Total Pageviews

Saturday, 27 November 2010

டாம்ஸிம் ஃபியூட்சரும்... (விஞ்ஞான புணைக்கதை.. :) )

------------------------------------------------------------------------------------------
2040...
3ம் உலக யுத்தம் முடிவடைந்த காலப்பகுதி அது...
புதிதாக அமைக்கப்பட்ட ஹோலில்... வரலாற்று ஆய்வாலர்களும், தொல் பொருள் நிபுணர்களும்... அந்த நபரின் உடைமைகள் மற்றும் புத்தகத்தை வைத்து தீவிரமான ஆராச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்...
"எப்படி இவ்வளவு துள்ளியமாக இதை எல்லாம் கூறினார்?... எல்லாமே சரியாக இருக்கிறதே... அப்படியானால் அடுத்து வரப்போகும் அந்த அரச வம்சம் எது?" என்ற கேள்விகளே அனைவரையும் தீவிரமாக கட்டிப்போட்டிருந்தன.
அடுத்து,
மக்கள் எந்த நேரத்தில் புரட்ச்சி செய்வார்கள் என்ற குழப்பமான சூழ் நிலை என்பதால்.... அரசாங்கத்தினால் உடனடியாக ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பிக்குமாறு நெருக்கடி வேறு.

சிறிது நேரத்தில்... குழுவின் உபதலைவர் மார்க்ஸ், சம்பந்தமில்லாத இருவருடனும் ஆராய்ச்சி சாலையில் நுழைகின்றார்.
"இவர்கள் இருவரையும் வைத்து நாங்கள் இவளவு காலமாக தேடிய கேள்விகளுக்கு தெளிவான பதிலை பெற்று விடலாம்...." என்று குழு உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு... அவர்கள் சம்பந்தமான பதிவுகள் அடங்கிய கோப்பை போட்டுக்காட்டினார்...
காட்சி முடிவில்... குழு உறுப்பினர்களின் முகத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது. அன்று இரவே... அந்த நபர்களை ஆராய்ச்சிக்குட்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இரவு 8 மணி...
ஆய்வு கூடம் நிசப்தமாக இருந்தது... அந்த நபர் பயண்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தது...
ஒரு பத்து நிமிடத்தில் மார்க்ஸ் அந்த குறிப்பிட்ட நபர்களுடன் ( நிர்வீன் மற்றும் டேவ்) உள் நுழைகின்றார்...
முதலாவதாக நிர்வீன்... முன்வந்து அந்த பொருட்களை உத்துப்பார்க்கின்றார்... குறிப்பாக சேதமாகி உக்கிப் போய் இருந்த அந்த கோல வடிவான பொருளை...

************
4027 ம் ஆண்டு...
ரீஷியோ... ஆய்வு சாலையில்...
" ஏ.பி 455 ஃப்லைட் விபத்துக்குள்ளாகி விட்டது... வேற்றுக்கிரகத்தினரின் கதிர்கள்தான் இதற்கு காரணமாக இதுவரைக்கும் அறியப்பட்டுள்ளது. இன்னொரு முக்கிய விடையம்... அப்போது அந்த ஃப்லைட் ஹிஸ்ரி பொக்ஸ் உடன்... இறந்த காலத்தில் பயணித்துக்கொண்டிருந்தது... இதனால்... எமது சமுதாயத்திற்கும் பாரிய பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது... எந்த கதர் அதைத்தாக்கியது என்பது சம்பந்தமாக இதுவரை சர்வதேச விண்வெளி குழுவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கவில்லை..." என்ற தகவல்... அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அனைவரதும் மூளைக்கு உணர்த்தப்பட்டது...

குறிப்பிட்ட நபர் ஒருவர் "ஹிஸ்ரி பொக்ஸை" நோக்கி வந்துகொண்டிருக்கிறார்... வேறு வழி இன்றி, அழிக்காமலேயே உடனடியாக உங்கள் தொடர்புகளைத்துண்டித்து விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பீப்!!!! "

************

நிர்வீன் உசாராகிக்கொண்டு.. "இவளவும்தான் என்னால்... கூற முடிகிறது.... தலை கடுமையாக வலிக்கிறது... எனக்கு றெஸ்ட் வேண்டும்..." என்று கூறி ஓய்வறையுல் ஓய்வுக்குச்சென்றுவிட...  முடிவை எதிர்பார்த்த ஆய்வாலர்கள் மேலும் பலத்த குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.

அடுத்ததாக டேவ்... அந்த மேசையின் அருகில் சென்று... அந்த நபரின் படத்தை உத்துப்பாக்கின்றார்...

************

1532 ம் ஆண்டு...
ஊரெங்கும் கொள்ளை நோய்... என்னால் பலர் காப்பாற்றப்பட்டு க்கொண்டிருக்கிறார்கள். 1534 என்னால் எவளவு முயன்றும் எனது மனைவி பிள்ளைகளை காப்பாற்ற முடியவில்லை... எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது... ஊர் சொத்துக்களை விட்டு போவதற்கு முடிவுசெய்துவிட்டேன்...

ஒரு காட்டு வளி பிரதேசத்தில் போய்க்கொண்டிருக்கிறேன்... தூரே ஏதோ சில இரும்பு சாமான்கள் தெரிகின்றது... அதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்... 
காலில் தடக்குப்பட்ட கோலவடிவான அந்த பொருளை எடுத்து பார்த்தேன்...
அந்த கோலத்தின் ஒரு முனைவில் சிறிய ஒரு துவாரம்... அதனூடு பார்த்த போது...பல காட்சிகள்... எங்களை போன்ற மனிதர்கள் ஆனால் வித்தியாசமாக... ஒன்றுமே புரியவில்லை... நான் எங்கேயோ இருப்பது போன்ற ஒரு உணர்வு...
பத்திரமாக வேறு எவரும் அந்த இடத்தை நெருங்க முதல்... அந்த கோலத்தை எடுத்துக்கொண்டு தங்கிவதற்கு ஒரு இடம் தேடி சென்றேன்... ஒரு பாதிரியாரின் உதவியுடன் ஒரு வீடு கிடைத்தது எனக்கென...

அங்கு வைத்து அந்த கோலப்பொருளை பார்க்கையில்தான் விளங்கியது...  எமது எதிர்கால உலகத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள் தான் அவை என்பது.
அதை அப்படியே வெளியில் சொல்ல எனது மனம் விருப்பவில்லை.... நான் பார்த்த எதிர்கால சம்வங்களை கதைகளாக எழுத ஆரம்பித்தேன்... 
கிறிஸ்தவ அடிப்படைவாதிகளினால் பலத்த எதிர்ப்பும் கொளை மிரட்டலும் வந்ததால்... நான் பார்த்தவற்றை கவிதை வடிவில் எழுதி வைத்தேன்...

நான் எழுதிய புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது... அதற்காக என்னை பிரபல ஓவியரின் உதவியுடன் வரைந்துகொண்டிருக்கிறேன்...

************
இரவு 02 மணி...

டேவ்... நீண்ட பேச்சுக்குபின் நிகழ்காலத்துக்கு வருகிறார்....  நிர்வீன் போன்றே கடுமையான தலை வலியுடன்... ஓய்வுக்கு செல்கிறார்.

அப்போது தான் ஆய்வாளர்களுக்கு உண்மை புலப்படுகிறது....
நொஸ்ரடாமஸ் கணித்ததாக கருதப்பட்டதெல்லாம்... உண்மையிலேயே... எமது எதிர்கால சமுதாயத்தால் பதிவு செய்யப்பட்ட வரலாற்று சம்பவங்கே என்பது. அதி நவீன சூரிய சக்தியில் இயங்க கூடிய அந்த கருவியில் பதியப்பட்ட அவற்றை பார்த்துத்தான் நொஸ்ரடாமஸ் எதிர்காலத்தை எழுதி இருக்கின்றார்.
நாம் நினைத்தது போன்று அவர்... நட்சத்திரங்களை மட்டும் கொண்டு கணிப்பிடவில்லை... வானத்தை அடிக்கடி பார்த்தார் என்பது... அந்த காட்சிகளில் கண்ட விமானங்களை பார்க்கும் ஆவலுக்காகத்தான்.

உடைத்து எறியப்பட்ட அந்த கருவியின் பாகங்களை வைத்துக்கொண்டு எமது நாட்டை ஆழப்போகும் அந்த அரச வம்சத்தை கண்டுபிடிக்கவே முடியாது என்ற உண்மை புரிந்து... இரவோடு இரவாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பாரிய தேடலுக்கு முடிவுகட்டிய... அதீத‌ இ.எஸ்.பீ மனிதர்களான நிர்வீனுக்கும் டேவ்கும் அரசினால் தனிப்பட்ட ரீதியில் கெளவ்ரவம் அளிக்கப்பட்டது... :)
------------------------------------------------------------------------------------------

இது எனது இரண்டாவது விஞ்ஞான புணைக்கதை முயற்சி (முதலாவதுக்கு இதை கிளிக் பண்ணவும்)... தவறுகள் இருக்கும். சுட்டிக்காட்டவும்.
இ.எஸ்.பி... மனிதர்கள் பலவகையுள்ளனர்.
இதில்... இறந்தகாலத்தை காணகூடியவர்களதும்...  எதிர்காலத்தை காண கூடியவரினததும் எண்ணம் பயண்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள்... விரைவில் "கனவும் நனவும்" அல்லது "மூளையும் அதிசய சக்திகளும்" பதிவின் இரண்டாம் பிரிவில் எழுத முயற்சிகிறேன்... :)
------------------------------------------------------------------------------------------


Thursday, 25 November 2010

ஃபேஸ்புக் தத்துவ ஞானிகளின் தத்து பித்துவங்கள்... :D

------------------------------------------------------------------------------------------

நீண்ட நாட்களாக பதிவிடவில்லை... :(
அடுத்த மாதம் பல சுவாரஷ்யமான தகவல்களுடன் எழுதிறதுக்கு ஐடியா பண்ணியாச்சு கனக்க வாசிச்சாச்சு... :)

இது இப்போ சமீபகாலமாக... எனது...ஃபேஸ்புக்கில் (கண்ட) உளறிய தத்துவங்கள்...
உங்களுடன் பகிருந்து கொள்கிறேன்... 
------------------------------------------------------------------------------------------


காதல்...
* என்னவளே அருகம்புல் போல நாம் காதல் வளர்ந்து கொண்டு இருக்கும் பொது "எருமை" மாடு போல் உங்கள் அப்பா அதை மேய்ந்து விட்டாரே...

* ஃபிளவருக்கும்.......ஃபிகருக்கும் ....என்ன வித்தியாசம்.....நண்பா,ஃபிளவர்.... கொஞ்ச நாளில் வாடிப்போயிடும்......???ஆனால்...ஃபிகர்.......கொஞ்ச நாளில் ஓடிப்போயிடும்.....

* காதலிக்கும் போது குழந்தையாய் இரு..அப்பொழுது தான் அவள் உன்னை ஏமாற்றும் போதும் சிரித்துக் கொண்டேயிருப்பாய்!

* "நீ ஓடிபோகலாமா?" என்று கேட்டதும்... நான் ரெடியாவதற்குள் நீ ஓடிய போதுதான் தெரிந்தது நீ என்னிடம் கேட்டது... சம்மதம் அல்ல... ஐடியா என்று...

* நான் கும்பிடுறதெல்லாம்.... என்ட அம்மாக்கு ஒரு SUPER FIGURE மருமகளா வரனும் என்டு மட்டும்தான்... 
எனக்காக எல்லாம் கும்பிடுறல... B-)

* நூறு கோவில் கட்டுவதை விட ஒரு கல்லூரி கட்டுவதே சிறந்தது ஏனென்றால் கோவிலை விட கல்லூரிக்கு தான் பிகர்கள் அதிகமாக வரும்...

* பசங்க பார்த்தா...."SIGHT" Girls பார்த்தா....."JUST LOOK"பசங்க பேசினால்......."JOLLU"Girls பேசினால்....."FRIENDLY"... :@

* காதல்னா என்ன?யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கி எவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்...

* லவ்வர மட்டும் சைட் அடிச்சா சாதாரண வேர்க்!அவ ஃபிரெண்டையும் சேர்த்து சைட் அடிச்சா அது ஹார்டு வேர்க்!...
வேர்க் சில நேரம் ஃபெயில் ஆகலாம் ஆனா ஹார்டு ஒர்க் எப்பவும் பலன் தராம போகாது...

* உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு!
30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு!!
மீதி இருக்கும் 10% பசங்களுக்கு அறிவு இருக்கு!

* உன்னை காதலித்ததற்குபேசாமல் ஒரு கழுதையைகாதலித்திருக்கலாம் எனகூறுகிறாய்நானும் உன் நினைவுகளைசுமந்து கொண்டிருக்கும்கழுதைதான் ...

* பெண்களை காதலிக்கும் முன்அவள் கண்களை பாருங்கள் அந்த கண்களில் தெரியும்சில ஆண்களின் கல்லறைகள்...
------------------------------------------------------------------------------------------
வாயகொடுத்து மாட்டிகிறது...
* லவ் மரியாஜ்கும் அரேன்ஞ் மரியாஜ்கும் என்ன வித்தியாசம்...
" லவ் மரியாஜ்னா.. நம்ம லவ்வர கல்யானம் பண்ணிக்கிறது... அரேன்ஞ் மரியாஜ்னா அடுதவன்ட லவ்வர கல்யானம் பண்ணிகிறது... "

* கஷ்டப்படாம எதுவுமே கிடைக்காது இது பழசு... கஷ்டப்பட்டாலும் உண்மைக்காதல் கிடைக்காது இது புதுசு...
"பழைய Brand அடிச்சா ***** பழச உளறுவான்....
புது Brand மாத்தினா புதுசு புதுசா உளறுவான்... :D ::P"
------------------------------------------------------------------------------------------
நட்பு...
* பிரிந்த காதலர்கள் சேரும் போது, இதையம்தான் பேசும்...
பிரிந்த நண்பர்கள் சேரும் போது, பீர்... பிரியானி எல்லாம் பேசும்... நண்பேன்டாடாடாடாடா...* என் நண்பனைஅறிமுகப்படுத்தினேன்சந்தோசப்பட்டனர்
என் நண்பியைஅறிமுகபடுத்தினேன்சந்தேகபட்டனர்!

* கல்லூரி என்ன கொடுத்தது? கண் மூடி நினைத்தால் புரியுது! மேல் கல்வி மட்டுமில்லை!!! கனவு மட்டுமில்லை!!! கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்..

* உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.தவறுகள் செய்தால் தன்டித்து விடு.ஆனால் விடுதலை மட்டும் செய்து விடாதே..!

* எனக்காக நீ அழுகிறாய்.......
உனக்காக நான் அழுகிறேன்.......
உண்மையில் நம்மிடையே அழுதது
நீயுமல்ல நானுமல்ல.........
நம் நட்பு.....

* என் மேல் உனக்கு கோபம்.........
உன் மேல் எனக்கு கோபம்.......
பாவம் நம் நட்பு.......
யார் மேல் கோபம் கொள்ளும்......
விட்டு விடுவோம்.........கோபத்தை.......
உனக்காகவும் அல்ல...... எனக்காகவும் அல்ல.....
நம் நட்புக்காய்....
------------------------------------------------------------------------------------------
* ஒரு பக்கம் கை, ஒரு பக்கம் முள்ளு இருந்தா...
சத்தம் வராது... ரெத்தம் தான் வரும்... :)

* யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட ,,,,,,,,யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்...

* நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை.....
கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கே அவசியம் இல்லை....
------------------------------------------------------------------------------------------
இதில் பலது ஏற்கனவே இணையத்தில் இருந்ததாக்த்தான் இருக்கும்... 
( எனது நண்பர்களை எனக்கு தெரியாதா... என்னை போலத்தானே சுட்டு போட்டுவார்கள் ஸ்ரேட்டஸ்.. :P )
அதனால்... உண்மையான உரிமையாளர்கள் மன்னிக்கவும்... :D
------------------------------------------------------------------------------------------

Tuesday, 16 November 2010

மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே! (ஒரு பக்க வரலாறு... :) )

ஜே.கிருஷ்ணமூர்த்தி
------------------------------------------------------------------------------------------
நெருக்கடி நிலையை இந்தியாவில் அறிவித்திருந்த இந்திராகாந்தி, ஆலோசனைக்காக தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்திருந்தார்.
‘‘நான் ஒரு புலியின் மீது ஏறி அமர்ந்துவிட்டேன். இறங்க முடியாமல் தவிக்கிறேன்’’ என்றார் இந்திரா.
‘‘புலியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதையும் அறிந்திருப்பீர்களே..?’’ என்றார் ஜே.கே.
‘‘அப்படியானால், என்னை நான் மாற்றிக்கொள்ளத்தான்
வேண்டுமா?’’ என்று இந்திரா கேட்க,
‘‘மாறுதல் என்பது தாற்காலிக சந்தோஷம் தரலாம். ஆனால், அதுவே தீர்வாகாது.மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்றார் ஜே.கே.

அதன் பின்னர், நெருக்கடிநிலை விலக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்து, பல்வேறுவழக்குகளில் கைதாகி, இந்திரா ஜெயிலுக்குப் போனார். மீண்டும் அடுத்த தேர்தலில் வெற்றி கிடைத்தது. அந்தச் சமயத்தில், ‘‘நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டு விழிப்பு உணர்வு அடைந்து, சோதனைகளைத் தாங்கிக்கொள்வது என முடிவு எடுத்தேன். அதன் பலனாகவே, மீண்டும் எனக்கு வெற்றி கிட்டியிருக்கிறது’’ என்று மனம் திறந்து சொன்னார் இந்திரா.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது
குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில்
தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் உதவிச் செய‌லாளராக வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக்
கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

1925-ம் ஆண்டு தம்பி நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையான விழிப்பு உணர்வைக் கொடுத்தது. ‘ நெருங்கியவரின் மரணத்தின்போது நாம் கண்ணீர் வடிப்பது, உண்மையில் இறந்தவருக்காக அல்ல; நாம் முன்பு போல் வலிமையாக இயங்க முடியாது, அவர் மூலம் நமக்கு இனி சந்தோஷமோ, உதவிகளோ கிடைக்காது என்பதாலேயே அழுகிறோம்’ என்பதைக் கண்டுகொண்டார். 1929-ம் வருடம் ‘அனைத்துலக ஆசான்’ என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் தூக்கி எறிந்த கிருஷ்ண மூர்த்தி, ‘‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்பிலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான், மக்களுக்குச் சுதந்திரம் பற்றி என்னால் விளக்கிச் சொல்ல முடியும்’’ என்றார்.

‘‘கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று, தேசப்பற்று... எல்லாமே மனித ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது.
மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்று தனது 90-வது வயதில் மரணமடையும் வரை, உலகெங்கும் சுற்றிப் போதித்தார் ஜே.கே.

ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.
------------------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ

------------------------------------------------------------------------------------------

Friday, 12 November 2010

டெக்ஸ்ட் லைன் டியூட்டோரியல்... (ஃபோட்டோ ஷொப் )

ஃபோட்டோ ஷொப் 
------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத்தேவையான அளவில்... ஃபைலை ஓபின் பண்ணிக்கொள்ளவும். பக்ரவுண்ட் கறுப்பாக போடவும்.
இதற்கு Ctrl + N ஐ கிளிக் பண்ணவும்.

T ஐ அழுத்தி டெக்ஸ்டை தெரிவு செய்து... உங்களுக்கு டிசைன் பண்ண வேண்டிய பெயரை ரைப் பண்ணவும். ( தடிப்பான எழுத்தை தெரிவு செய்யவும் :) ) ( Press "T" key)

பின்னர் எழுத்து உள்ள லேயரை.. Ctrl ஐ அழுத்தியவாறே கிளிக் பண்ணவும்.
அடுத்து... அந்த லேயருக்கு மேலாக.. புதிதாக ஒரு லேயர் போடவும்.
அடுத்து... Edit ஐ கிளிக் பண்ணி Stroke போகவும்... வெள்ளை களர் செலக்ட் பண்ணி... Width இக்கு 2 கொடுத்து ஓ.கே பண்ணவும்.
( Edit -> Stroke : Width =2 // Colour = White )

இப்போ போடர்கள் எல்லாம் வெள்ளை களர் லைனாக இருக்கும்.
படத்தில் காட்டப்பட்டவாறு... L ஐ கிளிக் பண்ணி..  Add to Selection ஐ செலக்ட் பண்ணி ஒவ்வொரு எழுத்தின் மூடப்பட்ட இடங்களையும் தெரிவு செய்து அழிக்கவும். :)

அடுத்து... ஒரு லேயரை இந்த போர்டர் லேயருக்கு மேலாக போடவும்.அந்த லேயரில்... B ஐ கிளிக் பண்ணி... அந்த லைன்களுக்கு மேலாக உங்களுக்கு பிடித்தமான களரைக்கொடுக்கவும். (படங்களை பார்க்கவும். ) பிரஸ் பண்ணி முடிந்ததும்...

லேயரின் நோர்மலுக்கு பதிலாக மல்டி கொடுக்கவும். ( படத்தை பார்க்கவும்.)
(Press "B" key // choose Colour // Layer "Normal"  Layer "Multi" )

இப்போது றேஸர் டூலால் முனைவுகளை அழித்து மெருகூட்ட வேண்டும். (இது மேலதிக செய்கைதான்.)
E ஐ அழுத்தி ரேஸர் டூலை தெரிவு செய்யவும்... வெட்டப்பட்ட முனைவுகளை  ஃபெதர் பிறஸ் மூலமாக அழிப்பதன் மூலம் அழகை கூட்டலாம்.
( Press "E" )

அடுத்தும் மேல் படி முறை போலவே.. Blur tool (Smudge tool) ஐ  தெரிவு செய்து... தேய் அல்லது இழு பட்டது போன்ற விளைவை உருவாக்கவும்.அவளவும்தான் முக்கியமானது... இனி உங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்ளவும்.
 ------------------------------------------------------------------------------------------
விளங்காதவர்கள் பி.எஸ்.டி ஃபைலாக‌ இதை கிளிக் பண்ணி... எப்படி செய்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------
கீழே உள்ளது நான் செய்தது. :)
பெரிதாக பார்ப்பதற்கு படத்தை கிளிக் பண்ணவும்.
------------------------------------------------------------------------------------------

Thursday, 11 November 2010

ஜொதிடம் பொய்யாமே??? உண்மையா??? :O

ஜொதிடம் பொய்யாமே??? உண்மையா???
-------------------------------------------------------------------------------------------
ஜோசியம் பொய் பொய் என்று பொதுவா எல்லோரும் சொல்கிறார்கள்... அது உண்மையா... என்று சும்மா ஜோசித்து எழுதின பதிவு இது.
பொய் என்று சொல்கிறவர்களில் எனக்குத்தெரிந்து பல பிரிவுகள் இருக்கு...
1. தங்களை வித்தியாசமாக / நாகரீகமாக காட்ட நினைப்பவர்கள்.
2.ஜோதிடத்தில் தீமையான பலன்களை மட்டும் அதிகம் கொண்டவர்கள்.
3.ஜோதிடத்தை உண்மையிலேயே நம்பாதோர். (ஜோதிடத்தின் தவறுகள் அறிந்தவர்கள் அல்லது விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள்.)

முதல் 2 பிரிவும் தேவையில்லை... 3ம் பிரிவுதான் முக்கியமானது... 3ம் பிரிவை வைத்து இதை எழுதுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------
ஜோதிடம், பொதுவாக நட்சத்திரங்களையும் அவற்றின் கூட்டங்களையும் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த நட்சத்திரங்களை வைத்து... மனிதனின் வாழ்க்கை காலத்தை தீர்மானிக்க முடியும் என்பதுதான் சற்று குழப்பமானதாகவும், சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவும் இருக்கிறது.

எனினும், நாங்கள் இங்கு ஒன்றைக்கருத்திற்கொள்ள வேண்டும்.
கலீலியோவின் டெலஸ்கோப் கண்டு பிடிப்பின் பின்னரே.. விஞ்ஞான உலகில் இந்த நட்சத்திரங்கள் கோள்கள் தொடர்பான அறிவு பெரும் வளர்ச்சியடைந்தது. இது நடந்தது 17 ம் நூற்றாண்டிலேயே...
அப்படி இருக்கையில் எவ்வாறு... ஜோதிடங்கள் ஏற்கனவே இந்த நட்சத்திரங்களை தெளிவாக வைத்து கணிப்பிடப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழும்.

இதற்கு நாங்கள் இன்னும் முன்னோக்கி பார்க்க வேண்டும்...

எகிப்திய பிரமிட்டுக்களில்... அண்டத்திலுள்ள (தென் அரைக்கோலம்) நட்சத்திரங்கள் அடங்களான அனைத்தின் நிலையான இருப்பிடங்களையும் பாறைகளில் உருக்கலாக உருவாக்கும் முயற்சி நடை பெற்றதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ( சில வேளை ஏற்கனவே உருவாக்கப்பட்டு சிதைவடைந்ததைத்தான்... நாங்கள் தவறாக உருவாக்கும் முயற்சி என்கிறோமோ தெரியவில்லை. )
இதிலிருந்து எமக்கு தெரிகிறது... 
நாங்கள் இப்போது 400 வருடங்களுக்குள் உறுதிப்படுத்திய நட்சத்திரம் தொடர்பான‌ விடையங்கள்... ஏற்கனவே பண்டைய நாகரீக மக்களால் தெளிவாக அறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது என்பது.
அத்துடன் அவர்கள் எவ்வளவு அறிவில் மேம்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பதும் தெரிகிறது.
( அப்படியான அறிவுச்சமுதாயம் ஏன் திடீரென அடியோடு அழிந்தது??? இந்த கேள்விக்கு இன்னொரு பதிவில் சில காரணங்களை பதிவாக இடுகிறேன்.)
-------------------------------------------------------------------------------------------
எனினும்... இந்த ஜோதிடங்கள், தெற்காசியாவையே (இந்தியா) பிறப்பிடமாக கொண்டதாக கருதப்படுகிறது...
இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே... 
காரணம், எகிப்திய நாகரீகத்தின் முன்னோடி தென்னாசிய பகுதியினூடாக் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. இது சம்பந்தமாக ஏற்கனவே முன்னைய லெமூரியா கண்ட பதிவுகளில் சான்றுகளுடன் எழுதி இருந்தேன். 
லெமூரியா கண்ட அழிவில் தப்பிய மக்கள் கூட்டங்களே இந்த ஜோதிடம் தொடர்பான அறிவை பரப்பி இருக்கலாம். 
லெமூரியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் முதலில் காடாக இருந்த இந்தியாவை நாடாக்கி வாழ்ந்ததாலும்.... இன்றளவிலும் ஒரு தனி நாடாக விளங்குவதாலும் இந்தியா ஜோதிடத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
சரி... வரலாற்றை விட்டு நவீன உலகத்தோடு தொடர்பு படுத்திப்பார்ப்போம்.

இன்று... சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் முதல் கொண்டு... பல்வேறு ஊடகங்கள், அமைப்புக்கள் உலகம் முழுவதுமே சேர்வேக்களை எடுத்து... அதிலிருந்து  சில முடிவுகளை எடுக்கின்றனர்.
உதாரணமா... எந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிகம் கோபபட்டுகிறார்கள் என்றெல்லாம், 10000 இக்கு மேற்பட்டவர்களை கருத்துக்கணிப்பு செய்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதே போன்ற ஒரு மிகப்பெரியளவிலான கருத்துக்கணிப்பு... ஏன் பண்டைய எம்மை அறிவால் மிஞ்சிய(??) சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடாது? 
நாம்... சாதாரண விடையங்களில் மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புக்களை அவர்கள்.. பிறந்த நாள், நேரம்,இடம் என்பவற்றை வைத்தும்.... அண்ட வெளியுடன் ஒப்பிட்டும் மேற்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளது.
வாய்ப்பே இல்லை என்று சொல்வது முட்டாள்தனமான அறிவற்ற எண்ணம்... எங்களால்... எப்படி பிரமிட்களை அவர்கள் கட்சிதமாக உருவாக்கினார்கள் என்பதே கண்டு பிடிக்க முடியவில்லை. கி.மு 10000 ,5000 ஆண்டுகள் பழமையான இதையே தெளிவாக்க முடியவில்லை எனும் போது... லெமூரியாவை அடிப்படையாக கொண்ட சமுதாய தேடல் என்பது சாத்தியம் குறைந்ததுதானே?
(ஆனால், கண்டுகொள்ள முடியவில்லை என்பதற்காக அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது.)

அப்படி, பண்டைய மக்களால்... மிகப்பெரும் கருத்துக்கணிப்பினாலும், அண்டத்துடனான ஒப்பீட்டாளும் உருவாக்கப்பட்டதே இந்த "ஜோதிடம்" என்பது எனது கருத்து.
-------------------------------------------------------------------------------------------
மேலும்... முக்கியமான ஒரு விடையம்...

சனிக்கோளில் கிட்டத்தட்ட 7 1/2 அண்டுகளுக்கு ஒரு முறை காந்த புலத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம்... அந்த மாற்றத்தினால் புவியின் காந்த புல ஈர்ப்பில் கூட மாற்றம் உணரப்படுகிறதாம். ( இது நவீன விஞ்ஞானம் கூறியுள்ளது.)  
அந்த மாற்றம் தான் பண்டைய ஜோதிடத்தின் படி 7 1/2 சனி என கூறப்படுகிறதாகவும் இருக்கலாம். 
(காந்த புல மாற்றங்கள் மனித மூளையை பாதிப்பது அனைவரும் அறிந்ததே... )

இன்று... சனி கிரகமாற்றம் 7 1/2 ஆண்டுகள்கொரு முறை என்று கண்டுபிட்த்த நாம்... போக போக மற்றதையும் கண்டுகொள்ளுவோம்.

என்னதான் இவளவு சொன்னாலும்... இன்று இருக்கும் ஜோதிடமுறை நிச்சயமாக மாற்றமடைந்து நம்பகத்தன்மையற்றதாகவே இருக்கும்.
இடை இடையே தோன்றிய அரசர்கள்... தமது சுய நலம் கருதி பல மாற்றங்களை ஜோதிடத்தில் செய்திருப்பார்கள். ( மேலே குறிப்பிட்ட படி 2ம் வர்க்க எதிர்ப்பாளிகள்). அதனால், இன்று நடை முறையில் இருக்கும் ஜோதிடம் பொய்யானதாக இருப்பதாகவே தோன்றுகிறது.
சும்மா... நாள் எல்லாம் சொல்லி... அன்று இப்படி நடக்கும் என்று சொல்லின்டு தெரிவதெல்லாம் சும்மா பில்டப் கேசுங்கதான்.
மேலும் பரிகாரம் என்கிறதெல்லாம் பொய்... மனத்திருப்திக்காகவும்... ஜோதிடர்களின் பணத்திருப்திக்காகவும் இடையே ஒட்டிக்கொண்ட இணைப்புக்கள்.
அண்டம் ஒருவரின் விதியைத்தீர்மானிக்கிறது என்றால்... அதை மாற்றவே முடியாதே. ( ஒரு மண்ணும் விளங்கவில்லை பதிவை படிக்கவும்... அதில் இருக்கும் சம்பவங்கள்... நாங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவர்களா... என்ற என்னத்தை தோற்றுவிக்கும். :) )

தவறுகளை மறக்காமல் சுட்டிக்காட்டவும். மாற்றுக்கருத்துக்களை சொல்லவும்.
பிடித்திருந்தால் வோட்டும் போடவும்... :)
-------------------------------------------------------------------------------------------

Friday, 5 November 2010

இப்படியும் செய்யலாம்... :D (படங்கள்)


------------------------------------------------------------------------------------------

பழங்களையும்... முகங்களையும் வைத்து எப்படி எல்லாம் செய்கிறார்கள். ( ஃபோட்டோஷொப் டியூட்டோரியல் போடனும் :) ) இந்த படங்களை பார்த்து ரசிக்கனும்... ரசிக்கிறிங்க. DOT. :D
------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------

Thursday, 4 November 2010

மனிக் டிப்ரஷன்... (மன நோய்!)

மனிக் டிப்ரஷன்...
------------------------------------------------------------------------------------------
மனச் சோர்வு நோயின் மிகத்தீவிரமான வகையைச் சேர்ந்தது.
ஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் நிற்பது போல் உற்சாகமாக இருக்கும் இந்த நோயாளிகள், அடுத்த நிமிடமே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்று ந்டந்துகொள்வார்கள்.
அதீத சந்தோஷமும் அளவுக்கு மீறிய சோகமும் இவர்கள் நடத்தையில் வந்துபோகும். மிகவும் சிக்கலான நோய்.

சந்தோச மன நிலையில், இவர்கள் எதையுமே செய்வார்கள். இவர்கள் சிந்தனைகள் கூட வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியப்படாத்தாக இருக்கும். தம்மை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள்.
இப்படி, சந்தோஷமாக நடந்துகொள்பவர்... அடுத்த நாள், சோர்ந்து தளர்ந்து மனமுடைந்து காணப்படுவார்கள்.

நேற்று நான் ஏன் அப்படி செய்தேன், ஏன் அப்படி சொன்னேன், ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று துக்கப்படுவார்கள்.
அந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக மிக மனம்சோர்வடைந்திருப்பார்கள். இந்த நிலையில்... இவர்களால் அடிப்படை வேலைகளைக்கூட செய்ய முடியாது இருக்கும்... அன்றாட உடல் பராமரிப்பை செய்ய மாட்டார்கள். வாழ்க்கை துளைந்துவிட்டதுபோன்று நடந்துகொள்வார்கள்.

காரணங்கள்...

பல கார்ணிகள் பின்னனியாக இருக்கலாம். அவையெல்லாம் ஒன்றுடனொன்று ஒத்துப்போவது போன்றிருக்காது.
பரம்பரை கூட இந்த நோயில் செல்வாக்கு செலுத்துவதாக கருதப்படுகிறது. குடும்ப நிலையும் காரணமாக அமைகிறது.
அதீத நினைவுகளால் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம்தான் இந்த மூட் அவுட் நிலைக்கு காரணமாக இருக்கிறது.

இன்னும் சிலர்.. இள்மைக்காலத்தில் நடந்த துன்ப நினைவுகளின் தொடரொலிகள் என்கிறார்கள். சில்லல்கள் நிறைந்த குடும்ப நிலையில் வளரும் குழந்தைகள் இந்த நோய்க்கு இலக்காவதுமுண்டு. இப்படி சீரற்ற குடும்ப நிலையில் வளர்ந்த குழந்தைகள் பெரியவர்களானதும்... மனப்போக்கு.. திடமில்லாததாகவும், எளிதில் உடையக்கூடியதாகவுமிருக்கும்.
ஒரு பிரச்சனை வரும் போது... அல்லாடிப்போவார்கள். பிரச்சனைக்கு முகம் கொடுக்கத்தயக்கம் என்பன இந்த நோயை உண்டாக்கும்.
மேலும்.... மிக உற்சாகம் காட்டுவதும், அளவுக்கு மீறிய செலவு, தாந்தோன்றித்தனமான நடத்தை, தப்புவதற்காக எடுக்கும் அவசர முடிவுகளும்... இந்த நோயை ஏற்படுத்தும்..

பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக முரண்பாடான முடிவுகளை எடுத்துவிட்டு... அடுத்தவர் மீது... குற்றம் சாட்டுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும்.
மற்றவர்கள் மீது... கண்டிப்பு காட்டுவதும், மற்றவர்கள் மீது பிழை பிடிப்பதும், பாய்ந்து விழுவதும்... இவர்களை மற்றவர்களின் தயவிலிருந்து தள்ளிவைக்கும்.

ஒருமுகப்படுத்தாத சிந்தனைகள்... வயிற்று உளைவு... ஓங்காளம்... வாந்தி... என்பன இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.
------------------------------------------------------------------------------------------
மன நோய் தொடர்பாக நான் வாசித்த புத்தகத்திலிருந்த தகவல்கள் இவை... பலருக்கு உதவக்கூடும் என்பதால் பதிவு செய்கிறேன். நல்லம் என்றால் வோட் போடவும்... :)
------------------------------------------------------------------------------------------
நன்றி :
இராஜேஸ்வரி...
பாலசுப்ரமணியம்...
------------------------------------------------------------------------------------------


Tuesday, 2 November 2010

வேற்று கிரக வாசிகளின் சமிக்ஞை... (ஏலியன்ஸ்)

பரிமாணங்கள்
--------------------------------------------------------------------------------------------
( ஒரு இடைவெளிக்கு பின்ன‌ர் எழுதுகிறேன்... ம‌ற்ற‌ ப‌ல‌ ப‌திவுக‌ளும், சில‌ர் கேட்ட‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில்கொடுக்க‌ வேண்டியுள்ள‌து. முக்கிய‌மாக‌... அறிவிய‌ல்,வ‌ர‌லாற்று ப‌திவுக‌ளுட‌ன், ஏன் நியூம‌ர‌லொஜி ப‌திவு என்று கேட்டிருன்தார். அத‌ற்கு ஒரு சின்ன‌ கார‌ண‌ம் இருக்கிற‌து. ச‌ரி பிழை தெரியாது.)

--------------------------------------------------------------------------------------------

இன்று... ஏலியன்ஸ் நாங்கள் அல்ல, உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள்தான்.. என்ற ரீதியிலான சில சம்பவங்களை அல்லது கருத்துக்களை பார்ப்போம்.

முன்னைய பதிவுகள்...
போன பதிவில்...
நாம் இருக்கும் சூரியகுடும்பம் மற்றும்.. பல நட்சத்திரங்களைக்கொண்ட நமது கலக்ஷியை எவ்வாறு நாங்கள் படம் பிடித்தோம்... அதுவும், நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை நெருங்க கூட இல்லை... ஒளியின் வேகத்தில் சென்றாலே எமது கலக்ஷியைத்தான்ட பல ஆண்டுகள் எடுக்கும். என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.

--------------------------------------------------------------------------------------------

முதலே சொன்னது போன்று, ஒளியின் வேகமே இல்லாமல்... நாங்கள் இந்த சூரிய குடும்பத்தை தாண்டுவதே கடினமானது. ஆனால், கலிலியோவினால் கண்டறியப்பட்ட டெலஸ்கோப் இந்த கேள்விக்கு விடையளிக்கும்.

நவீன ரக டெலஸ்கோப்களின் மூலமாக, எமது சூரிய கிரகம், கலக்ஷியைத்தாண்டி வேறு கலக்ஷிகளைக்கூட பாக்க முடிகிறது.

அவ்வாறான... டெலஸ்கோப்களின் உதவியுடனேயே, பல கலக்ஷிகள் இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

அவ்வாறு பார்க்கப்பட்ட கலக்ஷிகளில், கிட்டத்தட்ட நாம் இருக்கும் சூழ் நிலைகளை ஒத்துப்போக கூடியதாக சில கலக்ஷிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி கண்டறியப்பட்ட ஒரு கலக்ஷியின் உருவத்தைத்தான்... இப்போது நாங்கள் எமது கலக்ஷியின் உருவம் என கூறிக்கொள்கிறோம். மற்றம் படி இன்னமும் எமது கலக்ஷியை நாம் படம் பிடிக்கவில்லை. (இப்போது எங்களது கலக்சி போன்று நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளுக்கு முட்பட்ட உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விளக்கம் ஏற்கனவே முன்னைய பதிவுகளில் உள்ளது. மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். )

--------------------------------------------------------------------------------------------

இதுக்கும் ஏலியன்ஸிக்கும் இடையிலான தொடர்புகளை பார்க்க முதல்...
கலக்ஷியில் நாம் இருக்கும் இடத்தை பார்ப்போம்.

ந‌ம‌து க‌ல‌க்ஷியை ஒரு அப்ப‌த்துட‌ன் ஒப்பிட‌ முடியும். அப்ப‌த்தின் சைட்டிலிருக்கும் மொறு மொறு ப‌குதியில்தான் நம‌து சூரியகுடும்பமே இருக்கிறது. பூமி சூரியனை சுற்றுவதுபோன்று... இந்த கலக்ஷியின் மையத்தை நமது சூரிய குடும்பம் சுத்துகிறது. இப்படி பல கலக்ஷிகள் வேறு ஒரு பிரபஞ்ச மையத்தை சுற்றுகிறதாம்.

அத்தோடு... இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

இப்படிப்பட்ட... இந்த பரந்த பிரபஞ்சத்திலே, நாங்கள்தான் அதீதமான பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமானது.
இப்போது சும்மா எமது கலக்ஷியை ஜோசித்து பார்த்தாலே... எமது சைட்பக்கம் போல், எமக்கு எதிராக உள்ள பக்கத்தில் கூட வேற உயிரினங்கள் இருக்கலாம். இதே போன்ற கால நிலைகள் இருப்பதற்கும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன... அதனால், அங்கேயும் மனிதர்களே, ஏன் நாமே இருக்கக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. ( நாமே இருப்ப‌து என்ப‌து ஒரு திய‌ரி... )

அதேபோன்று.. எம‌து க‌ல‌க்ஷி மைய‌த்தை நோக்கிய‌ திசைக‌ளில் கூட‌ வேற்று உயிரினங்க‌ள் இருக்க‌லாம். ஆனால், அங்கு எம‌து... சூரிய‌குடும்ப‌ம் (முக்கிய‌மாக‌ பூமி) இன் கால‌நிலை இருக்க‌ ச‌ன்த‌ர்ப்ப‌ம் ஒப்பீட்ட‌ள‌வில் குறைவு. எனினும்.. அன்த‌ சூழ் நிலைக்கேற்றவாறு வித்தியாச‌மான‌ உயிரின‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.

--------------------------------------------------------------------------------------------

அப்ப‌டியானால்... அந்த‌ உயிரின‌ங்க‌ள் எங்க‌ளோடோ அல்ல‌து நாங்க‌ள் அவ‌ர்க‌ளோடோ... தொட‌ர்புகொள்ள‌வில்லையா என்ற‌ கேள்வி எழுகிற‌து.

ம்ம்ம்ம்....
ச‌ம்ப‌வ‌ம் ச‌ரியாக‌த்தெரிய‌வில்லை... சிறு வ‌ய‌தில் வாசித்த‌து...

செய்ம‌தி ச‌மிக்ஞைக‌ளை உள்வாங்குவ‌த‌ற்காக‌ அமைக்க‌ப்ப‌ட்டிருந்த கலத்‌தில்... வித்தியாச‌மான‌ ( கிட்ட‌த்த‌ட்ட‌ "பீப்" ஒலி) ஒரு ச‌த்த‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. செய்ம‌திக் கோலாறுக‌ளினால் உருவாகி இருக்க‌லாம் என‌ முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌ போதும்... அது இல்லை என‌ உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு...மேல‌திக‌ ஆய்வுக‌ள் செய்த‌ போதுதான் க‌ண்டுகொள்ளப்ப‌ட்ட‌து... வேற்று உல‌க‌த்திலிருன்து பிர‌ப‌ஞ்ச‌த்தை நோக்கி விட‌ப்ப‌ட்ட ச‌மிக்ஞைதான் அது. சுமார் ஒரு கோடி ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மிக்ஞை அது. நாம் திரும்பி அனுப்பினால் கூட‌... இன்னும் ஒரு கோடி ஆண்டுக‌ளின் பின்ன‌ரே அவ‌ர்களால் அதை உண‌ர‌ முடியும்... அதை உண‌ர‌ அவ‌ர்க‌ள் இருப்ப‌தும் சாத்திய‌மில்லை... நாங்க‌ள் இருப்ப‌தும் சாத்திய‌மில்லை.

இதிலிருந்து, எங்கேயோ... எம‌து ப‌ரிமான‌த்தை ஒரு ப‌ரிமாண‌மாக‌ கொண்ட‌ உயிரின‌ம் இருக்கிற‌து என்ப‌து தெளிவாக‌ விள‌ங்குகிற‌து.

--------------------------------------------------------------------------------------------

அப்ப‌டியானால்... நாங்க‌ள் ஒன்றுமே அனுப்ப‌வில்லையா?

அனுப்பினோமே... :) அதை விரிவாக‌வும் மேலும் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளுட‌னும் அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.

--------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails