Total Pageviews

Friday, 19 March 2010

சுட்ட எண் ஜோதிடம்.01 (பகுதி 09)

-*|...01...|*-
-----------------------------------------------------------------------------------------
இது 1 ம் நம்பர் காரங்களுக்கு...
-----------------------------------------------------------------------------------------
1ம் திகதி...
பிறர் அபிப்பிராயங்களைக் கேட்பதில் பொறுமை இருக்காது. உரத்த குரலில் மறுத்து பேசுவார்கள். மனதில் உள்ளதை அப்படியே வெளியிடுவார்கள். கவர்ச்சியாகவோ... நயமாகவோ பேசத்தெரியாது. தன்னிஷ்டப்படியே எலோரும் நடப்பதை விரும்புவார்கள். மிதமிஞ்சின தன்னம்பிக்கையுடையவர்கள். முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமிருக்கும்.

10ம் திகதி...
நிதானமிருக்கும். சாதுவாக நடந்துகொள்வார்கள். மனதில் உள்ளதை வெளியிடாமல் இருக்க தெரியும். பிரபலம் ஏற்படும். அன்பும் நேசமும் இவர்களது வாழ்க்கையில் அதிகம் காணப்படும்.  பழகுவதற்கு மனோரம்மியமானவர்கள்.

19ம் திகதி...
மிகுந்த மனோசக்தி உடையவர்கள். பார்த்தால் பசு... பாய்ந்தால் புலி... என்று இவர்களை கூறலாம். இவர்கள் எக்காரியங்களைக்கொண்டும் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். புலமை உண்டு.

28ம் திகதி...
பார்வைக்கு அழகாக இருப்பார்கள். சிரித்து பேசுவார்கள். ஸ்திரீத்தன்மைகள் காணப்படும் சூரிய ஆதிக்கம் இவர்களுக்கு குறைவாகவே இருப்பதனால் கண்ணாடி தேவையில்லை. யாரையும் சுலபமாக நம்பி விடுவார்கள். ஏமாந்து போவது சகஜமே.

அதிஷ்ட காலம்...
1,10,19 மிக அதிஷ்டமானவை.
28 அவளவு நல்லதல்ல.
கூட்டெண் 1 வரினும் நன்மையானது.

முக்கிய நாட்கள்...
4,13,22,31 அநேகமாக முக்கிய காரியங்கள் நடைபெறும்.
இந்திகதிகளின் சுபாவமே எதிர் பாராததை தருவது தான். நன்மைகள் தாமாகவே வரும். ஆனால், இவர்களாக முயற்சிகளை தொடங்காமல் இருப்பது நன்று.

துரதிஷ்ட காலம்...
8,17,26 துன்புறுத்த வல்லது.

அதிஷ்ட நிறம்...
மஞ்சள், வெளிர் சிவப்பு, வெளிர் நீலம்

துரதிஷ்ட நிறம்...
கறுப்பு, மண்ணிறம்

உலோகம்...
தங்கம்

இரத்தினம்...
மாணிக்கம் மிகச்சிறப்பானது.
டொபாஸ் சிறுவர்களுக்கு நன்மையானது.
கனகபுஸ்பராகமும் நன்மை.
-----------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)
-----------------------------------------------------------------------------------------
இத்துடன் எண் ஜோதிடம் முடிகிறது... அடுத்ததாக பெயர் எண்களை பற்றி பார்க்கலாம்....
-----------------------------------------------------------------------------------------

2 comments:

  1. இருக்கிறேன் பார்த்து கிட்டே எப்ப எஸ் பற்றி எழுதுவிங்க

    ReplyDelete
  2. நன்றி...A.சிவசங்கர்...
    அவ்... திடீரென்டு இப்படி கேட்டா...
    விரைவில் எழுதுவேன்... :)
    கனக்க பதிவுகளை தொடராக எழுதுவதால் கொஞ்சம் லேட் ஆகும். :(

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected