Total Pageviews

Thursday, 31 December 2009

எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ? (லெமூரியா 02)

லெமூரியா 02
---------------------------------------------------------------------------------------
"லெமூரியா" தொடரின் முத‌லாவது பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் ந‌ல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நாளில் 250 ஹிட்ஸ் கிடைத்தது என்னை பொறுத்தவரையில் என்க்கு கிடைத்த ஹிட்ஸ்களில் இது தான் அதிகூடியது. ( சில வலைப்பதிவர்களுக்கு நான் சொல்வது சிரிப்பா இருக்கும். அவர்களுக்கு குறைந்ததே இதுவாக இருக்கலாம்.) நான் வலைப்பதிவு ஆரம்பித்து 43 நாட்கள்தானே ஆகின்றன! ஆகவே எனக்கிது பெருசு!
---------------------------------------------------------------------------------------


போனபதிவில் லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.

ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)



இனி "லெமூரியா" எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன...
அவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))

கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்...

அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்... அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய "ஸீஸோ" விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.

(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)



இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது... ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)

சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!

இன்றைய பதிவு சொல்ல வந்த விடையத்தை(எவ்வாறு அழிந்தது) சொல்லமுதலே நீள்மாகிவிட்டது.
ஒன்றை விளக்க வெளிக்கிடும் போது பல பாதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்போது தான் நாம் சொல்லவருவது ஒரு நம்பகத்தன்மையானதாக இருக்கும். நாம் அடுத்த பதிவில் ஒரு அனிமேஷன் விளக்கத்தோடு எவ்வாறு அழிந்திருக்கும் என்பதை பார்க்கலாம். (ஒரு விஷையத்தை எழுதுவதை விட படத்தால் விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். என்று நம்புகிறேன்.)

இது ஒரு கலந்துரையாடல்.... உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன! ( ஏன் என்றால் நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை! வாசிச்சது, கேட்டது , ஜோசித்தது எல்லாம் சேர்ந்து தான் இந்த ஆக்கம். அதனால், இத்தொடரை பிரயோசனமாக்குவதற்கு உங்களது பங்களிப்பு நிச்சயம் தேவை!)
---------------------------------------------------------------------------------------

16 comments:

  1. வெளியொருவனாக , பதிவினை வாசித்து பார்க்கும் போது சுவாரஷ்யம் குறைவாக தெரிகிறது. அடுத்த பதிவில் இக்குறையை போக்க முயற்சிக்கின்றேன்.

    ReplyDelete
  2. என்ன நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள்? இப்படியான தகவல்கள் தான் மிக பயனுள்ளது,அதை விடுத்து சினிமாக்காரன் குசும்புகள் அல்லது ஈழம்,புலன் பெயர்ந்த அரசு,வட்டுக்கோட்டை தீர்மாணம்,வெளி நாடுகளில் பிரசித்தி பெற்ற கோவண ஈர்ப்புப் போராட்டம் அது இது என்று கன்டதையும் எழுதி மக்களின் அறிவையும் நேரத்தையும் நாறடிக்கப்போறீர்களா? (அப்படி எழுத பல வலைத்தளங்கள் உள்ளது அது அவர்கள் வியாபாரம்)உங்கள் தளத்தில் நாம் எதிர்பார்ப்பது பயனுள்ள விசயங்கள், "சோ" நீங்கள் தாராளமாக எழுதுங்கள் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக மேய்வார்கள்!!!!

    ReplyDelete
  3. நன்றி!
    இந்த பாராட்டுடனான ஆ..க்கு!

    ReplyDelete
  4. This is a good post, and intersting one also. I almost read all posts in Tamilish for about 3 years and this is my first feedback post. Please keep going. I have added your blog in to my Favorites. (Sorry for not typing in Tamil, problems in Tamil Typing).

    ReplyDelete
  5. நன்றி! ஞாயிறுதிங்கள் (gnayiruthingal) அவர்களே!
    நிச்சயம் இத்தொடரை முழுமையாக கொண்டுசெல்வேன்!

    ReplyDelete
  6. இது மாதிரி தொடர்களைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

    உங்களுக்கும் ஒரு வாசகர் கூட்டம் நிச்சயம் உருவாகும். எல்லோருமே இப்படி ஆரம்பிச்சவங்கதான் தல. நீங்க எழுதிகிட்டே இருங்க.

    வாழ்த்துகள்! :) :)

    ReplyDelete
  7. நன்றி சுதர்ஷன்!
    நன்றி ஹொலிவூட் பாலா!
    *//எல்லோருமே இப்படி ஆரம்பிச்சவங்கதான் தல. நீங்க எழுதிகிட்டே இருங்க.//*
    தொடர்ந்து இவ்வாறான தொடர்களை எழுத Try பண்ணுவன்.

    ReplyDelete
  8. (இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக
    இமயமலைப் பகுதி கடலாக இருந்தது உண்மை. அந்தக் கடலின் பெயர் டெதீஸ். இந்த டெதீஸ் கடலின் மீதுதான் லெமூரியாக் கண்டம் இருந்ததாக கூறப் படுகின்றது. இந்தக் காலம் அல்லது கண்டங்கள் அழிந்து போனது, அப்போதைய விண்கற்கள் விழுதலினால் ஏற்ப்பட்ட வெப்பசூழல்,கண்டத்திட்டுகள் நகர்வு, மற்றும் அவற்றால் ஏற்ப்பட்ட எரிமலை மற்றும் சுனாமிகள்(கடற்க்கோள்) ஆக மொத்தமும் அழிவுக்குக் காரணம் ஆகும். இது ஒரு வகையில் ஊழி என்று சொல்வார்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f0/Kumari_Kandam_map.png
      குமரி கண்டம் அல்லது லெமூரியா தெதிஸ் கடலின் மீது அமையபெறவில்லை மாறாக இது தற்போதைய குமாரிக்கு தெற்கே இருந்தத்ர்க்கான ஆதாரங்கள் உள்ளன. சிலபதிகரத்தில் லெமூரியா பற்றிய குறிப்பு
      பஹருளி ஆறும் பன்மலை அடுக்கத்து குமரி கோடும் கொடுங்கடல் கொள்ள-இவ்வாறு லெமூரியா அழிந்திருக்கலாம் சுனாமி இரண்டு தட்டுகளின் உராய்வால் ஏற்படும் விளைவே

      Delete
  9. பதிவு நன்றாக உள்ளது. குமரி கண்டம் பற்றி என்னுடைய வலைபக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன் . படித்து விட்டு கருத்து தெரிவிக்கவும். http://malarvizhi-myfavourites.blogspot.com/

    ReplyDelete
  10. நன்றி பித்தன்!
    கலக்குறிங்க.
    நீங்க சொன்னவை உண்மை.(அழிவுக்கான காரணங்கள்)
    இன்னொன்று இருக்கிறது அதை நான் சொல்லிடுரேன்!

    நன்றி மலர்விழி!
    கட்டாயம் பாக்குறேன். பதிவில் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

    ReplyDelete
  11. இன்றுதான் பார்த்தேன் நன்று,
    சிலர் கோயில் வரலாறு எழுதும் போது தங்கள் ஆலயம் 3000ஆண்டுபழைமையானது என்று எழுதுகிறார்கள் அதற்கு இந்த குமரிக்கண்ட கதையையும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள் அதற்காகத்தான் இந்த தளத்துக்கு வந்தேன்

    ReplyDelete
  12. tnx... பகீரதன் அழகரத்தினம்...
    Late a reply panninathukku sorry...
    om... 3000 aandukalukku munnukku kumari kandam irunthathu enpathu eetrukolla mudiyaathu... :)

    ReplyDelete
  13. ருத்ரன்8 August 2010 at 22:54

    ITS INTERESTING TO READ THIS.....PLS CONTINUE UR WORK

    ReplyDelete
  14. பதிவு நன்றாக உள்ளது, நன்றி

    by-
    http://try2get.blogspot.com/

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected