Total Pageviews

Saturday, 6 March 2010

ஒருவருக்கொருவர் சளைக்காத சாமியார்கள்(???)...

நானும் சாமியார்களும்...
----------------------------------------------------------------------------------------
ம்... இந்த பதிவு கொஞ்சம் முதலே இட்டு இருக்க வேண்டியது...
நேரப்பிரச்சனை + சோம்பல் ஆல் இன்று இடுகின்றேன்...
----------------------------------------------------------------------------------------

போன எனது பதிவுக்கு... (செவ்வாயும்... மனிதனும்... நாமும்...) ஹிட்ஸ் குறைவா இருக்கே என்ன நடந்து இருக்கும்... என்ற குழப்பத்தோட தமிழிஸ் பக்கம் போய்பார்ப்பம் என்று போனன்...
அங்க பார்த்தா நான் மதிப்பு வச்சிருந்த ஒரே ஒரு துறவி(???) /சாமியார் நாறிக்கொண்டு இருந்தார்...
என்னடா இது இந்த மனுசன் இப்படி செய்து இருக்குமா... என்று உடனே புலொக் ஒன்றை கிளிக் பண்ணி உள்ள போய் வாசிச்சா மனுசன் சும்மா... நான் நம்பாம விட்டுடுவன் என்கிறதுக்காக வீடியோல எல்லாம் போஸ் கொடுத்து கொண்டு இருந்துது... வெறுத்தே போச்சு...

நான் இந்த மனுசனை நம்பினதுக்கு காரணம், ஏதோ ஒரு புத்தகத்தில வாசிச்சன் இவர் அமெரிக்க ஆய்வாளர்களுக்கு முன்னுக்கு தன்ட மைன்ட் ஐ எல்லாம் கட்டு படுத்தி தன்னை நிரூபிச்சவர் என்று.
மற்றது...
இவர்ட கதவைதிற... தொடர்தான்... (கடைசில இவர்ட கதவை யாரோ திறந்துட்டாங்க...)

சரி இவரை பற்றி எல்லாரும் பதிவுல‌ நாறடிச்சுட்டாங்க...
நான் பெருசா நாறடிக்க விரும்பல...

இவரை பற்றி பின்னர் வந்த பதுவுகள் சிலதில்... அது யாரோ ஒரு நடிகை, ரியல் எஸ்டேட் போட்டியாளர், இவரின் வளர்ச்சி பிடிக்காத சிலர் இவரை பழிவாங்க திட்டமிட்டு செய்து இருப்பார்கள் என்றெல்லாம் நியூஸ் போட்டு இருக்காங்க...
எது என்னவோ...
இவர் எல்லாத்தையும் துறந்த துறவி (???), அனைத்தையும் கட்டு படுத்த தெரிந்தவர்  என்று சொன்னவர்
இந்த விசயத்துல தன்னை கட்டு படுத்த முடியாமல் போனது ஏனோ....

இத தான் சொல்லுவாங்க போல... "கேக்கிறவன் கேனபயலா இருந்தா... எலி ஏரோ பிலேன் ஓட்டுமாம்" என்று. இங்க கேனயங்க நாங்க தான். அவர்ட ஃபானுகள்... ஹி...ஹீ...

எதோ ஒரு பால் குடி பாப்பாவுக்கு சூப்பி போத்தலை வாயில வச்ச திணிச்ச மாதிரி... அவருக்கு சப்போர்ட்டா சிலர் கருத்து தெரிவிக்கிறாங்க.

காரணம்... என்ன வென்றால்... இவ்வளவு நாளா ஒரால தூக்கி தலையில வச்சு குரு என்று கும்பிட்டு தெரிஞ்சுட்டு திடீர் என்று அவர் போலி என்றதும் என்ன செய்றது என்று தெரியாம அவரை காப்பாத்த ட்ரை பண்ணுறாங்க...
அதுவும் கொஞ்ச நாளைக்கு தான்... எங்கயாச்சும் இன்னொரு சாமி அவதரிப்பார் பேந்து அவர் தான் குரு... என்று தலைல வச்சு ஆட கிளம்பிடுவாங்க...

சரி..சரி... சாமியாரை திட்டுறன் என்கிற பேர்ல... சும்ம ஆக்களை திட்டி கொண்டு இருக்கன்...
வேற என்னத்த சொல்ல...
கடவுளை நம்பாம இப்படி சாமியார்களையும், நாம் தான் கடவுள் என்று சொல்லிட்டு இருக்கிறவங்களையும் நம்புறது எங்கட பிழைதானே...
இந்து மதம் அன்பை போதிக்குது... ஆனா நாங்க அதையா செய்யுறம்...
இவங்களுக்கு லட்சக்கனக்கில காசு கொடுப்பாங்க... ஆனா, ஒரு ஏழைக்கு உதவவும் மாட்டாங்க... போதாகுறைக்கு அட்வைஸ்வேற பண்ணுவாங்க...
----------------------------------
அத விடுவம்... அடுத்ததா தாங்கள் தான் கடவுள் ( கல்கி அவதாரம் ) என்டு சொல்லிகொண்டு இருக்கிறவங்களை பார்த்தா அவங்களாலயும் அவங்கட மகனை கட்டு படுத்த முடியல...
இவங்கள் எப்படியோ தெரியல... இவங்கட ஆச்சிரமங்கள், சற்சங்கங்கள் நடத்துறவங்க கொஞ்சம் ஓவராவே சில்லறைத்தனமான வேலைகள்ல ஈடு படுறாங்க.

இது இலங்கைல இருக்கக்க நடந்துது...

அட்வான்ஸ் லெவல் எக்ஷ்யாம் எடுத்துட்டு சும்மா தானே இருந்தோம் அப்ப..
ஒரு நாள் நீர்கொழும்பு ஹோல் இல இவங்கட சற்சங்கத்துக்கு போனம். எல்லாம் இந்து முறைப்படி நேர்த்தியா செய்தாங்க. அருமையா இருந்துச்சு. பேச்சாளர்கள் நற்சிந்தனையை செம்மையா சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா போக போக கல்கி அவதாரம் அவங்க தான் என்கிறமாதிரியும்... பூசைகளின் போது குறிப்பிட்ட சிலருக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு இருந்ததும் விளங்கியது.

அடுத்து நடந்தது தான் ஒரு அருமையான விடையம்...

பூசை முடிந்து ஒரு 10 செக்கன்ட்ஸ் இக்குள்ள திடீரெண்டு லைட் எல்லாம் அணைஞ்சுடுச்சு...
அப்ப இந்த பூசைய செய்தவா சொன்னா... " பார்த்தீங்களா அற்புதத்தை...  நாம் பூசையை குழப்பாம பூசை முடிஞ்ச கையோட, கறன்ட் கட் ஆகிட்டுது" என்று... மேலும்... " நாம் செய்த பூசை திருப்தியானதா இருந்தா நாம் 1 நிமிடம் கும்பிட்டாலே கறன்ட் மீழ வந்துடும் " என்றா...
எல்லோரும் கும்பிட்டம் என்ன ஆச்சரியம்... கறன்ட் வந்துட்டுது...

இத நான் என்ற கொழும்பில இருந்த நண்பனுக்கு சொன்னன்... என்ன ஆச்சரியம் அங்கயும் அப்படிதானாம்... கறன்ட் நின்டு பிறகு கும்பிட்ட உடனே வந்துட்டுதாம்...

( பிறகு தான் எங்கட ஃப்ரென்ட்ஸ் சொன்னாங்க கறன்ட் எங்கட ஹோல் ல மட்டும் தான் நின்டுச்சாம் என்று...)
----------------------------------
அடுத்து பிரம்ம குமாரிகள் சங்கம்...

இவங்க எல்லாம் நல்ல ஒழுங்கா தான் செய்தாங்க. ஆனா, இவங்களும் ஒரு ஃப்லாஸ்பாக் ஓட ஒருத்தரை சொல்லி அவர் தான் கல்கி... கடவுள்ட அவதாரம் என்கிறார்கள்.
இவங்க பட விளக்கத்தோட எல்லாத்தையும் விளங்க படுத்துவாங்க...
ஆனா ஒன்று, நாங்க டவுட் கேட்டா அப்செட் ஆகிடுவாங்க... எங்கள ஏதோ தறுதலைகள் என்கிற ரேஞ்சுல பார்ப்பாங்க...
----------------------------------

அடுத்தது சாய் பாபா...
இவரை எனக்கு பெருசா முந்தியே பிடிக்கிறல...
கடவுள் என்கிறவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டு படுத்தப்பட்டவர் அல்ல... இவர்... அப்பிடிதான் எனக்கு பட்டார்...
இது இவர் சம்பந்தமான வீடியோ இது ... உண்மை பொய் தெரியாது...


----------------------------------------------------------------------------------------
ஆனா...
இவங்களை மட்டும் குற்றம் சொல்லி பிரயோசனமில்லை...
எங்கள மாதிரி ஆக்கள் தத்தமது மன்ட்சாட்சிக்கு ஏற்ப நடக்காமல்... இப்படி பட்ட சாமியார்களையும் அவதாரங்களையும்(???) நம்புறது தான் காரணம்.

ஆனால், இவ்வாறான சாமியார்களே வெளி நாட்டு (வேறு இன, மத ) மக்கள் மத்தியில் இந்துக்களின் முகமாக தொழிற்படுவதால் இவர்களின் இந்த கீழ்தரமான செயல்கள் இந்து என்ற மதத்தின் தனித்துவத்தை சீரழிக்கின்றது.

யப்பா... நித்தியானந்தா ட புண்ணியத்துல...
ஒரு மாதிரி எல்லாரையும் திட்டியாச்சு...
இன்னும் எழுத நினைச்சன் பதிவும் நீண்டுடும்... ஓவராவும் போய்டும்...

21 comments:

 1. அட்றா சக்க அட்றா!!சாமிட கூத்தை ரசிப்பதுதான் நல்லது(நக்கீரன் வீடியோ)அதை விடுத்து மதத்துக்காக பொங்கினால் பிறகுவளாகத்துக்கு"சண்டாளன்" "சத்ரு" பட்டம் தான் கிடைக்கும்.ஆனால் சாமியின் சீடாமனிகள் சவுண்டு விடுவார்கள் தான் இதே மாதிரித்தான் கடந்தவருசமும் வன்னிச்சாமிக்காக சவுண்டுகட்டினார்கள் நடந்தது என்ன?அதேபோல தான் இதுவும்.மக்களை அல்லது நம்புபவரை ஏமாத்தினால் தண்டனை நிச்சயம் கிடைக்கும்(கருடபுராணத்திலாவது)."சோ" நீங்கள் சாமியின் ரசனையை வீடியோவில் பார்த்து ரசிப்பது நல்லது.

  ReplyDelete
 2. really gud post
  for correct time

  karurkirukkan.blogspot.com

  ReplyDelete
 3. நமக்கும் அதே பிரச்சனை போட்ட பதிவுக்கு ஹிட்ஸ் இல்ல என்ன எண்டு பார்த்த சாமி எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் (ரஞ்சிதாவ சொல்ல வில்லை )

  ReplyDelete
 4. உண்மை எல்லாத்தையும் கக்கிட்டிங்க போங்க...

  ReplyDelete
 5. கடந்த சில நாட்களாகவே நித்தியானந்தர் விவகாரம் பரப்பரப்பாக பேசப்படுகிறது. இது உண்மைதான் இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

  நாம் எல்லோரும் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

  நித்தியானந்தா இந்த தவறை பல வ்ருடங்களாகவே செய்துவருகிறார், இந்த விவகாரம் ஏன் இவ்வளவு நாள் வராமல் இப்போது தான் வந்த்த்து என்ற உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும்!

  இதற்கு நாம் சில விஷயங்களை பார்க்க வேண்டும், ஆன்மீகவாதிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி அவர்களுடைய வருமானத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் தான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்,
  ஆன்மீகவாதி செய்யும் தப்புகள் எளிதில் வெளிவருதில்லை, பக்தி என்ற பெயரில் பிறரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் (அதே போல் அவருக்கு தேவைபடுபவர்களும்) செய்யும் தப்பு (நன்றாக படியுங்கள்) மிரட்டலால் மட்டுமே வெளி வருவதில்லை. இந்த விசயத்தை சற்று கூர்ந்து கவனித்தால்,

  ஆன்மிகவாதிகள் தங்கள் வருமானத்தை பெற எவ்வித சிரத்தையும் தேவையில்லை, ஆனால் அரசியல்வாதிகள் சிலர் தங்களுடைய சொத்துக்களை விற்று கூட வருகிறார்கள் (பின் இழந்த சொத்தை விட 10 மடங்கு தேற்றிவிடுவது அது வேறு) இப்போது இது என்ன வென்றால் சில வருடங்களுக்கு (ஆன்மீகவாதி) முன் ஒருவர் கிருஷ்ணா நதிக்காக தமிழகத்திற்கு (அரசியல்வாதிகளுக்கு நன்கொடை) கொடுத்தார், அதேபோல் பல ஆன்மீகவாதிகளும் பல் வேறு திட்ட்த்திற்கு என்று கொடுத்து வருகிறார்கள் இந்த நிந்தியானந்தாவிடம் கேட்ட்திற்கு கொடுக்காமலோ அல்லது அலட்சியமாக இருந்த்திற்காகவோ கொடுத்த தண்டனை தான் இந்த விவகாரம். ஏன் என்றால் ஆன்மிகவாதிகள் செய்யும் தவறுகளை அரசியல் வாதிகளுக்கு தெரியாமல் செய்ய முடியாது. அதானால் நித்தியானந்தா பகடையாக போய்விட்டார், அதேபோல் இவ்வளவு குறுகிய காலத்தில் மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. 65 வருடங்கள் கழித்து நம் மக்கள் ஏமாந்து இருபார்கள் – சங்கராச்சிராயார் போல் ஆகவே அதற்கு பயன்படுத்த பட்ட கருவி தான் ரஞ்சிதா அல்லது வேறு ஒருவர். ஒன்று ரஞ்சிதா மூலமாக இந்த காமிராவை அவருடைய இட்த்தில் வைத்து அல்லது ஆசிரம நிர்வாகி மூலமாக.

  இதற்கு அவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும் அவரை நார அடித்து விட்டார்கள், (அவரிடம் வாங்க முடியாத தொகையை இவர்கள் இந்த நிகழ்ச்சியை போட்ட விளம்பரம் மூலமும் திரும்ப திரும்ப அவர்கள் அந்த காட்சியையே போட்டு அந்த கட்சிகள் அவர்கள் மீது திசை திருப்பாமல் இருக்கவும் அதே சமயத்தில் தங்கள் கட்சி டிவியை நல்ல பெயர் எடுக்கவும்!. எப்படியோ இந்த நித்தியானந்தா மாட்டி கொண்டார் வேறு விசயம் ஆனால் இந்த திரைக்கு பின்னால் நடந்த்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியும் இப்படி கேவலமானவற்றில் இருந்து எப்போது விடுபடபோகிறோம்?? ஆன்மீகவாதிகளும் சரி அரசியல் வாதிகளும் சரி மக்களை ஏமாற்றாமல் இருக்க என்ன செய்ய போகிறோம்????????????


  இப்படிக்கு
  உங்களில் ஒருவன்

  ReplyDelete
 6. முருகேசன்6 March 2010 at 14:06

  வளாகம் உங்களது கருத்துக்கள் நன்று. வாழ்த்துக்கள்.
  ஆனால், சொல்லும் விதம் தெளிவில்லாமல் இருக்கின்றது.
  "உங்களில் ஒருவன்" பயணுள்ள பின்னூட்டம்.

  ReplyDelete
 7. சாய் பாபா வினதும் மார்ஃபிங் ஆக இருக்குமோ!!!
  ஹீ!! ஹீ!!!

  ReplyDelete
 8. Super post.
  Really grate!

  ReplyDelete
 9. உங்களில்(எங்களில்)ஒருவன்,வணக்கம்!!தாங்கள் கூறவருவதின் படி பார்த்தால் தப்பை எல்லோருமே செய்வதால் அந்ததப்பு சரியாகிடுமா?இவர் செய்தது தப்பில்லையா,ஆசைப்படாதவன் தான் சாமியாராகமுடியும் அப்படிப்பார்த்தால் அசல் சாமிகளே இல்லை!!!

  ReplyDelete
 10. இந்த விசயமும் சரி எந்தவிசயமானாலும்,மக்கள் களிமண்ணாயிருந்தால் அரசியல்வாதிகளும் சரி சாமியார்களும்சரி தமக்கு வேண்டினபடி எம்மை உருவப்படுத்துவார்கள்,அதனால் நம்ம தான் இப்படியான ஜந்துக்களிடமிருந்து அவதானமாக இருக்கவேணும்.

  ReplyDelete
 11. very good blog.you exposed everything.keep it up.

  ReplyDelete
 12. In fact yesterday I searched about sai baba.
  I got same cheating magic 4m him. thz 4u work my dear.

  Lets together to change the world & our tamil people's life.

  இனியொரு விதி செய்வோம்

  ReplyDelete
 13. இதுக்குகெல்லாம் மின்னுக்கும் பொறத்தையும் பொத்திட் இருபானே ....முஸ்லிமாக இருந்தால்

  நா ரடிப்பானெ வால்பையன்

  ReplyDelete
 14. நன்றி...
  viruman, Boss,A.சிவசங்கர்,உங்களில் ஒருவன், முருகேசன் ,hari, mithraul , Rahini , Sri ,நா ரடிப்பானெ வால்பையன் and anonymous...
  ----------------------------
  நாங்க எங்கள தான் முதல் திருத்தனும்... பேந்து தான் மற்றவங்கள பார்க்கனும்...
  எவன் எத பொத்தினா நமக்கென்ன நாம் ஒழுங்கா இருக்கோமா என்கிறது தான் எங்கட கவலையா இருக்கனும்...

  ReplyDelete
 15. தொடர்ந்து அதிகம் எழுதுங்கள். குறிப்பாக இங்கு பிரபல்யமாக இயங்கும் பிரம்ம குமாரிகள் பற்றிய அதிகம் எழுதுங்கள். முன்னர் எல்லாம் இவர்கள் நடத்தும் தியனத்திற்கு சென்றேன். சில நூல்களையும் இவர்களின் கருத்துக்களை படிக்க நேர்ந்தது. அப்போதுதான் இவர்களின் சுயரூபம் தெரியவந்தது. திருமணபந்தத்தையும், புனிதமான தாம்பத்திய உறவையும் கொச்சைப்படுத்துபவர்கள் இவர்கள்.

  இறுதி நாட்களில் இவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்களாம் எப்படி இருக்கிறது இவர்களின் கொள்கை!

  ReplyDelete
 16. Chandran Pirabu (valaakam)7 March 2010 at 17:18

  mmm... neenka solvathu sarithaan naanum thiyaanavakuppukku ponaan...(he...he...) atha pattiyum eluthanum...
  ana...
  intha post poddathukkee... naan Hindu va endu FB layum Mail panniyum kekkuraanka...
  :( ...

  ReplyDelete
 17. இப்படி கள்ள ஆசாமி வேடம் போடுகிறவர்களை மதித்துக் கடவுளாக போற்றி தம்மிடம் உள்ள பணம் சொத்துக்களையெல்லாம் தானமாகக் கொடுப்பதை விட தம்மைப் பெற்றவர்களை கவனித்து அவ்வப்போது அவர்கள் தேவையறிந்து அவர்களிற்காக செலவு செய்தாலாவது அதுவே பெரிய புண்ணியமாகும்.

  ReplyDelete
 18. Pirabu ( valaakam )9 March 2010 at 09:20

  exactly...

  ReplyDelete
 19. சாமியார் .. என்பவர் .. சாமி-யார் ? கடவுள் யார் என தேடுபவர் ..
  அவரிடம் போய் நாம். கடவுளை கேட்டால் அப்படி காட்டுவார்?
  இங்கு இலங்கையில் .. அம்மா பகவான் ஆட்டம் தாங்கமுடியல்ல...

  சனம் எப்போ திருந்துமோ .....????

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails