Total Pageviews

Saturday, 27 March 2010

ஓஷோ ராஜனீஷ் (ஒருபக்க வரலாறு)

ஓஷோ ராஜனீஷ்
----------------------------------------------------------------------------------
1981-ம் ஆண்டு. மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற ரஜனீஷ் , சீடர்களின் அன்புக்கு இணங்க ஆசிரமம் தொடங்கி அங்கேயே தங்கினார். ரஜனீஷின்
புரட்சிக் கருத்துகளால் விரைவிலேயே ஆசிரமம் புகழடைந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். ‘ரஜனீஷ்புரம்’ எனப் பெயரிடப்பட்ட ஆசிரமத்தில் வீடுகள், தியான மண்டபங்கள்,
சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் தொடங்கப்பட்டு, குட்டியாக ஒரு விமான நிலையமும் ஏற்படுத்தப்பட்டது. பரிசுகளாக வந்த 93 ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் தினம் ஒன்றைப் பயன்படுத்திய ரஜனீஷ் , ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தார். (நம்ம சாமியாருங்க எல்லாருமே இப்படிதான் போல... ஹீ...ஹீ... அமெரிக்க சனமும் எங்கள மாதிரிதான்... என்டுறதுல ஒரு சந்தோஷம்... :D)

தங்களின் சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதிவைத்து ரஜனீஷிடம் தஞ்ச
மடையும் அமெரிக்கர்கள் அதிகரிக்கவே அதிர்ச்சியடைந்த அமெரிக்க அரசு,
ஆசிரமத்தை முடக்கும் வேலைகளில் இறங்கியது. ரஜனீஷின் ஆசிரமத்தில் 1984-ம் வருடம் ஆயிரக்கணக்கான சீடர்கள் தற்கொலைக்கு முயன்றதாக
பொய்க்குற்றச்சாட்டைப் பரப்பியது. அதே நேரம், ஆசிரம நிர்வாகி ஷீலா பெரும் சொத்துக்களுடன் தலைமறைவாகிவிடவே, ஆசிரமத்துக்குள் நுழைந்தது போலீஸ் ‘அமெரிக்க அரசு சதிவலை பின்னுகிறது, தப்பிச் செல்லுங்கள்’ என்று சீடர்கள் ரஜினீசிடம் கெஞ்சினார்கள். அத்தனை நாளும் சீடர்களுக்கு போதித்த ‘பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்... எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்’ என்ற மந்திரத்தையே உரக்கச் சொன்னார் ரஜனீஷ்.

ஆசிரமத்தில் ஊழலும், விசாவில் மோசடியும் இருப்பதாக ரஜனீஷை கைது செய்துவலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு.
(இது தான் அமெரிக்க இப்படி இருக்குது... நாம...)

1931-ம் ஆண்டு மத்தியப் பிரேதசத்தில் குச்வாடா என்ற சிறிய கிராமத்தில்
ஜெயின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ரஜனீஷ் சந்திரேமாகன். ‘ஏழாவது
வயதில் மரணமைடந்துவிடுவார்’ என ஜோசியர் கணிக்கவே, பயந்துபோன
பெற்றோர், அரை பாட்டி வீட்டுக்கு அனுப்பினர். ஏழு வயதுவரை சுதந்திரப்
பறவையாகத் திரிந்தவருக்கு இனி மரணம் வராது என ஜோதிடர்
சொன்னபிறகே படிக்கவைத்தனர்.

1953-ம் வருடம் தத்துவம் படித்தபோது, தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்தை
உணர்ந்தார் ரஜனீஷ். பிறகு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்ததும், சிறு கூட்டத்தினரிடம் பேசத் தொடங்கினார். அந்த வட்டம் விரிவடையவே, வேலையை விடுத்து, ‘பகவான் ரஜனீஷ் ’ ஆக மாறி மும்பையிலும் பின்னர் பூனே விலும் ஆசிரமம் அமைத்துப் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கினார். எல்லா மதமும் செக்ஸுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதித்தபோது, ‘செக்ஸை ஒரு பிரச்னையாக நினைத்து விலகி ஓடாதீர்கள். அதனை முழுமையாக அனுபவித்து வெற்றிகொள்ளுங்கள்’ என்று ரஜனீஷ் சொன்னது இந்தியாவெங்கும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. ‘செக்ஸ் சாமியார்’ என்ற பெயர் சூட்டி, கடுமையாக‌ விமர்சித்தனர்.
(ம்... அதே தனித்துவம்... இப்போது கூட இதே டெக்னிக்தான்...)

இந் நேரம் கடுமையான முதுகுவலியும் சர்க்கரை நோயும் ஏற்படவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், அங்கே மக்களது ஆதரவுடன்
ஆன்மிகப் புரட்சியை உண்டாக்கவே மறுபடியும் நாடு கடத்தப்பட்டார்.
செக்ஸ் புரட்சியாளர், போதை அடிமை என அமெரிக்கா திட்டமிட்டு வதந்தி
பரப்பியிருந்ததால், சுற்றுலா விசாவில் ஜேர்மனி போன ரஜனீஷ் , துப்பாக்கி
முனையில் நாடு கடத்தப்பட்டார். முதலில் குடியுரிமை வழங்கிய உருகுவே
அரசாங்கம் அமெரிக்காவின் கடன் மற்றும் பொருளாதாரத் தடை மிரட்டலால்
ரஜனீஷிக்கு வழங்கிய குடியுரிமையைத் திரும்பப் பெற்றது.
(ஆ..ஊன்டா.. பொருளாரதடையை கைல எடுத்துடுவாங்க... ஆனா... சீனாட்ட... :P )

அதனால், 1987-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி பூனே ஆசிரமத்தில் பணியைத் தொடர்ந்தார். ரஜனீஷ் என்ற பெயரை, ‘ஓஷோ’ என்று மாற்றி, ‘வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடினால் அது இன்னும் பெரிதாகும். அதனால், எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்’ என்று தினமும் பிரசங்கமும் தியானமும் நடத்தி மக்களிடம் நம்பிக்கை விதைத்தார்.

1990-ம் ஆண்டு நாடித்துடிப்பு குறையத் தொடங்கிய நேரத்தில், ‘மரணத்தில் இருந்து என்னை தப்பவைக்க நினைக்காதீர்கள், நான் அதனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’ என்று மருத்துவ சிகிச்சயை மறுத்து மரணமடைந்தார்.
(சென்டிமென்ட் :'( இந்த டெக்னிக்கை நம்மட ஆக்கள் பின்பற்றுவாங்களா??? :\ )


----------------------------------------------------------------------------------

8 comments:

 1. உங்கள் ப்ளாக் அனைத்தும் படிப்பதர்கு மிகவும் இண்டரெஸ்டிங் ஆகவும் கருத்துள்ளதாகவும் உள்ளது, வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 2. நன்றி...Shyam... & ♠புதுவை சிவா♠...

  தொடர்ந்து எழுதுவன்.
  15-18 ல 8-10 ஆவது நல்லதா எழுத ட்ரை பண்ணுவன்.

  ReplyDelete
 3. இவருடைய வாக்கியங்களில்
  என்னை மிகவும் கவர்ந்தவை..
  Am not What I Am...

  ReplyDelete
 4. Osho is a real enlightened master. He is not like others. Please write something good about him.

  ReplyDelete
 5. ஓஷொ இந்த யுகதில் ஞானம் அடைந்த ஞானி.அவரை பற்றி தப்பான பரப்புரைகலை பரப்பி நம் நாடு sex சாமியார் என்றது.சிற்றின்பதிலிருந்து கடந்து பேரின்பதை அடைவது எப்படி என்றுதான்
  அவர் கூரி வந்தார்.சிற்றின்பத்தி பற்றி முழுமையாக தெரிந்து அதில் ஒன்றும் இல்லை என்ற உனர்ந்த பின் தான் பேரின்பத்தை அடைய முடியும்,உன்மை யார் என்பது நிகல் காலதில் தெரியாது

  ReplyDelete
 6. READ IT TOO...
  http://www.huffingtonpost.com/2011/07/13/meditation-orgasm_n_896692.html

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails