Total Pageviews

Monday, 21 March 2011

ஃபேஸ் புக் சிரிப்புக்கள் + தத்துபித்துவங்களும் :D

சமீபத்தில் ஃபேஸ்புக்கில்... கண்ட தத்துபித்துவங்களும்.. கவிதைகளும்... உங்களுடன் பக்ர்ந்து கொள்வதற்காக சுட்டு போட்டு இருக்கிறேன்... :P
------------------------------------------------------------------------------------------
உன்னை நேசிக்கும் பெண்ணை சாகும் வரை மறவாதே... உன்னை மறந்த பெண்ணை வாழும் வரை நினைக்காதே...


நட்பு என்பது ஒரு குழந்தை போல, யார் அன்போடு நடந்து கொண்டாலும் அவர்களோடு வந்துவிடும்!!!!!


நிம்மதியாக வாழ்ந்ததில்லை...
தெரிந்த தொழிலை விட்டவனும்...
தெரியாத தொழிலை தொட்டவனும்.....

------------------------------------------------------------------------------------------

எல்லோரும் செய்றதால தவறு சரியாகாது... ஆனால், எல்லோரும் அதையே செய்யிறதால... அது தவறென்று நினைப்பது தவறு என்பது சரியாக இருக்கலாம்... B-) lol...


அறிவாளியா இருக்க... ஓன்று அறிவாளியா இருக்கனும்... அல்லது, முட்டால்களை பக்கத்ல வச்சிருக்கனும்... :P lol...


வாழ்க்கை என்பது ஒரு வட்டமாம்... அதில வளையமா இருக்க கூடாது... மையமா இருக்கனும்... B| :P


அந்த பெடியனோட சேர்ந்துதான் என்ர மகன் கெட்டு போறான்... - அம்மாக்கள் :D


‎"மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள்" என்று உலகில் உள்ள 7 பில்லியன் மக்களும் சொல்கிறார்கள் !!! #அவதானிப்பு

------------------------------------------------------------------------------------------
ஓவரா பேசுற வாயும்... நைட்ல கத்திற நாயும்.... அடி வாங்காம இருந்ததா சரித்திரமே இல்லை...

"எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு..."
"டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?
------------------------------------------------------------------------------------------ஆண்களின் எதிர்பார்ப்பு...
1) நல்லா சமைக்க தெரிந்த மனைவி
2) நிறைய சம்பாதிக்கிற மனைவி
3) நம்மல நல்லா லவ் பண்ணி... கவணிச்சுக்கிற மனைவி..
4) இந்த 3 மனைவிகளும் ஒன்றாக சந்திக்காம இருக்கனும்.

சர்தார்... தனது மனேஜர்கு sms பண்ணினார்... " உடம்பு சரியில்லை.. வேலைக்கு வர முடியாது"
மனேஜரின் ரிப்ளை... " எப்போ எனக்கு உடம்பு சரி இல்லைனாலும்... மனைவியை கிஸ் பண்ணுவன்.. ஜெஸ்ட் ட்ரை இட்"
2 மணி நேரத்தின் பின்னர்...
சர்தாரின் றிப்ளை... " இப்போ உடம்பு சரி... உங்கட மனைவி ஸோ ஸ்வீட் "

------------------------------------------------------------------------------------------

3 நண்பர்கள், 100 ஆவது மாடிக்கு செல்ல வேண்டி இருந்தது...
லிஃப்ட் வேலை செய்யாததால்... கதை சொல்லிக்கொண்டு செல்ல முடிவெடுத்தார்கள்.
1 வது நண்பர் 50 ஆவது மாடி வரை ஒரு அக்ஷன் கதை சொன்னார்...
2 வது நண்பர் 99 ஆவது மாடி வரை ஒரு கொமெடி கதை சொன்னார்...
3 வது நண்பர் 100 ஆவது மாடியில் வைத்து ஒரு சோகக்கதை சொன்னார்... " திறப்பு காறுக்குள்ள இருக்கு."

------------------------------------------------------------------------------------------LOVE பன்னின பொண்ணு கிடைக்கனுமா???FORIEN போங்க....BECAUSE PARENTSகு FORIEN மாப்பிள்ளைதான் வேணுமாம்....
அங்கபோய் LOVE பன்னிடாதைங்க....BEC FORIENல இருக்குற PARENTSகு SRILANKA மாப்பிள்ளைதான் வேணுமாம்.....:D:D:D

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்றது சரியா இதில தான் பொருந்துது ...........:P:P:P


------------------------------------------------------------------------------------------
நிலவை பார்த்தேன் 
அம்மா நினைவு வந்தது... 
மலரைப் பார்த்தேன் 
அவளின் நினைவு வந்தது... 
பள்ளியைப் பார்த்தேன் 
நண்பர்கள் நினைவு வந்தது... 
அவளைப் பார்த்தேன் 
பழைய கனவுகள் நினைவு வந்தது... 
------------------------------------------------------------------------------------------

பேருந்தில் 
அருகருகே 
தாடியோடு நான்... 
பேபியோடு அவள்....ஒரு காதலன்
தற்கொலை
பண்ண போனான்,
ஆனால்
அவன் திரும்பி
வந்துட்டான்
சாகல, ஏன்?

அவன் காதலிச்ச
பொண்ணு
அந்த டைம்ல தான்
அந்த வார்த்தைய
சொன்னா,

அந்த வார்த்த...

அந்த வார்த்த...

அந்த வார்த்த...

எனக்கு ஒரு
தங்கச்சி
இருக்கா..

------------------------------------------------------------------------------------------

Sunday, 20 March 2011

சொந்தமாக ஒரு ஐஃபோன் அப்லிகேஷன்... :) -டியூட்டோரியல்

--------------------------------------------------------------------------------------------
ஐ ஃபோனில் (iPhone)... இலவசமாகவும் சிறு கட்டணம் செலுத்தியும் பல அப்லிகேஷன்களை (Apple apps ) பாவிக்கின்றோம்...
பலருக்கு நாமாகவே அவ்வாறான ஒரு அப்லிகேஷனை எமக்கென செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
எனக்கும் இருந்தது...
நான் அதிகமாக பயண்படுத்தும் ஃபிலாஸ் (Adobe flash ) மென்பொருளிலேயே... இதை செய்யக்கூடியதாக இருக்கிறது...
எவ்வாறு செய்வது என்பதை இனிப்பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------------------
முதலில்...
நீங்கள் ஃப்லாஸிக்கு பயண்படுத்தப் போகும் அனைத்து ஃபைல்களையும் ஒரே ஃபோல்டரில் ( Folder) போட்டுக்கொள்ளவும்.
முக்கியமாக இந்த மென் பொருளை (Fake cert) தரவிறக்கம் செய்து... அதே ஃபோல்டரில் போட்டு "அன் ஹிப் ( UnZip)" பண்ணவும்.
அடுத்து ஃபிலாஸை இயக்கவும்... ( நான் Adobe flash CS5 பயண்படுத்தி இருகிறேன்.. )
வேர்க் ஏரியாவை திறக்கும் போது... iPhone OS என்பதை தெரிவு செய்யவும்.
( Create new -> iPhone OS )இப்போது.. உங்களுக்கு தேவையான அனிமேஷனை உருவாக்கி கொள்ளவும்...
அனிமேஷன் உருவாக்கிய பின்னர்...
File போய் iPhone OS Settings ஐ கிளிக் பண்ணவும்..அடுத்து ஐ ஃபோன் செட்டிங் மெனு ( iPhone settings ) திறக்கும்...
முதலில் Deployment  ஐ கிளிக் பண்ணி விட்டு..
அதில் Certificate என்பதற்கு பக்கத்தில் உள்ள Browse ஐ கிளிக் பண்ணவும்...
அடுத்து நாங்கள் ஏற்கனவே டவுண்லோட் பண்ணி அன்ஷிப் பண்ணிய ஃபோல்டருக்கு போகவும்...
அங்கு, *.p12 என்ற file மட்டும் காட்டப்படும்... அதை தெரிவு செய்து open பண்ணவும்.
அடுத்து... Password இக்கு ஒன்றைக்கொடுத்து விட்டு.. "Remember password for this session" இக்கு டிக் பண்ணவும். ( படத்தில் காட்டப்படவாறு. )Provisioning profile என்பதற்கு பக்கத்தில் உள்ள Browse ஐ கிளிக் பண்ணவும்...
அடுத்து நாங்கள் ஏற்கனவே டவுண்லோட் பண்ணி அன்ஷிப் பண்ணிய ஃபோல்டருக்கு போகவும்...
அங்கு ஒரு file மட்டும் காட்டப்படும்... அதை தெரிவு செய்து open பண்ணவும்.

iPhone deployment type இல் உங்களுக்கு தேவையான Type ஐ தெரிவு செய்து கொள்ளவும்...


அடுத்து General  என்ற பகுதியை கிளிக் பண்ணி சேவ் பண்ண வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்... அதே ஃபோல்டரில்...


பின்னர்.. Publish ஐ கிளிக் பண்ணவும்.

சிறுது நேரத்தின் பின்னர்... உங்களது அப்லிகேஷன் தயாராகிவிடும்.அடுத்து அதை ஐ டியூனின் உதவியுடன் உங்கள் ஃபோனுக்கு போட வேண்டியதுதான்... :)

நேரடியாக ஏற்ற நினைப்பவர்கள் ஜெயில் பிறேக் பண்ணி இருப்பது அவசியம். :)


--------------------------------------------------------------------------------------------

பயணுள்ள தகவல் என்றால் வோட் போடவும்...
அல்லது.. தெளிவில்லை என்றால் கொமென்டில் கேட்கவும்.. :)

--------------------------------------------------------------------------------------------

Friday, 18 March 2011

பனி மனிதன்... - வீடியோ - (02) :)

------------------------------------------------------------------------------------------
பனிமனிதன் தொடர்பான இரண்டாவது இடுகை இது...
முதல் பதிவில் குறிப்பிட்டபடி "பனி மனிதன்" என்பது வெறும் கட்டுக்கதை இல்லை... உண்மைதான் என்பதற்கு சான்றாக அமைந்த சம்பவத்தை இன்று எழுதவுள்ளேன். ( முதல் பதிவை இங்கு வாசிக்கலாம்.. :) )
------------------------------------------------------------------------------------------
றொஜர் பீட்டர்ஷன்... ஹொலிவூட் சினிமாவில் பிரசித்தமான சினிமா தயாரிப்பாள‌ர்...
1967 ம் ஆண்டு...அவரின் நண்பருடன் படங்களுக்கான லொக்கேஷன்களை தெரிவு செய்யும் நோக்குடன், கமெரா சகிதம் பல இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்தார்கள்.
ஒரு காடு சார்ந்த பள்ளத்தாக்கினருகில் வந்த போது... இவர்கள் பயணித்த குதிரை திடீரென திமிறியதால் தடுக்கி விழுந்துவிட்டார்கள்.
எழும்ப்பி பார்த்தவர்களிக்கு ஆச்சரியம்... குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுமார் 7 அடிக்கும் மேலான உயரமுடைய ஒரு உருவம் காட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. உடனே, தனது கமெராவின் உதவியுடன் அந்த உருவத்தை ஃபிலிம் ரோல் தீரும்வரை எடுத்துக்கொண்டார்.

இது தான் அவரால் எடுக்கப்பட்ட வீடியோ...


எனினும், அவரின் அந்த வீடியோ, பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை...
காரணம், குறிப்பிட்ட அந்த கால கட்டத்தில் "கொட்சில்லா" போன்ற திரைப்படங்கள் வந்திருந்ததால் ; இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு வேடமிட்டு திட்ட மிட்டு எடுக்கப்பட்ட காட்சியாகவே இருக்க வேண்டும் என்ற வாதம் வலுவாக இருந்ததால்... அவரின் அந்த வீடியோ சமாச்சாரம் அமுங்கிப்போனது.
------------------------------------------------------------------------------------------
1990 களில், மைக்ரோசொஃப்ட் கொம்பனி பல புதிய மென்பொருட்டளை பாவணைக்கு விட்டது... அந்த தருண‌த்தில்... குறிப்பிட்ட வீடுயோவை ஆராயந்தார்கள்... மொத்தமாக 952 பிரேம்கள் கொண்டதாக அமைந்தது அந்த வீடியோப்பதிவு.
ஒவ்வொரு பிராமாக ஆராந்த விஞ்ஞானிகள் அது மனித அசைவு அல்ல...கொரில்லாவினதும் அல்ல.. இதுவரை இனங்கானப்படாத ஒருவகை புதிய உயிரினமாகவே இருக்க வேண்டும் என உறுதியாக கூறினார்கள்.

அவர்கள் அப்படி கூறியதன் காரணம்...

சாதாரணமாக... ஒவ்வொரு விலங்கினதும் தசை நார்கள் , எலும்புக்கூட்டு அமைப்புக்கள் என்பன வித்தியாசமானவை... அதனால், எந்த ஒரு விலங்கும் இன்னொரு விலங்கின் அசைவுடன் ஒத்துப்போவதில்லை...
உதாரணமாக... மனித உடலுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக்கொண்ட கொரில்லா-சிம்பன்சிகளின் அசைவுகளுக்கும் மனித அசைவுகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
இதனடிப்படையில் குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்கையில்... அந்த உருவின் அசைவுகள் மனிதனுடனோ அறியப்பட்ட விலங்குகளுடனோ ஒத்துப்போகவில்லை.
எனவே அது ஒரு அறியப்படாத விலங்குதான் என்பதை அடித்துக்கூறினார்கள்.

மேலும், அந்த வீடியோவில் பதிவாகி இருப்பது 7 அடி 4 அங்குளமும் 225 கிலோ கிறாம் நிறையும் கொண்ட ஒரு பெண் விலங்கு என்பதும்.. முன் புறமாக அது தனது குட்டியை காவிச்சென்றுள்ளது என்பதும் அறியப்பட்டது.
அவற்றின் தசை அமைப்புக்கள் கூட பின்னர் செயற்கையாக 3டி மொடலில் உருவாக்கப்பட்டதாம்...
இன்னொரு முறை இப்படியான வீடியோக்கள் வந்தால் ஒப்பிட்டு பார்ப்பதற்காக.

எனினும் பின்னர், இதுவரை அவ்வாறான எந்த வீடியோ பதிவுகளும் வந்திருக்கவில்லை... வந்தவை அனைத்தும் பித்தலாட்டங்கள் தான்.
------------------------------------------------------------------------------------------
அப்படியானால்...  இவர்கள் யார்? எவ்வாறு இந்த விலங்கினங்கள் உருவாகின??  உருவாவது சாத்தியம் தானா??? ஏன் மறைந்து வாழ்கின்றன???? போன்ற கேள்விகளுக்கு அடுத்து வரும் இறுதிப்பதிவில் விடை தர முயற்சிக்கின்றேன்.
இந்த விலங்கினம் சம்பந்தமான வித்தியாசமான சிந்தனை கருத்துக்கள் உள்ளவர்கள்... கொமென்டில் கூறவும்.
------------------------------------------------------------------------------------------
பயணுள்ள பதிவு என்றால்... வோட் போடுங்க... இல்லை என்றால்.. கொமென்டில் தவறுகளை சுட்டிக்காட்டவும்.. :)
------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails