Total Pageviews

Wednesday, 21 July 2010

ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (மாற்றுலகம்(???)... 07)

மாற்றுலகம்
--------------------------------------------------------------------------------------
இது இந்த தொடரின் 7 ஆவது பதிவு... உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்...

முன்னைய பதிவு... (06)

போன பதிவில் கூறியபடி.. மாற்று உலகம் எனும் கோட்பாட்டை பார்க்க முதல்... முன்னர் குறிப்பிட மறந்த சில சம்பவங்களையும்... ஏற்கனவே குறிப்பிட்டதன் படி... பிரமிட்களில் பாவனைக்குட்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பம் பற்றியும் எழுதிடுறேன்...
--------------------------------------------------------------------------------------
இது நடந்தது 2ம் உலக யுத்த காலகட்டத்தில்...

இரண்டாம் உலக யுத்தன் மும்முரமாக நடந்துகொண்டிருந்த‌ போது...
நேசப்படைகளை சேர்ந்த விமானிகள், பல நேரங்களில் தமது விமானத்தை ஒரு ஒளிமிகுந்த பொருள் பிந்தொடர்ந்ததை அவதானித்தார்கள்... ஆனால், அவர்கள் அது தொடர்பாக தமது மேலதிகார்களிடம் பதிவு செய்த போது, அது ஜேர்மனிய படைகளின் நவீன விமானமாக இருக்கலாம் என்று பதிவு செய்துகொண்டார்கள்.
சில ஆண்டுகளின் பின்னர் போர் நிறைவுக்கு வந்தது...
அப்போதுதான் தெரிந்தது... ஜேர்மனிய விமானிகளும் அதே போன்ற ஒளிமிகுந்த பொருட்களை கண்டுள்ளார்கள், அவர்களின் பதிவுகளில்... அது அமெரிக்காவின் விமானமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது...

விமானத்தளபதிகளான இவர்கள் பொய்யான தகவல்களை பதிவு செய்திருக்கத்தேவையில்லை... ஆக‌வே, அவர்கள் ஒரு ஒளிரும் பொருளைக்கண்டுள்ளார்கள்.
பொதுவாக, இந்த ஏலியன்ஸ்கள் வருகைதருவதாக கருதப்படும் வாகனங்களை (பறக்கும் தட்டு) குறிப்பிடும் போது... இதே போன்று ஒளிரும் தன்மை பற்றியும் வேகம் பற்றியும் அதிகமாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் கண்டது பறக்கும் தட்டுக்கள்தான் என முடிவு செய்யலாம்.

ஆனால், ஏன் அவர்கள் விமானங்களைப்பின் தொடர்ந்தார்கள் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை.
இரு சாராருக்குமிடையே யுத்த வெறியைத்தூண்டி விடுவதற்காகவா??? அல்லது... மாறாக இரு தரப்பினருக்கும் பயத்தை உண்டுபண்ணி யுத்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவா??? ( இந்த இடத்தில், நான் இரண்டாவதை நம்புகின்றேன்... காரணம் இருக்கிறது... அதை பிறகு தெளிவாக சொல்கிறேன்...)

மேலும், பறக்கும் தட்டின் சிதைந்த பகுதிகள் எனக்கூறி சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பூமியில் தற்சமையம் பாவனையிருக்கும் உலோகங்களுடன் ஒத்துப்போவதில்லையாம். அவர்களின் விமானங்களின் வடிவங்கள் கூட எம்மோடு ஒத்துப்போவதில்லை...
ஆனால், போன வருடம் விமானங்களின் வடிவங்களை மாற்றியமைப்பது சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டு போட்டிகள் கூட நடாத்தப்பட்டன. ( இடத்தையும், எரி பொருளையும் சிக்கனப்படுத்துவதும்... வேகத்தை அதிகரிப்பதுமே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது...) அதில் இந்திய மாணவியாள் வடிவமைக்கப்பட்ட விமான மாதிரிக்கு பரிசு கிடைத்திருந்தது.
அவர் வடிவமைத்த மாதிரியில்... விமானங்களுக்கே உரித்தான செட்டைகள் இருக்கவில்லை... மேலும்... அது ஏறத்தால ஒரு கூம்பு போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது...

இப்போதே இவ்வாறான அமைப்புக்கள் தயாரிக்க முடியும் என ஏற்றுக்கொள்ளப்படுவதால்...  இன்னும் பல ஆண்டுகளின்
பின்னர்... பறக்கும் தட்டின் வடிவில்... விமானங்கள் வர வாய்ப்பில்லையா???...
அத்தோடு, இரசாயன விஞ்ஞானத்தில்... சில உலோகங்களை தயாரிப்பதற்கு சிலவகை ஊக்கிகள் அறியப்படாமல் இருக்கின்றது... எதிர்காலத்தில், இவ்வூக்கிகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் புதிய உலோகங்கள் கண்டு பிடிக்கப்படக்கூடும்... இன்று எம்மால் என்ன வென்று அறிந்துகொள்ள முடியாதுள்ள இந்த சிதைந்த பாகங்களின் உலோகங்கள் எதிர்காலத்தில் நாமே உருவாக்கினதாகவும் இருக்கலாம்...
--------------------------------------------------------------------------------------
ம்ம்ம்... பதிவு நீளமாகிறது... ( நீண்ட பதிவுகள் வாசிக்க கஷ்டமாக இருப்பதாக சொன்னார்கள்...)
அதனால்... எகிப்திய பிரமிட்டுக்களை பார்க்க முன்னர்...

மாற்று உலக கோட்பாடு பற்றி என்க்கு தெரிந்தவற்றை ஆரம்பிக்கிறான்...

உலகத்தில்... ஒவ்வொன்றிற்கும் எதிர்த்தன்மையுடன் இன்னொன்றிருக்குமாம்...
புரோத்திரனுக்கு இலத்திரன் எதிர்த்தன்மையுடனிருப்பது போன்று... இந்த உலகத்திற்கும் இன்னொரு மறை உலகம் இருக்கிறது என்பதே இந்தக்கொள்கை.
அது பூமியிலிருந்து குறிப்பிடத்தக்க இடைவெளியிலேயே இருக்கும்...
ஆனால், அங்கு அனைத்துமே பூமிக்கு எதிரானதாக இருக்குமாம்... சுத்தும் திசை முதல் கொண்டு அனைத்துமே...
பரிமாணங்கள் கூட பூமிக்கு எதிரானதாகையால்த்தான் எங்களால் அதை பார்க்கவோ... உணரவோ முடிவதில்லையாம்...
கேக்க லூசுத்தனமாத்தான் இருக்கு... ஆனால், சில புதிர்களுக்கு இந்தக்கொள்கை விடையளிக்கிறது.
இதைப்போன்றே இன்னும் பல ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் இருக்கின்றன... அவை பெரும்பாலும் இருக்கு ஆனா இல்லை... என்கிற வகைகள்... அவற்றை எதிர்வரும் பதிவுகளில்... சந்தர்ப்பங்களின் போது பார்ப்போம்...

இந்த மாற்றுலக கொள்கையை இலகுவாக விளக்குகிறார்கள்...

இரண்டு கோல வடிவான பொருட்களை ( உதாரணமாக... ஃபூட்பொல் பந்து) எடுத்து... குறிப்பிட்ட இடைவெளியில்... எதிர் எதிர் திசைகளில் சுற்ற விடும் போது... ஒரு கோலப்பொருளில் தாழ்ப்பான இடமும் மற்றையதில் மேடான இடமும் வரும் போது... தாழ்ப்பான இடத்திலிருக்கும் பொருள்... மேடாக உள்ள கோலத்தின் பகுதிக்கு இடம் பெயர்க்கப்படும்...காரணம்... அங்கு ஏற்படும் அமுக்க வேறுபாடாகும்...
( இங்கு இரண்டு கோளங்களினது வெளியமைப்பும் தளமானதல்ல...)

இந்த கொள்கையை நான் ஏன் இங்கு குறிப்பிட்டுள்ளேன்... என்பது பலருக்கு தெரிந்திருக்கும்... தெரியாதவர்கள்/ இன்னமும் விளங்கிக்கொள்ளாதவர்கள்... அடுத்த பதிவில் சம்பவங்களுடன் எழுதும் போது விளங்கிக்கொள்ளலாம்...
--------------------------------------------------------------------------------------

இங்கு... பென்டகன் தகர்க்க பட்ட போது.. பிடிக்கப்பட்ட படத்தை பாருங்கள்... அது சம்பந்தமானக எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்... ( முகில் கூட்டமாகவுமிருக்கலாம்...)


பிரமிட்களில் பயண்படுத்தப்பட்டுள்ள... நவீன  விஞ்ஞானம் என்ன??? அவர்கள் அந்த அறிவை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்...
( இங்குதான், எனக்கு நிறைய குழப்பம் இருக்கிறது... இரண்டு வகையாக ஜோசிக்க வேண்டியுள்ளது... ஒன்று லெமூரியா... மற்றது ஏலியன்ஸ்.... அடுத்த கிழமைக்குள்... லெமூரியா தொடர்பாக நான் மேலதிகமாக வாசித்த சில வியப்பான சம்பவங்களுடன் லெமூரியா தொடரின் அடுத்த பகுதியை எழுதுகிறேன்...)

இங்கு குறிப்பிட்டிருப்பது பலது எனது ஐடியாக்கள், கருத்துக்கள்தான்... அதனால், தவறு என நீங்கள் கருதுவதை பின்னூட்டத்தில் இடவும்... ( எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்பட்ட கொள்கைகள் விஞ்ஞான உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்...)
--------------------------------------------------------------------------------------

8 comments:

 1. Aliens ezhuthum pothu pey,kadavul een heading?
  But, intresting!!!

  ReplyDelete
 2. தொடர் ஆகையால் ஒரே பெயர் Anonymous//

  நன்றாக இருக்கிறது .. கடைசி பெண்டகன் விஷயம் புதுசா இருக்கே .. பார்ப்போம் .:)))

  ReplyDelete
 3. நன்றி...S.Sudharshan,Anonymous...
  அதேதான்... தொடராக தொடங்கியதால் ஒரே பெயர்...
  இனித்தான்... பேய் எல்லாம் வரும்...

  அடுத்த பதிவில பென்டகன் பற்றி எழுதுறேன்...

  ReplyDelete
 4. VERY NICE POST.
  THE BUILDING NAME IS TWIN TOWERS NOT PENTAGON.

  historymix.blogspot.com
  cenepicx.blogspot.com
  adults-page.blogspot.com
  eyenotlies.blogspot.com

  ReplyDelete
 5. எனக்கு ஒன்னு தோணுது, நம்ம மனித இனமே இந்த பூமிக்கு ஏலியனோ என்று. எதுக்குன்னா , இந்த பூமில மற்ற எந்த உயிரினடத்திலும் இல்லாத மிகையான ஆளுமை அறிவு நம்மள்ட்ட இருக்கு.

  ReplyDelete
 6. tnx Anonymous...
  ------------------------------------
  நன்றி...chandru2110
  ஆஹா... அது எப்படி சொல்லுறீங்க...
  குரங்கில இருந்துதான் மனிதன் வந்திருக்கிறான் என்றதுக்கு கனக்க விளக்கங்கள் இருக்கே... (96% ஒற்றுமையான டி.என்.எ அமைப்பு...)
  குரங்கில டி.என்.எ மாற்றம் ஏற்படுத்தியது வேற்று உலகத்தார் என்பதையும் நம்ப முடியாதே... படிப்படியாகத்தானே மாற்றம் நிகழ்ந்திருக்கு...
  ( பூமியில் உவிரணுக்களை தூவியது ஏலியன்ஸ் என்று சொல்லுறிங்களா???? :O

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. may be nanbaa! aliens only spread the dna of living organism like it maybe their one part of dna chronicle.thatswhy we can developed to this stage. you also quoted in somepost that the shape of aliens are nothing but we only. thats becos we develop in to our anchestor shape na? and also when i think ramayanam, mahabharatham, the avatars of rama is from devargal kodutha paayasam moolamaaga ramar piranthaar, maybe its referred to aliens who came in to earth!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails