Total Pageviews

Tuesday 1 June 2010

பிறக்க முதல்... அலேட்டா இருந்தால்... பிரச்சனை இல்லையே....

( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை
------------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் இயல்பினை...  பரம்பரை ஜீன்களும்... வளரும் சூழலுமே தீர்மானிக்கிறது...

பரம்பரை ஜீன் தீர்மானிக்கிறது என்பது எல்லாருக்கும் ஈஸியா தெரியும்...
அப்பா, அம்மா வைப்போல பிள்ளைகள் இருப்பதும்... வர்களின் நோய்கள் இவர்களுக்கு வருவதும்... இதுக்கு ஒரு ஸாம்பிள்...
இதத்தான்... "அப்பன அப்படியே உரிச்சு வச்சிருக்கான்... " என்று சொல்கிறது....
 ( ஆனால்... அப்பா,அம்மாவை விட... தாத்தா,பாட்டியைத்தான் ஒத்திருபார்கள்... பரம்பரை அலகுகள் ஒன்ற விட்ட ஒரு தலை முறைக்குத்தான்... திறமையாக பிரதி செய்யப்படும்... )

வளரும் சூழல் பாதிக்கிறது என்பதும் பொதுவா விளங்கும்...

உதாரணமாக...
ஒஸாமா பில்லேடனின்... தாய் ஒரு அப்பிறானியாம்... எல்லாருக்கும் பயந்து ஒடுங்கி இருக்கிறவாவாம்... ஆனால், மகன் சொல்லத்தேவையில்லை....
இதே மாதிரித்தான்... ஹிட்லரிட அம்மாவும்... அமைதியை விரும்பும் ஒரு பெண்... ஆனால்... மகன்... ஹீ...ஹீ....

சரி... இதெல்லாம்... ஏற்கனவே கனபேர் சொல்லிட்டாங்க... அடுத்ததா சில பேர் சொன்னதை பார்த்துட்டு...
ஒருத்தரும் சொல்லாததை(?!) பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------
இப்போது...
ஆராச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டு பிடித்ததை பார்ப்போம்....

தாயின் வயிற்றில்... இருக்கும்போதே... பிள்ளையின் அறிவு வளர்ச்சி ஆரம்பிக்கிறதாம்...
அதோட... தாயை சுற்றி நடக்கும் புற செயற்பாடுகளால்... ஏற்படும் அதிர்வுகளின் அலைகள் அந்த பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறதாம்.

அதாவது... குழந்தை வயிற்றிலிருக்கும்போது.... தாய் என்ன சூழ் நிலையில் இருக்கிறாள்... ( சந்தோஷம், துக்கம்....)
என்ன என்னத்தை விரும்பிப்பாக்கிறாள் என்பதை பொறுத்தே அந்த குழந்தையின் எதிர்கால விருப்பு வெறுப்புக்கள் தீர்மானிக்கப்படுகிறதாம்...

இதுக்காகத்தான்... வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் வந்துது... தாயை சந்தோஷ்மாக வைத்திருக்கத்தான்.... ( பொதுவாக பெண்களுக்கு நகை என்றால்... அப்பவும் இப்பவும் எப்பவுமே சந்தோஷம்தானே...)

உதாரணமா....

குழந்தை வயித்தில இருக்கும் போது... டீ.வி ல விஞ்ஞானம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தாய் ஆர்வத்துடன் பார்த்தால்... அந்த குழந்தை எதிர்காலத்தில் விஞ்ஞானத்தில் ஒரு பிடிப்புடன் வளரும்...
அதே... டீ.வீ ல... நாடகங்களை பாத்து மூக்கு சீறிட்டு இருந்தால்... அந்த பிள்ளையும் எதிர்காலத்தில் ஓவர் எமோஷனாகி அழுவினியாத்தான் இருக்குமாம்....

(டீ.வி பாக்கிறதிலயும் ஒரு பிரச்சனை இருக்கு... டீ.வி இக்கு நேரா இருந்து பார்க்க கூடாது...
அப்படி பார்த்தால்...  அந்த கியூப்ல இருந்து வெளிவாற கதிர்கள் குழந்தையின் வழர்ச்சியையே பாதிக்க கூடியது...
இந்த கதிர்களின்... தாக்கத்தை குறைப்பதுக்குத்தான் ஃப்ல்ட் டீ.வி யே வந்துது...
அதுதான்... பழைய குமிழ் டீ.வில திரை வெளி நோக்கி வளைந்திருக்கும்.... அப்படி இருந்தால்... கதிர்கள் பெரிய ஏரியாவுக்கு பரவும்....  அதனாலதான்... ஃப்லட் டீ.வி வந்துது... அதில... கதிர்கள் நேரா மட்டும்தான் பாதிக்கும்... அப்படி இருந்தாலும் நாங்க.. சரியா டீ.விக்கு நேர இருந்துதான் பார்ப்பம்... ஹீ...ஹீ...
இப்ப எல்.சி.டி வந்ததால பறவாயில்லை.... )

டீ.வி ல பாக்கிறதை விட... தாய் நேரடியாக அந்த நிகழ்ச்சிகள் சம்பந்தமான இடத்துக்கு சென்றுவந்தால்...
பிறக்கப்போகும் குழந்தையில் பாரிய உள மாற்றத்தை ஏற்படுத்தலாமாம்.... ( இது நீண்டகாலமாக ஆராச்சி செய்து கண்டு பிடிச்சிருக்காங்க.... ஆனா... << அதை பதிவின் பின் பகுதியில் எழுதுறன்... >>

முக்கியமாக... வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு... மற்ற எந்த புலன் உறுப்புக்களையும் விட... செவிப்புலன் ஆரம்பத்திலேயே கூர்மையாக இருக்குமாம். அதனால்... தந்தை தாய்க்கிடையே நடக்கும் உரையாடல்கள் கூட பிள்ளையின் எதிர்கால திறமையை தீர்மானிக்கிறது.

ஆகவே... பிள்ளைகள் பிறந்து... அது தாய், தகப்பன் நினைத்த மாதிரி வளராமல் விட்டோன... அழுது புலம்பி... தாங்களும் கஷ்டப்பட்டு... பிள்ளைகளையும் வருத்துவதை விட....
ஒரு 10 மாசம் ( 4 மாசத்துக்கு பிறகுதான் இந்த வளர்ச்சி ஏற்படும்... ஆகவே 6 மாசம்...) எப்படியாவது... பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டுமென்று தாங்கள் நினைக்கிற துறை சம்பந்தமான நிகழ்ச்சிகளைபார்த்தும்... (விருப்பத்துடன்) அது சம்பந்தமான... விடையங்களையும் பேசினால்... எதிர்காலம் ஃபுள்ளா... பிள்ளையும் நல்லா இருக்கும்... பெற்றோரும் நல்லா இருப்பாங்க....

------------------------------------------------------------------------------------
சரி... இனி... கொஞ்சம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்கு (??) போய் பார்ப்போம்...

அர்யுனன்... தன‌து மனைவிக்கு...  யுத்த களத்தில் ***** ( பெயர் நினைவு வருதில்லை... தெரிந்தவர்கள் கொமென்ட்ஸில் போடுங்க) ஐ உடைத்துக்கொண்டு எப்படி உள் நுழைவது என்பது பற்றி கூறுகிறான்... அதை மனைவியின் வயிற்றிலிருக்கும் பிள்ளை... கேட்டு கற்றுக்கொள்கிறது.... ***** இலிருந்து எப்படி வெளியேறுவது என்பதை அர்யுனன் கூறும்போது  மனைவி தூங்கிவிடுகிறாள்...
அதன் பின்னர்...  மகாபாரத போரின் போது.... யுத்தகளத்தில் அந்த ***** உடைத்துக்கொண்டு உள்ளே நுழையும் அர்யுனனின் மகன் அபிமஞ்யு... வெளியே வரும் முறை தெரியாததால்... ( வஞ்சகமாகவும்) கெளரவர்களால் கொள்ளப்படுகிறான்....

இது கதையோ... வரலாறோ... அது வேற விடையம்...

தாய்,தந்தையின் உரையாடல் வயிற்றிலிருக்கும் குழந்தையைப்பாதிக்கும் என்பது கூறப்பட்டுள்ளது...

வரலாற்றுக்கு முற்பட்டதாக கருதப்படும்... இந்த கதைகளில் (அல்லது வரலாற்றில்) இவ்விடையம் குறிப்பிடப்பட்டிருப்பது ஆச்சரியமானதே....
எப்படி... விஞ்ஞான உலகம் தற்போது அறிந்து கொண்டதை... அவர்கள் அப்போதே... எழுதினார்கள் என்பது மர்மம்...
( துரதிஸ்ட வசமா... மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றில்... மக்களை நல் வழிப்படுத்துவதற்காக பல இடைச்செருகள்களை லொஜிக்கில்லாமல் சேர்த்ததால அது இப்ப கட்டுக்கதை என்கிற றேஞ்சுக்கு வந்துட்டுது...)

இதிலிருந்து... ஒரு மேம்பட்ட சமுதாயம் இருந்து... பின்னர்... திடீரென அழிந்திருக்குமோ... என்ற எண்ணம் தோன்றுகிறது....

எது எப்படியோ... தாயின் செயற்பாட்டில்த்தான்... குழந்தையின் எதிர்காலம் பெரிதாக தங்கி இருக்கிறது என்பது... தெளிவாகிறது... ( பாதியில் தூங்கியதால்... அபிமஞ்யுவால்... ***** இருந்து வெளியேற முடியவில்லை...)

------------------------------------------------------------------------------------

இந்த பதிவு... ஓ.கே... நல்லம்... என்றா எல்லாரும் வாசிக்க வோட் போடுங்க...
இல்லை... என்றால்... கொமன்டில் பிளைகளை சுட்டிக்காட்டுங்கள்...

------------------------------------------------------------------------------------

9 comments:

  1. சக்கர வியூகம்

    ReplyDelete
  2. Tnx...cavinan...
    ***** => சக்கர வியூகம் :)

    ReplyDelete
  3. பட்டாபட்டி2 June 2010 at 06:28

    பட்டாபட்டி

    ReplyDelete
  4. ஏதோ நான் எழுதின கதை தலைப்பு மாதிரி இருக்கேன்னு வந்தா, இங்கே மூச்சை அடைக்கிற அளவுக்கு பெண்ணுரிமையை பத்தி சூடா சொல்லி இருக்கீங்களே. ஆனா கடைசில என் கதை மாதிரி தான் முடிஞ்சிருக்கு. வாழ்த்துகள் மொழி நடைக்கு.

    ReplyDelete
  5. நிச்சயம் ஏதோ விஷயத்தோடு தான் எழுதி இருப்பீங்கன்னு நம்புறேன். கொஞ்சம் போஸ்டிங் பண்றதுக்கு முன்னாலே நீங்களே ஒரு தடவை படிச்சு பார்தீங்கன்னா அங்க அங்க இருக்கிற சின்ன சின்ன எழுத்து பிழை எல்லாம் வராது.

    ReplyDelete
  6. abhimanyu mother name is Subhadra

    ReplyDelete
  7. நன்றி... பட்டாபட்டி...
    அது சக்கரை வியாதியல்ல... சக்கர வியூகம்... ஸோ... பட்டாபட்டி இல்லை... ஹீ...ஹீ...
    ---------------------------------
    நன்றி...பட்டாசு...
    பெண்ணுரிமை பற்றி எல்லாமா பேசி இருக்கம்...
    நன்றி... நீங்கள் சொல்றது சரிதான்... இரவோட இரவாத்தான் போஸ்ட் போட்டன்... சரி பிழை பார்க்கல...
    ( சும்மாவே நான் எழுத்து பிழை விடுறது... அதுக்குள்ள ரைப்பண்ணக்க கொஞ்சம் கூடி... கனக்கவாகிது... )

    ---------------------------------
    நன்றி... Anonymous... (& cavinan)
    Ninaivooddinathukku....

    ReplyDelete
  8. இதை விட அர்ச்சுனன் "சுபத்திரை"யிடம் சொல்லாமலே இருந்திருக்கலாம்...அபிமன்யு உள்ள போயிருக்கவே மாட்டான்... இன்னும் கொஞ்ச நாள் பாண்டவர்களுக்காக போராடியிருப்பான்...!

    ReplyDelete
  9. நன்றி...D.Gajen...
    ஹீ...ஹீ... அது எப்படி முடியும்...
    அபிமஞ்யு உள்ளுக்கு போய் வெளியில வர முடியாமல் இருந்த போது...
    கர்ணனும் யுத்த தர்மத்தை மீறி ஒரு அடி முதுகுப்புறமாக அடுத்தாராம்....
    அதை வைத்துத்தானே...
    இறுதியில் கர்ணனின் தேர் சிக்கியபோது அர்யுனன் தர்மத்தை மீறி கொண்டுவிட்டு அதற்கு சாட்டு சொல்ல முடிந்தது...
    ஹீ...ஹீ... எல்லாம் கோஸ்தியரிதான் என்ன... :P

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected