Total Pageviews

Wednesday, 2 December 2009

ADOBE FLASH ரியூட்டோரியல் - 06


மங்கும் விளைவு.

-------------------------------------------------------------------------------------------------------------
Flash இல் ஒரு உருவை எவ்வாறு மங்க வைப்பது என்பதை கற்போம்.
நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு மங்க வைப்பது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் மங்க வைக்க‌ முடியும்.

செய்முறை-1

தேவையான அளவில் Movie உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.

File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்





செய்முறை-2
Layer 1: Frame 1 இல் Ovel tool (O)         மூலமாக stage இல்  ஒரு வட்டத்தை வரையவும்

 Layer 1: Frame 1 ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும். அடுத்து F8 அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Movie Clip ல் Click செய்து Ok பண்னவும். (F8 -> Movie Clip -> Ok)


( இச்செய்முறைக்கு வேறு பல வழிமுறைகளும் உள்ளது. )

பின்னர் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும்.







செய்முறை-3

10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும்.
பின்னர், Flash தொகுப்பின் கீழ்பகுதியில் காணப்படும் Filters ஐ Click பண்னவும்.

(Properties அருகில் காணப்படும்) 




அதில் உள்ள + குறியை அழுத்தி 6 ஆவதாக‌ காண‌ப்படுனம் Blur ஐ Click
பண்னவும்.






அங்கு ஏற்கனவே காணப்படும் Blur X, Blur Y, Quality  இற்கு பதிலாக உங்களுக்கு தேவையான பெறுமானங்களை Set செய்யவும்.

செய்முறை-4

Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காண‌ப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.





இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter
மூலமாக சோதித்து பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected