விளங்க முடியா பரிமாணங்கள்
---------------------------------------------------------------------------------ஒரு இடைவெளிக்கு பிறகு பதிவு எழுதுகிறேன்... :(
இறுதி பதிவில் சொன்னவாறு...
ஏலியன்ஸ்... பேய்...கடவுள்... (விளங்க முடியா பரிமாணங்கள்...)
பதிவின் தொடர்ச்சியை பார்ப்போம்... அனிமேஷன் மூலமாக விளக்குவதாக கூறியிருந்தேன்... மீண்டும் படிப்பு ஆரம்பித்ததால் செய்ய முடியவில்லை. ( பதிவிட முடியாமைக்கும் அதுவே காரணம்.)ஆனால், விரைவில் விளக்கத்துடன் செய்து போடுவேன்.)
போன பதிவில் 4ம் பரிமாணமாக கருதப்படும் காலம் தொடர்பாக பார்க்கையில்... அப்பரிமாணத்தை அறிமுகப்படுத்திய ஐன்ஸ்டைனின் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி தொடர்பான சில கருத்துக்களையும் எழுதியிருந்தேன். வந்த கொமென்ட்ஸ்களில் அது சம்பந்தமான கருத்துக்கள் அதிகம்மாக இருந்தது.
-----------------------------------------------------------------------------
முக்கியமாக, நான் கூறியிருந்தேன்...
ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது... நாம் இறந்தகாலத்துக்குதான் செல்ல முடியுமென...
ஆனால், Smss என்பவர் இல்லை எதிர்காலத்துக்குதான் செல்ல முடியுமென தனது கருத்தை கூறியிருந்தார். (நிரூபிக்க பட்ட உண்மை என கூறியிருந்தார்... )
நான் நெட்டில் அது சம்பந்தமாக (மேலோட்டமாக) தேடிய வரையில்...
அப்படி எதுவுமே நிரூபிக்க படவில்லை.
ஆனால், காலம் மாறுபடும் என்பது நிரூபிக்க பட்டுள்ளது.
ஒரே முறையில் செய்யப்பட்ட இரு கடிகாரங்களை ஒப்பிட்டு நிரூபிக்கப்பட்டது. அதாவது, ஒரே மாதிரியான இரு கடிகாரங்களில் ( பொறிமுறைக்கடிகாரமல்ல) ஒன்றை, ஒரு விண்கலமொன்றினுள்ளும் இன்னொன்றை ஆய்வு கூடத்திலும் வைத்து... விண்கலத்தை பூமியை வேகமாக ( ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைவானதே...) சுற்ற செய்த போது... பல சுற்றுக்களின் பின்னர், மணிக்கூட்டின் வாசிப்பில் ஒரு சிறு வித்தியாசம் இருந்தது.
இது தான் தற்சமையம் பெளதீக ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இங்கு போட்டுள்ள படங்கள்... நெட்டில் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி பற்றி தேடிய போது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக பட்ட படங்கள்... இதில் படம் மூலமாகவே அடிப்படை தியரி விளக்கப்பட்டுள்ளது.(!?)
----------------------------------------------------------------------------------
போன பதிவில் கூறிய... மனிதனால், விண்வெளியை நோக்கி விடப்பட்ட சவால் இது தான்....
----------------------------------------------------------------------------------
இன்றைய மனிதனின் உருவம்...
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான மனித உருவிலிருந்து வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
தொல்பொருள் ஆய்வாலர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய எலும்புக்கூடுகளை பார்க்கு போது... வாய் பகுதி நீண்டதாகவும்... கீழ்த்தாடை தடித்ததாகவும்... கைகள் நீண்டதாகவும்... காணப்பட்டுள்ளது. காரணம், அன்றைய சூழ்னிலையில் அவ் மனிதன் வேட்டையாட மட்டுமே தெரிந்து இருந்தான். எனவே, வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு நீண்டகைகளும்... உணவை ( பச்சை) சிரமமின்றி உண்பதற்கு ஏற்றவாறு நீண்ட தாடையும் இருந்து இருக்கின்றன.
பின்னர், காலம் செல்ல செல்ல மனிதன் அறிவை பயன் படுத்தி உணவை பதப்படுத்தி உண்ண தொடங்கியதும்... அந்த நீண்ட வலுவான தாடைகளின் அவசியம் அற்றுப்போனது.
அதேபோல், வேட்டையாடுவதிலிருந்து பயிச்செய்கைக்கு மாறிய போது... கையின் பாவணையும் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தமையால்... அதனது நீளமும் சற்று குறைந்தது.
ஹீ...ஹீ... என்ன சம்பந்தமில்லாமல் இருக்குதே என்று நினைக்க வேணாம். சம்பந்தத்தோடதான் எழுதி இருக்கேன்.
---------------------------------------------------------------------------------
என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...
இது அவசர அவசரமாக எழுதப்பட்ட பதிவு... அடுத்த பதிவில்... சுப்பர் விடையங்களுடன் சந்திப்போம். :)
---------------------------------------------------------------------------------
GMT 00.00 இக்கு எழுதுவதால் திரட்டிகளில் இணைக்க முடியவில்லை... :(
---------------------------------------------------------------------------------
காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons). பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம். இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் . உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும். அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.
ReplyDeleteஇததுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்ச்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travel என்கிறோம். அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும் செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.
அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார். அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை. அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது. ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று. இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்.
இதன் மூலமா ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்திற்குதான் செல்ல முடியும்(அறிய முடியும்), எதிர் காலத்திற்கு அல்ல.
எனக்கு time travel மூலம் எதிர் காலத்திற்கு செல்வோம் என நம்பிக்கை இல்லை. சிலர் parallel universe எனும் கோட்பாட்டின் படி இரண்டும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity ல பயனிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்.
Superb chandru...
ReplyDeletetnx...
ithu sampanthama melathika thakavalkalai aduththa pathivil podukireen... :)
*(nw mobile :()
oh appidiya? gud
ReplyDeleteyh...yh... apidiye thaan... tnx...lishanthmithrau...
ReplyDeleteGud.. :)
ReplyDeletetnx... Siva Ranjan... :)
ReplyDeleteநாம் எதிர்காலத்தில் பயனிக்க முடியும் என்பது நிருபிக்கபட்ட ஒன்றுதான் ... search GPS system and general relativity
ReplyDelete