:O :( :\
------------------------------------------------------------------------------------நேற்று ஈ.மெயிலில் சில படங்கள் வந்திருந்தன அதனை பார்த்த பிறகே இந்த பதிவை எழுத தோன்றியது...
------------------------------------------------------------------------------------
உலகத்தின் மொத்த சனத்தொகை 7 பில்லியன்ஸ்... அதில கடைசியா கணக்கிட்டதன் படி... 1.4 பில்லியன்ஸ் பேர் பட்டினியா இருக்காங்கலாம்...
ஒவ்வொரு நாளும் 16 000 சின்ன பிள்ளைகள் சாப்பாடு இல்லாமல் சாகுதாம்... 5 செக்கன்களுக்கு ஒரு பிள்ளை என்கிற வீதத்தில...
சரி புள்ளி விபரங்கள் கானும்... பேந்து விஜயகாந்த ரேஞ்சுக்கு கொமெடியாகிடும்...
உலகத்தின் தலைவராக தன்னைத்தானே பிரகனப்படுத்திக்கொண்டுள்ள அமெரிக்கா நினைச்சா இந்த இறப்புக்களை குறைக்கலாம்... அமெரிக்கா மட்டுமில்லை... பல வல்லரசு நாடுகள் நினைச்சால் செய்ய முடியும்...
காரணம்...
அமெரிக்கா... வருடாந்தம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்... கோதுமையில் ஒரு பகுதியை... பன்றிக்கும்...
இன்னமும் மிஞ்சுவதை கடலிலும் கொட்டுகிறார்களாம்...
ஏன் என்றால்... இலவசமாகவோ... அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்தாலோ... தமது டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்பதுதான்...
இதயேதான்... உலக சமாதானம் பேசும்... நோர்வே செய்யுது...
அவர்கள்... கோதுமை... இவர்கள் கடல் மீன்களை....
மறுபுறம்...
மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த/ கரீபியனை சேர்ந்த மக்கள் "மண் ரொட்டி" சாப்பிடுறாங்க.... ( சில குறிப்பிட்ட தீவுகளில்)
அங்கு... கடைகளில் சாமான் இருக்கு.... வேண்டுவதற்கு பணமில்லை...
அதனால்... ஒரு சத்துமில்லாமல்... வயிற்று பசிக்காக சாப்பிடுறாங்க...
எங்கட ஏஸியாமட்டும் என்னவாம்... அங்கும் பல பகுதிகளில் இப்படி இறப்புக்கள் நடந்து கொண்டுதான் இருக்கு...
2050 ல 9.4 பில்லியன்ஸ் சனத்தொகை இருக்கும் என்று கணிப்பிட்டு இருக்கிறார்கள்...
எப்படியும் 2050 க்குள்ள கெட்டித்தனமா இயற்கை வளங்களை வீணாக்கிடுவம்...
பட்டினிச்சாவு என்கிறது சாதாரணமான ஒன்றாக மாறிடும்...
பல பிரபல சர்வதேச உணவு விற்பனை நிலையங்கள்... காலாவதியான உணவுகளை குழிதோன்றி புதைக்கின்றன...
அவை காலாவதியாவதற்கு ஒரு மாதம் முதலாவது... தொண்டு நிறுவனங்கள் அவற்றை கொல்முதல் செய்து...
பட்டினியால் வாடும் மக்களுக்கு கொடுக்கலாம்... :(
நம்மட இந்தியாவிலும் பட்டினிசாவு இருக்காம்...
ஆனால்... உற்பத்தி செய்கிற உணவுப்பண்டங்களில் 30 % ஆனவை களஞ்சிய வசதி இல்லாததால வீணாப்போகுதாம்...
இதெல்லாம்... கொலுத்துபோய் இருக்கிற அரசியல் வாதிகளுக்கு தெரியாது போல....
சரி இதெல்லாம் இருக்கட்டும்...
எங்கள்ல எத்தனை பேர்... சாப்பாட்டை கொட்டாமல் இருக்கோம்... அல்லது வீட்டில அளவுக்கு மிஞ்சி சமைக்காம இருக்கோம்...
நிச்சயமா... அப்படி ஒருத்தரும் இருக்க மாட்டோம்....
ரோட்ல இருக்கிற சின்ன பிள்ளைகளைக்கண்டு விலகின ஆக்கள்தான் கனக்க... கிட்ட சென்று கொடுத்த ஆக்கள் குறைவு...
கேட்டா... பிச்சை போட மாட்டினமாம்... சோம்பேறிகள் உருவாகிடுவினமாம்...
( இரவோட இரவா எழுதுறதால ஒன்றையும் தெளிவா எழுத முடியல... )
------------------------------------------------------------------------------------
சரி.... எனக்கு நேற்று வந்த மெயில் இது தான்...
சிம்பாவேயில் நடந்த/ நடக்கிற சம்பவம்... என்ன என்று சொல்ல தேவையில்லை... படத்தை பார்த்தாலே விளங்கும்...
------------------------------------------------------------------------------------
இந்த படங்களை பார்க்கையில், என் மீது எனக்கே வெறுப்பு ஏற்படுகிறது.
ReplyDeleteநல்ல பகிர்வு
வாழ்த்துக்கள்.
oh my god !!!!!!!!!!
ReplyDeletegod is help
Tnx...Anonymous...
ReplyDeleteTnx...ASIN mithrau... :\