Total Pageviews

Tuesday, 13 April 2010

வருடப்பிறப்பும்... ஏப்ரல் ஃபூலும்...

வருடப்பிறப்பும் ஏப்ரல் ஃபூலும்....
---------------------------------------------------------------------------------
அவ்... திடீரெண்டு ஒரு வித்தியாசமான ஜோசனை வந்துது... அதை உங்களோட பகிர்ந்துக்க போறேன்...

இது வாசிக்க முதல் லெமூரியா கடைசி பதிவை ஒருக்கா வாசிச்சா நல்லம்....
---------------------------------------------------------------------------------
இன்றைக்கு தமிழ் புத்தாண்டை அனைவரும் கொண்டாடுறாங்க... அது சம்பந்தமாக தான் நானும் எழுதப்போறேன்...

ஏப்ரல் 1ம் திகதி... உலகம் முழுவதும் முட்டால்கள் தினத்தை சந்தோஷமாக மாறி மாறி முட்டாலாகி... முட்டாலாக்கி... கொண்டாடினார்கள்.

இந்த முட்டால்கள் தினம் கொண்டாடும் முறை உருவானதே.... ஒரு சுவாரஷ்யமான விடையம்தான்...





---------------------------------------------------------------------------------
16 ம் 17 ம் நூற்றாண்டுகளில்... பிரான்ஸிக்கும், இங்கிலாந்துக்கும் நாடுகளை வசப்படுத்துவதில் கடுமையான போட்டி நிலவியது. பிரெஞ்சுக்காரர், இங்கிலாந்தவர்களை... " தலை கீழாக சிந்திப்பவர்கள்..." ( றோட் சைட் வலதுபுறம் என்பதால்) என்றும்; இங்கிலாந்தவர்கள், பிரெஞ்சுக்காரரை "வைன்னை குடிச்சுட்டு பெண்களுக்கு பின்னுக்கு சுத்துபவர்கள்... மாறி ஜோசிப்பவர்கள்..."( றோட் இடதுபுறம் என்பதால்.) என்றும், மாறி மாறி நையாண்டி பண்ணுவார்கள். இன்றும் இது தொடர்கிறது.

அதே சமயம், நாடுகளை பிடிப்பதில் பிரான்ஸினை விட இங்கிலாந்து பெருமாதிக்கம் செலுத்தியது.
பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இங்கிலாந்தவர் ஜனவரி 1 ஐ புதுவருடமாக கொண்டாடினார்கள். ஆனால், பிரெஞ்சுக்காரர் ஏப்ரல் 1 ஐயே தமது புதுவருடமாக கொண்டாடினார்கள். இது பிடிக்காத இங்கிலாந்தவர்கள் ஏப்ரல் 1 ஐ முட்டால்கள் தினமாக அறிவித்தார்கள். ஏப்ரல் 1 அன்று புதுவருடம் கொண்டாடுபவர்கள் முட்டால்கள் என்கிற றேஞ்சுக்கு தமது கருத்தை தந்திரமாக பரப்பினார்கள்.
இப்போது, அமெரிக்கா என்ன சொன்னாலும் பல நாடுகள் "ஆமா..." போடுற மாதிரி... அப்போது, இங்கிலாந்து என்ன சொன்னாலும் "எசமான்... சொன்னா சரிதான்...." என்று ஏத்துகிட்டாங்க.
காலப்போக்கில், பிரான்ஸ்கூட வேறு வழி இல்லாமல் ஜனவரி 1 ஐ புதுவருடமாக ஏற்றுக்கொண்டுச்சு.

இது என்ன சம்பந்தமில்லாமல்... எழுதி இருக்கன் என்று ஜோசிக்க வேணாம்...

ம்ம்ம்... லெமூரியா கடைசி பதிவில் நான் சொல்லி இருந்த சில கருத்துக்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்...

16 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை, தமிழ் கலண்டரின் படி இருக்கும் தை1 உம், ஆங்கிலேயரின் (?) கலண்டரின் ஜனவரி 1 உம் ஒரே தினமாகவே இருந்தது. இதை, 16ம் நூற்றாண்டிலிருந்த "போப் கிரகெரி" எனும் கிறிஸ்தவ போப் தான்; மதமற்ற தமிழரின் ஆண்டு தொடக்கமும் தமது ஆண்டு தொடக்கமும் ஒன்றாக வருவதை விரும்பாத காரணத்தால்...  14 நாட்களை தமது நாட்காட்டியிலிருந்து கழித்து, இன்றைய ஜனவரி 1 முறையை உருவாக்கினார். (அந்தகாலத்தில், கழிக்கப்பட்ட 14 நாட்களுக்கும் வேலையாட்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக பெரிய சிக்கலே உருவானதாம்.) அதனால்தான் இப்போது இரண்டு கலண்டர்களுக்குமிடையே 14 நாட்கள் வித்தியாசப்படுகிறது.

ஆகவே,  போப் கிரகெரி மாற்ற முன்னர்... தமிழரின் தைத்திருநாள் தான் வருடப்பிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது.

லெமூரியா பதிவில்...  5 விதமான கலண்டர் முறைகள் வழக்கத்திலிருந்ததாக எழுதி இருந்தேன்...
அதில், புது வருடப்பிறப்பும் (ஏப்ரல் 14) ஒன்று...

இதை நாம் கவணிக்க வேண்டும்...

இந்த புது வருடப்பிறப்பைத்தான், பிரெஞ்சுக்காரர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.
ஏப்ரல் 1 ( தமிழ் கலண்டர்படி ஏப்ரல்14). இங்கும் போப் கிரெகெரியின் மாற்றத்தால் ஏற்பட்ட அதே வித்தியாசம் தான். தற்போது, நான் மேலே சொன்னபடி அது முட்டால்கள் தினமாக்கப்பட்டு விட்டது.

இதெல்லாம் பார்க்கும் போது...
தமிழிலிருந்துதான் பல மொழிப்பிரிவுகள்( இனங்கள்) உருவாகின என்று சொல்லப்படும் கருத்து சம்பந்தமாக ஜோசிக்க வேண்டியுள்ளது.
பண்டைய மொழியாக கருதப்படும் சுமேரிய மொழியில் கூட தமிழ் கலப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
அப்பிடினா, ஏன் இன்று தமிழ் அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது??? இடையில் என்ன நடந்தது??? ஒன்றுமே விளங்கல.

இந்த பதிவில எனக்கு தோன்றினத எழுதி இருக்கேன்...
பிழை இருந்தா சுட்டிக்காட்டவும். :)
இது சம்பந்தமான உங்களது கருத்துக்களை சொல்லவும்... :)
---------------------------------------------------------------------------------
சரி... உங்களை நான் வாழ்த்த வேணாமா???
















---------------------------------------------------------------------------------

8 comments:

  1. கொஞ்சம் எழுத்திப்பிழை இல்லாமல் எழுத முயற்சியுங்கள் நண்பரே. மற்றபடி தங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது.

    anbudan
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  2. உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. tnx... hayyram...
    neenga sollurathu sari thaan... overa eluththu pilai irukku...
    ini post poda muthal check panniddu podukireen... :)

    ReplyDelete
  4. ஏன் இன்று தமிழ் அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது??? இடையில் என்ன நடந்தது??? ஒன்றுமே விளங்கல.///
    தமிழில்ல பதிவுகள் எழுதுற உங்களுக்கு என் இப்படிப்பட்ட வீண் கவலை. இனிமேல் தமிழ் அழிய வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  5. நன்றி...chandru...

    இது நான் எழுத்து பிழை விடுவதை சொல்ல வில்லை என்று நம்புகிறேன். :)

    பதிவுகளை எழுதி என்ன பிரஜோசனம். வெளி நாடுகளில் இலகுவாக தமிழ் அழிகிறது. இங்கு இயங்கும் தமிழ் பாடசாலைகள் பொதுவாக பணத்திலேயே குறியாக இருக்கின்றன. சேவை நோக்கம் என்று இல்லை. ( சேவை நோக்கம் தேவையில்லை. ஆனாலும், காசில் மட்டும் கு|றியாக இருப்பதை தவிர்க்கலாம்.

    விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்களை தமிழில் மொழிமாற்றி விடுவது தமிழ் அழிவை தாமதப்படுத்த ஒரு சிறந்த முறை என நான் நினைக்கிறேன். ( நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் செய்யலாமே... :) )

    ReplyDelete
  6. உண்மையிலே விக்கி பீடியா சேவை பாராட்டதக்கது

    ReplyDelete
  7. karthik 6 th std chennai public school8 May 2010 at 10:15

    ஜோசிக்க ---- யோசிக்க ---- சிந்திக்க ---- சிந்தன்னை செய்ய ---- ஜோசிக்க நல்ல இல்லை

    ReplyDelete
  8. Hi,
    Enakku intha article la onnum vilanka illa. konjam detaileda solla try pannunga. (Arani)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected