Total Pageviews

Wednesday, 22 September 2010

பிரம்ம குமாரிகளுக் 63 ம்... ( நேரடி அனுபவம்.)

------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளுக்கு முதல்ல... அட்வான்ஸ் லெவல் எடுத்திட்டு வெட்டியா இருந்தப்ப... அம்மா பகவானின் பூசைக்கு சென்று.. அங்கு நானும் எனது நண்பர்களும் பார்த்ததை ( கேவலங்களையும் சிறு பிள்ளைத்தனங்களையும்) எழுதி இருந்தேன்...
இன்று... அதே வெட்டியாக இருந்த நேரத்தில்... "பிரம்ம குமாரிகள்" என்ற அமைப்பினரிடம் சென்றிருந்ததைப்பற்றி இன்று கொஞ்சம் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன்.. :)

------------------------------------------------------------------------------------------

ஒரு நாள்... மாலையில்... கிறிக்கெட் விளையாடிட்டு வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தோம்... போற றோட்ல... "பிரம்ம குமாரிகள்" தியான வகுப்பு... என்று விளம்பரம் போட்டிருந்தார்கள். எங்களுக்கும்... நீண்டகாலமாவே.. இந்த தியானத்தை செய்தா மனம் கட்டுப்பாட்டுக்கு வரும் என்றெல்லாம்... டீச்சேர்ஸ் அட்வைஸ் பண்ணுவாங்கள்...
ஆகவே, நாங்கள் அந்த வகுப்புக்கு போகலாம் என்று முடிவு செய்தோம்.அ

அடுத்த நாள்... காலைல 4.50 மணிக்கெல்லாம் கஸ்டப்பட்டு எழும்பி... குளிச்சிட்டு... 5.30 எல்லாம் செட்டாகி அவர்கள் குறிப்பிட்டிருந்த அந்த இடத்துக்கு பொய்ட்டோம்... 6 மணிக்கு தொடங்கும் என்று ஏற்கனவே விளம்பரத்தில பார்த்தம்.
வழமைக்கு மாறாமல்... அவர்களும் 6.15 எல்லாம் எங்களை ஹோலுக்குள் கூட்டிட்டு போய்... தூரத்தில நேர ஒரு லைட் எரிஞ்சு கொண்டிருந்தது... அதைப்பார்த்து தியானமிருக்குமாறு சொன்னார்கள்.
நாங்களும் ஏதோ தியானம் என்கிற பெயர்ல அதை பார்த்திட்டே அமைதியாக இருந்தோம்... ( சுற்றுப்புறம் உண்மையிலேயே அமைதியாக இருந்தது... ஆர்வமாகவும் இருந்தது.)
அந்த லைட்டின் கீழே.. ஒரு படமிருந்தது... ( நாங்கள்... அவர் தியானத்தில் பெரியவர் ஆக்கும்... அதுதான் வச்சிருக்கிறார்கள் என்று நினைத்தோம்... :)

30 நிமிடங்களின் பின்னர்... வெள்ளை புடவையுடன் ஒருவர் வந்தார்... அவர்தான் எங்களுக்கு தியானம் சொல்லித்தருபவராம்... ஒரு ஸெடியூல் தந்தார்கள்... கிழமையில் 3 நாட்கள் தியான வகுப்பு... 20 நிமிடம் தியானம்... 20 நிமிடம்... பஜனை... 20 நிமிடம் கலந்துரையாடலாம்...

இப்படி எழுதினா பதிவு நீண்டுடும்... முக்கியமானதை எழுதுறேன்...

------------------------------------------------------------------------------------------

முதல் நாள் வகுப்பு....
சில படங்களுடன் வந்து அமர்ந்தார்கள்... அதில் ஒரு படத்தில்.. பெரிதாக ஒரு வட்டம்... அதில் 4 பெரிய பிரிவுகளும்... இறுதியில்... ஒரு சின்ன பிரிவும் இருந்தது...
அவர்களின் விளக்கம்...
முதலாவது... தங்க காலமாம்... அதில் இராமர், ஜேசு (மதங்கள் கடந்தே இயங்குவதாக கூறிக்கொள்கிறார்கள்) படங்கள் போடப்பட்டிருந்தது... மிகவும் சிறந்த முறையில் ஆட்சி நடை பெற்று அனைத்து மக்களுமே சந்தோஷமாக இருந்த காலமாம் அது...
இரண்டாவது... வெள்ளி காலமாம்... இதில் முதல் காலத்தில் தவறு விட்டவர்கள் சில துண்பங்களுடனும்... பொதுவாக சந்தோஷ்மாகவும் வாழ்ந்த காலமாம்... துவார பாலகர்களின் படங்கள்...
4 ஆவ்து... இப்போது நாங்கள் இருக்கும் காலமாம்... முழுவதும் துண்பமாம்...
5 வது குறுகியகாலம்... வைரக்காலமாம்... அதறுகு எங்களை தயார்படுத்துவது தான்  இந்த மைப்பின் நோக்கம்/கடமை எல்லாமேயுமாம்....

அந்த ஒவ்வொரு காலமும்... 2500 வருடங்களைக்கொண்டதாம்... கடைசி மட்டும் 100 வருடங்களைக்கொண்ட காலமாம். அப்போ நாங்கள் கேட்டோம்... இராமாயணம்/ மகாபாரதம் நடந்த யுகமெல்லாம் நீண்டகாலத்தை கொண்டிருக்கே... நீங்கள் வெறும்... 2500 என்கிறீர்களே என்று....
அதற்கு அவர்களி பதில் சுப்பரா இருக்கும்...
பதில் இதுதான்...
" நீங்கள் எல்லாம் 63 வது பிறவியின் ஆரம்ம நிலை.. அதுதான் இப்படியான கேள்விகள் கேக்கத்தோன்றுது... "
இது மட்டும்தான் எல்லா கேள்விக்கும் பொதுவான பதில்...

நாங்கள் 63 ம் பிறவி என்பதால மட்டும்தான் இவர்களிடம் வந்தோமாம்... மற்றவர்கள்... 63 அடையலயாம்... பக்குவப்படலயாம்... 63 இல் இங்கு வந்து தூய்மை அடைந்தவர்கள் 64 ஆவது பிறவியில்... வைர காலம் எனும் சந்தோஷங்கள் மட்டுமே நிரம்பிய உலகத்தில் பிறப்போமாமாம்...

நாங்கள்... லவ் பண்ண கூடாதாம்... கல்யாணம் கட்ட கூடாதாம்... அப்போதானாம்... மற்றவர்களிட பாவம் சேராமல்..தூய்மையடைந்து... 64 பிறவியின் பின்னர்... நட்சத்திரமாவமாம்... ( ரொம்ப கேவலமான அறிவியல் தத்துவம் இது.. )

பிச்ச காரர்களுக்கு பிச்சையும் போட கூடாதாம்... போட்ட அவர்களின் பாவம் தொத்திக்குமாம்... ஆனா, அன்பா பழகனும் எல்லோருடனும் என்று இன்னொரு நேரம் அட்வைஸ்....
( இடைல ஒருக்கா... போன பிறவியில பிச்சைக்காரர்களுக்கு உதவாததால தான் இவர்கள் இந்த பிறவியில் பிச்சையா என்ரார்கள்... அப்படி என்றா... நாங்கள் இந்த பிறவியில் உதவாவிட்டால்???? கேக்கல... கேட்டா அதே 63 தான் பதில்... :) :)

ஆர் மேலயும்... பற்றிருக்க கூடாது என்பது... இவர்களின் முக்கியமான கட்டளை....
ஆனால், வகுப்பு முடிந்து சில நெரங்களில்... தம்பி நீங்கள் என்ன படிக்கிறீர்கள்... என்ர பேரப்பிள்ளை அது படிக்கிறாள்... நல்ல கெட்டிக்காறி... இப்படி கனக்க சொல்லுவார்கள்... இது பற்றில்லை போல...

------------------------------------------------------------------------------------------

அது கிடக்கட்டும் ஆர் அந்த படத்திலுள்ளவர் என்றால்... அதற்கான விளக்கம்...
ஏதோ பெயர் சொன்னார்கள் நினைவில்லை... அவர்தான் 64 பிறவிகளையும் வாழ்ந்து முடித்த ஒரே ஒருவராம்... 8 வது அவதாரம் என்றுகூடி சொல்லலாமாம்...

வைர வியாபாரியா இருந்த அவருக்கு... ஒரு நாள் திடீரெண்டு ஒரு ஒளி வந்து அனைத்து பிரபஞ்ச உண்மைகளையும் சொல்லிச்சாம்... ( அவரை ஒளி சூழ்ந்து இருந்ததை அவரது மகள் பார்த்தாவாம்... + பின்ன்ர்.... அவரின் சிஷ்யர்கள் சிலரும் பார்த்தார்களாமாம்... சாட்சி இல்ல என்று நாங்கள் சொல்ல கூடாதே... )
அவருக்கு விளக்கப்பட்ட அந்த உண்மைகள்... எங்களால புருஞ்சுக்கவே முடியாதாம் இப்போது...
அவர் அந்த உண்மைகளில் சிலதை எழுதி வைத்துவிட்டு இறந்து நட்சத்திரமாகிவிட்டாராம்...
அவர் எழுதியதை தான் முரளி என்கிற பேர்ல... தியானத்தின் பின்னர்... வாசிக்கிறார்கள்...

நாங்களும் பொழுதுபோக்காக 3 நாள் போனோம்....
4அம் நாள்... இறுதியாக நாங்கள் சென்ற நாள்...

இந்தியாவிலிருந்து சில பிரம்ம முமாரிகளும்... சகோதரர்களும்... (  ஆண்களை அப்படித்தான் சொல்லுவார்களாம்)...
நாங்கள் ஹோலில் இருந்தோம்... கதைச்சிட்டு இருக்கும் போதே... எங்கள் கொஞ்சப்பேரைக்காட்டி... இவர்கள் நல்ல பிள்ளைகள்... எங்கள் குறூப்பில் சேர்துகலாம் என்றார்கள்.... எங்களுக்கு.... வடிவேலுவுக்கு சொன்ன மாதிரி..."இவன் ரொம்ப நல்லவன்டா" அப்பிடி இருந்த்து.... அன்டையோடு எஸ்கேப்....

------------------------------------------------------------------------------------------

தியானத்தை பலரும் விரும்புவார்கள் என்றகாரணத்தினால்... அதை ஒரு சாட்டாக வைத்து... இப்படி ஒரு தனிப்பட்ட மனிதனை கடவுள் என்று கூறுவதும்... அறிவியலே இல்லாமல்... முட்டால்தனமால லொஜிக்கில்லாத பின்னனிகளைக்கூறி சமுதாயத்தை ஏம்மாற்ற முனைவது கேவலமானது...
( 8 தொடக்கம் 15 வயதான பாடசாலை மாணவர்கள் பலர் உள்ளார்கள் இவர்களது வகுப்பில்... அவர்களை பற்றற்றவர்களாக்கி... சுய சிந்தனையில்லாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.)
இப்படியான... குழுக்களுக்கு... பாட சாலைகளின் முன்னால்... விளம்பரஙள் வைப்பதற்கே அனுமதியளிக்க கூடாது...

------------------------------------------------------------------------------------------

போன அம்மா பகவான் அனுபவத்தில்... ஏன் ஹிந்துக்களை பற்றி எழுதுகிறீர்கள்... மற்றைய மத்ததில் இப்படி தப்பு நடக்குது தானே... என்ற பொருளில் கொமென்ட்ஸ் வந்தது...
மற்றையவர்கள் தப்பு பண்ணுகிறார்கள் என்பதற்காக நாமும் தப்பானவர்களை வழர்க்கனுமா???
எங்களது இந்து மதம் என்ன சொல்கிறது என்பதை புரிந்தாலே எல்லாம் புரியும்... தூதர்கள் தேவையில்லை...
"ஏலியன்ஸ் பேய் கடவுள் விளங்க முடியா பரிமாணங்கள்" என்பதன் பிற்பகுதியில்... இவற்றிற்கான பதில் சொல்ல முனைவேன். :)

------------------------------------------------------------------------------------------

இங்கு குறிப்பிட்ட அனைத்துமே.... நேரடியாக பார்த்தறிந்த உண்மைகள்... தேவைப்படின்... இடம்... பெயர் குறிப்பிட முடியும். மற்ரைய இடங்களில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது.

------------------------------------------------------------------------------------------
அட நானும் 150 பதிவுகள் எழுதிட்டனே... :D
 150 மெம்பேர்ஸும் இருக்காங்க... நன்றி மெம்பேர்ஸ்கும்... வருகைதரும் அனைவருக்குமே... :)

------------------------------------------------------------------------------------------

17 comments:

  1. நல்ல காலம், தப்பிச்சு வந்து பதிவு எழுதறீங்க. அவங்க பேசியே கொன்னு போடுவாங்களே, கொஞ்சம் ஏமாந்தவங்களை அவங்க பிடிக்கு கொண்டு வந்து மூளைச்சலவை செய்து ஆளை நடைப் பிணமாக்கி விடுவார்கள்.

    ReplyDelete
  2. இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. to know your real one and only god ie your uyir please visit www.sammatham.com

    ReplyDelete
  4. நீங்கள் நம்பும் கடவுளைவிட பிரம்மகுமாரிகள் குறைந்தவரில்லை.எல்லாமே பிராடு.ஒரு பிராடு கடவுளை நம்பும் நீங்கள் இதுபோன்று எழுதலாமா?
    கடவுள் என்பதே கற்பனை.

    ReplyDelete
  5. //Dr.Rudhran said...

    இன்னும் எழுதுங்கள்.//

    மருதய்யனின் சொம்பு வந்தாச்சு....!

    ReplyDelete
  6. அங்க டீச்சர்ச்க்கு வேற வேலை இல்லையா? அங்க போங்க இங்க வாங்க , மன அமைதி கிடைக்கும், இதெல்லாம் ஏன்? அவங்க ஏன் இப்படி பிறருக்காக விளம்பரபடுத்துறாங்க? அம்மா பகவானுக்கும் வாத்தியார் சொல்லிதானே போனீங்க?

    ReplyDelete
  7. நன்றி...DrPKandaswamyPhD... :)
    அப்படித்தான் கன பேரை ஆக்கிட்டாங்க... இப்போ.. அவையை விட்டாயாருமில்லை என்கிறமாதிரி இருக்குதுகள் மாட்டினதுகள்.
    --------------------------------------
    நன்றி...Dr.Rudhran... :)
    எழுதுவேன்...
    --------------------------------------
    நன்றி...Anonymous... :)
    நீங்கள் தந்த லிங்... பார்த்தேன்... எத்தனை நாளுக்கு இதே கொள்கை... என்று போய் பார்த்தால்தானே தெரியும்...
    --------------------------------------
    நன்றி...ராவணன்... :)
    எங்களால்... புரிந்துகொள்ள முடியவில்லை... என்பதற்காக அனைத்துமே... பொய்யாகிவிடாது...
    நான் கடவுள் என கூறுவது... என்ன என்பதை... பின்னர் பரிமாணங்கள் பதிவில் எழுதுகிறேன்.

    ////மருதய்யனின் சொம்பு வந்தாச்சு....!////

    அப்படினா என்ன??? தனிப்பட்ட கொவமோ???
    --------------------------------------
    நன்றி...chandru2110... :)
    ஹீ...ஹீ...அப்படி அனுப்பினால்தானே... ஸ்பெஷல் கிலாஸ்கலை கட் பண்ணலாம்.. ( கிளாஸ் இல்லாடியும்... மாதம் மாதம் சரியாக காசுமட்டும் வாங்கிடுவார்கள்... )
    பின்ன... பிரம்ம குமார்களை விட... அம்மா பகவானுக்குதான்... பெரிய விளம்பரமே போடுறாங்க ஸ்கூல்ல... பனரெல்லாம் அடிக்கிறாங்கனா பாருங்களேன்...
    --------------------------------------

    ReplyDelete
  8. நன்றி...சின்னப்பயல்... :)

    ReplyDelete
  9. இவர்கள் பேசுவது அத்தனையுமே பிக்காலித் தனமாகவே இருக்கும். உதாரணத்துக்கு ஒன்று, கடவுளிடம் உள்ள ஆன்மாக்களின் எண்ணிக்கையே 500 கோடியாம். [அதென்னது 500 என்று கேட்கக் கூடாது!] இப்போ உலக மக்கள் தொகை அந்த எண்ணிக்கையை நெருங்கிவிட்டபடியால் யாரும் திருமணம் செய்வதோ, பிள்ளைகுட்டிகள் பெறுவதோ தவறாம். ஏன்? கடவுளிடம் தான் ஆத்மா ஸ்டாக் தீர்ந்து போயிடுமே, அப்புறம் அவர் எங்கே போவார்? [இப்போது மக்கட் தொகை அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது என நினைக்கிறேன்!]. இவர்கள் கணக்குப் படி மனிதர்கள் மட்டும் தான் உயிர் வாழ்கிறார்கள், ஆத்மா அவர்களின் உடலில் குடிகொண்டிருக்கிறது. மற்ற மிருகங்கள் பட்சிகள், பிராணிகளுக்கோ, தாவரங்களுக்கோ பாக்ட்டீரியாக்களுக்கோ உயிரே இல்லையா? விலங்குகள் மட்டுமல்ல, தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன, வலியை உணர்கின்றன, ஒரு செல் உயிரிகளுக்கும் உயிர் உள்ளது என்று விஞ்ஞானம் சொல்கிறது. அவற்றையெல்லாம் கணக்கு பார்த்தல் ஒரு லிட்டர் காற்றிலோ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரிலோ கூட 500 கோடி ஜீவன்கள் இருக்குமே!! இந்த மாதிரி அடிப்படையாகச் சிந்திக்கக் கூடத் தெரியாமல், கல்யாணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணுமாய் அத்தனை பேர் அங்கே போய் உட்கார்ந்து கொண்டு பூம் பூம் மாடுகள் மாதிரி தலையாட்டிக் கொண்டிருக்கிறார்களே என்பது ஆச்சர்யமாக இருக்கும். சற்றேனும் சிந்திக்கவே மாட்டார்களா?

    ReplyDelete
  10. வணக்கம்
    உங்களுடைய அனைத்துக் கருத்துக்ளையும் படித்தேன்

    ஒவ்வொரு விஷயத்தையும் நாம் ஆராய்ந்து பார்க்கமல் எதையும் முடிவு எடுத்து விடக் கூடாது, அங்கு இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை, அங்கு அனைத்தும் உணர வேண்டிய விஷயங்கள், அதை விட்டு அங்கு இருப்பவர்கள் நடைபிணங்கள், ராஜயோயகம் என்னும் கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள், முதலில் தெரிந்து கொள்வைதவிட புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், இது அறிவுரை அல்ல. அக்கரை, மற்றொரு நாள் இன்னும் விரிவாக கூறுகின்றேன்,

    ReplyDelete
  11. இங்கு கற்றுத் தரப்படும் ராஜயோக தியானப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.

    கோபம், வெறுப்பு, மனச்சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு மனஅமைதி பெற உதவுகிறது. தேவையற்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, வெற்றி அடைவதற்கான மனோசக்தியும் தன்னம்பிக்கை யும் கிடைக்கிறது. கூடவே தன்னைத்தானே உணரவும் முடிகிறது. எப்பொழுது தன்னைப் புரிந்துகொள்கிறோமோ அப்பொழுதுதான் மற்றவர்களை- பிரச்சினைகளை- சூழ்நிலை களைச் சரியாகக் கையாள முடியும்.

    ReplyDelete
  12. இந்த கருமாந்த்தம் புடிச்ச குரூப்ல சேர்ந்து என் சொந்தகாரரின் குடும்பம் கேவலமாயிடுச்சு. அவரின் அம்மா செத்ததுக்கு கூட காரியம் எதும் செய்யாம அன்னைக்கு ஆபீஸ் போயிருக்காரு. கேட்ட ஏதோ ஒரு கொள்கையாம் வெங்காயம். இத்தனைக்கும் அவர் பெரிய கம்பெனியில் நல்ல போஸ்ட்டில் உள்ளார்.மனைவியும் நல்லா படிச்சவர்தான். எங்க என்ன நடந்ததுனு தெரியலை. இப்பா ஊர் ஊரா போயி கேன்வாஸ் பண்றாங்க.

    ReplyDelete
  13. ஆன்மா என்பதை எல்லாம் எவ்வளவு திரிக்க முடியுமோ அவ்வளவு திரிச்சாச்சு. சார் நான் கடவுளை நம்புறேன், நானா கடவுளை காட்டுறேன் என்பவனை, உன்னை ஆபத்தில் இருந்து காப்பற்றுகிறேன் என்பவனையும் நம்பல. தயவு செஞ்சு யாரும் நம்மாதிங்க. நாத்திகம் பேசுங்க இல்ல ஆத்திகம் பேசுங்க ஆனா முட்டாள்தனத்தை பேசாதிங்க பரப்பாதிங்க. இவங்க மாதிரி ஆளுங்களோட பலமே பொய்யை உண்மை மாதிரி பேசறதுதான்.ப்ளிஸ் மாட்டிங்காதிங்க.

    ReplyDelete
  14. இந்த பதிவை பற்றி மேலும் ஏதேனும் அப்டேட் உண்டா

    ReplyDelete
  15. வணக்கம் நானும் இதைப்பற்றி படித்து இருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன். உங்களது கருத்தை நான் அமோதிக்கிறேன். ஆனால் நிறைய பேர்கள் மாறி இருக்கிறார்கள்; இதை நாம் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.. இது என் கண் கொண்டு பார்த்த விஷயம்... எல்லாம் நல்லதுக்கு தான்... உன் உணவு எது என்று தெரியாமல் இருக்கும் பொது எல்லாம் உன்னுடையது, ஆனால் தெரிந்தவுடன் மனம் பக்குவப்பட்டு விடும். இது பொது..
    தெரிந்ததை சொல்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்..
    நன்றி வணக்கம்..

    ReplyDelete
  16. இந்த பதிவில் உள்ள ஒவ்வொரு கருத்தும் என்னுடையவையே சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், ஆனால் இப்பொழுது என்னுடைய கருத்துக்கள் இந்த வீடியோவில் இருக்கிறது.

    http://www.youtube.com/watch?v=5DRKR-2CAT8&list=PLw_oR2PvIg_JtLaOMn4mUK5HuPF2ja6jY

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected