Total Pageviews

Tuesday 27 April 2010

ஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 3 (விளங்க முடியா பரிமாணங்கள்...)

விளங்க முடியா பரிமாணங்கள்
-------------------------------------------------------------------------------
முன்னைய பதிவுகள்...
பதிவு 01
பதிவு 02
-------------------------------------------------------------------------------
போன பதிவுக்கு... சந்துறு என்பவர்... ஒரு சிறந்த விளக்கத்துடனான கொமென்ட்ஸினை இட்டு இருந்தார்... அதனை இங்கு ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன்... இவ்விளக்கத்தின் மூலம் ரைம் ரவலின் மூலமாக இறந்த காலத்துக்கு செல்ல முடியும் என்பதை இலகுவாக விளங்கி கொள்ள முடியும்.
-------------------------------------------------------------------------------

"காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons). பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம். இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் . உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும். அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.
இததுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்ச்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travel என்கிறோம். அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும் செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.
அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார். அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை. அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது. ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று. இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்.
இதன் மூலமா ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்திற்குதான் செல்ல முடியும்(அறிய முடியும்), எதிர் காலத்திற்கு அல்ல.
எனக்கு time travel மூலம் எதிர் காலத்திற்கு செல்வோம் என நம்பிக்கை இல்லை. சிலர் parallel universe எனும் கோட்பாட்டின் படி இரண்டும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity ல பயனிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்."

///one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம். ///
இதில் இரண்டு விதமான கொள்கைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்...

ஒன்று... உலக இயக்கம் ஒரே தொடராக நடந்து கொண்டிருக்கிறது... இதன் அடிப்படையில் பார்த்தால், எதிர்காலத்திலிருந்து வருபவர்களால் (???) இறந்த காலத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தினால்... உலக இயக்கத்தின் தொடர்ச்சி மாற்றமடையும்.
அதாவது... உங்களை எதிர்காலத்திலிருந்து வந்தவர் கொன்று விட்டால்... உங்கள் மூலமாக எதிர்காலத்தில் உருவாகி இருக்கக்கூடிய ( பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்...) அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமாம்.
இந்த கொள்கையில்...
எவ்வாறு அந்த மாற்றம் நிகழும் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை... அதாவது, ஒருவரை இறந்த காலத்தில் கொன்றால்... நிகழ்காலத்தில் அவருடன் தொடர்புடைய நிகழ்வுகள் திடீரென அழியுமா/ மறையுமா? எனும் கேள்விக்கு சிறந்த விளக்கமில்லை. :(

அடுத்த கொள்கையின் படி...
பல ஃப்ரேம்களாக உலக இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதாகும். ( இதை தான் சந்துறுவும் சொல்லி இருக்கிறார்.)
இதன் படி இறந்தகாலத்தில் செய்யும் மாற்றம்... அந்த ஃப்ரேமில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்...
இது நினைத்து பார்க்கவே குழப்பமான கொள்கை.
காரணம், ஃப்ரேம் கொள்கையில்... ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் இடையிலான காலத்தை தீர்மானிப்பது கடினமானது...
ஒரு ஃப்ரேமிலிருந்து இறந்தகாலத்துக்கு சென்றால்... பின்பு எப்படி அதே ஃப்ரேமுக்கு திரும்பி வருவது? என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன.

சந்துறு சொன்ன படி...
சூரியனிலிருக்கும் ஒளி எம்மை வந்து சேர 8 நிமிடம் எடுக்கின்றது. எப்பவோ நடந்த நட்சத்திர வெடிப்பு தற்போது தான் தெரிகிறது.

அதே போலத்தான்... இந்த பிரபஞ்சம் தோன்றிய போது ஏற்பட்ட பெரு வெடிப்பினையும் தற்போதும் பார்க்கலாம்... இது 14.5 (??) பில்லியன்ஸ் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டது. இதை நாம் படம் பிடிக்க முடியாது... ஏன் என்றால் நம்மிடம் வேகமில்லை... :(
(இப்பிர பஞ்ஞமே சிறியதொரு அணு ( அணுக்கரு) இலிருந்து தான் உருவாந்து.... என்பதை காட்டுவதே இந்த பெரு வெடிப்பு கொள்கை.)
ரைம் ரவலில் முதலில் எழுத மறந்ததையும் இதில் எழுதி விடுகிறேன்...

நாம் ஒளியின் வேகத்தை அன்மிக்கையிலேயே... வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நமது பருமன் பூச்சியமாகிவிடும்...
(அதாவது நம்மை தெரியாது.) ரைம் ரவல் மெஸினிலிருக்கும் எங்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது... அதே போலத்தான் இருப்போம்.
-------------------------------------------------------------------------------
போன பதிவில்...
பழைய மனிதர்களுக்கும்... தற்போதைய மனிதர்களுக்கும்... இடையிலான வித்தியாசத்தை எழுதியிருந்தேன்.

தற்போது கூட...
மனிதர்களில் பரிணாம‌ வளர்ச்சி நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது...
உதாரணமாக...
முன்னர், தலைமுடி கொட்டுவது சம்பந்தமான பிரச்சனை பெரிதாக இருப்பதில்லை... ஆனால், இப்போது பெண்களிடம் கூட அந்த பிரச்சனை இருக்கிறது... இது கூட ஒரு பரிணாம‌ வளர்ச்சியின் படி தான்...
காரணம்,
எவ்வாறு... உடலிலிருந்த முடியின் தேவை முடிவுற்றதும் (உடை பாவணைக்கு வந்த பின்னர்) , அது உதிர்வடைந்ததோ.... அவ்வாறே தற்போது தலை முடியின் தேவையும் அற்றுப்போவதால்... அது உதிர்கிறது. ( மூளை அதிகமாக பாவிக்கப்படுவதும் காரணமாம்... :D )

விஞ்ஞானிகள்...  மனிதனின் அடுத்த பரிணாமம் பற்றி எதிர்வு கூறியுள்ளார்கள்...

அதில் ஒன்று...
அதிகமாக மூளையை பயன்படுத்தும் பகுதியை சார்ந்த மக்களின் தலை பெரிதாக பரிணாமமடையும் எனவும்... இயந்திரங்கள் மனிதன் செய்ய வேண்டிய பல வேலைகளை எதிர்காலத்தில் செய்யும் என்பதால்... மனிதனுடைய உடல் வலு தற்போது தேவைப்படும் அளவுக்கு தேவைப்படாது. எனவே, உடல் சிறுத்துவிடும். ( தொந்தி வயிறு இப்போது அதிகரித்து வருகிறது... பேந்து எப்படி உடல் சிறுக்கும் என்று டவுட் வரலாம்... இது இப்போது உடனே ஏற்படப்போகும் மாற்றமில்லை... சில வேளை எதிர்காலத்தில்... இப்போது, விண்வெளி வீரர்கள் பாவித்துவரும்... சத்து மாத்திரைகள், சாதாரணபாவணைக்கு வந்தால், தேவையில்லாத தொந்தி வர வாய்ப்பில்லை... )

இதற்கும்... ஏலியன்ஸிக்குமிடையிலான தொடர்பினை ஜோசித்து பாருங்கள்... ( அடுத்த பதிவில் தொடர்பினை எழுதுகிறேன்...)
-------------------------------------------------------------------------------
இனி நாம்... ஏலியன்ஸ் சம்பந்தமானதை பார்ப்போம்...

ஏலியன்ஸ் தொடர்பான பிரலமான சம்பவங்களை முதலில் பார்ப்போம்... ( சம்பவங்களில் சம்பந்த பட்டவர்களின் பெயர்கள் நினைவில்லை... :( )

அமெரிக்காவில்... ஏதோ ஒரு பிரதேசத்தில்...
ஒரு கன்னிப்பெண்னின் நடவடிக்கையில் மாற்றமேற்படவே... அவளது பெற்றோர், அவளை டொக்டரிடம் அழைத்துச்சென்றார்கள்.  அவளை பரிசோதித்த டொக்டர்ஸ் அவள் கர்ப்பம் அடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அப் பெண்ணோ அதனை அடியோடு மறுத்தால்... மேலும்... பெண்ணின் நடத்தையிலும் சில மாற்றங்கள் தென்படவே... டொக்டர்கள் அவளை ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள்.

ஹிப்னாடிஸத்தின் போது... அப்பெண் சொன்ன விடையங்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது....

அவள் சொன்னதன் சுருக்கம் இது தான்....

ஒரு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தனியாக வீட்டிலிருந்த போது... ஜன்னலடியில் ஏதோ சத்தம் கேட்பதாக உணராவே, ஜன்னலோரமாக சென்று பார்த்தேன். அங்கு சில குள்ளமான...ஒல்லியான.... பெரிய தலையுடைய மனிதரை ஒத்த உருவங்கள்... வீட்டை நோக்கு வந்துகொண்டிருந்தது. நான் வீட்டை தாள்பால் போட்டு விட்டு... உள்ளேயே இருந்தேன்... அவர்கள், கதவை திறக்காமலே உள்ளே வந்து... என்னை நோக்கி ஏதோ செய்துவிட்டு... என்னை அவர்கள் வந்த வாகனத்துக்குள் அழைத்து சென்றார்கள். பின்னர்.... எனது உடலில் ஏதேதோ சோதனை நடத்தினார்கள்.
இறுதியில்... நான் எங்கு இருந்தேனோ அங்கேயே இருந்தேன்....

இது தான் அப்பபெண் சொன்னது.... உடனெ இத்தகவல்... யு.ஃப்.ஓ இக்கு அறிவிக்கப்பட்டு பதுவு செய்யப்பட்டது. 6,7 மாதங்களில்... இன்னொரு பெருமதிர்ச்சி ஏற்பட்டது... அது என்ன என்பதையும்...மேலும் சில சம்பவங்களையும்...  அடுத்த பதிவில் பார்ப்போம்... :)
-------------------------------------------------------------------------------

10 comments:

  1. ஏலியன்ஸ் மிச்ச கதையை முடிஞ்சா பின்னூட்டத்திலையே போடுங்க .. அவளவு ஆர்வமா இருக்கு ....

    நாங்க அதுகளை டெஸ்ட் பண்ண முதலே அதுகள் எங்களை டெஸ்ட் பண்ணுதுகள் போல இருக்கு .

    ஒரு வேளை அந்த பெண் பார்த்தது கனவா இருக்குமோ ?

    ReplyDelete
  2. நீங்க எங்கேயோ போயிட்டிங்க, நான் இன்னும் இங்கேயே நிக்கிறேன்!

    http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_28.html

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன ஏலியன் நிகழ்ச்சியை நான் முதன்முதலாக அறிகிறேன். உங்கள் பதிவை சீக்கிரம் தொடருங்கள். இடைவெளி அதிகம் வேண்டாம் .

    ReplyDelete
  4. My Friend,

    Sorry for typing in English. Now only i am seeing this blog after a long time
    I Think you may be wrong. I have told that Traveling to the future is proven fact!..... I will explain this. once you travel faster and faster time will slow down.. this is what Einstein's Special Theory of Relativity is all about. Many astronauts have travelled around 20000 miles per second in the outer space and they are fully certified Time Travelers! (thats what i told "Scientifically proven".. i think you misunderstood something i haven't told) once you reach the Speed of light 'c', your time will stop! (but currently traveling at speed of light is not possible).... because by mathematics, traveling at the speed of light will give you time = infinity!

    for example : if you travels at 99.99% speed of light your time is ~71% slower than rest of us. if you trave at this speed for 10 years from 2010 in outer space and when u return to earth...in earth the year will be 2710 years!
    In other words, you have travelled 710 years into the future!

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=V7vpw4AH8QQ

    this explains the Time travel to future in easy manner...and sad for you, time travel to the past is scientifically not proven (even in theory)...travel to the past is not possible..

    But there are some strange objects in the universe that will allow us to travel to the past.....they are Black holes, wormholes..... but manipulating these is cumbersome

    ReplyDelete
  6. tnx... Anonymous
    ----------------------
    நன்றி...S.Sudharshan...
    அவ்.. இதிலயே போட்டா இன்ரெஸ்ட்டிருக்காது...
    கனவா இருக்க சான்ஸில்லை... ஹிப்னாடிஸத்தில பரிசோதித்தது என்றதால உண்மையாத்தானிருக்கும்.
    ----------------------
    நன்றி...வால்பையன்...
    நீங்கதான் எங்கேயோபோட்டிங்க.... ( பதிவை வாசித்தேன் சுப்பர்... )
    நான் இன்னும் தவந்துக்கிட்டு இருக்கன்... நீங்க ஓடுறிங்க...
    ----------------------
    நன்றி...chandru2110...
    ஓம்... இந்த முறை குயிக்கா எழுதுவன்...
    அது... இலங்கைல... மித்திரன், மெற்றோ நியூஸ்ல வந்தது...
    ----------------------
    நன்றி...smss...
    ஆ... அடுத்த பதிவில.. ஃபுல்லா செக் பண்ணிட்டு உங்களுக்கு பதில் போடுறன்...

    ReplyDelete
  7. its true!!!!!!!!!!!

    ReplyDelete
  8. lishanthmithra1 May 2010 at 16:05

    nice!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

    ReplyDelete
  9. tnx... Anonymous and lishanthmithra... :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected