Total Pageviews

Friday, 16 July 2010

எனக்கொரு உண்மைதெரிஞ்சாகனும்... :O

--------------------------------------------------------------------------------------
எனக்கொரு உண்மைதெரிஞ்சாகனும்...
அதுதான்... தமிழ், தமிழ் என்று சிலர் ஓவரா சத்தம் போடுறாங்களே... அதுக்கு பெயர் என்ன...
தமிழ் பற்றா... அல்லது தமிழ் பற்றாலராமாமா....

இதை எழுதி முடிக்கும் போது சில நேரம் சிலருக்கு... நான் தமிழ் எதிர்ப்பாளியாகி இருப்பேன்...

சரி...
கடைசியா நான் பார்த்த, வாசிச்ச சில விடையங்கள் எனக்கு விளங்கவே இல்லை... உங்களிடமிருந்து ஏதாச்சும் விளக்கம் கிடைக்கும் என்றுதான் அதை இங்கே எழுதுறேன்...

இந்தியா, ஐரோப்பா எல்லாம்... தமிழ் தமிழ் என்று... கத்துறாங்களே...
ஆனால்... கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னர்... இலங்கையில் அமுழ்ப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சட்டமூலம் பற்றி ஒருத்தரும் கதைக்கிறாங்களில்லை...

--------------------------------------------------------------------------------------

முன்வைக்கப்பட்ட சட்டத்தின் சாராம்சம் இதுதான்...
இனி புதிதாக இலங்கையில் கோவில் கட்டுவதென்றால்... அதை இலங்கை அரசால் அமைக்கப்பட இருக்கும் புதிய அமைப்பொன்றிடம் அனுமதிபெற்றே கட்ட வேண்டும்...

இதில என்ன கதைக்க இருக்கென்று நினைசாங்களோ தெரியல... ஆனால்... இது ஒரு முக்கியமான விசையம்...

இலங்கையின் அரசியல் அமைப்பின் படி...
பதவிக்கு வரும் அரசாங்கம் பெளத்த மதத்தினை பாதுகாக்க வேண்டும் ( இலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே பெளத்த மதத்தினை பின்பற்றுகிறார்கள்... சில தமிழர்களும் பின்பற்றுகிறார்கள் (அது தவறென்று சொல்ல வரவில்லை)... )
இலங்கை ஒரு சமத்துவ மத அமைப்பைக்கொண்ட நாடு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே... ( ஹீ...ஹீ... இனத்துக்கே சமத்துவமில்லை மதத்துக்கா??? )

ஒரு உதாரணத்துக்கு பார்த்தால்...
இனி யாழ்ப்பாணத்திலோ... இலங்கையில் வேறு பகுதிகளிலோ... ஒரு இந்து கோவிலை... கட்டவதென்றால், நாம் புதிதாக அரசால் நியமிக்கப்பட இருக்கும் அமைப்பிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால், அந்த அமைப்பு எப்படியும் பெளத்த சாசனப்படியே இயங்கப்போகிறது... ஆகவே... இலகுவாக அனுமதி கிடைக்கப்போவதில்லை...
அதேவேளை... ஒரு விகாரையைக்கட்ட அனுமதிக்கும் போது... உடனடியாக அனுமதி கிடைக்கும்.

ம்ம்ம்... இந்த சட்டம் நீண்டகால திட்டத்தினடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது...

போர்த்துக்கேய, ஆங்கில படையெடுப்புக்களின் போது... அவர்கள் சில சலுகைகளுடன் கிறிஸ்தவ தேவாலையங்களை நிறுவியதும்... நாங்கள் என்ன செய்தோம்... உடனடியாக மதம் மாறி அவர்கள் பின்னால் போனோம்... ( இதற்கு எமது மதத்தில் இருந்த சில மோட்டுத்தனமான கட்டுப்பாடுகளே காரணம்( உதாரணம்: சாதிகள்)... இப்போது கட்டுபாடற்றுப்போச்சு அது வேறுவிடையம்...)

இப்போது கூட.... சிலர் இந்துவாக இருந்தாலும்... கிறிஸ்தவர்களாக தங்களைக்காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள்... நான் நேரடியாக இதைப்பார்த்திருக்கிறேன்... ஃபாஸனாப்போச்சு இது...
இதுக்கு அடிப்படைக்காரணம் எங்களது மதத்தின் அடிப்படைக்கொள்கைகளை விளங்காமையும்... விளங்கப்படுத்தாமையும்... மற்றது... கிறிஸ்தவ மதத்தின் நவீனத்தன்மை... உதாரணம்... கோட்டு... சூட்டு....

கிறிஸ்தவராக எப்படி நாம் மாறினமோ அதே போல்... ஒரு சிறு பகுதியாவது காலப்போக்கில் பெளத்தமாக மாறும்... காரணம், பெளத்தம் அடிப்படையில் இந்துவிலிருந்து ஆரம்பமாகி... சமத்துவமான உலக வாழ்க்கைக்கேற்ற கருத்துக்களைக்கொண்டுள்ளமையால்... இலகுவாக மதம்மாற்ற முடியும்...
அதேவேளை... மதம்மாற்றுகையில் இலங்கை அரசின் அடிப்படை நோக்கமான சிங்களமயமாக்கலும் நடைபெறும் என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை...

இங்கு இந்துக்களுக்கு சார்பாக நான் எழுதி இருகிறென்... மதமற்றவர்களாக தமிழர்கள் கருதப்பட்டாலும்... அவர்களில் ஆதிக்கம் செலுத்திய மதம் இந்துமதம்தான்... ஆகவே... நான் தமிழர்களை இந்துக்களாக குறிப்பிட்டுள்ளேன்...

--------------------------------------------------------------------------------------

அடுத்து அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையும் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்பதைக்காட்டுகிறது...

அமுழாக இருக்கும் இந்த சட்டத்தின் படி...
இனி இலங்கையில்... அரச ஊழியர்கள்... கட்டாயம் இரண்டு பாசைகளும் பயின்றிருக்க வேண்டும்...

அதன்  முதற்கட்டமாக சிங்கள ஊழியர்களுக்கு... தமிழ் பயிற்றுவிக்கப்பட இருக்கிறதாம்...
இரண்டாம் கட்டமாக தமிழ் ஊழியர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது...

இதுவும் ஒரு ரெக்னிக்கலான விடையம்தான்...

அதாவது... இந்த கற்பித்தல்கள் எல்லாம் முடிந்த பின்னர்...
யாழ், தமிழ் பகுதிகளில் பெரிய பதவியில் இருப்போருக்கு சிங்களத்தில் சுற்றறிக்கைகளை அனுப்பினாலும்... சிங்களம் கற்ற அவர்களால் அதை வாசிக்க முடியும்... எனவே... பேசாமல் சைன் வச்சுட்டு தான் உண்டு தன்ற வேலையுண்டு என்டு இருந்துடுவார்கள்...

எனவே, இலங்கை அரசின் நீண்டகாலத்திட்டத்துக்கமைய இலங்கையை தனிச்சிங்கள மயமாக்கும் இலக்கு இலகுவாகவும்... நுட்பமாகவும் நிறைவேறப்போகிறது....

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போதுதான்... தமிழ் மொழி அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்...
அந்த ஒப்பந்தத்திலிருந்த வடக்கு கிழக்கு மாகாணம் சம்பந்தமான சரத்து எப்படி மீறப்பட்டதோ... அதே படியில் மீற முடியும்...

ஹீ...ஹீ... இந்தியா, சீனாவுக்கு பயந்து இந்த ஒப்பந்தத்தில் என்ன மீறினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்... பிறகு... இலங்கை சீனாவுக்கு சார்பாக செயற்படும் என்கிற பயம்...
அதே மாதிரி.... மத்திய அரசுக்கு எதிராக ஒரு சவுண்கூட கொடுக்க மாட்டார்கள் தமிழ் நாட்டு ஆளும் கட்சியினர்... அவர்களுக்கு தமது ஆட்சி கவிண்டுடுமோ என்கிற பயம்...
--------------------------------------------------------------------------------------

மொத்தத்தில் தேவையான விடையங்களுக்கு நாங்கள் குரல் கொடுக்க மாட்டோம்...
நடக்க சந்தர்ப்பமே இல்லாத விடையங்களைப்பற்றி வாய்கிழியப்பேசுவோம்...
இதுக்கு பெயர்தான் தமிழ் பற்றா...

இந்த பதிவில் கனக்க எழுத நினைத்தேன்... பதிவு நீளமாகிவிட்டது...
ஃபேஸ்புக்கில் தமிழை வைத்து நடக்கும் கூத்தையும் ( நல்லதும் செய்கிறார்கள் சில குழுவினர்... )
சமீப காலமாக... தமிழ் பற்று என்கிற பேர்ல அர்த்தமில்லாமல் நடக்கும் சில விடையங்களையும்...
ஐரோப்பியரின் தமிழ் பற்று எந்தளவுக்கு இருக்கிறது...
என்பதையெல்லாம் எழுதனும்...
எழுதுவேன்...
--------------------------------------------------------------------------------------

6 comments:

 1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.... தமிழனை கொன்று விட்டு தமிழை வளர்க்கிறார்களாம்...

  ReplyDelete
 2. தமிழனுக்கு ஏன் தமிழீழம் கிடைகேலை தெரியுமோ?
  பிரதேச வாதம், சாதி,மதவெறி இவை எல்லாமே தமிழனுடன் கூடப் பிறந்தவைகள்.மதம்

  மதம் என எழுதுகிறாய் இந்து மதத்தை வளர்த்தால் தமிழ் வளருமா.தமிழன் அழிந்து இந்து

  மதம் இருந்து என்னடா பயன்.எந்த மத்த்தில் இருந்தாலும் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற

  உணர்வு இருந்தால் தமிழ் வளர்கலாம்.இந்தியாவிலே 110 கோடி இந்து இருக்கிறான்

  அவர்களிலே எத்தனை பேர் தமிழர்கள். முள்ளிவாய்க்கால் சண்டை நடக்கும் போது இந்த
  இந்துவாடா வந்து காப்பாத்தினான்.தமிழ் நாட்டில் தமிழ் உணர்வுள்ள தமிழன் மட்டுமே

  போராட்டம் நடத்தினான்.உலகிலே ஒரே ஒரு இந்து நாடு நேபாளம்.அங்கு தமிழன்

  இருக்கிறானாடா? தமிழனே இல்லாத நாடு தான் இந்து நாடு. பிறகு என்னடா தமிழுடன்
  இந்து மத ஒப்பீடு. இப்பொழுதும் இந்து மத வழிபாடுகளிலே பாவிக்கப் படுகின்ற் மொழி
  சமஸ்கிருதம்.மொழி அழிந்தாலும் இந்து மதத்தால் அது உயிர் வாழ்கிறது. பிறகு என்னடா

  தமிழுடன் இந்து மத ஒப்பீடு. நானும் ஒரு இந்து தான் ஆனால் கடவுள் நம்பிக்கை அற்ற
  உணர்வுள்ள தமிழன்.தமிழ் உணர்வுள்ளவன் மதத்தை பற்றி கவலைபட மாட்டான். மத வெறி

  உள்ளவன் தான் மதத்தை பற்றி கவலைப் படுவான். முதன் முதலில் உலக தமிழ்
  ஆராட்சி மாநாட்டை நடத்தியதே தமிழன் என்ற உணர்வுள்ள தனிநாயகம் அடிகளார் என்கிற யாழ்ப்பாணத்தை சேர்ந்த

  கத்தோலிக்க மத குரு. தமிழன் என்று சொல்வதற்கோ அல்லது தமிழ் உணர்வுக்கோ மத

  வெறி தேவை இல்லை. தயவு செய்து இனிமேல் இது போன்ற பதிவுகள் வேண்டாம்.
  தமிழ் உணர்வுள்ளவன் தமிழை மட்டும் வாழ விடட்டும்.இந்து மதம் வளர்பதற்கு ஆரிய
  பாப்பனர்களும் கிறிஸ்தவ மதம் வளர்ப்பதற்கு வெள்ளையர்களும் இருக்கிறார்கள்.
  தமிழ் வளர்ப்பதற்கு தமிழர்கள் மட்டுமே உண்டு.

  ReplyDelete
 3. now mobile la...monday ungalathu comment ikku pathil poduven

  ReplyDelete
 4. nice post gread !!!!!!!!!!!!!!!!! :)

  ReplyDelete
 5. விஜிதன் சொன்னது ரொம்ப சரி..நாங்கெல்லாம் இப்ப இருக்கிற நிலமையில சோத்துக்கு மட்டும் வாயைத் திறந்தால் தான் நல்லது...தமிழ் சஞ்சிகையான இருக்கிறம் இன் வலைப்பூ...நான் ரொம்ப விரும்பி படிக்கும் சஞ்சிகை..போய்ப் பாருங்களேன்...?

  ReplyDelete
 6. நன்றி...ராசராசசோழன்...
  வளர்க்கிறாங்களாமாமாம்... :/
  ------------------------------------
  நன்றி... Vijithan...

  இந்துவைப்பற்றி அதிகம் எழுதியது தப்புத்தான்...

  110 கோடி இந்துக்கள் என்றெல்லாம்... சொல்லி இருக்கிறீர்கள்... நான் சொன்னனா... இந்துக்கள் எல்லாம் தமிழர் என்று... அல்லது தமிழர் எல்லாம் இந்துக்கள் என்று...
  யாழ்ப்பானத்தில இந்துக்கள்தான் அதிகம்... அதனால தான் நான் இந்துவை முன்னிலைப்படுத்தி எழுதி இருக்கேன்...
  ( நான் இந்து வெறியனா இல்லையா என்பதை...லெமூரியா.. என்கிற தொடர் பதிவிலையும், ஒருவருக்கொருவர் சளைக்காத சாமியார்கள் என்ற பதிவிலையும் வாசிச்சு தெரிஞ்சு கொள்ளுங்கள்....

  ஓ.கே.... நான் இந்துவைப்பற்றி குறிப்பிட்டதுக்கு சுப்பரா... நல்ல விளக்கங்களை கொண்டு திட்டிட்டிங்க...
  ஆனால், நான் முக்கியமாக குறிப்பிட்ட விடையங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசலையே... ஏன்???
  (இது தான் தமிழபற்றா???? குறை கண்டு பிடிக்கிறதை கேட்டேன்...)
  அல்லது... நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்கிறத காட்டுறதுதான் உங்கட நோக்கமா???

  நீங்கள் சொல்றது சரிதான்... ஆனால் என்ன தமிழை வளர்த்துட்டா இருக்கம்...???
  -----------------------------------
  நன்றி...D.Gajen...
  நீங்க சொல்றது சரிதான்... இலங்கைல இருக்கக்க நான் அதுக்கு மட்டும்தான் திறந்தேன்... இப்ப தான் இந்த வீராப்பெல்லாம்... அவளவு தைரிய சாலிகள் நாங்கள்...
  பார்த்தேன்... சுப்பர்... இலங்கைல படிச்சது.... லிங் இக்கு நன்றி...:)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails