Total Pageviews

Thursday, 14 June 2012

மர்மக்குழுவின் ரகசியத்திட்டங்கள்! ( இலுமினேட்டி 03 )


போன பதிவுகளில் இலுமினேட்டியென்றால் என்ன என்பதையும், அதன் ரகசியக்குறியீடுகளையும் பார்த்திருந்தோம்!
தவறவிட்டவர்கள் இங்கு பார்க்கலாம் :
  1. இலுமினேட்டி என்றால் என்ன? நோக்கம் என்ன?
  2. இலுமினேட்டி குழுமத்தின் இரகசியக்குறியீடுகள்!
இன்று போன பதிவில் கூறியதுபோன்று, கடந்த 2001 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் உயிரைக்காவுகொண்ட அமெரிக்க வரத்தக நிலையம் / பென்டகன் அழிக்கப்பட்டமையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப்பார்ப்போம்!
கடந்த 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அத்தாக்குதலிற்கு ஒசாமா பில்லேடன் தலைமயிலான அல் குவைதா அமைப்பு காரணமாக அறியப்பட்டது. அதன் பின்னர், ஆஃப்கானிஸ்தான் உள்ளடங்களாக சில நாடுகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போர்களை ஏற்படுத்தி கடந்த வருடம் அல் குவைதா தலைவர் பில்லேடனை கொன்றதன் மூலம் அந்த ஃபைலிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!

Wednesday, 6 June 2012

இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியகுறியீடுகள்...


இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.
( தவறவிட்டவர்கள் இதைசொடுகிப்பார்க்கவும்!)
இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!
இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!

Friday, 20 April 2012

நயாகராதான் உலகில் பெரிய நீர்வீழ்ச்சியா?

உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சி எது தெரியுமா? நீங்கள் நினைக்கும் நயாகரா அல்ல... அப்போ? இதை சொடுகுங்கள்... வளாகத்தின் இன்னொரு பரிமாணம்!!!

-----

உங்கள் தளங்களில் உள்ள அரிய அறிவியல் தகவல்களையும் இணைக்கலாம்... தொடர்புகொள்ளுங்கள்.


Sunday, 18 March 2012

ஐஃபோனில் பதிவான பறக்கும் தட்டு வீடியோ! ஏலியன்ஸ் நோட்டட்!


அம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவே இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவாகும்.
ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இவ் வீடியோவில் எவ்வித கிராபிக்ஸ் வேலைகளும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன் அக் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வானில் வேறு எந்தவித வானிலை அறிகருவிகளும் ஏவப்படவில்லை என்பதையும் விமான நிலையமும் அவ்வூர் விஞ்ஞான ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இது ஐஃபோன் கமெராவில் இருக்கக்கூடிய புள்ளி அல்லது விமான கண்ணாடியில் இருக்கக்கூடிய புள்ளி என்று கூறமுடியாது. ( காட்சிகளைப்பாருங்கள் புரியும். )
 
இங்கு பதிவாகியுள்ள உருவைப்பார்க்கும் போது, பரவலாக வேற்றுக்கிரக வாசிகள் வருவதாகக்கருதப்படும் பறக்கும் தட்டுக்களின் உருவிலேயே உள்ளது. எனவே இது ஒரு பறக்கும் தட்டாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
 
இங்கு வீடியோப்பதிவில் பறக்கும் தட்டு அசையவில்லை, எனினும்... அசையாது வானில் ஒரு இடத்தில் நின்றுவிட்டு திடீரென பறக்கும் பறக்கும் தட்டுக்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம்.
 
அப்படியானால், வேற்றுக்கிரக வாசிகள் எமது வானெல்லையில் தங்கியிருந்து எம்மை வேவு பார்க்கிறார்களா? ஏன்?
இதை வளாகம் வலைத்தளத்தில் விரிவாக பார்த்துள்ளோம்.

VIDEO LINK : 

UFO Caught from Plane

Friday, 24 February 2012

ஈழப்பெண்களும் ஈனக்கண்களும் - அதிர்ச்சிகர பேட்டியுடன் வீடியோ


ஈழப்பெண்களும் ஈனக்கண்களும்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைதாகி தடுப்பு முகாம்களில் இருந்து தற்போது வெளியே வந்திருக்கும் பெண்களின் நிலைதொடர்பான காணொளியை கிரவுண் வியூவ்ஸ் ஸ்தாபனத்தார் வெளியிட்டுள்ளர். அனைவரும் நிச்சயம் பார்த்துப்பகிரவேண்டிய வீடியோ இது.
யுத்தம் தொடர்பான அரசியல் பேச்சு ஒரு புறம் இருக்க, இவ்வாறு வெளியேறிய பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவது எம் சமூகத்தின் சாபக்கேடே. ஈழம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட இப் பெண்கள் இராணுவ முகாம்களில் இருந்து வந்தார்கள் எனும் ஒரு காரணத்திற்காக சொந்த உறவுகளே அவர்களை ஒதுக்குவது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான ஒரு செயல்.
மேலும், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்குபவர்களின் நடவடிக்கைகளையும் இவ் வீடியோப்பதிவில் வரும் பெண் கூறுகின்றார். இப்போது நினைத்துப்பாருங்கள் ஈழத்தமிழரின் இவ் நிலைக்குயார் காரணம்? எங்களுள் இருக்கும் சுய நலம் ஒரு முக்கிய காரணமாக இருப்பது விளங்கும்.
இராணுவத்தின் கண்கள் எப்போதும் இவர்கள் மீதே இருப்பது இவர்களின் அன்றாட வாழ்வை எவ்வளவு பாதித்துள்ளது என்பதையும் உணர முடிகிறது. :/
இப் பெண்கள் எப்போதும் திருமணம் முடிக்கப்போவதில்லை என்று கூறுவது, எமது சமுதாயத்தின் விசம் மிக்க கண்களினாலேயே என்பதை உணரமுடிகிறது. வெளி நாடுகளில் ஈழமக்களின் போராட்டத்தை பணமாக்க முனையும் சிலர் ஈழம் ஈழம் என்று கோசங்கள் எழுப்புவதுண்டு. அவர்கள் நிச்சயம் இப் பெண்களிற்கு உதவி தம் கறைகளைப்போக்கிக்கொள்ள வேண்டும்.

Wednesday, 22 February 2012

அருமையான நான்கு மென்பொருட்களை - இலவசமாகதரவிறக்க!


Accord CD Ripper Free 6.9.0 + Portable 

ஒரிஜினலாக வாங்கப்படும் ஆடியோ ( Audio ), CD க்களை கொப்பி பண்ணமுடியாது. அதற்கு உதவும் மென்பொருளே இது. ஒருஜினல் கோப்பிலுள்ள அதே தரத்துடன் உங்களுக்குத்தேவையான கோப்புக்களாக விரைவாக மாற்றிக்கொள்ள முடியும்.
தரவிறக்கிவைத்துக்கொள்ளுங்கள் தேவைப்படலாம்.
 
மாற்றத்தக்க கோப்புக்கள் :
WAV, MP3, WMA, OGG, APE, FLAC, MP2, VQF, AIFF, AIFC, AIF, 3GP, AAC, M4A, M4B, MP4, MPC, MP+, MPP, WV, AU, SND, RAW, GSM, VOX, PCM, ADPCM, G721, G723, FAP, PAF, SVX, 8SVX, IFF, NIST, IRCAM, SF, VOC, W64, MAT, MAT4, MAT5, PVF, XI, HTK, CAF, SDS, AVR, WAVEX, SD2, WVE
 
வகை : போர்ட்டபிள்
அளவு :24 Mb
தரவிறக்க : Link 01
-------------------------------------------------------------------------------

Quick Logo Designer 5.0

உங்களுக்கென தனி சின்னத்தை (LOGO) வை உருவாக்க விரும்புகிறீர்களா?
அதற்கு உதவும் இலகு மென்பொருளே இது. உங்களுக்கு விருப்பமான படங்கள், உருவங்கள் மற்றும் எழுத்துக்களைப்பயண்படுத்தி சின்னத்தை உருவாக்கிக்கொள்ளலாம். 2200 டெம்பிலேட் லோகோக்களும் 5000 வெக்டர் பட உருவங்களும் இவ் மென்பொருளுடன் இணைந்திருக்கின்றமை சிறப்பு.
ஃபோட்டோஷொப்பினூடாக கொடுக்கக்கூடிய விசேட எஃபக்ட்டுக்களையும் நீங்கள் கொடுக்க முடியும்.
அச்சடிப்பதற்குரிய 300dp சின்னங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அளவு :71 Mb
தரவிறக்க : Link 02

-------------------------------------------------------------------------------

Wondershare மென்பொருள் நிறுவனத்தின் சமீபத்திய படைப்பு இது. வைபவங்களில் எடுக்கப்படும் படங்கள் முதற்கொண்டு வீடியோக்கள் அனைத்தையும் அழகாக வடிவமைத்து அழகிய புதிய தனித்துவமான DVD மெனுக்களுடன் தயாரித்துக்கொள்ள உதவும் ஒரு மென்பொருள் இதுவாகும்.
புதிய இணைப்பாக நீங்கள் நேரடியாக வெப்கமெரா அல்லது meory cards இல் இருந்து வீடியோக்களை புதிய பின்னனி இசையுடன் எடிட்பண்ண முடிகிறது. 100 இக்கு மேற்பட்ட DVD மெனுக்களைக்கொண்டிருக்கின்றமை உங்களுக்கு புதிய அனுபவமாக அமையும். பயண்படுத்திப்பாருங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து இச் சேவைக்கு ஊக்கம் தாருங்கள்.
 
அளவு : 38.11
 
தரவிறக்க : Link 03

-------------------------------------------------------------------------------
இவ் மென்பொருளை கணனியில் நிறுவுவதன் மூலம் தற்போது இருக்கும் வேகத்தை விட 10 % ஆவது அதிக வேகத்தில் இயக்கிக்கொள்ள முடியும்.
கணணியில் நிறுவப்பட்டு அழிக்கப்பட்ட தரவுகளின் (registry entries) எஞ்சிய தரவுகளை முற்றாக அழித்து கணனியின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. பயண்படுத்திப்பாருங்கள்.
 
அளவு :3.8 Mb
தரவிறக்க : Link 04

-------------------------------------------------------------------------------

Friday, 17 February 2012

குறைகளை சாதனையாக்கி சாதித்தோர்! + வீடியோ


popeye man

நாம் இன்று பார்க்கப்போகும் ஹீரோ Matthias Schlitte (மதியாஸ் ஸிலித்) 25 நிரம்பிய இவர் உலக கை மல்யுத்த சம்பியனாக உள்ளார்.
சிறுவயதிலேயே ஒருவகை விசேட நோயினால் பாதிக்கப்பட்ட இவரிற்கு வலது கை இடதுகையை விட சற்று பெரிதாக இருந்துள்ளது. 
எனினும் இக் குறையை நிறையாக்க எண்ணிய மத்தியாஸ் தனது 16 வயதில் இருந்து இதற்கென தனது வலது கையை பயண்படுத்தி விசேட பயிற்சிகளை தினமும் எடுத்துவந்தார். ( 500 தடவைகள் பாரத்தை தனது கைகளால் தூக்கி. )
தற்போது 25 வயதாகும் அவரின் கைகளின் கட்டு 18 இன்செஸ் அளவிற்கு கட்டு மஸ்தாக உள்ளது. 
 
பார்ப்பதற்கு அவரின் கைகள் "பப்பாய்" காட்டூனில் வருவதுபோன்று உள்ளதால் "பப்பாய் மான் (மனிதன்)" என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
 
இவரைப்போன்று எக்குறையோ அதை + பிளஸ் பொயின் ஆக்குபவர்கள் வாழ்க்கையில் ஜெய்க்கிறார்கள். :)
 


Rubber Man

பிரித்தானியாவைச்சேர்ந்த கிறே டூமர் (Garry Turner) எனும் நபரையே இங்கு காண்கிறீர்கள். இவர் 15.8 சென்ரிமீட்டர் நீளத்திற்கு தனது வயிற்றுத்தோலை நீட்டியமையே சாதனையாகப் பதியப்பட்டுள்ளது. மேலும் கை, கழுத்து, கண் போன்ற உறுப்புக்களின் தோலையும் இவர் அளவிற்கு சாதாரண நபர்களால் நீட்ட முடியாது.
இவரின் இத்திறமைக்கு காரணம் ஒரு விநோத நோயே, Ehlers-Danlos Syndrome என்றழைக்கப்படும் இவ் நோயுள்ளவர்களிற்கு தசைக்கும் தோலிற்கும் இடையிலான இணைப்பு அற்றுப்போயிருக்கும்.
எனவே இவர்களால் தமது தோலை இலகுவாக இழுத்து நீட்ட முடியும்.
 
சில சமையங்களில் குறைகள் கூட சாதனையாவதுண்டு என்பதற்கு இவரின் இத்திறன் ஒரு உதாரணம்.
உங்களிடம் குறையாக நீங்கள் கருதும் ஏதாவதொன்று கூட வெளிப்படும் பட்சத்தில் சாதனையாக மாறலாம். :)

Thursday, 16 February 2012

இலங்கையில் மக்கள் புரட்சி?? - படங்கள் + அதிர்ச்சி வீடியோ இணைப்பு!இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்றுக்காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொடர்ந்து அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதால், மக்கள் புரட்சி வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

படங்களுக்கு இதை சொடுகுங்கள் வீடியோவிற்கு இதை சொடுகுங்கள்!

------------------------------------

பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஈரானின் யுரேனியம் சரிவாக்கல் சம்பந்தமான முதலாவது வீடியோப்பதிவை பார்வையிட!

------------------------------------

VLC Media Player 2.1.0 போர்ட்டபிள் பதிப்பை இலவசமாக தரவிறக்க!

------------------------------------

1 நிமிடத்தில் அதிக உடைகளை மாற்றி சாதனை புரிந்த பெண்ணின் வீடியோப்பதிவைக்கான!

Monday, 13 February 2012

சாதணைப்பெண்கள்! - உங்களாலும் முடியும். - (வீடியோப்பதிவு )


Aneta Florczyk

அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த Aneta Florczyk ( 30 வயது) உலகில் பலமான பெண்களில் ஒருவராக அறியப்பட்ட இவரின் ஒரு சாதனையையே இங்கு நீங்கள் காண்கிறீர்கள்.
ஒரு நிமிட நேரத்திற்குள் அதிக frying pans எனப்படும் சமையல் கருவியை கையால் வளைத்தவர் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தும் வீடியோத்தொகுப்பே இது. 5  frying pans களை கைகளால் வளைத்து ஏற்கனவே இருந்த சாதனையான 4  frying pans வளைப்பை முறியடித்தார். :)
 
இவ்வாறான சாதனையாலர்கள் எமது நாடுகளிலும் இருக்கக்கூடும். அவர்கள் முயற்சித்தால் தம் பெயரையும் பொறிக்கமுடியும்.


TRISH 

உலகிலேயே வேகமாக வாசிக்கும்* திறன் உள்ள பெண்ணாக TRISH எனும் இப் பெண் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
( சத்தம் வெளியில் வரும் வகையில், மனதினுள் வாசிப்பதல்ல )
இவர் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற முடியவில்லை. எனினும், எம்மவர் எவராவது இவரைவிட வேகமாக வாசிக்குமாற்றலைப்பெற்றிருப்பார்கள். அவர்கள் இச் சாதனையை தமதாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எம் நோக்கம். வாசிக்கும் உங்களுக்கு அல்லது உங்கள் நண்பருக்கு இத்திறன் இருந்தால் முயற்சிக்கவும். :)

 

Thursday, 9 February 2012

இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக வெளியிட்டுள்ள வீடியோ இணைப்பு!

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) அமைப்பினர் கொடூரமாக நடந்து கொண்டதாக கூறி, ஒரு வீடியோ காட்சியை இலங்கை அரசு நேற்று வெளியிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் அத்துமீறு நடந்ததுடன், அப்பாவி தமிழர்களை கொடூரமான முறையில் கொன்று குவித்ததாக உலக நாடுகள் குற்றம் சாட்டின.

இம்மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் நடக்கிறது. அதில், போரில் இலங்கை அரசின் அத்துமீறல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், ராணுவத்தின் அத்துமீறலை மறைக்கும் வண்ணம் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் பற்றிய வீடியோவை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 6 February 2012

மூன்று சிறந்த‌ இலவச மென்பொருட்கள்!


Easy CD-DA Extractor v16 Final

ஒரிஜினல் ஆடியோ(Audio) சி.டி களில் இருந்து பாடல்களை அப்படியே கொப்பி பன்னிக்கொள்ள முடியாது. அதற்கு பல மென்பொருட்கள் இருந்தாலும் இலகுவாகவும் அதிகபடியான கோப்பு வகைகளிலும் மாற்ற உதவும் மென்பொருளே இது.
மாற்றக்கூடிய கோப்புக்களின் வகைகள் : 
3G2, 3GP, MP1, MP2, MP3, Windows Media Audio (WMA), Ogg Vorbis (OGG), MP4, M4A (AAC and Apple Lossless), AAC, aacPlus (HE-AAC, AAC+, HE-AAC+PS, eAAC+), FLAC, Musepack (MPC), WavPack (WV), WAV, AIFF, Monkey's Audio (APE), CUE மேலும் M3U.
 
அளவு :12 Mb
 
தரவிறக்க : இதை சொடுகவும்.

-------------------------------------------
Apowersoft Streaming Video Recorder 2.4.4
ஒன் லைனில் / ஆன் லைனில் ( online) பார்த்துக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது கிறிக்கெடில் ஏதாவதொரு நீங்கள் விரும்பும் பகுதியை பதிந்து வைத்துக்கொள்ள உங்களுக்கு ஆசை இருக்கும்.
அதற்கு உதவும் மென்பொருளே இது.
 
ஒன்லைனில் பார்க்கும் வீடியோக்களை உங்களுக்கு தேவையான பிரபல கோப்புக்களாக பதிந்து தரவிறக்கிக்கொள்ள முடியும். அத்துடன் பிரபல இணையத்தளங்களில் ஒரு சொட்டுக்கின் மூலம் பதிந்துகொள்ளவும் முடிகிறது.
 
அளவு : 23 Mb
 
தரவிறக்கிக்கொள்ள : இதை சொடுகவும்.

-------------------------------------------
Aurora 3D Text & Logo Maker v12  Portable
3D Logo ( முப்பரிமான இலட்ச்சனை) களை உருவாக்க உதவும் மிக இலகுவான மென் பொருட்களில் ஒன்று இந்த மென்பொருள். உங்களுக்குத்தேவையான முப்பரிமாண எழுத்துக்களையும் இலட்சனைகளையும் உருவாக்குவதற்கென இவ் மென்பொருளினுள் எண்ணிலடங்காத வடிவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைவைத்து உங்களுக்குத்தேவையான 3D எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.
பல வகை டெம்லேட்டுக்கள் ஏற்கனவே உதாரணங்களகாத்தரப்பட்டுள்ளன. அவற்றையும் மாற்றம் செய்து பயண்படுத்தக்கூடியதாக இருப்பது இதன் மேலதிக சிறப்பு. 
 
அளவு : 41 Mb
தரவிறக்க : இதை சொடுகவும்.

Sunday, 5 February 2012

புத்திசாலி நாயும் சிற்றிடை அழகியும்(?) - வீடியோ


இந்த நாயைப்பாருங்கள், நிச்சயமாக நீங்கள் இதை ரசிப்பீர்கள் நண்பர்களிடம் காட்டுவீர்கள்.
 
பயிற்சியினால் எதுவும் சாத்தியம் தான் என்பதை நிரூபித்துள்ள ஒரு வீடியோ பதிவு இது.
உரிமையாலர் சொல்வதைக்கேட்டி மிகவும் நேர்த்தியாக தனது அடுத்த படிகளைச்செய்கிறது. 5 அறிவு உள்ள மிருகத்திற்கு எப்படி இவ்வளவு நேர்த்தியாக கிரகித்து செயற்படும் ஆற்றல் உள்ளது என்பது வியப்பாக உள்ளது. 
பாருங்கள் ரசியுங்கள் பகிருங்கள். :)
------------------------------------------------------------------------------------
இங்கு நீங்கள் பார்க்கப்போகும் இந்த வீடியோவில் உள்ள பெண்தான் (பெயர் - CATHIE JUNG ) உலகிலேயே மிகச்சிறிய இடைகொண்ட பெண்ணாக கருதப்படுகிறார். 
வெறும் 15 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே இவரின் இடையின் சுற்றளவாக உள்ளது.
இவரின் இந்த மெல்லிய இடையின் அளவிற்கு காரணம்,
தனது இடையை பெல்ட் மற்றும் விசேட சாதனங்களால் மிக இறுக்கமாக கட்டி பழக்கப்படுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 23 அரை மணித்தியாலப்படி கடந்த 25 வருடங்களாக இதை செய்துவந்துள்ளார்.
இவரின் உடல்தகுதி சிறந்த நிலையில் உள்ள போதும், இப்படியான பயிற்சிகள் உடல் சிக்கல்களையே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Saturday, 4 February 2012

ஃபோட்டோஷொப் பாவனையாளர்களுக்காக இலவச Plugin !

Photoshop இல் விளம்பரங்களை வடிவமைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருளின் உதவி அதிகமாகத்தேவைப்படும்.
33 Mb அளவுடைய இவ் Plugin ஐ கணனியில் நிறுவுவதன் மூலம், எமக்குத்தேவையான Shining எஃபக்ட்டுக்களை இலகுவாக உருவாக்கிக்கொள்ள முடியும். இவ் மென்பொருளின் அட்டைப்படத்தை பார்த்தாலே அதன் உபயோகம் தெரியும். :)
அளவு : 33.67 Mb

Friday, 3 February 2012

14 சத்திரசிகிச்சை மூலம் வித்தியாசமாக மாறிய பூனை மனிதன்! (வீடியோ-)


ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தன்னை வித்தியாசமாகக்காட்ட முனைவார்கள். அப்படி முனைந்த ஒருவர் தன்னை பூனைபோன்று ஆக்கியுள்ளார்.
அமெரிக்காவைச்சேர்ந்த பூனை மனிதர் என அழைக்கப்படும் டெனிஸ் அன்வர் என்பவரையே கீழே வீடியோவில் நீங்கள் பார்க்கிறீர்கள்.
14 சத்திர சிகிச்சைகளை முகத்தில் செய்ததன் மூலமாக தனது முகத்தை பூணைக்கு ஒத்த முகமாக மாற்றியுள்ளார்.
சிலிக்கான் சிகிச்சை மூலம் கன்னங்களைக்கூட வீக்கமடையச்செய்து பூனையின் தோற்றத்தை பெற்றுள்ளார்.
 
இப்படியான செயற்பாடுகள் கூட ஒரு வகை மன நோயின் வெளிப்பாடு என்று மருத்துவர்கள் கூறுகின்றன.

Tuesday, 31 January 2012

மனித சேமிப்பகம்!! (வீடியோ இணைப்பு)


இன்று நீங்கள் பார்க்கப்போகும் நபர் உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகும் ஒருவர்.
ஆம், இவர் தனது வாழ்வில் நடந்த எந்த சம்பவத்தையும் மறக்கவில்லை, அது நன்மையானதாக இருந்தாலும் சரி தீமையானதாக இருந்தாலும் சரி... இவரின் மூளையில் அனைத்தும் பதிவாகியுள்ளது. முன்னர் நடந்த சம்பவத்தைப்பற்றி கேட்டால் உடனே பதில் அளிக்கக்கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளார்.
யோசித்துப்பாருங்கள், இவரின் மனதில் எத்தனை எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருக்குமென. இவரால் எதையுமே மறக்க முடியாது.
 
Jill Price (ஜில் பிறைஸ்) என்ற 47 வயது பெண்மனியே இந்த திறனைக்கொண்டுள்ளவர் ஆவார்.
அமெரிக்காவைச்சேர்ந்த இவர் சிறுவயது முதல் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு  நிமிடத்தையும் இவரால் கூறமுடிகிறது.
உதாரணமாக, ஒரு பழைய தொலைக்காட்சித்தொடரின் 30 செக்கன் வீடியோக்காட்சியை ஒளிபரப்பிவிட்டு, அது எப்போது ஒளிபரப்பானது என்று கேட்டால் உடனே அந்த தொலைக்காட்ச்சித்தொடர் ஒளிபரப்பான நாளை சொல்லிவிடுகிறார். (வீடியோவைப்பார்க்க. )
 
இவரின் இத்திறனை வெளியுலகிற்குகொண்டுவந்தவர், டொக்டர் Sawyer ஆவார்.
தனக்கு இப்படி ஒரு திறன் இருக்கிறது என்று சொன்னதும் முதலில் நம்ப மறுத்த டொக்டர், " எப்போது இளவரசி Grace (கிறேஸ்) இறந்தார் ?" 

அலைகளின் நாயகன்! - வீடியோ இணைப்பு :)


Mike Parsons உலகத்தில் இருக்கும் வியக்கத்தக்க ஒரு தடகளவீரர் எனலாம்.  பாரிய அலைகளின் மீது ஏறி வழுக்கிச்செல்வதில் வல்லவரான இவர், சுமார் 65 அடி உயரத்திற்கு எழும் ஒரு பாரிய அலையின் மீது செய்யும் சாகாசத்தையே இங்கு நீங்கள் காணப்போகிறீர்கள். 

Jaws, Hawaii கடற்கரையில் நடாத்தப்பட்ட இந்த சாதனை 100 வீதம் நம்பகமானது. ஹெலிகொப்டரின் துணையுடன் இந்த வீடியோப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ( பார்வைக்கு சில காட்சிகள் கிரபிக்ஷ் போலவே காட்சி தருகின்றன, எனினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனையாக இது உள்ளது. )
 

Monday, 30 January 2012

"புகைப்பழக்கம்" கவணயீனம்! - வீடியோ


புகைப்பழக்கமுள்ள ஒரு தாயாரின் கவனயீனத்தால் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையே இங்கு காணப்போகிறீர்கள்.
 
தெர்ரி (Terri) தற்போது 16 வயதாகும் இந்த சிறிமியின் இரண்டாவது வயதில்...
தெரியின் தாயார் சிகரெட் புகைத்துவிட்டு அடித்துண்டை கவனயீனமா கீழே போட்டுள்ளார், அது அவரின் "கோட்" ( மேலங்கி) யில் பட்டு தீப்பற்ற ஆரம்பித்து வீடு முழுவதும் பற்றிக்கொண்டது. 
ஹோலில் இருந்த தாயார் வெளியேறிவிட்டார். பிள்ளை படுக்கையறையினுள் மாட்டிக்கொண்டது. தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைக்கப்பட்ட போது. 
 
ஒரு வீரர் கருகிப்போன் அசாம்பலின் மத்தியில், தெர்ரி அசைவதைக்கண்டார் . முதலில் பிளாஸ்டிக் பொம்மை என்று நினைத்தவர் அசைவைக்கண்டு பிள்ளையை வெளியெடுத்தார். 
 
90% உடல் பகுதி எரிந்த நிலையில் இருந்த தெர்ரி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சியின் பின்னர் தெர்ரியின் உடல் தகுதி மீட்கப்பட்டது. 
மூக்கு, லிப்ஸ் உட்பட உடலின் பல பாகங்கள் செயற்கை தோலினால் மூடப்பட்டன.
தற்போது 16 வயதாகும் தெர்ரிக்கு...  விரல்கள் அற்ற கைகள், ஒரு கால்களே வாழ்க்கையை கொண்டு நடத்த உதவுகின்றது. முடிதொடக்கம் உடற்பாகங்கள் பல செயற்கையாகவே உள்ளன. பாடசாலையில் கல்வி பயின்றுவரும் தெர்ரிக்கு ஆசிரியர்கள், நண்பர்கள் உட்பட அனைவரும் உறுதுனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
(* இச் சம்பவத்தினால் ஏற்பட்ட கோபம் காரணமாக, தெர்ரியின் தந்தை மறுமணம் செய்துள்ளார், எனினும் தெர்ரி தற்போது தன்னைப்பெற்ற தாயையும் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். "தனக்கு இரண்டு மிகச்சிறந்த அம்மாக்கள் இருக்கின்றார்கள்" என்று தனது வாழ்வை மாற்றியமைத்த தாயிலும் எவ்வித வெறுப்பு, கோவம் இல்லாமல் கூறியுள்ளார். )
 

மைறொஸிஃப்டின் தனித்துவ கட்டண மென்பொருள் இலவசமாக!


High Logic FontCreator v6.5

சில நேரங்களில் நாம் எதிர் பார்ப்பது போன்ற எழுத்துருக்களை (Fonts) இணையத்தில் தேடி எடுப்பது கடிணம். அல்லது Corel, illustrator, photoshop இல் தயாரிப்பது என்றால் மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அத்துடன் கோப்பும் வேறு கணனிகளில் பயண்படுத்த கூடியதாக இருக்காது. 
அவை அனைத்திற்கும் தீர்வாக, நீங்கள் விரும்பிய எழுத்துருக்களை அமைத்துக்கொள்ள உதவும் மென்பொருளே இது.
இதில் நீங்களாக புதிய எழுத்துக்களை உருவாக்கிக்கொள்வதோடு, ஏற்கனவே இருக்கும் எழுத்துக்களிலும் உங்கள் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியும். பயண்படுத்திப்பாருங்கள்.
வின்டோஸ் பாவணையாலர்கள் மட்டுமே பயண்படுத்த முட்கிறது. ( இது ஒரு மைக்றோ ஷொஃப்ட் நிறுவனத்துடையது.)

பின் புறமாக 90 பாகை வளையும் ஆற்றல்!( வீடியோ )


இன்று நீங்கள் பார்க்கப்போகும் வீடியோ 26 வயது நிரம்பிய Zlata எனும் பெண்மணி பற்றியது. 
ரஷ்ய நாட்டில் பிறந்த இவர், 4 வயதாக இருக்கும் போதே தனக்குள் ஒரு திறமை இருப்பதை உணர்ந்துகொண்டார். 
ஆம், நம்மால் எப்படி முன் பிறமாக வளைய முடியுமோ அதே போல் இவரால் பின் புறமாகவும் வளைய முடியும். 
( நம்மில் பலருக்கு முன் புறமாகவே  90° இல் வளைய முடியாதுள்ளது, இவர் பின் புறமாகவும் 90° வளைக்கிறார். வீடியோவைப்பாருங்கள் விளங்கும். )
 
சிறுவயதில் பாடசாலைப்போட்டியொன்றில் ஆசிரியரின் அறிவுறுத்தலின் பெயரில் தனது திறமையைக்காட்டியவர், தற்போது ஒரு நாளில் அதிக நேரத்தை தனது உடல் திறனைக்காட்டுவதற்கே செலவாக்கிவருகிறார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில் , " நான் பிரத்தியேகமாக உடல் எடையைக்குறைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில்லை... எனினும் எனது உடல் வளைவுகளைப்பேன பயிற்சி செய்கிறேன் என்றார்.
சில சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான போஸ்களை நீண்ட நேரம் கொடுக்கும் போது சிறு உடல் வலி ஏற்படுவதாகவும், அது சாதாரணமானவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்கும் போது ஏற்படும் வலியாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். "
 
வெறும் 50சென்றி மீட்டர் நீள அகலமுடைய பெட்டியினுள் இவர் தன் உடல் முழுவதையும் புகுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Sunday, 29 January 2012

மது செய்தவினை (13+ வீடியோ பதிவு)


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எவ்வளவு கொடூரமான ஆபத்துக்களை உண்டாக்கும் என்பதையே இந்த வீடியோவில் பார்க்கப்போகிறீர்கள்.
 
இந்த வீடியோவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள பெண்ணின் பெயர் ஜக்கி (Jacqui).
கடந்த 99 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி இவரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. 
தனது நண்பர்/ நண்பிகளுடன் பிறந்த நாள் விழாவொன்றில் கலந்துகொண்டு சற்று அதிகமாக மது அருந்தியிருந்தார். விழா முடிந்த பின்னர் இரவு நேரத்தில் தனதுவாகனத்தை செலுத்திக்கொண்டு வீட்டிற்குச்சென்றார்.
அதே நேரம் 17 வயது ( 1999 இல்)  நிரம்பிய பாடசாலை மாணவன் ஒருவனும் குடித்துவிட்டு காரில் வீட்டிற்குச்சென்றுகொண்டிருந்தான்.  
ஒரே வீதியில் சென்றுகொண்டிருந்த அவ் மாணவனின் காரின் மீது  ஜக்கியின் கார் மோதிக்கொண்டது. ஜக்கியின் கார் எரியத்தொடங்கிய வேளை உள்ளே மாட்டிக்கொண்டார் ஜக்கி.
 
பின்னர் நடந்தவற்றை வீடியோவைப்பார்க்கவே விளங்கும். ( வீடியோவில் அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டுள்ளது. )

மிக அவசியமான இலவச மென்பொருள் - தரவிறக்கச்சுட்டியுடன்!!


இன்றைய இலவச மென்பொருளாக எங்கள் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் தேவைப்படக்கூடிய ஒரு மென்பொருளைப்பார்ப்போம்.
கணனியிலோ அல்லது வேரு வன் தட்டுக்களிலோ எமக்குத்தேவையான முக்கியமான கோப்புக்களை பதிந்துவைத்துக்கொள்வோம். ஒரு நாள் திடீரென தேடும் போது மாறி அழித்திருப்போம் அல்லது வைரஸ்பிரச்சனைகளால் ஃபோர்மேட் பண்ணியிருப்போம். அப்போது எப்படி அந்த கோப்பை மீட்பது?
அதற்கு உதவும் மென்பொருளே இது. பலவகை மென்பொருட்கள் இது போன்று இருந்தாலும், இந்த வொன்டர்ஷார் நிறுவனத்தின் வெளியீடுகள் என்றுமே முதன்மையானவைதான். நீங்களும் தரவிறக்கிக்கொள்ளுங்கள் என்றோ ஒரு நாள் தேவைப்படும். :)
மீட்க கூடிய வன் பொருட்கள் :
PC, USB drive, external hard drive, mobile phone, digital camera, iPod, MP3/ MP4 player அத்துடன் வேறு சேமிப்பகங்கள்.

Friday, 27 January 2012

அரவாணிகள்!!!


திரு நங்கைகள் என்பவர்கள் யார் என்பதைப்பற்றிய சிறு அலசலையே இங்கு வாசிக்கப்போகிறீர்கள்.
 
சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்காளின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.
 
23 ஜோடிகுறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன. 
அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத்தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும். 
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன்  ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வழர்ச்சியடையாத நிலையில் மைந்திருக்கும். )
 
குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக்கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்துவிடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்படவேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )


செயற்கை உறுப்பு மனிதர்கள்!இங்கு நீக்கள் பார்க்கப்போகும் வீடியோவில், உடலின் பல பாகங்களை செய்ற்கையாக பொருத்திய மனிதரை ( பெயர்:  Leonard McQueeny) காண முடியும். 
அவுஸ்திரேலிய மருத்துவவிஞ்ஞானிகளின் முயற்சியூடாக இந்த செயற்கை உடல் உறுப்பு மாற்றும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 
இந்த திட்டத்தின் மூலம், விபத்துக்களின் போது உடல் உறுப்புக்களை இழந்த நபர்கள் அதனை செயற்கையாக பொருத்திக்கொள்ள முடியும். ( தேவையான போது கழற்றிக்கொள்ளவும் முடியும்!!!) 
அவரவர் உடல் நிறம்,தோலின் தன்மைகேற்ப பொருத்தக்கூடியதாக இருப்பதனால் பார்வைக்கு வித்தியாசம் தெரிவதில்லை. ( இந்த முறை மிகுந்த பணச்செலவை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.) 
 
நேரடியாக எலும்பில் பொருத்தப்படும் சில நட்டுக்களின் மூலம் உறுப்புக்கள் பொருத்தப்படுகின்றன. வீடியோ இணைப்பை பாருங்கள் புரியும்.

1.5 பவுண்ட் கட்டியை முகத்திலுடைய பெண் பிள்ளை... காரணம் என்ன? (வீடியோ)


Grateful Regina (கிறதஃபுல் ரெஜின) எனும் 15 வயது நிரம்பிய பெண் பிள்ளைக்கு ஏற்பட்டிருந்த விகார நோய் பற்றியே இன்று பார்க்கப்போகிறோம்.

சாதாரண முகத்துடனேயே இக் குழந்தை பிறந்துள்ளது. எனினும், இரண்டு வார காலத்தின் பின்னர் அக் குழந்தையின் இடதுபுற கன்னம் வீக்கமடையத்தொடங்கியது. இடது கண்ணும் அதனுடன் கூடிய கண் பகுதியுமே இப்படி திடீர் வீக்கமடைந்தது.

உடனே அக் குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களை நாடினர். சிறு குழந்தையாக இருந்ததால் 3 வருடங்களின் பின்னரே சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
3 வருடங்களின் பின்னர், பிள்ளையை பரிசோத்தித்த போது அக் கழலை மூளையுடன் தொடர்புடையதாகையால், பிள்ளையின் உயிரிற்கு ஆபத்தாக முடியும் என்ற காரணத்தால் மருத்துவர்கள் சத்திர சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

நாட்கள் ஆக ஆக அக் கழலை பெரிதாகிக்கொண்டே செல்லத்தொடங்கியது. 1.5 பவுண் நிறையளவு வளர்ந்தது. அத்துடன் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 மில்லி லீட்டர் அளவு இரத்தம் வெளியேறத்தொடங்கியதுடன். அக் கழலையில் இருந்து சீளும் வரத்தொடங்கியது.
இதனால், அப்பிள்ளையின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிப்படையத்தொடங்கியது. இரத்தம், சீள் என்பன வாய்,மூக்கினுள் புகத்தொடங்கியது.

இதுபோன்ற நோய்கள் ஏற்பட....

Wednesday, 25 January 2012

"ஏலியன்ஸ் றிட்டேன்ஸ்" - ஏலியன்ஸ்,பேய்,கடவுள் - ( பரிமாணங்கள் -14)
சுமார் ஒரு வருடத்திற்குப்பின்னரான ஏலியன்ஸ் தொடர்பான பதிவு இது. பதிவுகளை இடையில் நிறுத்தியமைக்கு மன்னித்துக்கொள்ளவும். ஏலியன்ஸ் பேய் கடவுள் பகுதியின் 14 ஆவது பாகம் இது. ஏலியன்ஸ் பற்றியதே.

இவ்வளவு நாட்களாக ஏலியன்ஸ் வருகைகள், ஏலியன்ஸ் தொடர்பான பண்டைய சான்றுகள், யார் ஏலியன்ஸ் என்பதை பார்த்துக்கொண்டிருந்தோம். தற்போது...

உலகில் பல மர்மங்கள் இன்றுவரை நீங்காமல் நிலைத்திருக்கின்றன. நாம் அன்றாட வாழ்க்கை, சினிமா, பிரச்சனைகள் என்ற குறுகியவட்டத்திற்குள் இருப்பதனால் அவற்றை அறியக்கூட முடிவதில்லை.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது " NAZCA - Lines ( நஷ்கா கோடுகள்) / மர்மக்கோடுகள் " பற்றியது. நஷ்க்கா கோடுகள் என்பது உலகின் மேற்புறத்தில் மர்மமான முறைகளில் வரையப்பட்டுள்ள சில உருவங்கள். இவை ஏன் வரையப்பட்டன? எப்போது வரையப்பட்டன? யாரால் வரையப்பட்டன என்ற கேள்விகள் இன்றுவரை தெளிவுபடுத்தப்படாமல் நிலைத்து நிற்கின்றது. ( தொழில் நுட்பம் எவ்வளவுதான் வள‌ர்ந்திருந்தாலும் பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளையும் உட் கருத்துக்களையும் இன்றுவரை புரியமுடிவதில்லை உதாரணம் பிரமிட்டுக்கள்! )


அக்கோடுகளையும் அவற்றிற்கும் ஏலியன்ஸிற்கும் என்ன தொடர்பு என்பதையும் பார்ப்போம்.
முதலில் " நஷ்கா - பேரு - கோடுகள்" ஐப்பார்ப்போம்.


மேலதிக சுவார்ஷ்யங்களை முழுமையாக வாசிக்க, இதை கிளிக் பண்ணுங்கள் :) ( எனது இணையமுகவரி!)


"inner fire (உள் தீ)" யோகா கலையின் அற்புதங்களில் ஒன்று!!

"Dutchman Wim Hof" நீங்கள் தற்போது பார்க்கப்போகும் வீடியோவின் நாயகன். 0 பாகைக்கும் குறைவான குளிரில்,
குளிர் படர்ந்து மேற்புரம் கட்டியாகிப்போன நீர்த்தடாகத்தின் அடியில் உள்ள கடும் குளிரான நீரில் சுமார் 57.5 மீற்றர்கள் வெறும் உடலுடன் தன்னீருக்கு அடியால் நீந்தி சாதனை புரிந்துள்ளார். ( வெறும் காட்சட்டையும், கண்ணிற்குள் நீர் புகாமல் இருக்க கண்ணாடியுமே அணிந்திருந்தார்.)
சாதாரணமாக இவ் குளிருக்கு உடல் விறைத்துப்போய் இரத்த ஓட்டங்கள் பாதிப்படையவேண்டும். எனினும், இவரின் உடலில் அப்பாட்திப்புக்கள் ஏற்படுவதில்லை. அதற்கான காரணம், பண்டைய உலகத்தில் பிரசித்தமாக இருந்து தற்போது மறைந்துபோன "inner fire (உள் தீ)" எனும் யோகக்கலையை கற்றுள்ளமையேயாகும். இந்தி வீடியோவைப்பார்க்கும் போதே உங்களுக்கு விளங்கும், சிறிது நேரம் தனிமையில் அவர் அக்கலைக்கு உட்படுவது.

வீடியோவைப்பார்க்க எனது தளத்திற்கு வாருங்கள். :)

கட்டாயம் இருக்க வேண்டிய 3 ஃபோட்டோஷொப் - பிறஷ்கள் இலவசமாக! - (3 Photoshop brushes for Free! )

TamilClone Frame brushes :

திருமண,பிறந்த நாள் போன்ற விழாக்களுக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களுக்கு ஃபோட்டோஷொப் ஃப்ரேம் ( Photoshop Frame) போட்டு மெருகூட்டுவது வழமை. தற்போது பழைய டிஸைன் ஆன கட்டம் கட்டிய பெட்டிக்குள் போடிவதெல்லாம் Bore. தற்போதைய நவீன டிஸைன்களில் இருக்கும் ஸ்ப்லாஷ் போர்டர்கள் தான் அழகூட்டும். அதற்கு உதவும் brushe இக்குரிய லிங் இங்கு தரப்பட்டுள்ளது. பயண்படுத்திப்பாருங்கள்.

அளவு : 5.16Mb

தரவிறக்க : Clone 01


For more : http://www.tamilclone.com/news_detail.php?id=354

Thursday, 5 January 2012

ஒரு பதிவன் இணையம் ஆரம்பிக்கிறான் :P (+ "ஒக்சிஜன்" நகைச்சுவை குறும்படம்.)


--------------------------
மிக மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு எனது வலைப்பதுவுப்பக்கம் வந்திருக்கிறேன். தொடர்ப்பதிவுகளை ஆரம்பித்து விட்டு இடையில் விட்டுச்சென்றமைக்கு முதலில் அனைவரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
--------------------------

பல தடங்களினால் இவ்வளவு காலமாக எனது பதிவுகளை தொடரமுடியவில்லை. நினைப்பது, ஆசைப்படுவது அனைத்துமே தோல்வியில் முடிந்தமையால் ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் மன நிலையில் நான் இருக்கவில்லை.
இன்று மீண்டும் பதிவெழுதும் மன நிலைக்குத்திரும்பி இருக்கிறேன்.

காரணம் 1 :
19 வயதில், நான் ஒரு தனித்தளம் நடாத்தவேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. சுமார் மூன்றரை வருடங்களின் பின்னர் அந்த ஆசை தற்பொழுது நிறைவேறியுள்ளது.
எனது ஆசைப்படி 75% மன நிறைவுடைய தளத்தை உருவாக்கியுள்ளேன்.

பெயர் : தமிழ் குளோன் TAMILCLONE
அர்த்தம் : 1 ) தமிழர்களில் மண்டிப்போன உணர்வுகளை மீட்டெடுத்து அடுத்த தலைமுறையை தலை நிமிரச்செய்வது. (அறிவியல், கல்வி,தொழில் நுட்பம், தமிழ் போன்ற வகைகளினூடு இது சாத்தியம்.)
அர்த்தம் : 2 ) பல தளங்களில் இருந்து செய்திகள் பெறப்படுவதால், ஒரு நகலி (குளோன்) ஆகவும் இதை கருதமுடியும்.

எனது அடிப்படை நோக்கம் எந்த தளத்திலும் இடம் பெறாத செய்திகள் இடம் பெற வேண்டும் என்பதே.
( இதுவரை இந்த வளாகம் வலைப்பதிவில் 212 பதிவுகள் இட்டுள்ளேன் அவற்றில் 1 மட்டுமே கொப்பி செய்யப்பட்ட பதிவு) எனினும் தனியொருவனால் அது சாத்தியமில்லை. எனவே, இணையத்தளத்தில் தற்போதைக்கு பல கொப்பி பதிவுகள் இருக்கும். எனினும் எங்கிருந்து பெறப்பட்டது என்பது கீழே போடப்பட்டிருக்கும்.
( சிறந்த பிரயோசனமான சில பதிவுகளை மட்டுமே கொப்பிசெய்துள்ளேன்.)

தற்செயலாக இந்தப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் வலைப்பதிவர்களின் பதிவுகள் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும்/ எடுக்கப்படலாம். எனினும் கீழே ஆக்கத்திற்கு உரியவரின் பெயர் போடப்பட்டிருக்கும்.
அப்படி தங்ளம் பதிவுகளை பாவிப்பது பிடிக்காதவர்கள் உடனே எனக்கு தெரியப்படுத்தவும். அவை நீக்கப்படும் அல்லது மேலதிக கொப்பிகள் தவிக்கப்படும்.

காரணம் 2 :
இந்தப்பதிவும் எனது தளத்திற்கு வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கை. ( விளம்பரம் என்று நினைத்தாலும் ஓ.கே, ஒரு முறை வந்து தளத்தை சுற்றிப்பாருங்கள் எதிர்கால நோக்கு புரியலாம். :) )

என்னதான் நான் இணையத்தளம் நடத்த நினைத்தாளும் எனது பதிவுலக அனுபவத்தை மறக்க முடியாது. மேலும் எனது வலைப்பதிவோடு இணைந்திருக்கும் 336 நண்பர்களையும் இடையில் விட விரும்பவில்லை.
எனவே விடுபட்ட ஏலியன்ஸ்பதிவுகள் உட்பட அனைத்து பதிவுகளையும் மிகவிரைவில் வளாகத்தில் தொடர்வேன், வளாகத்தில் இடம்பெற்ற பின்னரே அதன் மாற்று பதிவு தமிழ் குளோனில் இடம்பெரும். தேவையான அளவிற்கு புதிய தகவல்கள் ஏற்கனவே வாசித்து அறிந்துவிட்டேன். தொடர்ந்து ஆதரவுதருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தளத்தின் லிங் : http://www.tamilclone.com/
FACEBOOK லிங் :  https://www.facebook.com/tamilclone
 ( பரிசுப்போட்டிகளும் ஃபேஸ்புக்கூடாக நடைபெறவுள்ளது. இன்னும் 10 நாட்களின் ஆரம்பமாக இருக்கும் இப்போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.)


இந்தப்பதிவை நம்பி வந்தவர்களுக்கு. ஒரு நகைச்சுவை அறிவியலாக இந்த குறும்படம் அமையும். :)இந்தப்பதிவில் சொல்லப்பட்டவை பிடித்திருந்தாள் வோட் போடவும், எனது தளத்திற்கு விஜயம் செய்யவும்.
அல்லது குறைகளைக்கூறவும்.

LinkWithin

Related Posts with Thumbnails