தொடர்ச்சி... (ESP ஐ அறியும் முறைகள்/ முட்டாள் என்றழை... - (மூளைய..)
இச் சம்பவத்தை கேள்விப்பட்ட ஆராய்ச்சியாளர் உடனே அனாவின் வீட்டுக்கு சென்று அனாவையும், அவளது தாயையும் தனது ஆராச்சிக்கூடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு அனாவின் மூளையை சோதனை செய்து பார்த்த போது, அவளின் மூளையும் சாதாரணமாகவே இருந்தது. பின்னர் அன்னாவிடம் சில கேள்விகள் கேட்டபோதும் அவள் பதிலளிக்க வில்லை.
பின்னர் தான் தெரியவந்தது அன்னாவுக்கு ஒரு விசித்திரமான சக்தி இருக்கிறது என.
அதாவது, அனாவாள் எழுத்துகளை ஒழுங்காக வாசிக்க முடியாவிடினும் பிறர் தமது மனதினுள் வாசிப்பதை அவளால் விளங்கிகொள்ள முடிகிறது.
அந்த சக்தியை வைத்துத்தான் வகுப்பறையில் ஆசிரியை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தாள்.
( எவ்வாறென்றாள், சாதாரணமாக ஒரு வகுப்பறையில் ஒரு மாணவியிடம் கேள்வி கேட்கும் போது, அடுத்த மாணவர்கள் அக் கேள்விக்குரிய விடையை தாம் வாசித்து தயாராகிவிடுவார்கள். ( அம் மாணவி பதில் சொல்லாவிடின் அடுத்தது அவர்களில் ஒருவரிடம் தானே அக் கேள்வி கேட்கப்படப்போகிறது!) அவ் வாறு அவர்கள் வாசிக்கும் போது அது அனாவுக்கு விளங்கியது!)
பின்னர், அனா வுக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிலிருந்து அனாவால் 50 தொடக்கம் 100 மீட்டர் தூர எல்லையினுள் வாசிக்கப்படும் (அவள் அறியவிரும்பும்) அனைத்து தகவல்களும் அவளது மூளையை சென்றடைகின்றன என்ற உண்மை விளங்கியது.
அவள் இந்த அதிசய சக்தியை பயன் படுத்தி பல பரீட்சைகளில் இலகுவாக தேறினாள்.
----------------------------------------------------------------------------------------
இப் பகுதியுடன் தற்காலிகமாக "மூளையும் அதிசய சக்திகளும்" என்ற தலைப்பின் கீழ் எழுதுவது நிறுத்தப்படுகிறது. இனி தனித்தனி தலைப்புகளில் மர்மங்கள் தொடரும்.
superb article...
ReplyDelete/*...இப் பகுதியுடன் தற்காலிகமாக "மூளையும் அதிசய சக்திகளும்" என்ற தலைப்பின் கீழ் எழுதுவது நிறுத்தப்படுகிறது. இனி தனித்தனி தலைப்புகளில் மர்மங்கள் தொடரும்..*/
ஆகா.. இப்படி அம்போ விடலாமா... continue...
கனக்க (மர்மமான) விசையம் எழுதவேண்டியுள்ளது அனைத்து விடையத்திற்கும் இத்தலைப்பு பொருத்தமாக இல்லை. அதனால் தான் இப்படி ஒரு தற்காலிக நிறுத்தம். ( தொடர்ந்து, இதே தலைப்பில் எழுதினால் சுவாரஸ்யமாக இருக்காது). மேலும் பல விந்தைகள் காத்திருக்கின்றன...
ReplyDelete