Total Pageviews

405,436

Saturday, 2 January 2010

லெனின் ( ஒரு பக்க வரலாறு)

லெனின்
--------------------------------------------------------------------------------------------

விளாடிமிர் இல்யிச் உல்யேனாவ் என்னும் இயற்பெயர் கொண்ட லெனின், 17-வது வயதில் கைதுசெய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார். லெனினிடம் பொலீஸ் அதிகாரி, ‘‘உன் அண்ணன் ஜார் மன்னருக்கு எதிரான தீவிரவாதத்தில் இறங்கியதால் தூக்கிலிடப்பட்டு உயிர் இழந்தான். நீயும் ஏன் சுவருடன் மோதி, மண்டையை உடைத்துக் கொள்கிறாய்?’’ என்று கேட்டார். ‘‘என் எதிரே சுவர் இருப்பது உண்மைதான். ஆனால், அது பலவீன‌மானது. முட்டினாலே உடைந்துபோகும்’’ என்றார் லெனின் கோபத்துடன். ‘‘தீவிரவாதம், மக்கள் போராட்டம் போன்றவற்றை நசுக்கிவிடுவோம். உன்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்ற பொலீஸ் அதிகாரியிடம், ‘‘ ‘பாதை இல்லையென்று கலங்காதே... உருவாக்கு!’என புரட்சி இலக்கியங்-கள் எனக்குப் போதித்திருக்கின்றன’’ என்று உறுதியுடன் சொன்னார். அப்படியே உருவாக்கவும் செய்தார்.

லெனின் 1870-ல் பிறந்தார். அலெக்சாண்ட‌ரையும், கார்ல் மார்க்ஸையும் மற்றும் புரட்சி இலக்கியங்கைளயும் லெனினுக்கு அறிமுகப்படுத்தினார் அவரது அண்ணன். தீவிரவாதப் போராட்டத்தில் இறங்கியதால், அண்ணன் தூக்கிலிடப்பட்டார். ஜெயிலுக்குப் போனதால் லெனினுக்குச் சட்டக் கல்லூரியில் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், நான்கு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய சட்டப் படிப்பை ஒன்ற‌றை ஆண்டுகளிலேயே கல்லூரிக்குப் போகாமலே முடித்து, வழக்கறிஞராக மாறினார் லெனின். மார்க்ஸிச தத்துவத்தைப் பின்பற்றி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுதந்திரம் பெறுவதில்தான் ரஷ்யாவின் எதிர்காலம் இருக்கிறது எனத் தீர்மானமாக நம்பி, ‘தொழிலாளர் விடுதைல இயக்கம்’ தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் மார்க்ஸ் கொள்கைகளை நாடெங்கும் பரப்பி, தொழிலாளர்களிடம் சோஷலிசப் பிரசாரம் செய்தார். மக்களிடம் லெனினுக்கு செல்வாக்கு பெருகுவைதக் கண்ட ஜார் அரசு, 1895-ல் அவைரக் கைது செய்து சைபீரியாவுக்கு நாடு கடத்தியது.


1900-ம் வருடம் விடுதைலயானதும், ‘தீப்பொறி’ (Spark) என்ற பத்திரிகையை நடத்தி, தொழிலாளர்கைள புரட்சிக்குத் தயார்ப்படுத்தினார். 1905-ம் ஆண்டு லெனின் வழிகாட்டுதலில் நடந்த தொழிலாளர் புரட்சி, ராணுவத்தால் அடக்கப்பட்டது. லெனினைக் கைது செய்ய பொலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபடேவ, ரஷ்யாவைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் இருந்து போராட்டத்துக்கு வழிகாட்டத் தொடங்கினார் லெனின். முதலாம் உலகப் போர் (1914) காரணமாக ரஷ்யாவில் உணவுப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வீதிகளில் மக்கள் உணவு கேட்டுப் போராடத் தொடங்கினர். அதிருப்தியைடந்த சோவியத் படைவீரர்கள் பலர் ராணுவத்தில் இருந்து வெளியேற, ‘புரட்சிக்குச் சரியான தருணம் இதுவே’ என்பைத உணர்ந்த லெனின், 1917-ம் ஆண்டு ரஷ்யா வந்தார். அவரின் தூண்டுதலால் போராட்டக் குழுவினர் ஆங்காங்கே ரயில்வே ஸ்டேஷன், டெலிபோன் அலுவலகம், வங்கிகைளக் கைப்பற்றினர். ராணுவத்திலிருந்து விலகியவர்கள், போராட்டக் குழுவுடன் இணைந்து முதலாளிகளையும், பண்ணை அதிபர்களையும் எதிர்த்துப் போராடி நிலங்கள், பணம் போன்றவற்றைக் கைப்பற்றினர்.



‘எப்படிப்பட்ட ஆட்சி அைமப்பது?’ என்ற கேள்வி எழுந்தேபாது, ‘‘பாதை இல்லையென்று கலங்காதே... உருவாக்கு!’’ என்று சொன்ன லெனின், உலகிலேயே முதன்முறையாக தொழிலாளர்கள் பங்குபெறும் கம்யூனிஸ்ட் ஆட்சியை உருவாக்கினார். நிலம், பொருள், பணம், உழைப்பு, மனிதன் என எல்லாமே அரசின் உடைமையானது. சுதந்திரத்தைவிட மனிதனின் பசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி பெரும் வெற்றி அடைந்தது.
1918-ல் ரஷ்யப் பெண் ஒருத்தியால் சுடப்பட்டு, தப்பி உயிர் பிழைத்த லெனின், உலெகங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளரைவத்து 54-ம் வயதில் மூளை நரம்பு வெடித்து மரணம் அடைந்தார். லெனின் காட்டிய புதிய வழியால் இன்று உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் உரிமைகளுக்காகப் போர்க் குரல் கொடுத்து வருகிறது! ---------------------------------------------------------------------------------------
(நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகத்திலிருந்து எழுதப்படுகிறது)


1 comment:

  1. what an inspirational character he was!!!
    thank u..


    Raghu

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected