Total Pageviews

Monday, 1 March 2010

செவ்வாயும்... மனிதனும்... நாமும்... (விஞ்ஞானம் மட்டுமில்லை)

செவ்வாயும்... மனிதனும்... நாமும்...
----------------------------------------------------------------------------------------
செவ்வாய் கிரகம் பற்றிய மர்மம் இன்னமும் தொடர்ந்துகொன்டே இருக்கிறது. எம் மத்தியில் மட்டுமில்லை. விஞ்ஞானிகள் மத்தியில் கூட செவ்வாய் கிரகம் தொடர்பான பல விடை தெரியாத ( உறுதிப்படுத்த முடியாத) கேள்விகள் தேங்கி நிற்கின்றன.

முக்கியமாக...
செவாய் கிரகத்தில் உயினங்கள் வாழ்ந்தனவா... இன்றும் வாழ்கின்றனவா... அல்லது எதிர் காலத்தில் வாழத்தக்க சூழ்னிலை ஏற்படுமா...
போன்ற கேள்விகள் முன்னிற்கின்றன.

அவை தொடர்பான சில தகவல்களையும் என்னை போன்றோரின் கருத்துக்களையும் இப் பதிவில் பார்ப்போம்...
----------------------------------------------------------------------------------------

எமது கருத்துக்களை பார்க்க முன்னர் செவ்வாய் கிரகம் பற்றி ஒரு குட்டி அறிமுகத்தை பார்ப்போம்...

இது சூரிய குடும்பத்தில் 4 ஆவது கோள் ஆக  இருக்கிறது... ( என்ன சின்ன பிள்ள தனமா இருக்கா...???,  இன்ரொடெக்சன் என்றா அப்பிடி இப்பிடி தான் இருக்கும்...)
அண்ன‌ளவாக சூரியனிலிருந்து 22.8 கோடி கிலோ மீற்றர் தொழைவில் உள்ளது...
தன்னை தானே 24 மணி 36 நிமிடத்தில் சுத்தி கொண்டு சூரியனை 687 நாள் செலவளிச்சு சுத்துது...
பூமிட பாரத்தில பாதி பாரம் தான் செவ்வாயினது... அதால‌ அங்க ஈர்ப்பு சக்தியும் குறைவு...
செவாயின் இடுப்பு சைஸ் (விட்டம்) 6790 கி.மீ...

பூமியை ஒத்த வளிமண்டல கூறுகளை கொண்ட ஒரே சூரிய குடும்ப‌ கிரகம் செவ்வாயாகும்...
பூமியை போன்றே அதன் துருவங்களிலும் வெண்மையன பகுதிகாணப்படுகிறது. அது பனிப்படர்வாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்தோடு மாரி காலத்தில் செவ்வாயின் சில பகுதிகள் நீலமாகவும்... கோடை காலத்தில் கபில நிறமாகவும் காணப்படுகிறது. ( இதற்கான காரணம் செவ்வாய் கிரகத்தில் அடிக்கடி ஏற்படும் புளுதி புயலே என கருதப்படுகிறது.)

சரி... அறிமுகம் போதும் என்று நினைக்கிறன்...

இனி செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்க சந்தர்ப்பம் உண்டா என்பதை பார்ப்போம்...

செவ்வாய் கிரகத்தின் தரை பகுதியை பார்க்கும் போது அது பூமியின் சில பகுதிகளை ஒத்ததாக உள்ளதை அவதானிக்க முடியும். முக்கியமாக பூமியில் விண்கல் விழுந்ததாக கருதப்படும் இடங்களை ஒத்ததாக உள்ளது. ( இந்த படத்தை பாருங்கள்...)

அடுத்து செவ்வாய் கிரகத்திம் மேலும் சில பகுதிகளில் நீரோடைகள்... சமுத்திரங்கள் இருந்து இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ( முக்கியமாக நீரரிப்பு ஏற்பட்டு இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.)

அத்துடன் ஏற்கனவே சொன்னது போன்று... பூமியை ஒத்த வளி மண்டல தொகுதி காணப்படுகிறது...

அதனால், பூமியில் எவ்வாறு டைனோசர் இனமும் அது வாழ்ந்த காலத்திலிருந்த மற்றைய இனங்களும் அழிந்தனவோ.. அதே போன்றே செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் அழிந்து இருக்கும் என கருத இடமுண்டு. ( பூமியை தாக்கிய விண்கற்களை விட வீரியம் மிக்க கற்கள் தாக்கி மொத்த உயிரினத்தையும் அழித்து இருக்கும் எனவும் கருதலாம்.)

அத்துடன்... இன்னொரு விடையம்...

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தானா என பார்த்தால்...
என்னை பொறுத்த வரை அது ஏற்று கொள்ள முடியாதது...

காரணம்...

பூமியில் முதல் முதலில் ஒரணு உயிரினமான அமீபா தோன்றி...
அதன் இனப்பெருக்கத்தின் போது ஏற்பட்ட தவறுதலால் ஈரணு வாகியது. பின்னர்... ஈரணு 4 ஆகி... 4 உ 8 ஆகி... அப்படியே போய் போய் கடைசியா மனிதன் எனும் தவறுகலால் உருவான உயிரினம் உருவாகியது. தவறுகள் நடை பெறாமல் இருந்து இருப்பின் இன்றும் பூமியில் அமீபாவின் ஆட்சி தான் நடந்து இருக்கும்.

இந்த தவறுகள் ஆனது... பூமியின் தற்ப வெப்ப நிலை... அண்டத்தில் பூவி இருக்கும் இடம் என்பவற்றை பொறுத்தே அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன்...

எனவே, பூவியில் ஏற்பட்ட அதே தவறுகள்... அதே வரிசையில் ஏற்பட்டால் ஒளிய  மற்றம் படி அங்கு மனிதன் தோன்றி இருக்க வாய்ப்பில்லை... அவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பது ஏற்றுகொள்ள முடியாத, சிறு பிள்ளைத்தனமான வாதம்.
ஏனெனின், சூரிய குடும்பத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தின் தன்மை புவியை ஒத்ததல்ல...
அத்தோடு புவியின் வளி மண்ட்ல தொகுதிகளில் உள்ள கூறுகளை (ஒட்சிசன், நைட்றஜன், காபனீரொட்சைட் ... போன்றன‌) செவ்வாய் கொண்டிருப்பினும். அதன் அளவு வீதங்கள் (விழுக்காடு) மாறு பட்டதாகும். எனவே அங்கு தோன்றி உருவாகி இருக்க கூடிய உயிரினம் அச் சூழ்னிலைக்கு ஏற்ற வாறே உருவாகி இருக்கும். புவியை போல் உருவாக சந்தர்ப்பமில்லை....

ஆகவே... செவ்வாயில் உயிரினம் இருந்து இருப்பினும் அது... எங்களை மாதிரி... லுங்கிய கட்டி கொண்டு அடுத்த வனுக்கு ஆட்டைய போட அலைய சான்சே இல்லை...

பதிவு ஓவரா நீண்டு கொண்டு போகுது...
மிகுதியை, அடுத்த பதிவில் பார்ப்போம்...

இங்கு இருக்கும் படத்தை பாருங்கள்... செவ்வாய் கிரகத்திலிருக்கும் பாரிய குழிகள் இவை....!!!
இது தொடர்பாக சில வியப்பான சம்பவங்களையும்...
இன்று செவ்வாயில் உயிரினம் உண்டா...
இனி உருவாகுமா....
என்பதுகளை நீங்கள் விரும்பினால் வரும் பதிவில் பார்ப்போம்...


----------------------------------------------------------------------------------------

16 comments:

  1. vaazthukkal vithiyaasamaana sinthani...

    ReplyDelete
  2. Best post brother!
    keep it up.

    ReplyDelete
  3. Kopalakrishnan2 March 2010 at 09:10

    ஏன் தயக்கம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!
    இவ்வாறான பதிவுகள் இணையத்தில் அரிதானவை.

    ReplyDelete
  4. நல்லப் பதிவு
    உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து பதிவிடுங்கள்

    ReplyDelete
  5. //இது தொடர்பாக சில வியப்பான சம்பவங்களையும்...
    இன்று செவ்வாயில் உயிரினம் உண்டா...
    இனி உருவாகுமா....//

    ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  6. Chandran Pirabu ( valaakam )3 March 2010 at 01:32

    tnx every body...

    ReplyDelete
  7. hi da.. nice article.. write more.. keep it up..
    i hav deactivated my fb account..
    u can contact me through dis id ssutha89@gmail.com..

    ReplyDelete
  8. Tmx da... Wt hpn da.. Ok I'll cnt u...

    ReplyDelete
  9. lishanthmithrau4 April 2010 at 12:57

    good :)

    ReplyDelete
  10. tnx... Anonymous & lishanthmithrau... :)

    ReplyDelete
  11. நல்ல தகவல். எனது இன்றைய பதிவு. ப்லோக்கரின் Add CSS வசதி - http://tamilfa.blogspot.com/2010/10/add-css.html

    ReplyDelete
  12. பதிவுகள் அனைத்தும் அருமை ! நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் . கடவுள் பற்றி உங்கள் அறிவியல் அலசல் செய்தால் நன்றாக இருக்கும் . மற்றும் உங்கள் அறிவியல் சார்த்த தளதில் எண் கணித ஜோதிடம் எதற்கு ?
    ///பூமியில் முதல் முதலில் ஒரணு உயிரினமான அமீபா தோன்றி...
    அதன் இனப்பெருக்கத்தின் போது ஏற்பட்ட தவறுதலால் ஈரணு வாகியது. பின்னர்... ஈரணு 4 ஆகி... 4 உ 8 ஆகி... அப்படியே போய் போய் கடைசியா மனிதன் எனும் தவறுகலால் உருவான உயிரினம் உருவாகியது. தவறுகள் நடை பெறாமல் இருந்து இருப்பின் இன்றும் பூமியில் அமீபாவின் ஆட்சி தான் நடந்து இருக்கும்.

    இந்த தவறுகள் ஆனது... பூமியின் தற்ப வெப்ப நிலை... அண்டத்தில் பூவி இருக்கும் இடம் என்பவற்றை பொறுத்தே அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன்.///.

    இந்த வரிகள் அனைத்தும் அற்புதம் !

    ராஜன்
    சென்னை

    ReplyDelete
  13. நன்றி...tamilfa :)
    நன்றி உங்கள் பகிர்வுக்கு...

    நன்றி...rajan :)
    நிச்சயமாக... இதற்கு பரிமாணம் என்று பெயரில் எழுதப்பட்டுவரும்... பகுதிவில்.. கடவுள் பற்றி எழுதுவேன். :)
    ஜோதிடம் எழுதுவதற்கு ஒரு சின்ன காரணம் இருக்கு... ஆதாரங்களுடன் தனிப்பதிவிட்டு லிங் தருகிறேன்.
    ( பதிவுகளை கூட்டும் நோக்கும் ஒரு காரணம். )

    ReplyDelete
  14. அருமை நண்பரே!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected