேற்றுக்கிரக-வாசிகள் வருகின்றனரா என்ற எண்ண‌ம் தோன்றுகிறது. அப்படி பார்த்தால்... நாம்தான் தொழின் நுட்ப அறிவில் மிகவும் பிந்தங்கியவர்காக இருக்கின்றோம். எம்மால் எமது சூரிய குடும்பத்தை தாண்டி செயற்கை கோள்களை அனுப்புவது கூட கடினமாணதாக இருக்கையில், வேற்று நட்சத்திர மண்டலங்களில் இருந்து பூமிக்கு இலகுவாக வந்து போகின்றனர் என்றால் அவர்களின் தொழில் நுட்பத்தை கற்பனை செய்ய எம்மிடம் திறனில்லை.
எனினும், அவர்கள் பூமிக்கு விஜயம் செய்வது ஏன்? நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுக்கு தக்க பதில் இல்லை. (பின்னைய பதிவுகளில் ஊகிப்போம்..:) )

-------------------------------------------------------------------------------------------

இன்னொரு வகையாக ஜோசிக்கும் போது...
ஒரு கிரகத்தில் இருக்கும் ஏலியன்ஸ்-தான்... பூமிக்கு பல விதமான "ரோபோ"க்களை அனுப்பி வைத்து ஆய்வு நடாத்துகின்றனரா என்ற எண்ணமும் தோன்றுகிறது.
அதனால் தான் பல வெவ்வேறு வகையான உருவங்கள் அவதானிக்கப்படுகின்றன.
முக்கியமாக தலையில் என்ரெனா போன்ற அமைப்பு இருத்தல், அவர்களின் முகங்களில் ஒரு வித முக பாவணையும் இருப்பதில்லை* போன்ற பண்புகள் அவை ரோபோக்கள்தானா என்ற எண்ணைத்தை தோற்றுவிக்கும்.
(* - கடத்தி விடுவிக்கப்பட்டவர்கள் கூறியது... பின்னைய பதிவுகளில் பார்ப்போம். :) )

ரோபோக்களாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது...
ஏலியன்ஸ்காக அவதானிக்கப்பட்ட அனைத்து உருவங்களும்.. மனித உருவத்திற்கு மிக நெருக்க மான அமைப்பிலேயே இருந்துள்ளது. எனினும், வேற்றுக்கிரகத்தில் தோன்றக்கூடிய உருவங்கள் மனிதன் போன்ற இருப்பதற்கான சான்றுக்கள் மிக-மிக குறைவு. ( ஏற்கனவே முன்னைய பதிவுகளில் இது பற்றி தெளிவாக விளக்கி இருந்தேன். )
ஆகவே, பூமியில் உள்ள மனிதர்களை வேவு பார்ப்பதற்காக மட்டும், மனிதனை போன்ற உருவ அமைப்புள்ள ரோபோக்களை அனுப்பி இருக்ககூடும்.
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகை ரோபோக்கள் மட்டும் வரக்காரணம்,
நாம் நிலவுக்கு அனுப்பும் செயற்கை கோள்கள் தொடர்ந்து குறிப்பிட்ட ஒரே இடத்திலேயே ஒரு நாட்டினால் இறக்கப்படுகிறது... (ரஷ்யா ஒரு பகுதி, அமெரிக்கா ஒரு பகுதி என்பது போல...)
அதே முறையை அவர்களும் கையாண்டால்... ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகை ரோபோக்கள் வருவது வியப்பில்லை.

-------------------------------------------------------------------------------------------

பதிவு நீண்டு விட்டது...
அடுத்தகட்ட அவர்களின் நடவடிக்கையின் படி முற்று முழுதாக மனித உருவையே அனுப்ப சாத்தியமுள்ளது...  ஏன் நேரடியாக வராமல் அனுப்புகிறார்கள்...
மேலும்... கடத்தப்பட்டவர்களுக்கு என்ன‌ நடந்தது என்பதையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
அதற்கு முன்பாக, பிரிதானியா ரோயல் கல்யாணத்தை அவதானித்ததாக சொல்லப்படும் ஏலிய்ன்ஸ் யார் என்பதை பார்க்க வேண்டும் தனிப்பதில்... :)

பதிவு பிடித்திருந்தால் வோட் போடவும்... அல்லது கொம்ன்ட்ஸில் குறைகளை சுட்டிக்காட்டவும்... மாற்றுக்கருத்துக்ளையும்.... :)

-------------------------------------------------------------------------------------------

Monday, 2 May 2011

3 இலவச "வீடியோ" மென்பொருட்கள்.... :) (free softs)

-----------------------------------------------------------------------------------------

மிகவும் பயணுள்ள- அடிக்கடி தேவைப்படுகின்ற 3 வீடியோ மென் பொருட்கள்... கணனியில் நிறுவாமலே பயண்படுத்தக்கூடிய வகையில் போர்ட்டபிள்களாக இருக்கிறது. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------
4Videosoft MKV Video Converter 3.3.22 Portable


இப்போது பரவலாக பலர் டொரன்ட்ஸ் மூலம் படங்களை தரவிறக்கம் செய்கின்றார்கள். அதில் பெறப்படும் பல ஃபைல்கள் mkv வகையைச்சார்ந்தவையாக இருக்கின்றன.
அவற்றை மிக இலகுவாக தேவையான ஃபோர்மேட்களில் மாற்றிக்கொள்ள இந்த சிறிய மென் பொருள் உதவுகிறது.

அளவு :
12.2MB

மாற்றத்தக்க வகைகள் :
MKV, MPG, WMV, MP4, AVI to MP4, AVI, 3GP, FLV, Divx, MP3, M4A, WMA, OGG - வீடியோ வகைகள்.
MP3, MP2, M4A, WMA, WAV, OGG, RA - ஓடியோ வகைகள்.

டவுண்லோட் லிங்ஸ் :
http://www.filesonic.pl/file/718218244

-----------------------------------------------------------------------------------------

Freemake Video Downloader v2.1.4.1 Portable 
youtube இல் இருந்து டவுண்லோட் செய்வதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன... ஒன்லைன் மூலமாகவே டவுண்லோட் பண்ணிட முடியும்.
எனினும், ஏனைய தளங்களில் இருந்து டவுன்லோட் பண்ணுவதற்கு மிகச்சிறந்த சிறிய மென் பொருள் இது..
Facebook  வீடியோக்களையும் இலகுவாக டவுண்லோட் பண்ணிவிட முடிகிறது.

அளவு :
10.7MB

டவுண்லோட் பண்ணுகையிலேயே மாற்றத்தக்க வகைகள் :
WMV, MP4 or MP3

டவுண்லோட் லிங்ஸ் :
http://www.filesonic.pl/file/784255544
http://www.fileserve.com/file/wzBbqdM


-----------------------------------------------------------------------------------------

EZ Video Cutter 2.0.0.4 Portable 
பலருக்கும் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை மட்டும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கும்.
அதற்கு துணை புரியும் எழிமையான மென் பொருள் இது...
வீடியோவின் திரை அளவுகளை மாற்றக்கூடிய வசதி, குறிப்பிட்ட திரைப்பகுதியை மட்டும் வெட்டக்கூடிய வசதி என்பனவும் மேலதிகமாக இருப்பது சிறப்பம்சம்.

அளவு :
16MB

வெட்டத்தக்க வகைகள் :
asf, avi, flv, m4v, mp4, mkv, mov, mpg, mpeg, wmv & more...

டவுண்லோட் லிங்ஸ் :
http://www.fileserve.com/file/s2bfByy/EZ_Video_Cutter_2.0.0.4_Portable.rar
http://www.filesonic.pl/file/783794714/EZ_Video_Cutter_2.0.0.4_Portable.rar


-----------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails