உங்களது ESP ஐ ஆறிவது எப்படி?
----------------------------------------------------------------------------------------ஒரு சிறிய விடுமுறையின் பின்னர் மீண்டும் வளாகத்திற்கு வந்துள்ளேன். நீண்ட நாட்களாகவே "உங்களது ESP ஐ ஆறிவது எப்படி?" என்பது அடுத்து வரும் என எதிர்பார்ப்பை கூட்டிவிட்டு அதை பற்றிய தகவல்களை போடாமல் விட்டமைக்கு மன்னிக்கவும். இன்றைய தினம் அதைப்பற்றிய தகவல்களை பார்க்க ஆரம்பிப்போம். ESP ஐ அறிவதற்கு பல முறைகள் காணப்படுகின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.
முதலில்...
நீங்கள் இப்பரிசோதனையை செய்வதற்கு இன்னொருவர் துணைக்கு தேவை. (உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களை தேர்ந்தெடுப்பது மிகச்சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், இருவரினதும் மனம் ஒருங்கிணைத்திருப்பது மிகவும் முக்கியமானது.)
முதலில் ஒவ்வொருவரும் தனித்தனியாக 100 வெவ்வேறு உருக்களைக்கொண்ட ஒரே அளவான காட்களை (அட்டைகளை) தனித்தனியே எடுக்கவும். (அதாவது, 100 ஒரேமாதிரியான 2 செட்கள்(தொகுதிகள்)). இவற்றுடன் தலா ஒரு பேப்பரும், பென்சிலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர், இருவரும் ஒரு அறையில் வெவ்வேறு மூலைகளில் போய் அமரவும். ( ஆரம்பத்தில் அமைதியான அறையாக விருப்பது நல்லது.)
இனித்தான் உங்களது ஐ அறிவதற்காண பரிசோதனைகளை செய்யப்போறீர்கள்.
இவ்வாறே 100 காட்களையும் மாறி மாறி நினைத்து தாளில் குறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் இருவரும் தாம் நினைத்ததையும் மற்றவர் ஊகித்து எழுதியதையும் சரி பார்க்கவும்.
(ஒரு விஷயத்தை வார்த்தையால் சொல்வதைவிட எழுதுவது மிகக்கடினம்..... இதை எழுதும் போது தான் விளங்குகிறது.)
உங்களது ஐ தீர்மானிப்பதற்கான ஓர் அளவு கோல் வேண்டாமா...?
நீங்கள் 20-25 சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்றால் அது விசேட அறிவு இல்லை. நிகழ்தகவு (Probability) விதியின்படி சாதாரணமாகவே 100 காட்களை நினைக்கும் போது 20-25 ஒத்துப்போவது சகஜமானது.
30 க்கு மேல் சரியாக இருக்கிறது என்றால் ஏதோ ஒன்று உங்களுக்குள் இருக்கிறது என்று சொல்லலாம்...
50 க்கு மேல் என்றால் நீங்கள் சமுதாயத்தில் ஒரு சாதாரன மனிதரல்ல விஷேட சக்திகள் உள்ள மனிதர் என கூறலாம்...
80 க்கு மேல் என்றால் நீங்கள் ஒரு முனிவருக்கு சமமானவர்!?!
மீண்டும் மீண்டும் இவ்வாறான பரிசோதனையை செய்யும் போது எமது மூளையில் ஒழிந்திருக்கும், இயங்காமலிருக்கும் அச்சுரப்பி இயங்க ஆரம்பிக்கும் என்கிறார்கள். அதற்கு, எங்களுக்கு பொறுமையும், திடமான மனதும் தேவை.( முக்கியமாக எம்முடன் சேர்ந்து செய்ய இன்னொருவர் தேவை!)
மற்றைய இலகவான முறைகளை இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்...
தொடரும்...
--------------------------------------------------------------------------
---இனி---
முட்டால் என முடிவெடுக்கப்பட்ட அதிசய சிறுமி.
எமது ESP ஐ அறியும் முறைகள்.
0 comments:
Post a Comment