பாதையூடாக உரு அசையும் விளைவு
-----------------------------------------------------------------------------------------
இதுவரை ஃப்லாஷ் ரியூட்டோரியல் பற்றி பெரிதாக ஒரு கொமன்ட்ஸ் உம் வரவில்லை. ( இமெயிலிலும் வரவில்லை).(இது வீண்வேலையோ எனத்தோன்றுகிறது.) அதனால், இவ் ரியூட்டோரியல் தொடரை விரைவில் நிறுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன். மிகவிரைவில் வளாகத்தில் அனைவரும் விரும்பும் வகையில் அனைத்து விதமான பதிவுகளும் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றேன்.
இனி தொடருக்குள் நுழைவோம்...
-----------------------------------------------------------------------------------------
Flash இல் ஒரு உருவை எவ்வாறு குறிப்பிட்ட பாதையூடாக அசைப்பது என்பதை கற்போம்.
நான் இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு அசைப்பது என்பதனை கூறியுள்ளேன். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் அசைக்க முடியும்.
செய்முறை-1
தேவையான அளவில் Movie ஐ உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்.செய்முறை-2
Layer 1 ல் Right Click செய்து வரும் Box ல் 7 ஆவதாக உள்ள Add Motion Guide என்பதை Click செய்யவும்.
இப்போது Layer 1 ற்கு மேலே Guide… எனும் புதிய வகை Layer காணப்படும்.
Layer 1: Frame 1 இல் Ovel tool (O) மூலமாக stage இல் ஒரு வட்டத்தை வரையவும்.
அதேபோல், Guide… Layer இல் Pencil Tool (Y) மூலமாக stage இல் ஒரு வளைகோட்டை விரும்பியவாறு வரையவும்.
வரையும்போது வட்டமும்,கோடும் ஒரே Layer ல் வராமல் வரையவேண்டும். கடினமாக இருப்பின் இன் மேலே காணப்படும் Lock Key ஐ பயன்படுத்தி Lock பண்ணி வரையவும். இரண்டையும் வரைந்தபின்னர் அதே Key ஐ பயன்படுத்தி UnLock பண்ணவும்.
செய்முறை-3
பின்னர், Layer 1 மற்றும் Guide… Layer இன் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select செய்து) KeyFrame இனை உருவக்கவும்.
செய்முறை-4
Layer 1 இன் 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வளைகோட்டின் முடிவெல்லையில்வைக்கவும். அதேபோல், Layer 1 இன் 1 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வளைகோட்டின் ஆரம்ப எல்லையில்வைக்கவும்.
Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காணமுடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காணப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.
இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
----------------------------------------------------------------------------------------
எதாவது விளக்கம் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்.
This comment has been removed by the author.
ReplyDelete//இதுவரை ஃப்லாஷ் ரியூட்டோரியல் பற்றி பெரிதாக ஒரு கொமன்ட்ஸ் உம் வரவில்லை. ( இமெயிலிலும் வரவில்லை).(இது வீண்வேலையோ எனத்தோன்றுகிறது.) அதனால், இவ் ரியூட்டோரியல் தொடரை விரைவில் நிறுத்தலாம் என முடிவெடுத்துள்ளேன். //
ReplyDeleteசந்திரன், முதலில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
இதுவரை யாரும் தங்களது கருத்துக்களை உங்களுக்கு தெரிவிக்காமல் இருந்தாலும், உங்களது பதிவுகளை நிச்சயம் சிலர் ரசித்திருப்பார்கள்.தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.
மேலும் உங்களது பதிவுகளை tamilish.com மற்றும் tamilmanam போன்றவற்றில் இணையுங்கள். முடிந்தவரையில் சமீபத்தில் வெளியான மென்பொருளை (recent version) பின்பற்றி உங்களது தொடர் இருக்குமேயானால்,மிக எளிதாக அனைவரயும் கவரும். ஏனெனில் பழைய கள் புளிக்கும்.