Total Pageviews

Thursday 8 April 2010

விமர்சனமாமாம்... (அங்காடித்தெரு)

ங்காடித் தெரு
---------------------------------------------------------------------------------
எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாது...
இந்த படத்தை பார்த்த பிறகு இதைப்பற்றி ஏதாச்சும் எழுதனும் என்று தோன்றிச்சு அதால எழுதுறன்... :)
விமர்சனம் என்று நினைக்க வேண்டாம்.

இந்த படம் பார்க்க முதல், இந்த படம் தொடர்பான ஒரு விமர்சனமும் நான் வாசிக்கவில்லை...

அதால, நான் பார்த்த ரசித்த விடையங்களை மட்டும் எழுதுகிறேன்...
விமர்சனம் என்று பார்த்தா தவறு இருக்கும்... மன்னிச்சுகொங்கோ....
---------------------------------------------------------------------------------

ஆரம்பமே இரண்டு இளம் காதல் ஜோடிகள்... வழமையான படங்களில் காட்டுவது போன்று குறும்புத்தனத்துடனான ஆரம்பம்... சரி வீட்டைவிட்டு ஓடிவந்து இருப்பாங்க என்று நினைத்தேன்... ( வழமையா அதுக்கு தான் இப்படி காட்டுவாங்க... :) ) எதிர்பாராத விதமாக ஓர் எதிர்பார்த்த திருப்பம்... அக்ஸ்ஸிடன்!!!
ஆரம்ப காட்சிகளே படம் கீழ்த்தட்டு வர்க்கத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்க போகுது என்பதை காட்டுகிறது...

ஃப்லாஸ் பக்கில் கதை போகுது...

பிந்தங்கிய கிராமத்தில் கதையாரம்பமாகிறது...
ஹீரோ பாடசாலை மாணவன்... அவர் நண்பராக கனாகானும் காலங்களில் வந்த பெயர் தெரியாத நபர்.
( பாடசாலை மாணவர்களுக்கேற்ற தோற்றம்... ; சில படங்களில்... ஹீ..ஹீ... நான் சொல்ல தேவையில்லை... "தமிழ் படம்" சொல்லிட்டுது... :P )

கூலிவேலை செய்யும் தந்தை தனது மகனை என்ஜினியராக்க வேண்டுமென ஆசைடுகிறார்... ( வழமையான ஆசை... :D )
மகன் நன்றாக படித்தும்... தந்தையின் இறப்பின் பின்... குடும்ப பொறுப்பையேற்று அண்ணாச்சி கடைக்கு வேலைக்காக சென்னை வருகிறார்... கூடவே நண்பரும்...
(இங்கு... கடைக்கு வேலையாட்களை தேர்வு செய்யும் போது... "அப்பனில்லாத... அக்கா தங்கச்சியுள்ளவங்களா பார்த்து வேலைக்கு சேரு... அப்பதான் ஒழுங்கா செய்வாங்க "  என்று... ஒரு வசனம் வருகிறது... , ஜோசிக்க வேண்டிய வசனம்... நல்ல வேலைக்கு போயும் தறுதலைகளாக தெரிபவர்கள்... குடும்ப பொறுப்பை ஏற்காட்டியும் தமது தன்னைதானேயாவது பார்க்கனும்...)

இப்போது கதை சென்னையில் நகர்கிறது...
என்னை பொறுத்தவரையில் முற்று முழுதாக வித்தியாசமான சென்னை... (ஹீ...ஹீ... இதுக்கு முன்னாடி... சென்னை என்றதுமே... ஒருத்தர் ஓடிவருவார்... பின்னாடி ஒரு கும்பல் துரத்தும்... பேந்து ஓடியவருக்கு சிகப்பு சாயம் போட்டு... சென்னை ரொவ்டிஸத்தை(?!) படத்துக்கு படம் வித்தியாசமாக (??) காட்டுவாங்க.... :P அதோட பார்க்கக்க இது வித்தியாசம்..)

கடையில் இவர்களை போலவே... பலர் வேலைசெய்கிறார்கள்...
கராரான சுப்பர்வய்ஸ்ஸர் ( படமென்று பார்த்தா இவருதான் வில்லன். )
ஊளியர்களுக்கு சாப்பாடு போடும் முறை... அருவருக்கத்தக்கதாக உள்ளது... (நிஜம் எப்படியோ தெரியல... நான் இதை நம்புகிறேன்... நம்மட கொன்றோலர்கள் கவணிக்க வேண்டிய விடையம்...  அவர்கள் மட்டுமில்லை முதலாலிவர்க்கமும் இதைகவணிக்கனும் (ஹீ...ஹீ... நடக்கிறகாரியமா??? ) இல்லாட்டி இந்தியா வல்லரசு என்று சொல்லுறது நம்மட முதுக நாமே தட்டிக்கிற மாரிதான்... :\ )
வேலையாட்கள் அவர்களது வறுமையை காரணமாக கொண்டு அடிமைகளாக‌ நடத்தப்படுகிறார்கள்... / ஹீரோயின் சொல்வது பகீர்... /  நடக்ககூடியதுதான்...
இதற்கிடையில் எதிர்பார்த்தது போன்று காதல் பத்திக்கிச்சு....

இவற்றுக்கு மேலாக...
கதையில் வரும் சில கதாப்பாத்திரங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன...

அந்த குள்ளமான நபரினதும் அவரின் மனைவியினதும் வசன (உணர்வு) வெளிப்பாடுகள் சுப்பர்... இருவர் சொல்வதுமே சரிதானே...

அடுத்து....
காதல் கடிதம் சுப்பர்வய்ஸ்ஸரிடம் மாட்டியதும்... நான் உண்ணை காதலிக்க வில்லை... என்று சொல்லும் காதலனுக்காக காதலி தற்கொலை செய்யும்காட்சியும் ; பின்னர் மூலைபாதிப்புற்றவராக வரும் காட்சிகளும்... பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது...
காதலனை புரிந்துகொள்ளாத காதலி...
ஒரு குடும்ப பொறுப்பு உள்ளவனாக அவன் எடுக்க கூடிய முடிவு...
காதல் புறக்கணிப்பு.... என்பவை காட்டப்பட்டுள்ளது.
( வழமையான படங்கள்ல இந்த இடத்தில காதலன் பொங்கி எழுந்திருக்கனும்... இதுல இல்ல... அட்லீஸ்ட் ஹீரோவாவது கையை முறுக்கி இருக்கனும் அதுவும் இல்லை... ஹீ..ஹீ... :D )

ஆரம்பத்தில் வரும் அந்த கால் ஏலாத கதாப்பாத்திரம்... ஒரு ஏழை தொழிலாலியின் கேள்விக்குறியான வாழ்க்கையை காட்டுகிறது....

ஹீரோயினின் தங்கை சம்பந்தமான காட்சிகள்... பணத்தின் வலிமையை காட்டுகிறது + சில‌ மேல்த்தட்டு மக்களின் திமிர்.

அந்த ரொய்லட்டை துப்பரவாக்கி முன்னேறும்... கதாப்பாத்திரம்... முன்னேற எத்தனையோ வழி இருக்கு என்பதை காட்டுகிறது... (கப்ல கடா வெட்டனும்...)

ஓ.கே...
இறுதியில் இவர்களது காதல் சுப்பர்வயிஸ்ஸருக்கு தெரிய வருகிறது...
பேந்து பணம்தனது பவரை காட்டுகிறது.... கூடவே பொலிஸும்...

ஃபிலாஸ்பாக் முடிந்து கதை நிகழ்காலத்துக்கு வருகிறது...
நான் எதிர்பார்க்காத திருப்பம்... ஹீரோயினுக்கு....
எதிர்பார்த்த முடிவு...

ஃபிலாஸ்பாக்கில் பழையகாதல் ஃபிலாஸ்பாக்கும் நகைச்சுவையாக‌ போகுது... சுப்பர்...

இந்த படத்தில நடித்தவர்களின் பெயர் தெரியாது... :(
அனைவரும் கதாப்பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளார்கள்... :)

ஹீரோவின் நடிப்பு பரவாயில்லை... புதுசுதானே... போக போக சரியாகும்.... பரத்திட சாயல் இருக்கு... அவர் மாதிரி இவரும் * தளபதி என்று பெயர்வைக்காமல் இருந்தால் சந்தோஷம்...

ஹீரோயினும் ஓ.கே... (Y)
ஆனா, புதுப்பட வாய்ப்புக்கள் குவியவாய்ப்பில்லை... ஏனின்னா அவ ஒன்றும் அழகில்லை...

கொமெடியர்...
சுப்பர்... கதையோட ஜோக்... சில இடங்களில் செயற்கைதனமான நடிப்பு ( ரியாக்ஷன்)... சில இடங்களில் சுப்பர்...

டைரக்டர்தான் ரியல் ஹீரோ... (Y)
சுப்பர்...  (வசந்த பாலன் என்று படம் பார்த்த பிறகுதான் தெரியும்..)
நான் ரசித்துபார்த்த வெயில் படத்துக்கு பிறகு... மீண்டும் ஒரு நைஸ் ஸ்டோரி... (Y)

பின்னனி இசை எனக்கு பிடிக்கவில்லை... :\ பாதிப்பை ஏற்படுத்தவில்லை...
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடல் சுப்பர்...

படத்தில் சில இடங்களில்... அருவருப்பான வசனங்கள் பாவிக்க படிகின்றன... ஆனால், அவை அந்த சந்தர்ப்பத்தை மேலும் உணர்வுபூர்வமாக்கியுள்ளன... (குடும்பத்துடன் பார்க்கும் போது நெருடலாக இருக்கலாம்... ஆனால், இரட்டை அர்த்த ஜோக்களுடனான படங்களுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை...)

ஆஹ்.... இடைல சினேகாவும் வந்து போறாங்க... கதையுடன் ஒட்டித்தான்...

என்டர்டைமான மூவி இல்லை...
ஆனா, சுப்பர் மூவி... (Y)

அங்காடி.... இப்படி ஒரு தெரு இருக்குன்று எனக்கு இப்பதான் தெரியும்...
---------------------------------------------------------------------------------

ஹீ...ஹீ... இதெல்லாம் ஒரு விமர்சனமா... என்று கேக்கிறது விளங்குது...
ஓ.கே...ஓ.கே...  முடிச்சாச்சு...
---------------------------------------------------------------------------------

13 comments:

  1. lishanthmithrau9 April 2010 at 15:47

    wow really super film!!!!!!!!!!!!!!!!!!!!! wow film story live a paaththa maary irukku intha story :) super

    ReplyDelete
  2. tnx...உலவு.காம்....
    tnx...lishanthmithrau...

    ReplyDelete
  3. மிகவும் பாராட்டுக்குறிய படைப்பு.

    ReplyDelete
  4. tnx chandru...
    நிச்சயமாக பாராட்டபடவேண்டிய படைப்புத்தான்...
    கதைதான் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ள படம்... :)

    ReplyDelete
  5. //பரத்திட சாயல் இருக்கு... அவர் மாதிரி இவரும் * தளபதி என்று பெயர்வைக்காமல் இருந்தால் சந்தோஷம்...//

    சரியா சொன்னீங்க தளபதி ஆக்‌ஷன் ஹீரோ, இமேஜ் என்ற வட்டத்துக்குள் சிக்காமல் இருகோனோம். இல்லையென்றால் நம் போன்றோர்களின் வயித்தெரிச்சலை கொட்டி கொள்ள வேணும். தளபதிகள் தொல்லைகள் தாங்க முடியல.

    ReplyDelete
  6. கலக்கல் விமர்சனம் . இடையிடையே தமிழ் சினிமாவின் பாணியையும் கிண்டல் அடித்து .
    பாராட்டுக்கள் . வித்தியாசமான முயற்ச்சியாக சொந்த விமர்சனங்கள் எழுத ஆரம்பித்திருப்பது பாராட்டுக்குரியது

    ReplyDelete
  7. tnx...சீனி...
    he..he.. sarithaan... overa tholla kodukkuraanga...

    tnx S.Sudharshan...
    perusa padam paakka kidaikkirala... :(
    unda vimarsanangal super da... :)

    ReplyDelete
  8. Nice movie & nice comment. Suravukku comment pannunga. (Arani)

    ReplyDelete
  9. nice comment & nice flim

    ReplyDelete
  10. கலக்கல் விமர்சனம் ..... .முடியல்ல ..... அவ்வ .....

    ReplyDelete
  11. tnx... Aran(?), Anonymous and karthik ...

    ReplyDelete
  12. மேல் தட்டு மக்கள் அனைவரும் படத்தில் காட்டுவது போல் கிடையாது. நீங்க பாராட்டுற டைரக்டர் அவர் கூட வேலைக்கு வச்சிருக்கிற லைட்மேன் பக்கத்துல வர்ற வெக்கைய கூட ஜீரணிக்க முடியதவரத்தான் இருப்பாரு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected