லெமூரியா
---------------------------------------------------------------------------------குமரிக்கண்டம் தொடர்பான பதிவு எழுத முன்னர், நான் அது தொடர்பான ஒரு ஃப்லாஸ் விளம்பரம் போட்டு இருந்தேன். அதில், "தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு..." என்று ஒரு வசனத்தையும் இணைத்து இருந்தேன். அதன் நோக்கம் லெமூரியா கண்டத்துடன் தமிழரின் வரலாற்றையும் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே.
அதன்படி இன்று அந்த ஒப்பீட்டை கொஞ்சம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்...
இதில் எழுதப்போகும் பல விடையங்கள் நான் வாசித்து; சரியாக இருக்கலாமென நம்பும் விடையங்களே.... சிலது நான் இப்படி இருந்து இருக்கலாம் என்று நினைப்பவை... ஆகவே, எதுவும் நூறு வீதம் நம்பத்தக்கது இல்லை.
நீங்களும் உங்களுக்கு தோன்றுபவற்றை கொமென்ட்ஸில் போடுங்கள். அப்போதுதான் இந்த பதிவு கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும். :) .
இந்த பதிவு எழுதும் போது பல சம்பவங்கள், இந்துக்களின் புராண நூல்களை அடிப்படையாக கொண்டே இருக்கும். ( நான் இந்து என்பதால் அவை பற்றிதான் எனக்கு தெரியும்.) இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு மத நூல்கள் அல்லது கோட்பாடுகள் தெரிந்திருந்தால் எழுதவும். :) .
---------------------------------------------------------------------------------
நூறு... இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்...முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)
இதற்கான காரணம்... குளூக்குறி (?) ( இரகசிய மொழி) / மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
காந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.
இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,
சமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.
குமரிக்கண்டத்தில்...
தொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது... அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத மொழியாக இருக்கலாம். ( நன்றி : குமரி மைந்தன்). ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன. காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.
இன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.
அடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.
அதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்... இருக்கு, யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.
மகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம். ( இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த லெமூரியா தொடர்பதிவுகளில் கூறியிருந்தேன். )
அது சம்பந்தமாக மேலதிகமாக நான் தெரிந்துகொண்ட தகவல்களை இதில் குறிப்பிடுகிறேன்...
மகாபாரதம்...
பாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது... இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி... மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம். ( துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம். :\ )
டெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.
அசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றனவாம்.
பதிவு மிக நீளமாகிவிட்டது. இந்த பதிவில் ஒப்பீடுகள் பெருசாக இல்லை. அடுத்த பதிவில் வேத வரலாற்றுடனான பல சுவாரஸ்யமான ஒப்பீடுகளை பார்ப்போம்.
---------------------------------------------------------------------------------
இந்த பதிவு இட முன்னர், நண்பன் சுதர்சஷனின் வரலாற்று பதிவை வாசித்தேன். தமிழர் வரலாறு சம்பந்தமாக சிறந்த ஒரு பதிவினை இட்டு இருந்தான். (தமிழன் - வரலாறு - வரலாற்றை அறியாதவன் இனம் நிச்சயம் அழியும்)
நண்பர்கள் என்னையும் அவ்வாறான வரலாற்று பதிவு இட சொன்னார்கள். அதனால், நானும் தமிழர் தொடர்பான ஒரு பதிவை இட்டுள்ளேன். ( ஆனால், இது உறுதிப்படுத்த தக்க வரலாற்றைக் கொண்டபதிவல்ல. )
---------------------------------------------------------------------------------
Nice article!
ReplyDeletekeepitup brother!!!
SUPERB !!!!!!!!!
ReplyDeleteஅருமை
ReplyDeletetnx... Deep, Lishanthmithrau & Ahori...
ReplyDeletePlz visit here...
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_7210.html
(intha pathivukku sampanthamillaathathu thaan. aanaal mukkiyamaanathu... anaivarum padikka veendiya... manithaapimaana pathivu... )
நல்ல பதிவு நண்பரே.
ReplyDeleteமேலும் எதிர்ப்பார்க்கிறேன்...!
Dear Friend Valaakam,
ReplyDeleteGreetings to you. We have to bring our language, History and Great acheivement by ancestors to the light. That should be accepted by all over the world. It is not honour speaking ourselves about our Tamil and History.
For that I think you have started to write and laid foundation.
My Wishes for your great intention
Thanks, Good article, keep writting such a good think
Thanks,
Azhagar
www.periyakottai.blogspot.com
லெமூரியா கண்டத்தை பற்றி இன்னும் விரிவாக
ReplyDeleteதெரிந்து கொள்ள, கன்யாகுமரி காந்தி மண்டபம் அருகில் உள்ள
மியூசியத்தில் சில பல குறிப்புகள் உள்ளன. போய் பார்த்து அறிந்து கொள்ளவும்.