Total Pageviews

Sunday, 21 March 2010

காட்டு மிராண்டி ஏஸியன்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)

---------------------------------------------------------------------------------------
சிறுவர்கள் இதை பார்க்க வேண்டாம்...
---------------------------------------------------------------------------------------
நேற்று பார்த்த வீடியோ காட்சியை நினைக்கவே வெறுப்பா இருக்கு. அந்த காட்சிகள் இன்னும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன.
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும் பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)

இந்த நித்தியானந்தா வின் கேவலமான செய்கைக‌ளை விலாவாரியாக... மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
பதிவர்கள் இதை பற்றி எழுதியதையும் என்னால் காண முடியவில்லை. ( எழுதியவர்கள் மன்னிக்கவும்.)
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.

தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
( ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)

இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ள வில்லை. ( மனிதனாக பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை‍  மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்|று நின்மதியாக தூங்குதுகள் என்று தெரியவிலை...
இதுகளின் வளி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு  மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்க வில்லை.)
முக்கியமாக...  இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான் அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள் பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும் இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.

வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து...  மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழ‌ந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.

இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்கன்ட வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.

ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிர வாதமும்... மாவோயிஸ்ட்களும் உருவாவதற்கு காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனனிலையில் இருபார்கள். இது சாதாராணமானது.

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.

இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது தான்.

சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்... இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பிந்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
 ---------------------------------------------------------------------------------------
இப்படி தான் போன வருடம் இலங்கையிலும் ஒரு பொலிஸ் மிருகம்... ஒரு மூளைசுகமில்லாத இளைஞனை கடலினுள் மூழ்கடித்து கொன்றது. அச்சம்பவம் நடக்கும் போது கூட... அந்த ஏரியாவில் 20 இக்கு மேற்பட்டவர்கள்... கூடி இருந்தார்கள். எவரும் தடுக்க எத்தனிக்கவில்லை. காரணம்... எமக்கென்ன அடிவாங்குவது நானோ... என்ற சகோதரமோ இல்லை என்ற குறுகிய மனப்பாங்கு தான்.
---------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------
ஆனால், ஒரு நிம்மதி... அந்த மிருகம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருக்கும் போதே... மாரடைப்பு வந்து இறந்து போனது.

எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள் இந்த விடையத்தை கணக்கெடுக்காதது  ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் எமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான். :-(

நாங்கெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்... சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று கதைச்சுகிட்டே எமது காலத்தை போக்காட்ட வேண்டியதுதான். :D
---------------------------------------------------------------------------------------

15 comments:

 1. சாதி என்று ஒன்று இருக்கும் வரைக்கும், நாம் 18 ம் நூற்றாண்டவர்களே!

  பதிவுக்கு நன்றி!

  -ஆதவன்

  ReplyDelete
 2. மோசமான நிகழ்வுதான். உறுத்துமா ஆட்சியாளர்களை

  ReplyDelete
 3. * " நாய் " என்று நான் அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள் பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள். *

  gud!!!

  ReplyDelete
 4. tnx... ஆதவன்,வாய்ப்பாடி குமார்... and Anonymous ...

  ReplyDelete
 5. என்னைப்பொறுத்தவரை முதலில் சாதிக்கட்சிகளை தடை செய்யவேனும்!

  ReplyDelete
 6. கிஷோர்22 March 2010 at 23:49

  என்ன கொடுமை..சே..........இவ்வளவு கொடுமையாக நடக்கமுடியுமா....? சே வெறுத்துப்போச்சு....!

  ReplyDelete
 7. tnx... viruman & கிஷோர் ....
  ///என்ன கொடுமை..சே..........இவ்வளவு கொடுமையாக நடக்கமுடியுமா....? ///
  Nadanthu irukkuthukale ithukal... :(

  ReplyDelete
 8. என்ன கொடுமை..மனிதகொடிய மிருகங்கள்

  சேய்.....
  Roja

  ReplyDelete
 9. enna kodumai ipadium mirukangal unda vendam avarkalitku kaduvul thandanai valanguvan nichayam

  ReplyDelete
 10. lishanthmithrau24 March 2010 at 06:45

  oh god !!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 11. tnx... Roja ... lishanthmithrau ... n Anonymous ...
  ///மனிதகொடிய மிருகங்கள்/// exactly...
  ///kaduvul thandanai valanguvan/// nampiran...

  ReplyDelete
 12. lishanthmithrau25 March 2010 at 21:21

  kattayama nadakkum.ippidiyaanavanga neenda naal uyiroida irukka maattanga

  ReplyDelete
 13. These Human Vampires will b siverely punished in the day of judgement.....................

  ReplyDelete
 14. முழுமையாக பார்க்க முடியவில்லை!!!!!! தண்டனை கிடைக்கவில்லை என்பது அதைவிட கொடுமை!!!!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails