Total Pageviews

Thursday, 21 October 2010

2115 TO 0033... ( விஞ்ஞான புனைக்கதை TRY :) )

காலம்தான் மாற்றும்... அதை மாற்ற முடியாது... :)
--------------------------------------------------------------------------------------------------------------

2115 ம் ஆண்டு...
பிறேக்கிங் நியூஸ்...
" ஜிலா சிட்டியில் இன்று மதியம் நடை பெற்ற குண்டுவெடிப்பில்... சிறுவர்கள் உள்ளடங்களாக... 750 இக்கு மேற்பட்டவர்கள் உயிழந்ததுடன்... சுமார்... 2000 பேர் வரையில்... கதிர்வீச்சு தாக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த திடீர் சம்பவத்தால்... மீண்டும்... ஒரு உலகயுத்தமோ அல்லது பிராந்திய யுத்தமோ ஏற்பட வாய்ப்புள்ளதென வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்..."

ஆபிரிக்க கூட்டரசினால்... செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்டின் மத்தியிலுள்ள இயற்கை காட்டிலிருந்து... இந்த செய்தியை... 
ஹரிஸிம்... டீப்பும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இருவரினது முகத்திலும்... ஒரு வித வெறுப்புடன் கலந்த ஆத்திரம். 
டீப் : இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான் இதெல்லாம்...
ஹரிஸ் : ம்ம்ம்... ஒரு கிழமைக்குள் முடித்திடலாம்...

******
ஹரிஸ், டீப்... இருவருமே... அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பினால்... இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு... ஆனால், உறுதிப்படுத்தப்படாத பிரபல்ய விஞ்ஞானிகள். இன்னமும் அவர்களின் ஃபைல்கள் மூடப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்...
சீசட் அமைப்பின் சார்பில்... உருவாக்கப்பட்ட அதிவேக "கதிர்"ரொக்கெட்களின் தலைமை பொறுப்பாளிகளாக இருந்தவர்கள் இந்த ஹரீஸிம், டீப்பும்... துரதிஷ்ட வசமாக ரொக்கெட் உருவாக்கத்தின் முக்கிய அம்சங்கள்... முக்கியமான ஒரு தீவிரவாத அமைப்பிடம் சிக்கிவிட்டது. 
இந்த கதிர் வீச்சு ரொக்கெட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டமை.. புலனாய்வுகளின் மூலம்... சி.ஐ.எ இக்கு தெரியவந்துவிட்டது. 
இதனால்... உடனடியாக ஹரீஸையும்... டீப்பையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுழுக்கு வரமுன்னரே... இருவரும் தமது நம்பிக்கைக்குரியவர்களின் உதவியுடன்... ஆபிரிக்காவுக்குத்தப்பி வந்து விட்டார்கள். வரும்போது... வேறு வளியின்றி முக்கிய குறிப்புக்களை பக்கப் எடுத்துவிட்டு... தாம் தங்கியிருந்த ஆய்வுக்கூடத்தை முற்றாக‌ அழித்துவிட்டு வந்துவிட்டார்கள்.

******

அன்று...  திங்கட் கிழமை...
இவர்களின் வாழ் நாள் போராட்டமும்... விஞ்ஞானிகளின் நீண்டகால கனவும் நிறைவேறப்போற நாள்... உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கப்போற நாள்...
தமக்கு பேருதவியாக இருந்த தமது சகாக்களுக்குடன்... பிரியாவிடை பார்ட்டியில் கலந்துகொண்டிருந்தார்கள். தாம்... இனி எப்போது இப்படியான விசுவாசிகளை சந்திக்கப்போகிறோம்... இனி எப்போது.. வரப்போகிறோம்... இதெல்லாம் சாத்தியமா... என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கப்போகிறோம்... என்ற எண்ண அலைகள் அவர்களின் மனதை சற்று தளர்வடையச்செய்தது.... :)

மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது...  இவர்கள் எதிர்பார்த்தபடியே மழை கொட்ட ஆரம்பித்தது...
இருவரும்... தமக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று உடைகளை அணிந்து அதற்கு மேலாக பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொண்டு... தங்களின் நீண்டகால கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கால இயந்திரத்துக்குள் ஏறினார்கள்.
தமது சகாக்களை இடத்தை விட்டு நகர சொல்லிவிட்டு...
பவர் பட்டனை அமர்த்தினார்கள்... ஏற்கனவே... இவர்களின் காட்டு ஆராய்ச்சி கூடத்தின் மேல் முணையில் இறுதியாக பொருத்தப்பட்ட இடி வாங்கி கருவியில்... எதிர் பார்த்தது போன்று மின்னல் விழுகிறது...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...
வேகம்... 4*10^8 இக்கு செட் செய்யப்படுகிறது.
கூர்போன்ற அந்த இயந்திரம் வானை நோக்கி இயங்க ஆரம்பிக்கிறது. குறுகிய நேரத்திலேயே... சுற்றுப்புறம் வெள்ளையாகிறது. சுமார்... 20 மணி நேர பயணத்தின் பின்னர்... ஏற்கனவே செட் செய்யப்பட்டதன் படி... இவர்கள் புறப்பட்ட அதே இடத்துக்கு மேல்... இயந்திரம் நிக்கிறது... கீழே... மிக அடர்ந்த இயற்கை காடு...
அங்கிருந்து மிதமான வேகத்தில் சென்று... தமது இலக்கில் இறங்குகிறார்கள்.


******
0033ம் ஆண்டு...
தமது இயந்திரத்தை ஒரு மலையடிவாரத்தில் பதுக்கிவிட்டு... நாட்டுக்குள் பயணிக்கிறார்கள்...
ஏற்கனவே... அந்த இடத்தில் அந்த நேரத்தில் பேச்சு வழக்கிலிருந்த பாசையை கற்று வந்திருந்தார்கள். (கூடவே ரான்ஸ்லேட்டர் கருவியும் கொண்டு வந்திருந்தார்கள். )
அந்த தைரியம் கை கொடுக்கவே... அங்கிருந்த... வீதியோர கடைக்காரரிடம்... கதை கொடுத்தார்கள்... அந்த கடைக்காரருக்கு பாசை புரியவில்லை... கூட இருந்தவர்கள்... இவர்கள் இருவரையும்... வித்தியாசமாக பார்த்து எழுந்து நின்றார்கள். துரதிஷ்ட வசமாக அந்த நேரம்... அங்கு... அரச பாதுகாவலர்கள் குதிரையில் வந்துவிட்டார்கள்... இருவரினதும் பாசைகள் புரியாததால்... கைது செய்து... அரச அவையில் சமர்ப்பிக்கப்பட்டனர்.
அங்கு அரசன் உட்பட‌ ஆருக்குமே... இவர்களின் பாசை புரியவில்லை..கையில் வேற விசித்திர கருவி.... வேற்று நாட்டவர்கள் நாட்டை கைப்பற்றும் நோக்குடன் அனுப்பி வைத்த உலவாளிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டு.. இருவருக்குமே குறிப்பிட்ட நாளில் மரணதண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. எவ்வளவு முயன்றும் இவர்களால் இன்றுமே செய்ய முடியவில்லை.
வரலாற்று ஆய்வாலர்கள் மொழிகள் தொடர்பாக விட்ட பிழையை நினைத்து நொந்துகொண்டார்கள்.

குறிப்பிட்ட நாள் வந்தது...
இருவரும்... சிலுவையில் ஏற்றப்பட்டார்கள்...
தெய்வ நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டுடன்... மூன்றாவதாக ஜீஸஸ் சிலுவையேற்றப்பட்டார்...
இருவருக்குமே... அப்போதுதான் தெரிந்தது... நாம்... படித்த வரலாற்றில்... ஜேசு நாதரின் பின்னுக்கு... சிலுவை ஏற்றப்பட்ட இருவரும் தாங்கள்தான் என்று.
ஜீஸஸ் சிலுவை ஏற்றப்படுவதை தடுத்து...  கிறிஸ்தவ மததோற்றத்தின்... அடிப்படையை உடைத்து... உலகில்.. கிறிஸ்தவ மத பரம்பலை... தடுக்க நினைத்தது எவளவு முட்டால்தனம்... காலத்தை மாற்ற முடியாது என்ற உண்மை விளங்கியவர்களாக... ... தமது உடலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்தார்கள்...

******

--------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதையின் கரு ( ஜீஸஸின் பின்னுக்கு உள்ளவர்கள் எதிர்காலத்தவர் ) என்னதல்ல... ஆருடையது என்று தெளிவாக தெரியாது... 
கருவை வைத்து கதையை எனக்கு தெரிந்தவாறு எழுதியுள்ளேன். தவறுகள் பல இருக்கும்... சுட்டிக்காட்டவும்.

( டைம் ரவல் மூலம் இறந்தகாலம் செல்வது... என்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது.
ஐன்ஸைனின் படி... "ஒளியின் வேகத்தை தாண்டும் போது... இறந்த காலம் செல்ல முடியும்... ஆனால்,  ஒளியின் வேகம் தாண்டுவது சாத்தியமில்லை... " என்பதே...
இருப்பினும்... ஐன்ஸைனின் கூற்று எதிர்காலத்தில் மாற வாய்ப்புள்ளது... உதாரணமாக... நியூட்டனின் கொள்கைகளை மட்டும் அவைத்து கணிக்கப்பட்ட பிரபஞ்ச இயக்கத்தை ஐன்ஸ்டைன் மாற்றியமைத்தது போல்... :) )


******
--------------------------------------------------------------------------------------------------------------


14 comments:

 1. வாழ்த்துக்கள் ..சூப்பர் ..நன்றாக இருக்கிறது ..தலைப்பை பார்த்து இதென்ன பின்னால போகுதெண்டு பாத்தன் ....இன்னமும் நன்றாக எழுத வாழ்த்துக்கள் .. மின்னல் மூலம் சக்தி பெற்று போகிறார்களோ ?

  ReplyDelete
 2. நன்றி...S.Sudharshan... :)
  உங்கள் ஊக்கத்துக்கு நன்றி... அடுத்த தடவை... கருவும் என்னதாக இருக்கும்... ஐடியா பொட்டாச்சு...
  ஹீ..ஹீ... ஓம்... 2115 ல இப்படி அதீத சக்தியை பெறுவது சாத்தியமா இருக்கலாம்...:) ( இல்லை என்றால்... காட்டுக்குள் மின் பெற்றது எப்படி என்பதில் சிக்கல் வருமில்ல... :D )

  ReplyDelete
 3. superda..interest ta irukuda......

  ReplyDelete
 4. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. tnx u...மகாதேவன்-V.K :)

  ReplyDelete
 6. இதில் புனைவு ஏதும் இருப்பதாக
  எனக்குத் தெரியவில்லை..!
  எல்லாம் அறிவியல் தான்... :-))
  வாழ்த்துக்கள் உங்களின் புதிய முயற்சிக்கு..
  தொடர்ந்து எழுதுங்க.....!

  உளவாளின்னா சி.ஐ.ஏ...தானா..வேற யாருமே
  இருக்கக்கூடாதா,,?!

  ReplyDelete
 7. tnx... nis.. :)

  நன்றி...சின்னப்பயல்...
  அவ்... அப்போ இது புனைவில்லையா...
  ஹீ...ஹீ... நல்ல கேள்வி... இனி எழுதும்போது இந்த குறையை தவிர்த்துகொள்கிறேன்... :)

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்! இன்னும் நிரைய எழுதுங்கள்!

  ReplyDelete
 9. இன்னைக்குத்தான் முதல் முறையா உங்க பக்கம் வருகிறேன், கிட்டத்தட்ட எல்லாப் பதிவுகளையும் ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். அனைத்தும் அருமை நண்பரே! இவ்வளவுநாள் எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை!

  ReplyDelete
 10. நன்றி...விடுதலை | Viduthalai :)
  இன்னும் எழுதுவன்.... ஸ்கூல்/ சோம்பல்தான் பிரச்சனை... :)

  நன்றி...பன்னிக்குட்டி ராம்சாமி :)
  அவ்... நன்றிகள்... குறைகளை சொல்லுங்க திருதனும் நான்... :)

  ReplyDelete
 11. Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
  www.cineikons.com

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails