Total Pageviews

Thursday, 29 July 2010

அதது அவனவன்ட கைல கிடைக்கனும்... :P (படங்கள்)

-------------------------------------------------------------------------------------

என்ர கைல இதுகள் கிடைச்சிருந்தா... இப்ப ஏப்பம் விட்டுட்டு குப்பற படுத்திருப்பேன்...
நல்லா செய்திருக்காங்க... (சிலதில கருத்துக்கூடி சொல்லி இருக்கு... :) )
பிடிச்சா... ரசித்தா ஒரு லைக் கொடுங்க... :)
( இதுதான் வோட்டு பிச்சை கேக்கிற மெதேட்... :P )


-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------

Tuesday, 27 July 2010

‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்!’

ரவந்திரநாத் தாகூர்
--------------------------------------------------------------------------------------
ரவந்திரநாத் தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு, 1913- ம் ஆண்டு உலகின் மிக உயரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொல்கத்தாவுக்கு அருகே சாந்திநிகேதன் கல்விக்கூடத்தில் தங்கியிருந்த கவிஞரைப் பாராட்டுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தார்கள். ஆயிரமாயிரம் பேர் பாராட்டினாலும்
மற்றொருபுறம் வயிறு எரியும் இலக்கியவாதிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.

‘‘ஆங்கிலத்தில் ‘கீதாஞ்சலி’ மொழிபெயர்க்கப்படாமல் இருந்தால், பரிசு கிடைத்திருக்குமா? இந்த விருது ஆங்கிலேயர்கள் வாங்கிக் கொடுத்ததா?’’ என்பன போன்ற விமர்சனங்கள் எழுந்தன. உடனே ஆவேசமடைந்த தாகூர், ‘‘நம் நாட்டில் என் கவிதை போற்றப்படவில்லை. அதனால், உலக அளவில் வெற்றிபெற விரும்பியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். வெற்றிக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும், பலர் அதனை அறிவதே இல்லை. ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்’ ’’ என்று
பதில் கொடுத்தார்.

கொல்கத்தாவில், 1861-ம் வருடம், ஒரு பணக்காரக் குடும்பத்தில் 14-வது கடைசி குழந்தையாகப் பிறந்தார் ரவந்திரநாத் தாகூர். வீட்டிலேயே அறிவியல், கணிதம்,வரலாறு, பூகோளம், வடமொழி, வங்காளம், ஆங்கிலம், இசை, ஓவியம், உடற்பயிற்சி என எல்லா கலைகளையும் கற்கத் தொடங்கி, ஏழாவது வயதிலேயே கவிதை புனையவும் தொடங்கினார். 1877-ம் ஆண்டு வெளியான தாகூரின் முதல் நாடகத் தொகுதியில், வங்காள மொழியின் முதல் சிறுகதையும் இடம் பெற்றது. வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்ற தாகூர், அந்தப் படிப்பு பிடிக்காமல் இரண்டே வருடத்தில் இந்தியா திரும்பினார். 22-வது வயதில் திருமணம் முடிந்ததும் குடும்ப நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.

1901-ம் வருடம், சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவி, அங்கேயே
தங்கினார். அங்கு மாணவர்களுக்குத் தாய்மொழியில் படிப்பு கற்பிக்கப்பட்டதுடன் தோட்டவேலை, உடற்பயிற்சி, சமூகசேவை, விளையாட்டு என அத்தனை கலைகளும் கற்பிக்கப்பட்டன.

சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக இறங்காமல் இருந்த தாகூர், ஆங்கிலேயர்கள் வங்கத்தினை இரண்டாகப் பிரிக்க முயன்றபோது, தலைமையேற்று போராட்டத்தில் குதித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் மிதவாதம், தீவிரவாதம் எனப் பிரிவினைகள் தோன்றியது மட்டுமின்றி முஸ்லிம், இந்துக்கள் பிரச்னகளும்  தலைதூக்கவே நேரடி அரசியலில் இருந்து வெளியேறினார். பல்வேறு நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்ட நேரத்தில்தான், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

‘கீதாஞ்சலி’க்கு நோபல் பரிசு கிடைத்ததும், ஆங்கில அரசும் ‘சர்’ பட்டம்
கொடுத்துக் கெள‌ரவித்தது. ஆனால், 1919-ம் ஆண்டில் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அதிர்ச்சியடைந்த தாகூர், உடனே ஆங்கில அரசின் பட்டத்தைத் தூக்கி எறிந்து, தான் ஆங்கிலேயரின் விசுவாசி அல்ல என்பதை வெளிப்படுத்தினார். காந்தியடிகளுடன் நட்போடு இருந்தாலும், கைராட்டையின் மூலம் சுதந்திரம் பெறுவதை விரும்பாமல், ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்!’ என்று உரக்கச் சொன்னார்.

உலகிலேயே மிகச் சிறந்த கல்விக்கூடத்தினை உருவாக்கவேண்டும் என்ற
தாகூரின் ஆசை 60-வது வயதில் நிறைவேறியது. ‘விசுவபாரதி’ என்ற உலகப் பல்கைலக்கழகத்தை சாந்திநிகேதனத்தில் உருவாக்கி, நோபல் பரிசுடன் கிடைத்த பணம்(???), தனது சொத்துகள் (???) மற்றும் புத்தக உரிமைகைளயும் இந்தப் பல்கைலக் கழகத்துக்கே எழுதி வைத்தார்.

ஒரு கவிதையில், ‘மரணம் வந்து கதவைத் தட்டும் நாளில் நீ என்ன செய்வாய்?’ என்று கேள்வி கேட்டு, ‘வந்த என் விருந்தாளியின் முன்னே தட்டு நிறைய என் வாழ்க்கையைப் பரிமாறுவேன். வெறும் கையுடன் திரும்பவிடவே மாட்டேன்’
என்று பதிலும் சொல்லியிருப்பார் தாகூர். அப்படியே அவரது 80-வது வயதில் ஒரு கவிதையைச் சொல்லி முடித்து, கண் மூடிய ஒரு மணி நேரத்தில் அமைதியாக மரணத்தைத் தழுவினார்.
--------------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
--------------------------------------------------------------------------------------

Monday, 26 July 2010

றொம்ப நல்லவன்டா இவன்... ( நகைக்க‌ மட்டும்...)

--------------------------------------------------------------------------------------
நான் கேள்விப்பட்ட கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... சும்மா (ஜோசித்து) சிரிக்கத்தான்...
--------------------------------------------------------------------------------------
அது கலியுகத்தின் ஆரம்ப பகுதி...

கர்ணனும், துரியோதனனின் மனைவியும் பகடை(?) விளையாடிட்டு இருந்தாங்க... அப்போது அலுவலாக வெளியே சென்றிருந்த துரியோதனன் அரண்மனைக்குள் நுழைகின்றான்.
கணவனை கண்டதும் மரியாதை நிமிர்த்தம் எழுகின்றால் மனைவி...
துரியோதனன் வந்ததை கவனிக்காத கர்ணன், துரியோதனனின் மனைவியின் இடையை பிடித்து அமர்ந்து விளையாடும் படி சொல்லும் பொது... அவள் இடுப்பில் கட்டி இருந்த முத்துமாலை உதிர்கிறது.
உடனே... முத்து மாலைகளை பொறுக்கிய படி, துரியோதனன் கேட்கிறான்... அவற்றை மீண்டும் நூலில் கோர்க்கவா... வைக்கவா என்று...

இது அவர்களின் நட்பின் தூய்மையை கூறுவதற்காக கூறப்பட்ட கதை (?) ...

2010...

இதை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருந்த சுஜி இனி தானும் இப்படி தூய்மையாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்துக்கொண்டான்...

மறு நாள்...

காலை வழமை மாதிரி வேலைக்கு புறப்பட்டு போனான் சுஜி...
அன்று அலுவலர்களின் பணிபகிஷ்கரிப்பு என்பதால்... 10 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டான்...

வீட்டுக்கு வந்து மனைவியை ஹோலிலோ, கிச்சனிலோ கானாததால்... நேராக றூமுக்குள் சென்றான்...
அங்கே...
மனைவி உடைகலைந்த‌ படி இருந்தால்... என்ன நடந்தது என்று விசாரித்தான் சுஜி... மனைவி கடுமையான வயிற்று வலி எனக்கூறிக்கொண்டிருக்கும் போதே... அலுமாரிக்குள் சத்தம் கேட்டது...
உடனே... அலுமாரியை திறந்து பார்த்தான் சுஜி...
அங்கு அவன‌து நண்பன் ஹரி ஒழித்திருந்தான்...

சட்டென்று சுவந்து கோரமாக மாறியது சுஜியின் முகம்... அடக்க முடியாத ஆத்திரத்துடன் ஹரியை பார்த்து கேட்டான்...
" நீ எல்லாம் ஒரு நண்பனா??? உனக்கு நான் எத்தனை உதவி செய்திருப்பேன்... என்ற மனைவி வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள்... நீ என்னென்றா... இங்கு வந்து ஒழித்து பிடித்து விளையாடிட்டு இருக்கிறாய்...???? "
--------------------------------------------------------------------------------------

Sunday, 25 July 2010

புத்தக மடிப்பு - ஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல் 02...

FLIP PAGE
--------------------------------------------------------------------------------------
ஒரு படத்தை சுறுட்டிவிட்ட/ மடித்துவிட்ட பேப்பர் போன்று... ஃபோட்டோ ஷொப்பில் எவ்வாறு இலகுவாக செய்வது என்பதை இதில் எழுதிவுள்ளேன்...

--------------------------------------------------------------------------------------


முதலில் ஃபோட்டோ ஷொப்பினுள் ஒரு படத்தை கொண்டுவரவும்...

அடுத்து...  அந்த ஃபோட்டோவை அண்லொக் பண்ணவும்...


அடுத்து நீங்கள் ஃபோட்டோஷொப்பினுள் கொண்டுவந்த படத்திற்கு கீழாக ஒரு லேயரைப்போட்டு நிறத்தைக்கொடுக்கவும்.. . ( நான் வெள்ளை கொடுத்திருக்கிறேன்...)


இப்போதுதான் முக்கியமான வேலை செய்ய இருக்கு...
படத்தில் நீங்கள் சுறுட்ட/மடிக்க நினைக்கும் இடத்தில் Rectangular Marquee Tool மூலமாக அல்லது M ஐ கிளிக் பண்ணி ஒரு சதுரம் வரையவும்.

இப்போது நீங்கள் வரைந்த சதுரத்தினுள்... கலர்(மேலே ஒருகலர்... கீளே ஒருகலர்) கொடுக்க வேண்டும்...
இதற்கு... Gradient Tool (G) ஐ பயன்படுத்தவும்...
பின்னர் Ctrl + D ஐ கிளிக் பண்ணுவதன் மூலமாக Deselect பண்ணவும்.


அடுத்து...
Edit -> Transform ->Warp போய் கிளிக் பண்ணவும்...
இனி நீங்கள் உங்களுக்குத்தேவையான மாதிரி வடிவத்தை அமைத்துக்கொள்ளவும்.

இறுதியில் உங்களுக்குத்தேவையான மாதிரி மேலதிக டிஸைன்களைப்போட்டுக்கொள்ளுங்கள்...


--------------------------------------------------------------------------------------Thursday, 22 July 2010

அப்பாடி... 800!!

தன்னம்பிக்கை சிங்கம் முரளிதரன்
--------------------------------------------------------------------------------------
நேற்று நடை பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அந்த ரெஸ்ட் மச்சை லைவாக‌ பார்க்கக்கிடைக்கவில்லை. ஆனால், கிறிக்கின்ஃபோவில் லைவ் ஸ்கோர் பார்த்திட்டிருந்தேன்...

--------------------------------------------------------------------------------------

கிறிக்கெட்டின் (துடுப்பாட்ட) பிதாமகனாக கருதப்படும் பிறெட்மன்... இறுதிப்போட்டியில் பூச்சியத்துடன் (0) ஆட்டமிழந்ததன் மூலம்... தனது சராசரி 100 ஆக இருக்க வேண்டுமென்ற அவரது ஆசையும், அவரது ரசிகர்களின் ஆசையும் நிராசையானது...

அதே போன்ற நிலை பந்துவீச்சு பிதாமகனாக கருதக்கூடிய முரலிதரனுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணம் மனதில் தோன்றியது. காரணம், மறு புறம் மலிங்கவின் ஆக்ரோஷமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறியதும்... ஆனால்... முரளிக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடியதும் அப்படி ஒரு பயத்தை தோற்றுவித்தது...
மறுபுறம்... இருக்கும் ஒரு விக்கெட்டை முரளி எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை...
மற்ற பந்து வீச்சாளர்கள் தப்பித்தவறி எடுத்துவிட்டால்... முரளியினதும், எங்கள் போன்ற ரசிகர்களதும் ஆசை... கனவாகவே போய்விடுமே... என்ற ஏக்கம்... நல்லவேளையாக அப்படி நடைபெறவில்லை. சாதனை நாயகன் அந்த 1 (ஓஜா) விக்கட்டையும் எடுத்து தான் தன்னம்பிக்கை சிங்கம் என்பதை நிரூபித்துவிட்டார்...

ஆம், பொதுவாக வீரர்கள் சாதனை நிகழ்த்திய பின்னரே... தமது ஓய்வறிவிப்பை வெளியிடுவார்கள்... ஆனால், முரளி இன்னமும் 8 விக்கட்கள் தேவைப்படும் நேரத்தில் இது தனது இறுதிப்போட்டி... இப்போட்டியுடன் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவேன் என அறிவித்துவிட்டே இந்த அருமையான சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளார்.
அதுவும் ஒரு பலம் பொருந்திய அணிக்கெதிராகவே முரளி இந்த துணிகரமான சவாலை நிகழ்த்தியுள்ளார்... அவுஸ்த்திரேலியா, அவுஸ்ரேலியாவில் வைத்து முரலி சாதனை நிகழ்த்துவதை தமது திறமையான தடுப்பாட்டம் மூலம் நிறுத்தியது போன்று... இந்தியாவும் செய்துவிடுமோ என்ற பயம் இருந்தது... முக்கியமாக இறுதிக்கட்டத்தில்... ஆனால், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடனும்... அணியினரின் ஒத்துளைப்புடனும் அனைவரது கனவையும் நிறைவேற்றி சாதனை நாயகனாகவே... தனது இறுதிப்போட்டியை நிறைவு செய்துள்ளார்.
இந்த அருமையான தருனத்தில் அவரது குடும்பமும் நேரடியாக பங்கேற்றிருந்தமையை விட அவருக்கு வேறொன்றும் தேவையில்லை.

--------------------------------------------------------------------------------------

ஏப்ரல் மாதம் 17ம் திகதி 1972 ம் ஆண்டு கண்டியில்... முத்தையா, லக்ஷிமி தம்பதிவினருக்கு பிறந்தார்...
கண்டி புனித அந்தோனியர் கல்லூரியில் கல்விகற்கும் போது... பாடசாலை மட்ட கிறிக்கெட்டுக்குத்தலைமைதாங்கினார். ஆரம்பத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளி... அவரது, பயிற்றுவிப்பாளரின் ஆலோசனையின் பேரிலேயே சுழல்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

திறமையினால்...  வேகமாக முன்னேறிய முரளிதரன்...
1992ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2வது டெஸ்ட்போட்டியில் இணைக்கப்படார்...
முதல் போட்டியுல்... மக்தெர்மொட்டை ஆட்டமிளக்க செய்ததன் மூலமாக தனது விக்கெட்கணக்கை ஆரம்பித்தார். ( இந்த போட்டியில் மொத்தமாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்)

பின்னைய காலங்களில்... விக்கெட் விழுத்தும் வேகம் அதிகரித்த போது...
நடுவர்களால்... பந்துவீச்சு முறைதொடர்பாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன... அவை அனைத்தையும்... தனது பந்துவீச்சில் குறையில்லை என நவீன ஆயுவுகளின் மூலம் நிரூபித்தார்...

பொதுவாக  ஓஃப் ஸ்பின்னேர்ஸ் தமது விரல்களையே பந்தை சுழற்றுவதற்கு பயன்படுத்தி வந்த வேளையில்...
மணிக்கட்டின்மூலமாக... பந்தை சுழற்றும் முறையை அறிமுகம் செய்தார்.
அதே போன்று, தூஷ்ரா பந்துவீச்சையும் திறமையாக கையாண்ட முதல் விரர் இவர்தான். ( அறிமுகப்படுத்தியது பாக்கிஸ்தான் வீரர்...)

--------------------------------------------------------------------------------------

முரளிதரனின்...
பந்துவீச்சு சுருக்கம்...

முரளிதரனின் இந்த விக்கெட் சாதனைகளை இனி எவருமே முறியடிக்க முடியாது... ( குறிப்பாக டெஸ்டில்...)
முரளிதரன் அளவுக்கு, அனைத்து வித ஆடுகளங்களிலும் விக்கெட்டுக்கள் வீழ்த்தும் திறமையான பந்துவீச்சாளர்கள் தற்போது மிகக்குறைவு...
அத்தோடு, இருபது 20 போட்டிகளிளின் வழர்ச்சி... மற்றும் டெஸ்போட்டிகளின் எண்ணிக்கை குறைவடைந்தமை போன்ற காரணங்களையும் குறிப்பிடலாம்.

துடுப்பாட்ட சுருக்கம்...

துடுப்பாட பயப்படும் முரளி அவ்வப்போது... பந்து வீச்சாளர்களை பயங்கொள்ளச்செய்துள்ளார்.
(இந்த பயத்துக்கு காரணம், சிறு வயதில் பந்து பட்டு தனது முன் பல்லு சேதமடைந்ததுதான் காரணம், என்று நகைச்சுவையாக பதில் கூறியிருந்தார்... )

முக்கியமாக... பங்களாதேஸில் நடந்த போட்டியில்... அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு வெற்றி தேடித்தந்தமையை குறிப்பிடலாம்.
இந்தியாவுக்கெதிராக பெற்ப்பட்ட 67 ஓட்டங்களின் போது... இவருடன் ஆடிய ஃபெர்னான்டோ மறு முனையில் 1 ஓட்டத்தை மட்டுமே பெற்றிருந்ததும் குறிப்படத்தக்கது.

சில சாதனைகள்...

--------------------------------------------------------------------------------------

இனி...

முரளிதரனின் ஓய்வு உண்மையிலேயே... இலங்கை டெஸ்ட் கிறிக்கெட்டிற்கு பாரிய இழப்புத்தான்...
காரணம், இது வரை பொதுவாக டெஸ்ட்போட்டிகளில் முரளிதரனே 40% விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். அவரின் இந்த விலகலுக்கு பின்னர்... இலங்கையனியின் டெஸ்ட்கிறிக்கெட்டுக்கு பாரிய சவாலாக இருக்கும் என்பது உண்மை.
எதிர்வரும் போட்டிகளில் தான் நாம் பார்க்க முடியும்... இலங்கை முரளிதரன் இல்லாமல் எப்படி போட்டிகளை எதிர்கொள்கிறது என்பதை.

--------------------------------------------------------------------------------------

இந்த பதிவை எழுதும் போது... இனி முரளிதரனின் இவ்வாறான தருனங்களை காண முடியாது என நினைக்கும் போதே... ஒரு வித நெருடல் மனதில் எழுகிறது...

--------------------------------------------------------------------------------------

Wednesday, 21 July 2010

ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (மாற்றுலகம்(???)... 07)

மாற்றுலகம்
--------------------------------------------------------------------------------------
இது இந்த தொடரின் 7 ஆவது பதிவு... உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்...

முன்னைய பதிவு... (06)

போன பதிவில் கூறியபடி.. மாற்று உலகம் எனும் கோட்பாட்டை பார்க்க முதல்... முன்னர் குறிப்பிட மறந்த சில சம்பவங்களையும்... ஏற்கனவே குறிப்பிட்டதன் படி... பிரமிட்களில் பாவனைக்குட்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பம் பற்றியும் எழுதிடுறேன்...
--------------------------------------------------------------------------------------
இது நடந்தது 2ம் உலக யுத்த காலகட்டத்தில்...

இரண்டாம் உலக யுத்தன் மும்முரமாக நடந்துகொண்டிருந்த‌ போது...
நேசப்படைகளை சேர்ந்த விமானிகள், பல நேரங்களில் தமது விமானத்தை ஒரு ஒளிமிகுந்த பொருள் பிந்தொடர்ந்ததை அவதானித்தார்கள்... ஆனால், அவர்கள் அது தொடர்பாக தமது மேலதிகார்களிடம் பதிவு செய்த போது, அது ஜேர்மனிய படைகளின் நவீன விமானமாக இருக்கலாம் என்று பதிவு செய்துகொண்டார்கள்.
சில ஆண்டுகளின் பின்னர் போர் நிறைவுக்கு வந்தது...
அப்போதுதான் தெரிந்தது... ஜேர்மனிய விமானிகளும் அதே போன்ற ஒளிமிகுந்த பொருட்களை கண்டுள்ளார்கள், அவர்களின் பதிவுகளில்... அது அமெரிக்காவின் விமானமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது...

விமானத்தளபதிகளான இவர்கள் பொய்யான தகவல்களை பதிவு செய்திருக்கத்தேவையில்லை... ஆக‌வே, அவர்கள் ஒரு ஒளிரும் பொருளைக்கண்டுள்ளார்கள்.
பொதுவாக, இந்த ஏலியன்ஸ்கள் வருகைதருவதாக கருதப்படும் வாகனங்களை (பறக்கும் தட்டு) குறிப்பிடும் போது... இதே போன்று ஒளிரும் தன்மை பற்றியும் வேகம் பற்றியும் அதிகமாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் கண்டது பறக்கும் தட்டுக்கள்தான் என முடிவு செய்யலாம்.

ஆனால், ஏன் அவர்கள் விமானங்களைப்பின் தொடர்ந்தார்கள் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை.
இரு சாராருக்குமிடையே யுத்த வெறியைத்தூண்டி விடுவதற்காகவா??? அல்லது... மாறாக இரு தரப்பினருக்கும் பயத்தை உண்டுபண்ணி யுத்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவா??? ( இந்த இடத்தில், நான் இரண்டாவதை நம்புகின்றேன்... காரணம் இருக்கிறது... அதை பிறகு தெளிவாக சொல்கிறேன்...)

மேலும், பறக்கும் தட்டின் சிதைந்த பகுதிகள் எனக்கூறி சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பூமியில் தற்சமையம் பாவனையிருக்கும் உலோகங்களுடன் ஒத்துப்போவதில்லையாம். அவர்களின் விமானங்களின் வடிவங்கள் கூட எம்மோடு ஒத்துப்போவதில்லை...
ஆனால், போன வருடம் விமானங்களின் வடிவங்களை மாற்றியமைப்பது சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டு போட்டிகள் கூட நடாத்தப்பட்டன. ( இடத்தையும், எரி பொருளையும் சிக்கனப்படுத்துவதும்... வேகத்தை அதிகரிப்பதுமே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது...) அதில் இந்திய மாணவியாள் வடிவமைக்கப்பட்ட விமான மாதிரிக்கு பரிசு கிடைத்திருந்தது.
அவர் வடிவமைத்த மாதிரியில்... விமானங்களுக்கே உரித்தான செட்டைகள் இருக்கவில்லை... மேலும்... அது ஏறத்தால ஒரு கூம்பு போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது...

இப்போதே இவ்வாறான அமைப்புக்கள் தயாரிக்க முடியும் என ஏற்றுக்கொள்ளப்படுவதால்...  இன்னும் பல ஆண்டுகளின்
பின்னர்... பறக்கும் தட்டின் வடிவில்... விமானங்கள் வர வாய்ப்பில்லையா???...
அத்தோடு, இரசாயன விஞ்ஞானத்தில்... சில உலோகங்களை தயாரிப்பதற்கு சிலவகை ஊக்கிகள் அறியப்படாமல் இருக்கின்றது... எதிர்காலத்தில், இவ்வூக்கிகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் புதிய உலோகங்கள் கண்டு பிடிக்கப்படக்கூடும்... இன்று எம்மால் என்ன வென்று அறிந்துகொள்ள முடியாதுள்ள இந்த சிதைந்த பாகங்களின் உலோகங்கள் எதிர்காலத்தில் நாமே உருவாக்கினதாகவும் இருக்கலாம்...
--------------------------------------------------------------------------------------
ம்ம்ம்... பதிவு நீளமாகிறது... ( நீண்ட பதிவுகள் வாசிக்க கஷ்டமாக இருப்பதாக சொன்னார்கள்...)
அதனால்... எகிப்திய பிரமிட்டுக்களை பார்க்க முன்னர்...

மாற்று உலக கோட்பாடு பற்றி என்க்கு தெரிந்தவற்றை ஆரம்பிக்கிறான்...

உலகத்தில்... ஒவ்வொன்றிற்கும் எதிர்த்தன்மையுடன் இன்னொன்றிருக்குமாம்...
புரோத்திரனுக்கு இலத்திரன் எதிர்த்தன்மையுடனிருப்பது போன்று... இந்த உலகத்திற்கும் இன்னொரு மறை உலகம் இருக்கிறது என்பதே இந்தக்கொள்கை.
அது பூமியிலிருந்து குறிப்பிடத்தக்க இடைவெளியிலேயே இருக்கும்...
ஆனால், அங்கு அனைத்துமே பூமிக்கு எதிரானதாக இருக்குமாம்... சுத்தும் திசை முதல் கொண்டு அனைத்துமே...
பரிமாணங்கள் கூட பூமிக்கு எதிரானதாகையால்த்தான் எங்களால் அதை பார்க்கவோ... உணரவோ முடிவதில்லையாம்...
கேக்க லூசுத்தனமாத்தான் இருக்கு... ஆனால், சில புதிர்களுக்கு இந்தக்கொள்கை விடையளிக்கிறது.
இதைப்போன்றே இன்னும் பல ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் இருக்கின்றன... அவை பெரும்பாலும் இருக்கு ஆனா இல்லை... என்கிற வகைகள்... அவற்றை எதிர்வரும் பதிவுகளில்... சந்தர்ப்பங்களின் போது பார்ப்போம்...

இந்த மாற்றுலக கொள்கையை இலகுவாக விளக்குகிறார்கள்...

இரண்டு கோல வடிவான பொருட்களை ( உதாரணமாக... ஃபூட்பொல் பந்து) எடுத்து... குறிப்பிட்ட இடைவெளியில்... எதிர் எதிர் திசைகளில் சுற்ற விடும் போது... ஒரு கோலப்பொருளில் தாழ்ப்பான இடமும் மற்றையதில் மேடான இடமும் வரும் போது... தாழ்ப்பான இடத்திலிருக்கும் பொருள்... மேடாக உள்ள கோலத்தின் பகுதிக்கு இடம் பெயர்க்கப்படும்...காரணம்... அங்கு ஏற்படும் அமுக்க வேறுபாடாகும்...
( இங்கு இரண்டு கோளங்களினது வெளியமைப்பும் தளமானதல்ல...)

இந்த கொள்கையை நான் ஏன் இங்கு குறிப்பிட்டுள்ளேன்... என்பது பலருக்கு தெரிந்திருக்கும்... தெரியாதவர்கள்/ இன்னமும் விளங்கிக்கொள்ளாதவர்கள்... அடுத்த பதிவில் சம்பவங்களுடன் எழுதும் போது விளங்கிக்கொள்ளலாம்...
--------------------------------------------------------------------------------------

இங்கு... பென்டகன் தகர்க்க பட்ட போது.. பிடிக்கப்பட்ட படத்தை பாருங்கள்... அது சம்பந்தமானக எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்... ( முகில் கூட்டமாகவுமிருக்கலாம்...)


பிரமிட்களில் பயண்படுத்தப்பட்டுள்ள... நவீன  விஞ்ஞானம் என்ன??? அவர்கள் அந்த அறிவை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்...
( இங்குதான், எனக்கு நிறைய குழப்பம் இருக்கிறது... இரண்டு வகையாக ஜோசிக்க வேண்டியுள்ளது... ஒன்று லெமூரியா... மற்றது ஏலியன்ஸ்.... அடுத்த கிழமைக்குள்... லெமூரியா தொடர்பாக நான் மேலதிகமாக வாசித்த சில வியப்பான சம்பவங்களுடன் லெமூரியா தொடரின் அடுத்த பகுதியை எழுதுகிறேன்...)

இங்கு குறிப்பிட்டிருப்பது பலது எனது ஐடியாக்கள், கருத்துக்கள்தான்... அதனால், தவறு என நீங்கள் கருதுவதை பின்னூட்டத்தில் இடவும்... ( எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்பட்ட கொள்கைகள் விஞ்ஞான உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்...)
--------------------------------------------------------------------------------------

Monday, 19 July 2010

ஐடியா மணிங்கட ஐடியா விளம்பரங்கள்...

----------------------------------------------------------------------------
நல்லா ஜோசிச்சு இருக்காங்க... அதோட ரசிக்கும் படியாவும் இருக்கு... :)
பிடிச்சிருந்தா வோட்டு... இல்லாட்டி கொமென்டு போடுங்கோ...
----------------------------------------------------------------------------


----------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails