Total Pageviews

Friday, 15 January 2010

இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா? (லெமூரியா 04)லெமூரியா 04
-----------------------------------------------------------------------------------------


போன பதிவில் நியான்டர்தார்ஸ் பற்றி ஆரம்பித்திருந்தேன். அது லெமூரியா காலத்துக்கு முட்பட்டது எனும் உண்மைத்தகவலை "பித்தன் வாக்கு" என்பவர் சுட்டிக்காட்டியிருந்தார். நான் ஒரு சிறு காரணம் இருப்பதாக கூறியிருந்தேன்.

சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது.  நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உயிரினமும் தோன்றியிருந்தது. உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்... இனக்கலப்பு நடந்திருக்கலாம்... (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))


ஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்...

நமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்...??? அது பிறகு...)
முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்.


மேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்...)
லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)

அங்கு வாழ்ந்தவர்கள் யாவர்? அவர்களின் அறிவு எவ்வாறானது? அவர்கள் பேசிய மொழி என்ன? இன்னும் வியப்பான மறுக்கப்படும் உண்மைகள் வரும் பதிவுகளில் காத்திருக்கின்றன...
-----------------------------------------------------------------------------------------
இது ஒரு கலந்துரையாடல்... உங்களது கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன...

இது பிரஜோசனமான‌து என்று கருதின் "வோட்" போட்டு பலர் படிக்க உதவவும்...
-----------------------------------------------------------------------------------------
போனபதிவில் இணைப்பதாக கூறியிருந்த அனிமேஷன் இணைக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------

14 comments:

 1. pirabu lemuriya pattriya thahavalhal nanraha ullana, innum ariya avalaha ullen

  ReplyDelete
 2. தர்ஷன்16 January 2010 at 12:47

  //இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.//

  நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு

  ReplyDelete
 3. Your blog is so interesting and the proven facts given are so apt. I would like to add 1 more point. You said abt the mountain links between Africa and South America. One more link which came to my mind is Western Ghats of south india and the mountain ranges of Sri Lanka. Just join physical maps of Srilanka with India side ways. You can find similar mountain chain. My opinion is India and Srilanka were once connected and because of some similar reason to that of Lemuria these lands got seperated. Kindly correct me if i am wrong. If i am right please consider India and Lanka together... I do have some ideas based on linguistics too. Will post later.
  Thanks.
  Guna

  ReplyDelete
 4. நன்றி குணா!
  நன்றி தர்ஷன்!

  தர்ஷன் நீங்கள் இப்படி சொல்லிச்சொல்லியே, தமிழரின் வரலாற்றையும் அறிவு மேம்பாட்டையும் மேல் நாட்டவர் கற்பனை கதைகள் என்று நினைக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டீர்கள். பல நாள் ஒரு வட்டத்தினுள் இருந்து விட்டு வெளியே வருவது கடினம் தான் முயற்சியுங்கள். (இன்னமும் ஏலியன்ஸ் ஐ மனிதனின் சாயலிலேயே வரைகிறார்கள். காரணம் ஒரு எல்லையை மீறி ஜோசிக்க முடியவில்லை, ஒரே வட்டம்.)

  ReplyDelete
 5. வணக்கம் வளாகம்,
  உங்கள் நான்கு பாகங்களையும் இப்பத்தான் படித்து முடித்தேன். ஓட்டுகளைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் நண்பரே.நல்ல இடுகைகளுக்கு ஓட்டு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல ரசிகர்கள் இருப்பார்கள். மக்களின் ரசிப்புத்திரன், மற்றும் அவர்களுக்குப் பிடித்தவைகளைப் பொறுத்தே அவர்கள் ஓட்டளிக்கிரார்கள். இது போன்ற ஆராய்ச்சிகளில் எனக்கு மிகவும் ஆர்வம். வலையில் சிதறிக்கிடக்கும் செய்திகளைப்பார்க்க சிரமமாக உள்ளது. எது உண்மை எது போய் என்றே புரியவில்லை. உதாரணத்திற்கு, இந்தியாவின் ஒரு பகுதியாக அருநாச்சலப்ப்ரதேசதைச் சுட்டிக்காட்டுகிறது கூகிள் இந்தியா. அதையே சீனாவின் ஒரு பகுதியாகக்கான்பிகிறது கூகிள் சீனா. இந்த நிலையில் உங்கள் கொர்வையுள்ள பதிவு மிகவும் அருமை. என்னை மிகவும் கவர்ந்தது.தெரிந்ததை மற்றும் நீங்கள் ஊகிப்பதை வெளிப்படையாக எழுதுங்கள், தவறு இருந்தால் ஒன்றும் நடந்து விடாது. கலந்துரையாடலில் திருத்திக்கொள்ளலாம்.நாங்கள் இருக்கிறோம்.மனதோடு ஒன்றிய நல்ல இசை கேட்கும் போது கை தட்ட மரப்பதைப்போல் நான் உங்களுக்கு ஓட்டு போட மறந்து விட்டேன்.கண்டிப்பாக உங்கள் அனைத்து இடுகைக்கும் குத்துகிறேன் ஓட்டு. எல்லா விஷயங்களிலும் என்டேர்டைன்மென்ட் எதிர்பார்க்கும் மக்கள், ப்லோகிலும் அதையே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது மனதை மிகவும் உலுக்குகிறது. சமீபத்தில் தமிழிஷ், தமிழ்மணம், போன்றவற்றில் காணப்படும் இடுகைகளே உதாரணம். அனால், நல்ல இடுகைகளுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு.
  தொடர்ந்து இதே விறுவிறுப்புடன் எழுதுங்கள்.
  நான் பிரகாஷ் கொவையிலிருந்து.

  ReplyDelete
 6. நன்றி பிரகாஷ்!
  எனக்கு கூகிலில் இப்படி இருப்பது தெரியாது. சொன்னதுக்கு நன்றி. (கட்டாயம் பாக்க வேண்டியது.)
  நீங்சொன்னது சரி, எனக்கும் இப்படி வோட் கேக்க இஸ்டமில்லை. நண்பர்கள் சொன்னார்கள்" வோட் கூடினால் தான் தமிழிஸ் போன்ற தளங்களில் வாசகர்கள் இலகுவாக பார்க்கலாம்" என்று. அதனால் தான் கேட்டேன்.

  //**நீங்கள் ஊகிப்பதை வெளிப்படையாக எழுதுங்கள்**//
  கனக்க சொல்ல இருக்கு ஆனா என்னை விரோதியாக்கிடுவார்களோ என்று ஒரு பயமிருக்கு.

  ReplyDelete
 7. //இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.//

  so you gotta read this out my friend
  http://tamilkavingan.blogspot.com/2009/11/blog-post.html

  ReplyDelete
 8. //சுமார் 40 லட்சம் //

  இது தவறு. நியாண்டர்தால் மனிதர்கள் 30,000 வருடம் முன்பு வரை ஐரோப்பாவில் இருந்தார்கள்

  ReplyDelete
 9. would like know more about us. thankyou

  ReplyDelete
 10. இந்த மாதிரி உண்மையிலேயே மறைந்து மக்களின் வரலாறு தமிழில் கிடைப்பது அருமை.

  மகாபாரதம் ,இதன் உண்மை பல பேருக்கு தெரியும் அனால் மறைக்கப்படுகிறது என்றே சொல்லவேண்டும்.
  சாதரணமாக அதன் உண்மைத்தன்மை புரியாது
  அதரங்கள் காலத்தால் அழியப்பட்டுவிட்டது

  பல விளக்கங்களும் புரியதபடியே உள்ளன .
  விஞ்ஜானத்தையும் புவியியல் அமைப்பையும்
  விளங்கிக்கொண்ட பின்னர்தான் புராணக்கதைகளை
  நம்பினேன்
  இப்போது உங்கள் பதிவையும் பார்த்து உர்ஜிதப்படுத்திக்கொல்கிறேன்

  ReplyDelete
 11. அண்மையில் Discovery சேனலில் Sifaka (சிபாகா:http://en.wikipedia.org/wiki/Sifaka) பற்றி ஒளிபரப்பியது. அது குரங்குபோல உடல் அமைப்பு மற்றும் கரடிபோல் முகமுடையது.

  நீங்கள் கூறியதுபோல்(இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா? (லெமூரியா 04)) "வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது." அதே புராணங்களில் (இராமாயணம்) ஜாபவான் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் நினைக்கிறேன், இந்த சிபாகாதான் ஜாபவான் உருவத்தோடு நாம் ஒப்பிடலாம். நாம் ஜாபவன்னை கரடியோடு ஒப்பிடுவது சரியல்ல.

  மேலும் நீங்கள் கூறியதுபோல் எங்கே லெமூரியர்/குமரி இனத்தவர்? (லெமூரியா *03*)) "இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! " இந்த சிபாகா மடகஸ்கார் மட்டும் காணப்படுகிறது (Wikipedia: they are found only on the island of Madagascar)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails