Total Pageviews

Wednesday, 22 September 2010

பிரம்ம குமாரிகளுக் 63 ம்... ( நேரடி அனுபவம்.)

------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளுக்கு முதல்ல... அட்வான்ஸ் லெவல் எடுத்திட்டு வெட்டியா இருந்தப்ப... அம்மா பகவானின் பூசைக்கு சென்று.. அங்கு நானும் எனது நண்பர்களும் பார்த்ததை ( கேவலங்களையும் சிறு பிள்ளைத்தனங்களையும்) எழுதி இருந்தேன்...
இன்று... அதே வெட்டியாக இருந்த நேரத்தில்... "பிரம்ம குமாரிகள்" என்ற அமைப்பினரிடம் சென்றிருந்ததைப்பற்றி இன்று கொஞ்சம் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன்.. :)

------------------------------------------------------------------------------------------

ஒரு நாள்... மாலையில்... கிறிக்கெட் விளையாடிட்டு வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தோம்... போற றோட்ல... "பிரம்ம குமாரிகள்" தியான வகுப்பு... என்று விளம்பரம் போட்டிருந்தார்கள். எங்களுக்கும்... நீண்டகாலமாவே.. இந்த தியானத்தை செய்தா மனம் கட்டுப்பாட்டுக்கு வரும் என்றெல்லாம்... டீச்சேர்ஸ் அட்வைஸ் பண்ணுவாங்கள்...
ஆகவே, நாங்கள் அந்த வகுப்புக்கு போகலாம் என்று முடிவு செய்தோம்.அ

அடுத்த நாள்... காலைல 4.50 மணிக்கெல்லாம் கஸ்டப்பட்டு எழும்பி... குளிச்சிட்டு... 5.30 எல்லாம் செட்டாகி அவர்கள் குறிப்பிட்டிருந்த அந்த இடத்துக்கு பொய்ட்டோம்... 6 மணிக்கு தொடங்கும் என்று ஏற்கனவே விளம்பரத்தில பார்த்தம்.
வழமைக்கு மாறாமல்... அவர்களும் 6.15 எல்லாம் எங்களை ஹோலுக்குள் கூட்டிட்டு போய்... தூரத்தில நேர ஒரு லைட் எரிஞ்சு கொண்டிருந்தது... அதைப்பார்த்து தியானமிருக்குமாறு சொன்னார்கள்.
நாங்களும் ஏதோ தியானம் என்கிற பெயர்ல அதை பார்த்திட்டே அமைதியாக இருந்தோம்... ( சுற்றுப்புறம் உண்மையிலேயே அமைதியாக இருந்தது... ஆர்வமாகவும் இருந்தது.)
அந்த லைட்டின் கீழே.. ஒரு படமிருந்தது... ( நாங்கள்... அவர் தியானத்தில் பெரியவர் ஆக்கும்... அதுதான் வச்சிருக்கிறார்கள் என்று நினைத்தோம்... :)

30 நிமிடங்களின் பின்னர்... வெள்ளை புடவையுடன் ஒருவர் வந்தார்... அவர்தான் எங்களுக்கு தியானம் சொல்லித்தருபவராம்... ஒரு ஸெடியூல் தந்தார்கள்... கிழமையில் 3 நாட்கள் தியான வகுப்பு... 20 நிமிடம் தியானம்... 20 நிமிடம்... பஜனை... 20 நிமிடம் கலந்துரையாடலாம்...

இப்படி எழுதினா பதிவு நீண்டுடும்... முக்கியமானதை எழுதுறேன்...

------------------------------------------------------------------------------------------

முதல் நாள் வகுப்பு....
சில படங்களுடன் வந்து அமர்ந்தார்கள்... அதில் ஒரு படத்தில்.. பெரிதாக ஒரு வட்டம்... அதில் 4 பெரிய பிரிவுகளும்... இறுதியில்... ஒரு சின்ன பிரிவும் இருந்தது...
அவர்களின் விளக்கம்...
முதலாவது... தங்க காலமாம்... அதில் இராமர், ஜேசு (மதங்கள் கடந்தே இயங்குவதாக கூறிக்கொள்கிறார்கள்) படங்கள் போடப்பட்டிருந்தது... மிகவும் சிறந்த முறையில் ஆட்சி நடை பெற்று அனைத்து மக்களுமே சந்தோஷமாக இருந்த காலமாம் அது...
இரண்டாவது... வெள்ளி காலமாம்... இதில் முதல் காலத்தில் தவறு விட்டவர்கள் சில துண்பங்களுடனும்... பொதுவாக சந்தோஷ்மாகவும் வாழ்ந்த காலமாம்... துவார பாலகர்களின் படங்கள்...
4 ஆவ்து... இப்போது நாங்கள் இருக்கும் காலமாம்... முழுவதும் துண்பமாம்...
5 வது குறுகியகாலம்... வைரக்காலமாம்... அதறுகு எங்களை தயார்படுத்துவது தான்  இந்த மைப்பின் நோக்கம்/கடமை எல்லாமேயுமாம்....

அந்த ஒவ்வொரு காலமும்... 2500 வருடங்களைக்கொண்டதாம்... கடைசி மட்டும் 100 வருடங்களைக்கொண்ட காலமாம். அப்போ நாங்கள் கேட்டோம்... இராமாயணம்/ மகாபாரதம் நடந்த யுகமெல்லாம் நீண்டகாலத்தை கொண்டிருக்கே... நீங்கள் வெறும்... 2500 என்கிறீர்களே என்று....
அதற்கு அவர்களி பதில் சுப்பரா இருக்கும்...
பதில் இதுதான்...
" நீங்கள் எல்லாம் 63 வது பிறவியின் ஆரம்ம நிலை.. அதுதான் இப்படியான கேள்விகள் கேக்கத்தோன்றுது... "
இது மட்டும்தான் எல்லா கேள்விக்கும் பொதுவான பதில்...

நாங்கள் 63 ம் பிறவி என்பதால மட்டும்தான் இவர்களிடம் வந்தோமாம்... மற்றவர்கள்... 63 அடையலயாம்... பக்குவப்படலயாம்... 63 இல் இங்கு வந்து தூய்மை அடைந்தவர்கள் 64 ஆவது பிறவியில்... வைர காலம் எனும் சந்தோஷங்கள் மட்டுமே நிரம்பிய உலகத்தில் பிறப்போமாமாம்...

நாங்கள்... லவ் பண்ண கூடாதாம்... கல்யாணம் கட்ட கூடாதாம்... அப்போதானாம்... மற்றவர்களிட பாவம் சேராமல்..தூய்மையடைந்து... 64 பிறவியின் பின்னர்... நட்சத்திரமாவமாம்... ( ரொம்ப கேவலமான அறிவியல் தத்துவம் இது.. )

பிச்ச காரர்களுக்கு பிச்சையும் போட கூடாதாம்... போட்ட அவர்களின் பாவம் தொத்திக்குமாம்... ஆனா, அன்பா பழகனும் எல்லோருடனும் என்று இன்னொரு நேரம் அட்வைஸ்....
( இடைல ஒருக்கா... போன பிறவியில பிச்சைக்காரர்களுக்கு உதவாததால தான் இவர்கள் இந்த பிறவியில் பிச்சையா என்ரார்கள்... அப்படி என்றா... நாங்கள் இந்த பிறவியில் உதவாவிட்டால்???? கேக்கல... கேட்டா அதே 63 தான் பதில்... :) :)

ஆர் மேலயும்... பற்றிருக்க கூடாது என்பது... இவர்களின் முக்கியமான கட்டளை....
ஆனால், வகுப்பு முடிந்து சில நெரங்களில்... தம்பி நீங்கள் என்ன படிக்கிறீர்கள்... என்ர பேரப்பிள்ளை அது படிக்கிறாள்... நல்ல கெட்டிக்காறி... இப்படி கனக்க சொல்லுவார்கள்... இது பற்றில்லை போல...

------------------------------------------------------------------------------------------

அது கிடக்கட்டும் ஆர் அந்த படத்திலுள்ளவர் என்றால்... அதற்கான விளக்கம்...
ஏதோ பெயர் சொன்னார்கள் நினைவில்லை... அவர்தான் 64 பிறவிகளையும் வாழ்ந்து முடித்த ஒரே ஒருவராம்... 8 வது அவதாரம் என்றுகூடி சொல்லலாமாம்...

வைர வியாபாரியா இருந்த அவருக்கு... ஒரு நாள் திடீரெண்டு ஒரு ஒளி வந்து அனைத்து பிரபஞ்ச உண்மைகளையும் சொல்லிச்சாம்... ( அவரை ஒளி சூழ்ந்து இருந்ததை அவரது மகள் பார்த்தாவாம்... + பின்ன்ர்.... அவரின் சிஷ்யர்கள் சிலரும் பார்த்தார்களாமாம்... சாட்சி இல்ல என்று நாங்கள் சொல்ல கூடாதே... )
அவருக்கு விளக்கப்பட்ட அந்த உண்மைகள்... எங்களால புருஞ்சுக்கவே முடியாதாம் இப்போது...
அவர் அந்த உண்மைகளில் சிலதை எழுதி வைத்துவிட்டு இறந்து நட்சத்திரமாகிவிட்டாராம்...
அவர் எழுதியதை தான் முரளி என்கிற பேர்ல... தியானத்தின் பின்னர்... வாசிக்கிறார்கள்...

நாங்களும் பொழுதுபோக்காக 3 நாள் போனோம்....
4அம் நாள்... இறுதியாக நாங்கள் சென்ற நாள்...

இந்தியாவிலிருந்து சில பிரம்ம முமாரிகளும்... சகோதரர்களும்... (  ஆண்களை அப்படித்தான் சொல்லுவார்களாம்)...
நாங்கள் ஹோலில் இருந்தோம்... கதைச்சிட்டு இருக்கும் போதே... எங்கள் கொஞ்சப்பேரைக்காட்டி... இவர்கள் நல்ல பிள்ளைகள்... எங்கள் குறூப்பில் சேர்துகலாம் என்றார்கள்.... எங்களுக்கு.... வடிவேலுவுக்கு சொன்ன மாதிரி..."இவன் ரொம்ப நல்லவன்டா" அப்பிடி இருந்த்து.... அன்டையோடு எஸ்கேப்....

------------------------------------------------------------------------------------------

தியானத்தை பலரும் விரும்புவார்கள் என்றகாரணத்தினால்... அதை ஒரு சாட்டாக வைத்து... இப்படி ஒரு தனிப்பட்ட மனிதனை கடவுள் என்று கூறுவதும்... அறிவியலே இல்லாமல்... முட்டால்தனமால லொஜிக்கில்லாத பின்னனிகளைக்கூறி சமுதாயத்தை ஏம்மாற்ற முனைவது கேவலமானது...
( 8 தொடக்கம் 15 வயதான பாடசாலை மாணவர்கள் பலர் உள்ளார்கள் இவர்களது வகுப்பில்... அவர்களை பற்றற்றவர்களாக்கி... சுய சிந்தனையில்லாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.)
இப்படியான... குழுக்களுக்கு... பாட சாலைகளின் முன்னால்... விளம்பரஙள் வைப்பதற்கே அனுமதியளிக்க கூடாது...

------------------------------------------------------------------------------------------

போன அம்மா பகவான் அனுபவத்தில்... ஏன் ஹிந்துக்களை பற்றி எழுதுகிறீர்கள்... மற்றைய மத்ததில் இப்படி தப்பு நடக்குது தானே... என்ற பொருளில் கொமென்ட்ஸ் வந்தது...
மற்றையவர்கள் தப்பு பண்ணுகிறார்கள் என்பதற்காக நாமும் தப்பானவர்களை வழர்க்கனுமா???
எங்களது இந்து மதம் என்ன சொல்கிறது என்பதை புரிந்தாலே எல்லாம் புரியும்... தூதர்கள் தேவையில்லை...
"ஏலியன்ஸ் பேய் கடவுள் விளங்க முடியா பரிமாணங்கள்" என்பதன் பிற்பகுதியில்... இவற்றிற்கான பதில் சொல்ல முனைவேன். :)

------------------------------------------------------------------------------------------

இங்கு குறிப்பிட்ட அனைத்துமே.... நேரடியாக பார்த்தறிந்த உண்மைகள்... தேவைப்படின்... இடம்... பெயர் குறிப்பிட முடியும். மற்ரைய இடங்களில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது.

------------------------------------------------------------------------------------------
அட நானும் 150 பதிவுகள் எழுதிட்டனே... :D
 150 மெம்பேர்ஸும் இருக்காங்க... நன்றி மெம்பேர்ஸ்கும்... வருகைதரும் அனைவருக்குமே... :)

------------------------------------------------------------------------------------------

Tuesday, 21 September 2010

வாவ்வ்வ்வ்... கச்சிதம்... :) (படங்கள்)

------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே கிட்டத்தட்ட இதே போன்ற பதிவை... இன்னொரு பதிவர் இட்டிருந்தார்... அது ரசிக்கும் படியாகவும்.. ஜோசிக்கும் படியாகவும் இருந்தது...
இப்போது... நான் கண்ட சில நிறுவனங்களின் லோகோக்களின் வியப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)
------------------------------------------------------------------------------------------

Eat Innovations

இதில என்ன திறமையான உருவாக்கம் இருக்கு என்று சொல்லவேதேவையில்லை...
eat என்பதற்கு ஏற்றவாறு ஒரு கரண்டியிலிருந்து ஆவி போவதுபோன்று கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------

Freedom

இறுதி M இல் இருந்து ஒரு பறவை சுதந்திரமாக பறப்பது போன்று மிக அர்த்தத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------Human

பெயருக்கு ஏத்தவாறு மனித உருவாக்கத்தின் அடிப்படையான விந்தனு பெயரினுள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------

Wine Searcher

மிகச்சிறப்பாக இரண்டு வைன் போத்தல்களை குறிக்கும் அதே வேளை Searcher
எனும் சொல்லுக்கு ஏத்தவாறு கண்ணாடி போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------Cinema Café

படச்சுருள் ஒரு கஃபே பப் போன்ற உருவத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------One To Love

பெயருக்கு ஏத்த மாதிரி... 1 சரிந்த 2... மொத்தமாக பார்க்கையில் 1 to Love என வரும்வகையில் சிறப்பாக அமைத்துள்ளார்கள்.

------------------------------------------------------------------------------------------Code Fishஅடிப்படை கோட்களைக்கொண்டே மீன் போன்ற உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------

Enough

கடைசி h ஒரு பெரிய முடிவுக்கோட்டுக்கு மட்டு படுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------

Coffeeஎன்ற சொல்... கஃபே பப்பிலிருந்து வரும் புகையால் உருவாகியதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------Sunday, 19 September 2010

இலவச பயணுள்ள 3 போர்ட்டபிள் மென்பொருட்கள்...

-------------------------------------------------------------------------------------------
போர்ட்டபில் சொஃப்ட் வெயார்களை பொதுவாக அனைவருமே விரும்புவார்கள்...
காரணம்... கணனியில் இன்ஸ்ரோல் பண்ணத்தேவையில்லை... சாதாரணமான ஃபைலின் அளவுடன் ஒப்பிடுகையில் சிறிய அளவிலானதாக இருக்கும்.
யு.எஸ்.பி ட்ரைவ்களில் எடுத்துச்சென்று... தேவையான கணனிகளில்... இரண்டு கிளிக்களுடனேயே... வேலையை ஆரம்பிக்கலாம்.... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

இங்கு அப்படி அடிக்கடி பயண்படத்தக்க... 3 போர்ட்டபிள் மென்பொருட்களை தந்துள்ளேன்... இலவசமாக டவுண்லோட் பண்ணக்கூடியவை....
-------------------------------------------------------------------------------------------
Skype 4.2.0.187 Final Multilanguage Portable
பொதுவாக அனைவருமே... வீடியோ, ஓடியோ சட்டுக்கு பயண்படுத்தும்... ஸ்கைப்பின் போர்ட்டபிள் மென்பொருள் இது... இது...  சாதாரணமாக ஸ்கைப்பில் செய்யத்தக்க அனைத்தையும்... இந்த போர்ட்டபிள்ளையும் வெறும் இரண்டு கிளிக்களுடனேயே செய்ய முடியும்.
டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...
-------------------------------------------------------------------------------------------
SPlayer 3.6 Build 1543 Portable
இந்த மென்பொருள் பலருக்கு பயண்படும் என நினைக்கிறேன்...
பொதுவாக... நாம் வேறு கணனிகளில் வீடியோக்களை ரன் பண்ணும் போது... அந்த கணனிகளில் நிறுவப்பட்ட மென்பொருட்கள்... எமது வீடியோ ஃபோர்மேட்டுக்கு ஒத்துவராமல் போவதுண்டு... அதற்கு தீர்வாக இந்த மென்பொருள் அமைந்துள்ளது. இதுவும் போர்ட்டபிள்தான்...
அனைத்து பிரபலமான வீடுயோ ஃபோர்மேட்களுடன்... +  இவையும் இயங்கும்.
டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...

-------------------------------------------------------------------------------------------
Portable SuperEasy Video Converter 1.59
இந்த மென் பொருள்... ஏனைய கென்வேர்ட்டர்களில் இல்லாத சில வீடியோ ஃபொமேர்ட்களை கென்வேர்ட் பண்ண உதவுகிறது...
டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...

-------------------------------------------------------------------------------------------
Portable WebCamMax 7.1.8.2
இந்த மென்பொருள்... பிரஜோசனமானதல்ல... சும்மா ஃபன்கு பயண்படுத்தலாம்...
வீடியோ சட்களின் போது... எமது வீடியோவில்... சில இஃபக்ட்களைப்போடுவதற்கு பயண்படும்... :)

டவுண்லோட் பண்ண...
இதை கிளிக் பண்ணவும்...

-------------------------------------------------------------------------------------------

Wednesday, 8 September 2010

ஃபோட்டோஷொப் ஸ்மோக் இஃஃபெக்ட்... டியூட்டோரியல்...

------------------------------------------------------------------------------------------
கலர் கலராக புகை இஃபெக்ட் எப்படி ஃபோட்டோஷொப்பில் செய்வது என்பதை மையமாக வைத்து இந்த டியூட்டோரியலை எழுதி இருக்கிறேன்...
------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத்தேவையான அளவில் வேக் ஏரியாவை உருவாக்கி கொள்ளவும்...
பின்னனி நிறம் கறுப்பாக போட்டுக்கொள்ளவும்.

அடுத்து... பக்ரவுண்ட் லேயருக்கு மேலாக ஒரு லேயரை(1)ப்போட்டு கொள்ளவும்...
பின்னர்...  பிறஸ் டூலை எடுக்கவும்...
( இதற்கு முன்னர் ஸ்மோக் பிறஸ் இல்லாதவர்கள்... இந்த லிங் இக்கு சென்று டவுன்லோட் பண்ணி பதிந்து கொள்ளவும்.
டவுன் லோட் பண்ணியதும் வரும்... ஃபைல்லை... நீங்கள் ஃபோட்டோஷொப் இன்ஸ்ரோல் பண்ணிய ட்ரைவிற்கு சென்று... இல கொப்பி பேஸ்ட் செய்யவும்.
உதாரணமாக எனதில்... C:\Program Files\Adobe\Adobe Photoshop CS3\Presets )

பிறஸில் உங்களுக்குப்பிடித்த உருவத்தை எடுத்து... புதிதாக போட்ட லேயரில் (1)... கிளிக் பண்ணவும்...பின்னர்... லேயர் 1 ஐ இருதடவை கிளிக் பண்ணி... Layer Style ( Blending Options ) இக்குள் போகவும்...
 Blending Options இல் Gradient Overlay  ஐ கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான மாதிரி கலரை செட் பண்ணி ஓ.கே பண்ணவும்...

அம்புட்டும்தான் வேலை... அழகான ஸ்மோக் இஃபெக்ட் ரெடியாகி இருக்கும்...
பிறகு... உங்களுக்குத்தேவையான மாதிரி டிசைன் பண்ண வேண்டியதுதான்... :)இப்போது... அந்த லேயரில்...  பிறஸ் டூலால் எங்கு கிளிக் பண்ணினாலும்... கலர் ஸ்மோக் வரும்... :)
------------------------------------------------------------------------------------------
நான் இதில் மேலதிகமாக செய்ததை கீழே போட்டிருக்கிறேன்...
செய்த முறை தேவை என்றால்... இதை கிளிக் பண்ணி ஆக டவுண்லோட் பண்ணவும்.

------------------------------------------------------------------------------------------

ஃபேஸ்புக் ஃப்ரீ கோலும்... ஸ்கைப் வீடியோ கொன்ஃபெரென்ஸும்... :)

------------------------------------------------------------------------------------------
ஃபேஸ் புக்கும்... பிரபல தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான வொனாஜ்ஜிம் இணைந்து... ஃபேஸ்புக் பயணர்களுக்கு.. அவர்களது நண்பர்களுடன் இலவசமாக தொலைபேசியில் உரையாடக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும்... இது இப்போது... ஐஃபோனிற்கும்... ஸ்மார்ட்போன்களுக்கும் மட்டுமே சாத்தியமாக உள்ளது.
(மற்ற ஃபோன்களுக்கான மென்பொருட்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.)

ஐ ஃபோனில் அப்லிகேசன் இறக்கப்பட்டு இயங்கும் முறை காட்டியுள்ளேன்....
ஏனைய ஸ்மார்ட்ஃபோன்களின் முறை காட்டவில்லை...

------------------------------------------------------------------------------------------

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர்...  ஃபேஸ்புக்கில் வீடியோ சட்... ஒரு தேர்ட்பார்ட்டி மென்பொருளின் மூலம்... ஒரு வெள்ளோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு பிழைகள் அறியப்பட்டதும் நிறுத்தப்பட்டது...
ஃபேஸ்புக்கின் இந்த அதிரடி நடவடிக்கைகளால்... இணைய உலகில் வீடியோ, வொய்ஸ் சட்டிங்கில் முதன்மையாக திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்கைப் விழித்துக்கொண்டது...
ஸ்கைப்பும் இப்போது முதன் முறையாக... பல பேர் (தற்சமயம் 4) ஒரே நேரத்தில் வீடியோசட் பண்ணும் முறையை அறிமுகம் செய்துள்ளது... இதுவும் ஒரு வெள்ளோட்டமாகவே விடப்பட்டுள்ளது.
(ஏற்கனவே இந்த வசதி ஊவூ இல் இருப்பது குறிப்பிடத்தக்கது.)

ஸ்கைப் பீட்டாவை டவுண்லோட் பண்ண இந்த தளத்துக்கு சென்று மேல் வலது மூளையில் இருப்பதை கிளிக் பண்ணவும்...

------------------------------------------------------------------------------------------

Tuesday, 7 September 2010

ஏலியன்ஸ் தங்களை அடையாளப்படுத்தாதது ஏன்? (டுவின்ஸ்டவர்)

விளங்க முடியாத பரிமாணங்கள்... (09)
ஏலியன்ஸ் தங்களை அடையாளப்படுத்தாதது ஏன்? 

------------------------------------------------------------------------------------------
ஏலியன்ஸ்தொடர்பான‌அடுத்த பதிவு இது...
போன பதிவில், தியரி ஒஃப் ரிலேட்டிவிடிபற்றி அறிந்ததை எழுதி இருந்தேன்...
அந்த வேகத்தை அடைந்தால் என்ன பிரச்சனைகள் எழும் என்பதையும்... ஏற்கனவே குறிப்பிட்ட சில சம்பவங்களில் ஏலியன்ஸ் தோன்றியதற்கு காரணம் என்ன என்பதையும் இன்று எழுதுகிறேன்...

------------------------------------------------------------------------------------------

ஏற்கனவே... கடந்த பதிவொன்றில்... செப்டொம்பர் 11 அமெரிக்காவின் டுவின்ஸ்டவர் தாக்கி அழிக்கப்பட்ட போது...
அதன் பின் புற வானத்தில் ஒரு பறக்கும்தட்டு நிற்பது போன்ற படத்தை போட்டிருந்தேன்...
அது ஏன் என்பதை பார்ப்போம்...

எனது தாத்தாவிலிருந்து அப்பாவும்... அப்பாவிலிருந்து நானும்... என்னிலிருந்து அடுத்த சந்ததியும் உருவாகப்போகிறது...
இதில்... ஒரால் அழிந்தாலும்... எதிர்காலத்தில் மாற்றம் வரும்...
ஒரு அடியில் இருந்து பல பேர் உருவாகி இருப்பார்கள்... ஆகவே பெரிய மாற்றம் நிகழும் எதிர்காலத்தில்... உதாரணமாக,  ஜித் என்பவருக்கு 5 பிள்ளைகள் என்றால்... 5 பிள்ளைகளுக்கும் ஒராலுக்கு 2,3 பிள்ளைகள் பிறக்கும்... 3ம் தலை முறை 10,15 ஆகும் நான்காவது 20,30 ஆகும்... இப்படியே அதிகரிக்கும்...  இதில் ஜித் இல்லை என்றால் பின்னால் ஒன்றுமே இருந்திருக்காது/ உருவாகி இருக்காது...

இதை இங்கு சொன்னதற்கு காரணம்...

ஏலியன்ஸின் வருகைகளால் இது வரைக்கும் எம்மில் இழப்பு ஏற்படவில்லை என்பதை நாங்கள் ஜோசிக்க வேண்டும்...
( ஒரேயடியாக காணாமல் போன இராணுவ வீரர்கள்... அது போன்ற சில சம்பவங்கள் தவிர்து... அதுக்கு ஏலியன்ஸ்காரண்மில்லை என்று ஏற்கனவே மாற்றுலக கொள்கைமூலம் எழுதியிருக்கிறேன்.)
இதுகூட அவர்கள் நம் எதிர்காலத்தவராக இருக்கலாம் என்பதற்கு சான்றுதான்.
மாறாக அவர்கள்... எம்மை அழித்தார்களானால்... இழப்பு அவர்களிலேயே ஏற்படும்... ( இதுக்கு மேல சொல்லத்தெரியல... )
அதனால்தான் அவர்கள் எம்மை கண்கானிப்பதிலும்... எமக்குத்தெரியாமல் சில ஆராச்சிகளை செய்துவிட்டு போவதாகவும் இருகலாம். ( இப்போது இருக்கும் நாமது உருவ,உடலமைப்பு தேவைப்பட்டதால்த்தான்... ஏற்கனவே சொன்ன சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு கர்ப்பமுண்டாக்கி... கருவை 7 மாதத்திலேயே கொண்டுபோனார்களாகவும் இருக்கலாம்.)

இப்போது விளங்கி இருக்கும்... டிவின்ஸ்டவர் சம்பவத்தில் பறக்கும் தட்டு நின்டமைக்கான காரணம்...
எமக்கு ராஜராஜ சோழரின் படையெடுப்பை பற்றி தெரிந்திருக்கிறது... பார்க்க ஆசை இருக்கிறது... ஆனால், பின்னால் சென்று பார்க்க முடியாது...
ஆனால், எதிர்காலத்தில் அதீதவேகங்கள் சாத்தியமாகும் போது... பின்னோக்கி பயணிப்பதும் சாத்தியமாகும். அப்போதும்... அதே ஆசைகள் இருக்கத்தான் செய்யும்... அதன்டிப்படையில்... 2001 செப்டொம்பர் 11 இல் என்ன நடந்தது என்பதை கண்கானிப்பதற்காக வந்திருந்திருக்கலாம்.
ஆனால், தடுக்க முடியாது... தடுத்தால்... அழிவது அவர்களாக கூட இருக்கலாம்...
அந்த பில்டிங்கில் இருந்தவர்கள் இருந்திருப்பின்... திருமண பந்தங்கள் மூலம் எதிர்காலம் மாறி இருக்கும்...
பறக்கும் தட்டில் வந்தவர்களே உருவாகாமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதே...

------------------------------------------------------------------------------------------

இதேகாரணத்துக்காத்தான்... ஏற்கனவே சொன்ன சம்பவத்தில்... 2ம் உலக யுத்தத்தில்... விமானத்தை பிந்தொடர்ந்ததுக்கு காரணமாக இருக்கலாம். அதிலும்... அவர்கள் ஒரு மிரட்டலை மட்டுமே கையாண்டார்கள்...
ஏன் அந்த மிரடல் என்பது தெரியவில்லை... யுத்தத்தை தடுக்கும் நோக்கமில்லை...
( அன்று ஏற்படுத்தப்பட்ட அந்த மிரட்டல்... இன்று என்னையும் உங்களையும் அதை பற்றி பேச வைத்துள்ளது... அப்படியானால்... இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா???? ஏன்???... எனக்குத்தெரியாது... )

------------------------------------------------------------------------------------------

அவர்கள், எமக்கு தொழில் நுட்பத்தை கற்றுத்தருவதில்லை... அதற்கு காரணமும்... ஏற்கனவே சொன்ன காரணங்கள்தான்... அவர்கள் இல்லாமல் போக அதே வழிவகுத்துவிடும்...

------------------------------------------------------------------------------------------

இங்கு... ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் சிறுகதை நினைவு வருகிறது ( சுயாத்தாவினதாக இருக்கலாம்)... தெவைப்பட்டால்... அதை ஒரு பதிவாக இடுகிறான். :)

சிபி கேட்டபடி... உடைந்ததை ஒட்ட வைக்க முடியுமா? என்பதற்கு வரும் பதிவுகளில் பதில் தருகிறேன்.

------------------------------------------------------------------------------------------
அப்படி இருந்தாலும்... 

எகிப்திய பிரமிட்டோவியங்களில்... ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டது ஏன்?
எகிப்தில் இருந்த... நட்சத்திர வட்டத்தை எவ்வாறு கச்சிதமாக உருவாக்கினார்கள்?
மற்றும் தற்போதைய விஞ்ஞான உலகம் கண்டு கொண்ட உண்மைகள்... சில பழங்குடி மக்களிடையே ஏற்கனவே பழக்கத்திலிருந்தது எப்படி?
மற்றும்... பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...

------------------------------------------------------------------------------------------

Monday, 6 September 2010

முன்னால மட்டுமில்லை... பின்னாலயும் பார்க்கனும்... :P (படங்கள்)

-------------------------------------------------------------------------------------------

கேக்கிறவன் கேனபயலா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்கிறது சரியாத்தான் இருக்கும் போல...
இனி அலேர்ட்டாத்தானிருக்கனும்...
சுப்பர் கமெரா ஸொட்கள்...

( இன்ரர்னெட் பிரச்சனைகாரணமாக ஒழுங்காக தொடர் பதிவுகள் இட முடியவில்லை... இந்த கிழமை நிச்சயம் நல்ல பதிவுகள் 2 ஆவது இடுவேன்... )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, 3 September 2010

வாழ்க்கையே... எமோஷன் தான்... :P ( (சிரிப்பு)படங்கள்... )

---------------------------------------------------------------------------------
சுப்பர் ஐடியா...  சட்டேர்ஸ்க்கு விளங்கும்... :D

---------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails