Total Pageviews

Thursday, 25 March 2010

செவ்வாயும்... மனிதனும்... நாமும்... (பகுதி - 02)

 செவ்வாயும்... மனிதனும்... நாமும்...
--------------------------------------------------------------------------------
போன பதிவை... செவ்வாயில் உயிரின‌ங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வியுடன் முடித்து இருந்தேன்.
ஒரு படமும் போட்டு இருந்தேன்.
இன்று அவை சம்பந்தமான விடையங்களை முதலில் பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------
இந்த படத்தில் காணப்படும் 7 குழிகளும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா அனுப்பிய செய்மதி மூலமாக கண்டு பிடிக்கப்பட்ட குழிகளாகும்... ( செய்மதியின் பெயர் நினைவில்லை... தெரிந்தவர்கள் சொல்லவும்.)

இவற்றின் அமைப்பை அவதானிக்கும் போது... சற்று வியப்பாக இருக்கிறது. காரணம்... குழியின் நுழைவாயிலானது ஏதோ... சரியான முறையில் கணிப்பிட்டு வெட்டப்பட்ட குழிகள் போன்று அமைந்துள்ளது.
உதாரணமாக... இந்த படத்திலுள்ள குழியின் விட்டம்... 150 மீட்டர்கள். ஆழம் 78 மீட்டர்களாக இருக்கலாம் என IR-Ray ( அகச்சிவப்பு கதிர்கள்) மூலமாக அறியப்பட்டுள்ளது.

இங்கு தான் நாம் பொரிக்ஷா எனும் சிறுவன் சொன்னதை கவணிக்க வேண்டும்.
( நான் பொரிக்ஷா பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால், அது தொடர்பாக தனி பதிவிடவில்லை... ஆனால், வேறு பதிவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அச் சிறுவனை பற்றி தெரியாதவர்கள் வாசித்து கொள்ளவும். சுவாரஷ்யமாகவும் வியப்பாகவும் இருக்கும்...)
செவ்வாயில் தான் முன்னர் வாழ்ந்ததாக கூறும் இச்சிறுவனிடம்... விஞ்ஞானகள் நடத்திய பரிசோதனையின் போது...
" ஏன் பூமியில் இருந்து அனுப்பப்ப‌டும்... செய்மதிகள் பல செவ்வாயின் வளிமண்டல பகுதியை அன்மித்ததும் செயல் இழக்கின்றன? " என கேட்ட போது...
" இன்னமும் செவ்வாயில் மனிதர்கள் ( செவ்வாயில் மனிதருக்கு ஒப்பான உயிரினமாக இருக்கலாம்.) வாழ்கின்றனர். அவர்கள் தான்... சில வகையான கதிர்களை செலுத்தி செய்மதிகளை செயல் இழக்க வைக்கின்றனர்..." என பதில் அளித்து இருந்தான். மேலும் கூறுகையில்... " செவ்வாயில் ஏற்பட்ட அணு ஆயுத போரினால்... செவ்வாயின் மேற்பரப்பானது மக்கள் வாழ்வதற்கு உகந்ததாக இல்லாமல் போய் விட்டது... அதனால்... அங்குள்ளவர்கள் நிலத்தினடியி வாழ்கின்றார்கள்..." என கூறியிருக்கின்றான். ( இவை அனைத்தையும் அவன் தன்மையிலேயே கூறியிருந்தான். நான் இங்கு முன்னிலையாக எழுதியுள்ளேன்...)

இச்சிறுவனின் பேச்சு முற்று முழுதாக ஏற்க படவுமில்லை... முற்றாக புறக்கணிக்கவும் முடியவில்லை... காரணம்... 13 வயதான இச்சிறுவன்... பாவிக்கும் சொற்கள் அனைத்தும் தேர்ந்த விஞ்ஞானிகள் பாவிக்கம் சொற்கள். மேலும் சிக்கலான பல தியரிகளை இலகுவாக விளங்கப்படுத்துகின்றான்!!!

நான் இங்கு அந்த சிறுவன் குறிப்பிட்ட "நிலத்தினடியில் மனிதர்கள் வாழ்கின்றனர்." என்ற விடையத்தை எடுத்துள்ளேன்.

அச் சிறுவன் சொன்னதன் படி... இன்னமும் செவ்வாயில் நிலத்தின் கீழ் மக்கள் இருக்கின்றனர் என வைத்துகொண்டால்...
அவர்கள்... உள்ளே சென்று தமது இருப்பிடத்தை உருவாக்குவதற்கு பாதை தேவைப்பட்டு இருக்கலாம்... அதற்காக உருவாக்கப்பட்டதே இக்குழிகளாக இருக்கலாம். ( இங்கு நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும்... நாம் தற்போது அளவிட்டுள்ள குழியின் ஆழமானது... அவர்களால் உட்பக்கமாக பூட்டப்பட்ட குழியினுள்; பல ஆண்டுகளாக புழுதிபுயல் வீசியதால் ஏற்பட்ட படிவுகளின் பின்னரான... ஆழமாக இருக்கலாம்.)

ஆகவே... அச்சிறுவன் சொன்னதன் படி அங்கு அறிவுள்ள உயிரினங்கள் வாழ சந்தர்ப்பம் உண்டு.

இங்கு... சில கேள்விகள் எழும்... அவர்கள் அங்கு என்னத்தை சுவாசிப்பார்கள்? அமுக்கம் பாதிக்காத? போன்ற அடிப்படை சந்தேகங்கள் தோன்றும்.
ஆனால், நாம் இங்கும் பார்க்க வேண்டியது... பொரிக்ஷாவின் கூற்றைத்தான்...  அவன் ஒரு சந்தர்ப்பத்தில் ட்ரைம் ரவல் (கால பயணம்) பற்றி குறிப்பிட்டுள்ளான். அவனின் கருத்துப்படி... செவ்வாய் மனிதன் ரைம் ரவலை பயன்படுத்தியுள்ளான். ஆகவே... அந்தளவு அறிவு படைத்த அவர்களால்... மேற்பரப்பிலுள்ள வளியை உள்ளே கொண்டு செல்வதென்பது கடினமானதாக இருந்து இருக்க வாய்ப்பில்லை. ( மேலும், அவர்கள்... சுவாசிப்பது ஒட்சிசன் அல்ல... காபனீரொட்சைட்... இது கூட பொரிக்ஷாவின் கூற்றுத்தான்.)

ஆகவே... என்னை பொறுத்த வரையில் செவ்வாய் கிரகத்தில் அறிவில் மேம்பட்ட உயிரிங்கள் வாழ சந்தர்ப்பம் உண்டு.
ஆனால், அவர்கள் ஏன் வெளியுலகிற்கு வருவதில்லை? எனும் கேள்விக்கு எனக்கு விடைதெரியாது. சில வேளை ஏலியன்ஸ் என கூறப்படும் உருவங்கள் அவர்களுடையதாக இருக்குமோ???!!!
(ஏலியன்ஸ் தொடர்பாகவும் ஒரு பதிவு எழுதுகிறேன்... அதில் செவ்வாயை சம்பந்தப்படுத்தி எழுதவில்லை... அதில் வேறு விதமாக எழுதுகிறேன்...)

எனக்கும் இது சம்பந்தமான பல சந்தேகங்கள் இருக்கின்றன... தெளிவான விளக்கம் இருப்பவர்கள் தயவு செயது கூறவும்...

அடுத்த பதிவில்... செவ்வாயில் முன்பும், இப்போதும் உயிரினங்கள் இல்லை என்றால்... எதிர்காலத்தில் உருவாகுமா? என்பதை வேறு கோணத்தில் பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------

செவ்வாயும்... மனிதனும்... நாமும்... (விஞ்ஞானம் மட்டுமில்லை)

--------------------------------------------------------------------------------

10 comments:

  1. வாழ்த்துக்கள் வளாகம்.
    உங்களுடைய பதிவுகள் சுவாரசியமான தகவல்களை தருகின்றது.

    ***ஆனால், அது தொடர்பாக தனி பதிவிடவில்லை... ஆனால், வேறு பதிவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அச் சிறுவனை பற்றி தெரியாதவர்கள் வாசித்து கொள்ளவும். சுவாரஷ்யமாகவும் வியப்பாகவும் இருக்கும்****

    அதை பற்றி கூறியுள்ள மற்றய பதிவர்களின் முகவரியை தர முடியுமா?

    ReplyDelete
  2. tnx...Anonymous...
    sure...
    http://sirippu.wordpress.com/2008/03/11/indego_child/

    ReplyDelete
  3. நன்றி வளாகம்.

    ReplyDelete
  4. Interesting.. like a fiction.. continue

    ReplyDelete
  5. ஆஹா...சுவராசியமாய் இருக்கிறது, இதே செவ்வாய் கிரகத்தை மையமாக வைத்து நான்
    ஒரு சிறுகதை எழுதி உள்ளேன், நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள்.
    நன்றி.

    http://saivakothuparotta.blogspot.com/2010/03/blog-post_14.html

    ReplyDelete
  6. ur wlc...Anonymous ...
    tnx...பிரசன்னா...
    sarithaan... ithu enda yukam thaane... :D
    tnx...சைவகொத்துப்பரோட்டா...
    sure... vaasikkireen.. :)

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான பதிவு !! பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  8. tnx...♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫...

    ReplyDelete
  9. hi valaakam,
    Very much interesting, valthukal

    regards
    Thanu

    ReplyDelete
  10. tnx... Thanusree...
    sry 4 lte reply :(
    plz pst ur comment on nw pst... :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected