Total Pageviews

Thursday 17 December 2009

Button - (ADOBE FLASH ரியூட்டோரியல் 10)

இன்று Flash இல் Action Script எனும் பகுதி சம்பந்தமான ஒரு ரியூட்டோரியலை பார்ப்போம்
---------------------------------------------------------------------------------------
Button
---------------------------------------------------------------------------------------
Flash இல் இரண்டு வெவ்வேறு Scene களை எவ்வாறு Button மூலமாக இணைப்பது என்பதை காணவுள்ளோம்.
செய்முறை-1


தேவையான அளவில் Movie உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties ->Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்












செய்முறை-2
அடுத்துMenubar ல் காணப்படும் Insert ஐ Select பண்ணி Scene Click பண்ணவும்.











இப்போது TimeLine  ற்கு கீலே காணப்படும்Bar ல் Workspace பகுதியில் காணப்படும் குறியீட்டை Select பண்ணி பார்க்கும் போது 2 Scene கள் இருப்பதை காணமுடியும்.












செய்முறை-3


Scene 1, Scene 2 இல் எதாவது உங்களுக்கு பிடித்தமான Animation களை உருவாக்கி கொள்ளவும். ( Scene 1, Scene2 ஐ Select  செய்வதற்கு Workspace பகுதியில் காணப்படும் குறியீட்டை   பயன்படுத்தவும்.)




செய்முறை-4

இச்செய்முறையில் நாம் முதல் முதலாக ஒரு சிறிய Action Scrip பயன்படுத்த உள்ளோம். அதாவது நாம் உருவாக்கியுள்ள Animation களை தொடர்ந்து மீண்டும் – மீண்டும் இயங்காது நிறுத்தப்போகிறோம்.

Scene 1 ல் Animation களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள Layer களுக்கு மேலாக ஒரு Layer   உருவாக்கி கொள்ளவும். (Insert Layer  பயன்படுத்தவும்)





Animation முடியும் இறுதி புள்ளியில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும். அடுத்து F9 அழுத்தி Action Script Panel Open பண்ணவும். (அல்லது Right Click செய்து இறுதியாக‌ காணப்படும் Actions இனை Select ‌செய்யவும்)


வெண்மையாக உள்ள பகுதியில் stop();  எனும் Script type பண்ணவும்



இதேபோன்ற படிமுறைகளை Scene 2  ற்கும் பயன்படுத்தவும்.



செய்முறை-5
.
இனித்தான் button பகுதிக்கு வரப்போறோம்.
Scene 1 ல்  புதிய Layer இல் Oval tool (O)    மூலமாக stage இல்  ஒரு வட்டத்தை வரையவும்.
அடுத்து stage இல் உள்ள வட்டத்தினை Select செய்து விட்டு F8 ஐ அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Button ல் Click செய்து Ok பண்னவும். (F8 -> Button -> Ok)



இப்போது வட்டம் Button ஆக மாறி இருக்கும்.
வட்டத்தினை (Button ஐ) Select செய்து விட்டு F9 ஐ அழுத்தி; வரும் Action Scrip panel இன் வெண் பகுதியில்



on (release) {
     gotoAndPlay("Scene 2", 1);
}
ஐ Type பண்னவும். 



ஷ்ஷ்ஷ்...!!!!!!!.

அவளவுதான் Ctrl + Enter மூலமாக Test பண்ணவும்.

(மீண்டும் Scene 1  ற்கு வருவதற்கு இதே முறைகளை  Scene 2  இல் கையாளவும்.)
-----------------------------------------------------------------------------------------------
வழமை மாதிரியே டவுட் கேக்காதீர்கள்!




0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected